http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஆப்பிள் பசி

3

     "தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமா தான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்," பாப்பாவின் முகத்தைப் பார்த்து, "என்னம்மா, நான் சொல்றது சரிதானே?"

     அவள் சாமண்ணாவின் முகத்தைப் பார்த்தாள்.

     சாமண்ணா சொன்னான்.

     "நீங்க ஏதோ டிராமாவுக்கு வந்தீங்க. வந்த இடத்திலே தற்செயலா என்னைப் பார்த்தீங்க. மழைக்குத் தங்கினீங்க. சாப்பாடு போட்டீங்க, காப்பி வாங்கி வந்து கொடுத்தீங்க. இதுக்கெல்லாம் நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். இப்ப நான் வரலையேன்னு வருத்தப்படாதீங்க."

     "உனக்கு உடம்பு சரியில்லாதப்போ தனியா விட்டுட்டுப் போறது மனசுக்கு அவ்வளவு சமாதானமா இல்லே...! அதான் யோசிக்கறோம்."

     "பரவாயில்லைங்க. என் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமாயிட்டுது. பட்டினியும் கிடப்பேன். பாயசமும் சாப்பிடுவேன்! பெரிய பெரிய குடும்பத்துப் பெண்களெல்லாம் நாடகம் பார்க்க வருவாங்க. பார்த்துட்டு என்னைப் புகழ்ந்து பேசுவாங்க. விருந்துக்கு அழைப்பாங்க. சில பெண்கள் வலிய வந்து என்னோடு சிரிச்சுப் பேசி சிநேகமாப் பழகறதும் உண்டு. ஆனால் நாடகக் கம்பெனி அடுத்த ஊருக்குப் போயிட்டா, அத்தோடு எல்லாம் நின்னு போயிடும்."

     "எங்க சிநேகத்தையும் அந்த மாதிரி நினைச்சுராதீங்க. தொடர்ந்து இருக்கும்" என்றாள் பாப்பா.

     "ரொம்ப சந்தோஷம். இப்ப லாட்ஜுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம் வாங்க. இந்த நேரத்துக்கு சூடா இட்லி கிடைக்கும் மல்லியப் பூ மாதிரி" சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்படத் தயாரானான் சாமண்ணா.

     வண்டி அம்பாள் லாட்ஜ் வாசலில் போய் நின்றது. வாசலில் குடுகுடுப்பைக்காரன் உடுக்கை அடித்துக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். "வழிவிட்டு நில்லுப்பா" என்று உள்ளே போனவர்கள் ஒரு மூலையில் இருந்த கடப்பைக் கல் டேபிளைத் தேடிச் சென்று உட்கார்ந்தார்கள். அலம்பி விட்டதால் தரையெல்லாம் ஈரம் காயாமலிருந்தது.

     கல்லா மேஜைக்கு மேலே லட்சுமி, சரஸ்வதி, பாலாஜி படம். மீட்டர் பெட்டிக்கு மேல் சிகப்பு பல்ப் வெளிச்சம். எதிர் சுவரில் ஓட்டல்காரர் போட்டோ என்லார்ஜ்மெண்ட்.

     மீசை வைத்த பால்காரரும் மளிகைக் கடைக்காரரும் பொங்கல், வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் கல்லா மேஜை ஓரம் காப்பிக் கூஜாவுடன் பார்சலுக்குக் காத்திருந்தாள்.

     ஸில்க் ஜிப்பாவுக்குள் தங்க செயின் தெரிய ஓட்டல் ஐயர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்தார்.

     மூலையில் உட்கார்ந்திருந்த சாமண்ணாவையும் அவன் பக்கத்தில் இருப்பவர்களையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே காலணா, அரையணா நாணயங்களைத் தனித் தனியாக மேஜை மீது அடுக்கி வைத்தார்.

     பில் பணம் கொடுக்க சாமண்ணா எதிரில் வந்து நின்ற போது, "எட்டரையணா மூணு பேர்" என்று உள்ளிருந்தபடியே கட்டைக் குரலில் கூவினான் சர்வர்.

     ஓட்டல் ஐயர், "இவாள்ளாம் யார்?" என்று சாமண்ணாவிடம் கேட்டார்.

     "நாடகம் பார்க்க வந்தாங்க. வெளியூர். மழைக்காக ராத்திரி இங்கே தங்கிட்டு இப்ப ஊருக்குப் போறாங்க."

     "இன்னிலேர்ந்து நாடகம் இல்லையாமே!"



ஆப்பிள் பசி : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13   14   15   16   17   18
19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi3.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs