|
|
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும். |
இனி எல்லாமே நீயல்லவோ... 1 நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது! காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள். பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்! 'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்! என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல! பிணம் தின்னிக் கழுகுகள்! புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா? மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்! ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது! லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான். இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்! மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே! அறை திறந்தே இருந்தது! உள்ளே அவளும் இருந்தாள்! அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது! காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று. எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்! அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது! அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன். 'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள். கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்! கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு! இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!
|
எமது வலைதளங்கள் |
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |
| ||||||||||||||
|
|
|
|