http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஆப்பிள் பசி

1

... தொடர்ச்சி ...

     காடா விளக்கு ஒளியில் கண்ணாடி வளையல்களைப் பரப்பிக் கொண்டு பட்டை நாமம் தீட்டியிருந்த வளையல் வியாபாரி தெலுங்கு பேசிக் கொண்டிருந்தார். சுவர் ஓரமாக அடுப்பு வைத்து மசால் வடை வேகும் வாசனை போவோர் வருவோரைச் சுண்டி இழுத்தது.

     கைநிறைய வளையல்களை அடுக்கிக் கொண்டு, வாய் நிறைய மசால் வடையைத் திணித்துக் கொண்ட பாப்பா, "சோடா" என்றாள் அப்பாவிடம். சற்றே தூரத்தில் அரச மரத்தடியில் பொய்க்கால் குதிரை ஆட்டம் நடப்பதைப் பார்த்த அவள், "அங்கே போய் வேடிக்கை பார்க்கலாமா?" என்பது போல் கண்களால் கேட்டாள்.

     "அதுக்கெல்லாம் நேரமில்லே. இப்ப முதல்ல நகைக்கடைக்குப் போய் உன் அம்மாவின் வளையல், காசு மாலை, கம்மல் அத்தனையும் வித்து, காசாக்கிடணும். தங்கம் நல்ல விலை போகுதாம். அப்புறம் இந்த ஊர்ல நம்ம உறவுக்காரப் பையன் ஒருத்தன் எலக்ட்ரிக் ஆபீஸ்ல வேலை செய்யறானாம். உன் அழகுக்கு ஏத்த பையனாம். அம்மா சொல்லிட்டுப் போயிருக்கா, உன்னை அவனுக்குத்தான் கட்டிக் கொடுக்கணும்னு. அவன் விலாசம் கேட்டு வாங்கி வச்சிருக்கேன்."

     "எனக்குக் கலியாணமும் வேணாம். ஒண்ணும் வேணாம்" என்றாள் பாப்பா.

     "அப்படின்னா?"

     "ராத்திரிக்கு டிராமா பார்க்கலாம்பா. வள்ளித் திருமணம்."

     "முதல்லே வள்ளித் திருமணம். அப்புறம்தான் உன் திருமணங்கறயா? நல்ல பெண்ணம்மா நீ! வா, ஐயர் கடைக்குப் போய் ஏதாச்சும் சாப்பிடலாம்."

     "எனக்குப் பசி இல்லை. கரும்புச் சாறும் மசால்வடையும் நெஞ்சைக் கரிக்குது... நீங்க சாப்பிடுங்க."

     இருவரும் ஐயர் கிளப்பை நோக்கிச் செல்லும் போது, "அரிக்கன் விளக்கு வாங்கணும்னு சொன்னீங்களே, அத பாருங்க, அந்தக் கடையிலே..." என்றாள் பாப்பா.

     வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் அரிக்கன் விளக்கு ஒன்றை விலை பேசி வாங்கி அதில் நாடா போட்டு, 'குரங்கு மார்க்' கெரஸினும் ஊற்றிக் கொண்டார்கள்.

     பாண்டு வாத்தியம் இசைக்க, ஆகாச வேட்டுகள் முழங்க, தண்டமாலையும் தங்க ஆபரணங்களும் மத்தாப்பு வெளிச்சத்தில் தகதகக்க, ஊரே குதூகலத்தில் எக்களிக்க தைப்பூச உற்சவர் ஏக தடபுடலாய் வீதிவலம் போய்க் கொண்டிருந்தார்.

     கூட்டம் அலைமோதிக் கொண்டு நகர்ந்த போது, இளமையின் பூரிப்பில் பதினேழைக் கடந்து நின்ற பாப்பாவின் அழகை மத்தாப்பூ வெளிச்சத்தில் கண்டு மயங்கிய வாலிபர்கள் அவளையே கண்கொட்டாமல் பார்த்தார்கள்.

     "பாப்பா, சாமி பார்த்தது போதும், வா. இந்த ஆசாமிங்க கண்ணிலிருந்து தப்பிப் போயிரலாம்" என்று அழைத்தான் குமாரசாமி.

     நகைக் கடைக்குப் போய் அம்மாவின் நகைகளைக் கல்லில் உரசி, மாற்றுப் பார்த்து, குந்துமணி எடை போட்டுப் பணம் வாங்குவதற்குள் மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. 'டிராமாவுக்கு லேட்டாயிடுத்தே!'

     குமாரசாமியின் இடுப்பில் இப்போது நகைகளுக்குப் பதிலாக நூறு ரூபாய் நோட்டுகளாய் மாறி இருந்தன. அடிக்கொரு தடவை இடுப்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவன், "ஐயாயிரம் எதிர்பார்த்தேன். ஆறாயிரமாக் கெடச்சுட்டுது" என்று காவிப் பற்களைக் காட்டினான்.

     "உரக்கப் பேசாதீங்க. எவனாவது பிக்பாக்கெட் அடிச்சுடப் போறான்."

     "அவன் பொழைச்சுருவானா அப்புறம்?" என்று மீசையைத் தடவியவன், "இனிப்பு ஏதாச்சும் சாப்பிடறயாம்மா. ஜாங்கிரி, மைசூர்ப்பாகு!" எதிரில் பெட்ரமாக்ஸ் விளக்கில் பிரகாசித்த மிட்டாய்க் கடையைக் காட்டினான்.



ஆப்பிள் பசி : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13   14   15   16   17   18
19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasia.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs