http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஆப்பிள் பசி

36

     மாட்டு வண்டியில் அமர்ந்திருந்த சாமண்ணா மீண்டும் வெளியே பார்த்தான். "பாப்பா!" என்று வாய்விட்டுக் கூவினான். வானத்தின் மேகங்கள் மத்தியில் அவள் முகம் அந்தரமாகத் தெரிந்தது.

     "பாப்பா! உன்னுடைய தியாகம், அன்பு, பாசம் எல்லாம் இப்போதுதான் தெரிகிறது. நீ சாதாரண மனுஷி அல்ல; தெய்வத்துக்குச் சமமானவள். உன்னை நான் பெரும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டேன். இனி ஒருபோதும் என்னால் உனக்குச் சங்கடம் இராது. நான் உனக்கு இழைத்த குற்றங்களுக்கெல்லாம் ஆண்டவன் என்னைத் தண்டித்துவிட்டான். நீ ஓடி வருவாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் உனக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒரு வேளை என் கால் சரியாக இருந்தால் உன்னை நானே வந்து பார்த்தாலும் பார்த்திருப்பேன். ஆனால் இப்போது இந்த நிலையில் வரவே மாட்டேன். என்னுடைய அகம்பாவத்துக்குக் கிடைத்த பரிசு இது. உன்னைப் பார்க்கவே வெட்கப்படுகிறேன்.

     பாப்பா, என் இஷ்டப்படி உயர உயரப் பறக்கலாம் என்று இறுமாப்புடன் வாழ்ந்தேன். கடவுள் என்னைப் பாதாளத்தில் வீழ்த்திவிட்டார். நான் இந்தக் கதிக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இப்போது என் கிராமத்திற்கே போகிறேன். உன்னைப் பார்க்கக் கூட எனக்குத் தைரியமில்லை. நான் உனக்கு இனி எவ்விதத்திலும் பொருத்தமில்லாதவன். என்னை மன்னித்து விடு."

     சீரான குளிர் காற்று வண்டியை நோக்கி வீசியது. கணத்துக்குக் கணம் அதன் வேகமும் வாடையும் கூடியது.

     "விறைக்குதுங்க!" என்று சொல்லிக் கொண்டே வண்டிக்காரன் ஒரு துண்டை இழுத்து உடம்பைச் சுற்றிக் கொண்டான்.

     'சொட சொட' என்று சத்தம். மழை வண்டிக் கூரையைத் தாக்கியது. வண்டிக்காரன் நடுங்கி ஓரமாக ஒடுங்கினான்.

     புறப்பட்டபோது சாமண்ணாவுக்கு உடம்பு ஒரு மாதிரி இருந்தது. சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாள் ஆயிற்று. இப்போது அவனுக்கும் உடம்பு வெடவெடத்தது. தொடர்ந்து கன மழை பெய்தது. சாதாரணத் திவலைகள் அல்ல. ஒரு சமுத்திரம் சொரிந்தது. வண்டிக்குள் இம்மி பாக்கி இல்லாமல் அத்தனையும் நனைந்து தெப்பலாகிவிட்டது. சாமண்ணா வெடவெடத்தான். பெட்டியிலிருந்து மற்றொரு போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டான். 'அம்மா, அம்மா' என்று அரற்றினான். பெட்டி மீது சாய்ந்து கொண்டான். சாதாரணக் கல் பாவிய பாறையாதலால் கடக் கடக் என்று சக்கரம் அரைக்க, கூண்டு பெரிதாக ஆடியது. இருபக்கமும் அடர்த்தியான மர வரிசைகள் பேய் போல வடிவம் காட்டின.

     "வண்டிக்காரரே! இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?" என்று கேட்டான் சாமண்ணா.

     "ஆறு கல்!" என்றான் வண்டிக்காரன்.

     "ஆறு மைலா?"

     ஒரு நிலையாகப் படுக்க முடியவில்லை. மழை நின்றபாடில்லை. வண்டிக்காரன் 'தா! தா!' என்று குரல் கொடுத்து மாடுகளை அதட்டிக் கொண்டிருந்தான்.

     சாமண்ணாவுக்கு நெஞ்சு படபடக்க, ஜுரக் குளிர் வேகமாக அடிக்க, "அம்மா! அம்மா!" என்றான். கண்ணைத் திறக்க முடியவில்லை.

     சட்டென்று வண்டி எங்கேயோ நின்றது. வண்டிக்காரன் எட்டிப் பார்த்தான். முதலில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. பிறகு எதிரில் நீர்க்கோடு தெரிந்தது. ஏதோ ஒரு ஓடை நிரம்பி ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான்.

     "ஐயா, ஐயா!" என்று சாமண்ணாவை எச்சரித்தான். உள்ளே பதில் இல்லை.

     வண்டிக்காரன் குதித்தான். மாடுகள் புத்திசாலித்தனமாக நின்றன.

     அவற்றின் தலைக்கயிறுகள் இரண்டையும் பற்றிக் கொண்டு முன்னால் தண்ணீருக்குள் மெதுவாக நடந்தவாறு போனான். வண்டியும் பின்னாடி சென்றது. மறுபக்கம் மேடு ஏறினதும், "ஐயா" என்று அழைத்தபோதும் சாமண்ணா பதில் கூறாமல் படுத்துக் கிடந்தான்.



ஆப்பிள் பசி : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13   14   15   16   17   18
19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi36.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs