Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Uththara Kaandam
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter facebook
9176888688 
admin@chennailibrary.com +91-9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 492  
புதிய உறுப்பினர்:
Saran.A
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம்
ஈரானில் விமான விபத்து: 66 பேர் பலி
திபெத் புத்த மடாலயத்தில் தீ விபத்து
முதல் 'டி-20' போட்டி: இந்தியாவெற்றி
திரிபுரா தேர்தல்: 76% வாக்குகள் பதிவு
சினிமா செய்திகள்
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது:கமல்
மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்
ஏப்ரல் 13-ல் வெளியாகிறது மெர்க்குரி
ஜிப்ஸி படத்திற்கு பூஜை போட்ட ஜீவா
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!

அன்புடையீர்! நீங்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை எமது சென்னைநூலகம்.காம் தளத்தில் மின்னூல் வடிவிலும் (யூனிகோட் மற்றும் பிடிஎப்), எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் நூல் வடிவிலும் வெளியிட விரும்பினால் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும். (பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)

புதிய வெளியீடு


உத்தர காண்டம்

12

     “பதனம்... எது பதனம்? யாருக்கு? எப்படி?...”

     ஆயி முகம் தெரியாது அவளுக்கு. கிழமாகச் சவுங்கிப் போன அப்பனின் முகம் நினைவில் நிழலாகத் தெரிகிறது. அவளை இரண்டு தோள்களிலும் கால்கள் விழத் தூக்கிக் கொண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப்போவார். பெரி...ய காவிரி. அதன் கரை மேல் இருக்கும். இறங்கினால் பரிசல் துறை. கூடைபோல் பரிசல் இருக்கும். அதில் உட்கார்ந்து ஒருநாள் கடக் காவிரியில் போனதில்லை. திருவிழா ஆடிமாசத்தில் வரும். படையல் போடும் கும்பலைப் பார்த்துக் கொண்டு நிற்பாள். கூட்டம் கோயிலிலா, ஆத்துக்கரையிலா என்று நினைவுத் தெளிவில்லை. அம்மன் தேர் வரும். அய்யா, ஆட்டுத்தலை, மாவிளக்கு, பழம் எல்லாம் கொண்டு வருவார். இந்த நிழல் படங்களும்கூட மங்கும்படி, அவர் ஒருநாள் செத்துப் போனார். சின்னாயி அவளை அதே காவிரியாத்தின் பக்கம் நிறுத்திவிட்டு, “போடி, உங்க மாமன் வூட்டுக்கு?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இடுப்பில் ஒரு முழ சீலைத் துண்டு மட்டுமே உடுத்தியிருந்தாள். கரகரவென்று பரிசல் துறையின் பக்கம் இறங்கி நின்றாள். பரிசலில் இருந்து செவத்த அய்யா மார்கள், கோட்டு, கடுக்கன் போட்டவர்கள், பொம்புளைகள் இறங்கி கரைமேல் இருந்த வண்டியில் போனார்கள். நடந்தும் போனார்கள்.

     “சேரிப்புள்ள போலிருக்கே? பொழுது எறங்கிப் போச்சே, ஏம்மா நிக்கிற...?” என்று பரிசல்காரர் கேட்டார்.

     “எங்கப்பாரு செத்திட்டாரு. எங்க சின்னாயி, ‘நீ மாமவூட்டுக்குப் போயிடு’ன்னு இங்க கொண்டாந்து வுட்டுப் போயிட்டாங்க...” என்று அழுதாள்.

     “யாரு உங்கப்பன்...?”

     அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.

     “சின்னாயி அடிக்கும், குடுவைக்கும்...” என்று பெரிதாக அழுதாள்.

     “அடபாவமே ...” அவர் சுற்றுமுற்றும் பார்த்தபோது, இன்னொராள் வந்தார்.

     “அதாம்பா, ராயர் பண்ணையாளு. சித்தாதி. குடிச் சிட்டுக் காவாயில வுழுந்து செத்திட்டான். அவம் பொண்ணு போல இருக்கு இது.” என்ற விவரம் சொன்னதும், பரிசல்காரர். அவளுக்குச் சோறு வாங்கிக் கொடுத்து அவர் குடிசையில் தங்க வைத்துக் கொண்டதும் மறக்கவில்லை.

     பிறகு அடுத்த நாள் அவர், காலையில் ஆபீசுக்குக் கச்சேரிக்குச் செல்பவர்கள் செல்கையில், பரிசலில் ஒர் ஒரத்தில் உட்கார்த்தி வைத்தார். முதல் நாள் கோட்டும் கடுக்கனும் தலைப்பாவுமாக வந்த பெரியவர், “ஏம்ப்பா சோலை? உனக்குக் கல்யாணமே ஆவல, இது யாரு பொண்ணு?” என்று கேட்டார். அவர் என்ன சொன்னார் என்பதை அவள் கேட்டுக் கொள்ளவில்லை. அவளுடைய கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பெரிய மூங்கில் கம்பை உள்ளே விட்டு, அவர் பரிசலைத் தள்ளிக் கொண்டிருந்தார். பரிசலுக்குள் வெறும் ஒற்றைச் சீலைத் துண்டுடன் கையைக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்று, காவிரியையும் வெள்ளத்தையும், மூங்கில் கம்பினால் தள்ளிச் செல்லும் விந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூங்கிலை எடுத்து உயர்த்தி மறுபுறம் வைக்கும் போது நீர் சொட்டியது. மேலே பட்டபோது எப்படி உடல் சிலிர்த்தது? இந்தப் பயணத்துக்கு முடிவே வராமல், இவருடன் இந்த ஆற்றின் குறுக்கே போயும் வந்தும்... நீள வேண்டும் என்ற கற்பனையில் இருந்தாள். ‘மறுபடியும் சின்னாயி வீட்டுக்கோ, சின்னாயி போல பொம்புளகள் உள்ள வேறு எந்த வீட்டுக்கோ என்னிய அனுப்பிடாதீங்கையா’ என்று பரிசல்காரரின் கால்களைப் பிடித்துக் கெஞ்ச அவள் உறுதி செய்து கொண்டிருந்தாள். அக்கரை வந்து எல்லோரும் இறங்கிச் சென்றனர். கோட்டுக்காரர்கட இறங்கி நடந்து போனார்.      “எறங்கு புள்ள, உம் பேரென்ன?”

     அவள் இறங்குவதாக இல்லை. பேரும் சொல்லவில்லை. பேரென்று அவளுக்கு என்ன இருந்தது? அப்பன் ‘கண்ணுத்தாய்’ என்று செல்லமாகக் கூப்பிடுவான். ‘உங்காயி எட்டுப் பெத்தா, நீ ஒருத்திதாம்மா எனக்கு அழகாயி போட்ட பிச்ச...’ என்று கள்வாடை வீசும் சுவாசம் முட்ட, அணைத்து உச்சிமோந்து பாசத்தைக் கொட்டுவார்.

     சின்னாயியோ ஆயிரம் பேதிக்கும், கழிச்சலுக்கும் கூப்பிட்டுச் சாபம் கொடுப்பாள். இவள் பொழுதுக்கும் மண்ணில் தனியாக விளையாடிக் கொண்டிருப்பாள். அப்பன்தான் காலையிலும், பொழுது சாய்ந்த பின்னும் சோறோ கூழோ, எதுவோ கொடுப்பான். அவர் அருமையாக முடிச்சுக்குள் வைத்து வேகவைத்த வள்ளிக்கிழங்கோ, பொட்டுக் கடலையோ கொடுத்தது இப்போதும் கண்களில் நீரை வருவிக்கிறது.

     பரிசல் துறையில் நின்றது ‘பெண்’ என்று யாரும் அவளைக் குலைப்பதற்குரிய பொருள் என்று நினைக்கவில்ல. “பொம்புளப்புள்ள அய்யா?” என்று பதனமாகப் பார்க்க, அக்கரையில் வக்கீல் அய்யர் வீட்டில் சேர்த்தார். அவர் காந்தி கட்சி. அவளைப் பின்புறமாகத் தான் பரிசல்காரர் கூட்டிச் சென்றார். மாட்டுக் கொட்டகை, எருக்குழிகள்... வாழை மரங்கள், அவரைப் பந்தல்... இவரும் பின்னாலிருந்து தான் கூப்பிட்டார்.

     “ஏம்ப்பா, என்ன விசயம்?...”

     மஞ்சட்சீலை உடுத்த சிவப்பாக ஒரு பெண் பிள்ளை. அம்மா... அய்யர் சாதிக்கட்டு. காதுகளில் வயிரத் தோடுகள் மின்னின. மூக்கில் பொட்டுகள் பளபளத்தன. இவர்கள் வீட்டிலா...?

     “பரிசக்காரையா, என்னிய இங்கெல்லாம் வுட்டுட்டுப் போகாதீங்க? நா உங்ககூட வாரேன். உங்கக்குக் கஞ்சி காச்சித்தாரேன். ஒங்கக்கு எதுன்னாலும் செய்யிறே...” என்று அவர் காலைப் பிடித்துக் கொண்டாள்.

     “யாரப்பா, குழந்தை, உள்ளே வாயேன்?”

     “இருக்கட்டும்மா...” என்று சொல்லிக் கொண்டு கொட்டில் கடந்து கிணற்றுக்கரைப் பக்கம் நின்றார்கள்.

     “இது. சேரி... குடிபடைச்சாதிங்க. அப்பன் ஆயி செத்து, அநாதியா வந்து நிக்கிது. பொம்புளப்புள்ள. அம்மா, காபகம் வந்திச்சி. ஏதோ கொட்டில்ல சாணி சகதி அள்ளிப்போடும். ஒரு நேரம் ரெண்டு நேரம் சோறூத்துங்க. உங்கக்குப் புண்ணியமாவும்.”

     “அஞ்சு வயசுகூட இருக்காது போல. பாவமே!...” என்றவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றினாள். விலாவில் சின்னாயி போட்ட சூடு புண்ணாக இருந்தது. அதில் ஈ வந்து குந்தியது...

     “என்னம்மா இது? இது சூட்டுக்காயம் போல... அடாடா... சீக்கோத்திருக்கு?” அவள் கோவென்று பெரிதாக அழுதாள்.

     “ரெம்ப பயப்படுதுங்க. பொம்புளப்புள்ள, உங்களுக்குப் புண்ணியமாப் போவுதும்மா, சின்னாயி கொடும, நாளும் தெரிஞ்சவ...”

     “நீ கவலப்படாத என் வீட்டுப் பிள்ளையாப் பாத்துப்பேன். எங்க வீட்டுக் கமலி போல பாத்துப்பேன். போயிட்டுவா...” என்று அவனை அனுப்பினாள். இவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தேம்பித் தேம்பி அழத் தொடங் கினாள். “சீ... அழாத அழக்கூடாது...” என்று அவள் கண்களைத் துடைத்தாள். சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி னாள், கிணற்றில் நீரிறைத்து ஊற்றி... ஒ! அவர்களுக்குக் கிணறு கிடையாது. மோட்டுவாய்க்கால் கரையில்தான் சட்டி பானைக்கழுவி, துணி அலசி... அப்பன் செத்தபிறகு அவள்தான் எல்லாம் செய்வாள். சின்னாயி காலையில் வயலுக்குப் போனால், மாலையில் அந்த இன்னொரு ஆளுடன் வருவாள். இருவரும் கள் குடிப்பார்கள். சோறு காய்ச்சினால் ஒரு வாய்கூட வராது. கேட்டால் அடிப்பாள். குளிப்பாட்டி, சூட்டுக்காயத்தைப் பஞ்சால் துடைத்து ஏதோ களிம்பு போட்டாள். புண்ணில் படாமல், கால்வரை தொங்கும் கவுன்... பூப்போட்டது. அவளைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் இன்னோர் அம்மா அங்கு வந்தாள்... “என்ன சம்பு? அப்பா ஒத்துப்பரா?” அம்மா திரும்பிப் பார்த்தாள். “உம்? அவர் செஞ்சது எதையும் நான் ஒத்துக்கல!” துணி கொடுத்து காயத்துக்கு மருந்து போடுகையில் உள்ளிருந்து சமையல்காரர் போலிருக்கிறது, வந்தார்.

     “சம்பும்மா, உங்கப்பா பாத்தா ரகளயாகப் போறதே?”

     “ஒய், உம்மக்கேக்கல. இனிமே நீர் சமைக்க வரவேண்டாம். நாங்களே சமைச்சிக்கறோம்! சாப்புடறவா சாப்புடட்டும், இல்லாதவா போகட்டும்!” என்றார் கோபமாக.

     இவளுடைய கத்தலில், மொட்டைத் தலையில் ஒரு உச்சிக் குடுமியும் சந்தனக்குறுக்கும், விசிறி மட்டையுமாகப் பெரியவராகிய அவள் அப்பா கூடத்தில், நடை ஒரத்தில் வந்துவிட்டார்.

     “அடி, சம்பு? நன்னாயிருக்கா? கேக்கறேன், வழிவழியா வேதத்யயனம் பண்ணின குடும்பம்டீ, இது?... ஏ, பற மூதேவி! போடி கொல்லப்பக்கம்? எங்கேந்து இங்க கொண்டு விட்டிருக்கான்? எல்லாம் இந்தத் தாமு குடுக்கிற எடம். போடி...!” விசிறிக் காம்புடன் ஓடி வந்த அவரைப் பார்த்து அம்மா சிரித்தார். அவள் மருண்டு ஒடிப்போக முடியாதபடி தன்னுடன் ஒட்டிக் கொண்டாள்.

     “கிட்ட வராதீங்க. தீட்டு ஒட்டிக்கும். அப்பா, நீங்க என்ன பண்றேள், வாசப்பக்கம் ரூம்ல மடியா இருந்துக்குங்கோ. நாங்கதா சமைக்கப் போறோம். சமைச்சு சாப்பாட்டை, மடியா, ராகவனக் கொண்டு குடுக்கச் சொல்லுங்கோ !”

     “பிராரப்தம்... ஏண்டி சம்பு இப்படி வதைக்கிற?”

     “யாரப்பா உங்கள வதைக்கறா இப்ப?. அதான் தாமு, உங்க மாப்பிள, அவனவிட்டு இந்த வீட்ல இதெல்லாம் கூடாதுன்னு சொல்லச் சொல்லுங்கோ, நான் இவளையும் கூட்டிண்டு போயிடறேன்...”

     உள்ளே கூட்டிச் சென்று, இலை போட்டு, வாழைக்காய்ப் பொரியலும் பருப்புக் குழம்பும் நெல்லுச் சோறுமாகப் பிசைந்து போட்டாள். தேவதைக் கதைகளை யாரும் அவளுக்குச் சொன்னதில்லை. ஆனால் ஒரு தேவதை அவளுக்குத் தாயாக இருந்து, பாதுகாத்தாள். அன்று சாப்பிட்ட உடனே, பழைய சேலை மடிப்பில் அம்மா படுக்க வைத்ததும் தூங்கிப்போனாள். எத்தனையோ நாளைய ஆதரவற்ற, பயம், வயிற்றுப்பசி, எல்லாம் அந்த தேவதைக் கையால் நீங்கிவிட்டன. அந்த வீட்டில் அவள் பல விஷயங்களைப் புரிந்து கொண்டாள். பெரியவருக்குப் பெண்சாதி முதலிலேயே இறந்துவிட்டாள். இரண்டு மகன்கள், இவள் ஒரு மகள். மகன்கள் இருவரும் படித்து, டில்லி பம்பாய் என்று கல்யாணம் கட்டி வேலையில் இருந்தார்கள். கமலி இவருடைய அண்ணன் மகள். இவளை, பத்து வயசுக்குள், வீட்டில் எடுபிடி வேலை செய்ய வந்த தாமுவுக்குக் கட்டிவிட்டார். தாமுவை அவர்தாம் படிக்க வைத்தார். தாமுவுக்கு அக்கா முறையில் ஒரம்மாள் அங்கே அடிக்கடி வந்து அதிகாரம் செய்வாள்.

     கமலி, உள்ளுர் பள்ளிக்கூடத்தில் நாலாவது படித்துக் கொண்டிருந்தாள். தாமு, சம்பகாவின் புருசன், வக்கீல்... வாசல் பக்கம், கலகலவென்றிருக்கும் நடையில் மாடிப்படி. மாடிக்கு யார் யாரோ கட்சிக்காரர்கள் வருவார்கள். சீனு அய்யர் குமாஸ்தா. வீட்டில் பெரிய வில்வண்டி இருந்தது. கிழவர் வாசல் மேல் திண்ணை, கீழ் திண்ணை, முன் பக்க அறை இத்துடன் நிறுத்திக் கொண்டார். கொல்லைப்புறம் போக வேண்டுமானால்தான் காதில் பூணூலை மாட்டிக் கொண்டு போவார். அந்த சமயம் அவள் எங்கேனும் மூலையில் ஒண்டிக் கொள்வாள். அம்மாவைப் பார்க்க, கதரணிந்த இளம்பிள்ளைகள் வருவார்கள். நிறைய புத்தகங்கள் கொண்டு வருவார்கள். கமலி இவளை விடப் பெரியவள். அம்மா இவளுக்கும், தமிழ், இங்கிலீசு எல்லாம் கற்றுக் கொடுத்தாள்.

     வக்கீலையா, மாடியில் இருந்து இறங்கி, வீட்டைச் சுற்றிச் செல்லும் சந்து வழியாகவே பின் பக்கம் போவார். அவருக்கென்று குளியலறை ஒன்று இருந்தது. மாரிமுத்து என்ற வண்டிக்காரன் அநேகமாக வீட்டோடு இருந்தான். அவன்தான் அவருக்கு வெந்நீர் போட்டு, துணிதுவைத்து, வண்டியோட்டிக் கச்சேரிக்குக் கூட்டிச் சென்று எல்லா வேலைகளும் செய்தான். கமலியும் அவரும், கூடத்தில் ஒரு பக்கம் படுத்துக் கொள்வார்கள். ஊஞ்சல் பலகையில் அம்மா படுப்பார். விசுபலகை ஒன்று உண்டு. அவளுக்கு அப்போது எதுவும் புரிந்து கொள்ள வயசாகவில்லை. அய்யர் வீட்டு நடைமுறைகளைப் பற்றி எதுவும் தெரிந்திராததால், சாப்பாடு, துணி, அன்பு, புழங்க பெரிய இடம் எல்லாம் கிடைத்த எதிர்பாராத சந்தோச மூச்சு முட்டலில் பழகியபின் இவள் புரிந்து கொண்ட செய்திகள்...

     கிழவர் ஒரு நாள் தவறாமல் இவளைப் பார்க்க நேர்ந்து விட்டால், பறப்பீடை, தொலைஞ்சு போடி, திமிரு திமிரு... என்று கத்துவார். அவள் பின்புறம் கொட்டிலில் சென்று ஒட்டிக் கொள்கையில் அம்மா உடனே வந்து விடுவார். “அவ ஒண்னும் பீடையில்ல. இந்த வீட்டுக்கு நல்லது வந்திருக்கு. கண்ணம்மா, நீ பயப்படாதே! அந்தக் கிழம் இப்படி எதை வேணாச் சொல்லட்டும். உன்கிட்ட வராது...” என்று தேற்றுவாள்.

     இவள் வந்து தீட்டுப்பட்ட வீட்டில், அவர் சாப்பிடுவதில்லை. அவருக்கு, தலை மொட்டையடித்த, வெள்ளைச் சீலை அம்மா சாப்பாடு கொண்டு வந்து வாசல் அறையிலேயே கொடுப்பார். அந்தக் கூடத்தில் சாமிபடங்கள், பூசை சாமான்கள், விளக்கு எல்லாம் இருந்தன. எல்லாமும் வாசல் அறைக்குப் போய்விட்டன. சீனு அய்யர்தான் கிழவருக்கும் எடுபிடி. கிழம் கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும். ஏழை எளியதுகளின் இரத்தம் உறிஞ்சுவது போல் வட்டி வாங்கும், என்பதெல்லாம் அம்மா அதைத் திட்டும்போது உதிர்ந்த உண்மைகள்.

     சுந்தரம் சுந்தரம் என்று ஒருவர் வருவார். அம்மா ராட்டை வைத்து நூல் நூற்பார். அவர் பஞ்சுபட்டை கொண்டு வந்து கொடுப்பார். நூற்ற நூலை சிட்டத்தில் சுற்றுவதை அவள் பார்த்துக் கொண்டே இருப்பாள். அம்மா அவளை எழுதச் சொல்லிவிட்டு, நூற்பார்.

     “காந்தி, கடங்காரன், சண்டாளன், இப்படி பரம்பர தர்மங்களை நாசம் பண்ணிட்டானே? என் வீட்டில, எனக் குக் கை நனைக்க வழியில்லாம இப்படி அட்டூழியம் பண் றாளே? அம்மா இல்லாத குழந்தைன்னு கண் கலங்காம வச்சிண்டிருந்தேன். பாவி நெருப்பை அள்ளிக் கொட்டு றாளே? ஆசாரிய சுவாமிகள் வராராமா ?”

     “ஆமா. பிரும்மதானபுரம் சத்திரத்தில் தங்கறாராம். இந்தத் தெரு வழியா நாளைக்கு வறாராம். பூரணகும்பம் குடுத்து உபசாரம் பண்ணனும்னு எங்கண்ணா சொல்லிண்டி ருந்தான். பத்து நாள் தங்குவார் போல. இப்பத்தான் விவஸ்தையே இல்லையே? தலை எடுக்காம, எவளானும் என்னைப்போல இருக்கறவா தெருப் பக்கம் வந்தோ எட்டிப்பாத்தோ தொலைக்கக்கூடாது. அப்படி ஒராத்துல பிக்ஷை பண்ணிட்டிருக்கப்ப, ஒரு மூதேவி தெரியாம, அந்தாத்துல வந்துடுத்தாம். பிக்ஷை எடுக்காம போயிட்டாராம்.”

     “ஏ ருக்மிணி! இங்க வாடி! ஏற்கெனவே அது ஆடிண்டிருக்கு, நீ கள்ள ஊத்திக் குடுக்கிறியா? வந்து சோத்தப் போட்டுட்டுப் போயச் சேரு? என்னடி பேச்சு?” என்று அம்மா கத்தியபோது அவளுக்கே துக்கி வாரிப்போட்டது. பாவம், அந்தம்மா...

     “அஞ்சு வயசிலும் பத்து வயசிலும் கல்யாணத்தப் பண்ணி வச்சிட்டு, பொண்ணுகள வதைக்கிறது? யாருடி அந்த ஆசாரியன், எதுக்கு இப்படிக் கொலை பாதகம் பண்றான்?...” என்று அம்மா, சம்பு என்றழைக்கப் பெற்ற தெய்வம், காளி அவதாரம் எடுத்தாற்போல் கத்தினாள்.

     “இவனுவ வண்டவாளங்களை எடுத்துவிட்டால், பள்ளுப் பறைன்னு ஒதுக்கி வச்சிருக்கிற குடிசைக் குப்பை மேட்டு நாத்தமும் அழுகலும் பரிசுத்தம்னு தோணும். மரியாதையாப் போய்க்கோ?” அந்தம்மா வெலவெலத்து ஒட்டிக் கொண்டாள், சுவரோடு. அவள் அங்கு இருந்தபோது தான் அந்தக் கூடத்தில் பெரிய காந்தி படம், நேரு படம், சுபாஷ் சந்திரபோஸ் படம், எல்லாம் கொண்டு வந்து மாட்டினார்கள். அம்மா மஞ்சள் கதர்ப்புடவை உடுத்திக் கொண்டு, அவளையும் கமலியையும் அழைத்துக் கொண்டு, தெருவில் சென்றால், யாரும் பார்க்க மாட்டார்கள். கதவை அடைத்துக் கொண்டு உள்ளே போவார்கள். தெருக் கோடியில் பெருமாள் கோயில் இருந்தது. அம்மா எந்தக் கோயிலுக்குள்ளும் போனதில்லை. ஒருநாள் கதர்சட்டை அணிந்த சுந்தரம், பிச்சமுத்து, தங்கவேலு எல்லாரும் வந்தார்கள்... எல்லாரும், அம்மா, அவள், கமலி தெருவில் மகாத்மா காந்திக்கு ஜே! வந்தே மாதரம், சுபாஷ் சந்திரபோஸுக்கு ஜே...” என்று கத்திக் கொண்டு போனார்கள். மருதமுத்துதான் பெருங்குரலில் கத்துவான். இவர்கள் ஜே சொல்வார்கள். ஆனால் தெருவில் ஒரு குஞ்சு குழந்தைகூட இல்லை. திருச்சிபோகும் ரயில்பாதை. அதைக் கடந்தால் அங்கே தாலுகா கச்சேரி இருந்தது... ஒருகூரை பிராமணாள் காபி கிளப் இருந்தது. இவர்கள் தாலுகா கச்சேரிக்கு முன் கத்தினார்கள். பக்கத்தில் தான் கமலி படித்த பள்ளிக்கூடம். அன்று பள்ளிக் கூடம் இல்லை.

     டவாலி போட்ட சேவகன் வந்து விரட்டினான். ஒரு போலீசுக்காரர் வந்தார்.

     “எல்லாம் போயிடுங்கம்மா, ஏ. புள்ள முழிய நோண்டிடுவேன்” என்று அவளைப் பார்த்துப் போலீசுக்காரன் சாடை யாகப் பயமுறுத்தினான். அவள் அம்மாவின் பக்கம் ஒட்டிக் கொண்டாள். மருதமுத்துவையும் சுந்தரத்தையும் விலங்கு கொண்டு வந்து பூட்டி அழைத்துச் சென்றார்கள். இவர்கள் மறுபடியும் கத்திக் கொண்டே வீடு திரும்பினார்கள். அன்று சாயுங்காலமே கைதானவர்கள் இருவரும் திரும்பி வந்து விட்டார்கள்.


உத்தர காண்டம் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன்
2. பார்த்திபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. தியாக பூமி
6. கள்வனின் காதலி
7. பொய்மான்கரடு
8. மோகினித் தீவு
9. சோலைமலை இளவரசி
10. மகுடபதி
11. பொன் விலங்கு
12. குறிஞ்சி மலர்
13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
14. சமுதாய வீதி
15. சாயங்கால மேகங்கள்
16. ஆத்மாவின் ராகங்கள்
17. நெஞ்சக்கனல்
18. துளசி மாடம்
19. ராணி மங்கம்மாள்
20. பிறந்த மண்
21. கபாடபுரம்
22. வஞ்சிமா நகரம்
23. நெற்றிக் கண்
24. பாண்டிமாதேவி
25. சத்திய வெள்ளம்
26. ரங்கோன் ராதா
27. ஊருக்குள் ஒரு புரட்சி
28. ஒரு கோட்டுக்கு வெளியே
29. வேருக்கு நீர்
30. ஆப்பிள் பசி
31. வனதேவியின் மைந்தர்கள்
32. கரிப்பு மணிகள்
33. வாஷிங்டனில் திருமணம்
34. நாகம்மாள்
35.பூவும் பிஞ்சும்
36. பாதையில் பதிந்த அடிகள்
37. மாலவல்லியின் தியாகம்
38. வளர்ப்பு மகள்
39. அபிதா
40. அநுக்கிரகா
41. பெண் குரல்
42. குறிஞ்சித் தேன்
43. நிசப்த சங்கீதம்
44. உத்தர காண்டம்
45. மூலக் கனல்
46. கோடுகளும் கோலங்களும்
47. நித்திலவல்லி
48. அனிச்ச மலர்
49. கற்சுவர்கள்
50. சுலபா
51. பார்கவி லாபம் தருகிறாள்
52. மணிபல்லவம்
53. பொய்ம் முகங்கள்
54. சுழலில் மிதக்கும் தீபங்கள்
55. சேற்றில் மனிதர்கள்
56. வாடா மல்லி
57. வேரில் பழுத்த பலா
58. சிலையும் நீயே சிற்பியும் நீயே
59. புவன மோகினி
60. பொன்னகர்ச் செல்வி
61. மூட்டம்
62. மண்ணாசைபுதிது
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 492  
புதிய உறுப்பினர்:
Saran.A
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
உங்கள் கருத்துக்கள்

வாசர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அன்புடையீர்! எனது சென்னைநூலகம்.காம் அரசு நூலகமோ அல்லது அரசு உதவி பெறும் நூலகமோ அல்ல. இது எனது தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் உழைப்பினால் உருவானதாகும். ஆகவே எனது நூலகம் தொடர்பாக என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். இந்தியாவில் உள்ளவர்கள் எனது சென்னைநூலகம்.காம் இணையதளத்திற்கு நன்கொடை அளிக்க கீழே உள்ள பேயூ மணி (PayU Money) பட்டனை சொடுக்கி பணம் அனுப்பலாம். வெளிநாடு வாழ் அன்பர்கள் நேரடியாக எமது ஆக்ஸில் வங்கிக்கு இணையம் வழி பணம் அனுப்பலாம். (வங்கி விவரம்: G.Chandrasekaran, SB A/c No.: 168010100311793 Axis Bank, Anna Salai, Chennai. IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168). (ரூ.2000/- அல்லது அதற்கு மேல் நிதி அளிப்பவர்கள் எமது தளத்தில் “வாழ்நாள்” உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.) அன்புடன் கோ.சந்திரசேகரன் (பேசி: +91-94440-86888, 91768-88688 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)மேலும் விவரங்களுக்கு
  நன்கொடையாளர்கள் 

கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


gowthampathippagam.in
சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy
gowthampathippagam.in
ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
gowthampathippagam.in
தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy
gowthampathippagam.in
சங்கமம்
இருப்பு உள்ளது
ரூ.30.00
Buy
gowthampathippagam.in
இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
gowthampathippagam.in
நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
gowthampathippagam.in
தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)