http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஆப்பிள் பசி

19

     பாப்பா அவனை உன்னிப்புடன் பார்த்த போது உலகெங்கும் கண்கள் தோன்றி சாமண்ணாவைப் பார்ப்பது போல் இருந்தது.

     மனசுக்குள் ஓர் அதிர்ச்சி ஓடியது. கண்கள் இமைக்கவில்லை. சைக்கிளை விட்டு இறங்கினான்.

     "என்ன?" என்றான், என்ன பேசுவதென்று தெரியாமல்.

     பாப்பா தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சங்கள் விம்மி அமிழ்ந்தன. லேசாக வாடிப் போயிருந்த அவள் உடலில் ஒரு நடுக்கம் ஓடியது.

     சாமண்ணா சற்று அருகில் போனான். ஒரு மாட்டைத் தட்டி நின்றான். அது சிலிர்த்துச் சலங்கைகளை ஆட்டியது.

     "உங்க வீட்டுக்குத்தான் போய்ட்டு வரேன்" என்றான் சாமண்ணா மெதுவாக. தொண்டையில் வார்த்தைகள் சிக்கி வந்தன.

     விழிகளைத் தூக்கி, "தெரியும்" என்றாள்.

     "தெரியுமா?"

     "ஆமாம்!"

     "நான் வந்தப்போ வீட்டில் இருந்தாயா?"

     "ஆமாம். பின் கட்டில் படுத்துட்டிருந்தேன்!"

     "இன்னுமா உடம்பு சரியாகலை?"

     "ஆமாம். தேறல்லையே!"

     "இப்ப உடம்பு முடியாம இருக்கறப்போ எதுக்கு வெளியே வந்தே?"

     "என்ன செய்ய? விருந்து போல வந்துட்டீங்க! அப்பா வெறும் கையா அனுப்பறதைப் பார்த்துட்டேன். நேரே பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்துட்டேன். மனசு கேட்கல்லே. அப்பா பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்." கண் கலங்கி நின்றான்.

     "வீட்டிலே, இருக்கும் போது நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்."

     "எதிர்பார்த்தாயா?"

     அந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவனது ஆவலான பழைய குரல் திரும்பி வந்தது.

     "ஆமாம்!" என்றாள் அவள்.

     பாப்பாவின் கண்கள் பலமுறை கொட்டின.

     உடம்பு வாடியிருந்தாலும், முகம் சந்திர ஒளி அடித்தது. "உங்கப்பா என்ன துச்சமாப் பேசிட்டார் பார்த்தாயா? மனசு துவண்டு போச்சு" என்றான் அவன்.

     நெற்றியைத் துடைத்துவிட்டு கொண்டான்.

     "என்னைப் பற்றியே நொந்துக்கிட்டேன். பிறந்தா வசதியோடு பிறந்திருக்கணும். இல்லாட்டி பிறக்கக் கூடாது. கையேந்தி நாலு பேர்கிட்டே உதவிக்குப் போனா, இப்படித்தான் அவமானப் படணும்."

     பாப்பாவின் கண்களில் அநேகமாக நீர் ததும்பி விட்டது.

     "என்னவோ தெரியலை! என் புகழே எனக்கு எதிரே வேலை செய்யறதாத் தோணுது! உங்கப்பா என்னை இவ்வளவு கேவலமா நடத்துவார்னு நான் எதிர்பார்க்கலை. என் தலைவிதி" என்று தலைகுனிந்து கொண்டான் சாமண்ணா.



ஆப்பிள் பசி : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13   14   15   16   17   18
19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi19.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs