உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 22 ...
2101 வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து இரவுஅறி வானை * யெழுஞ்சுடர்ச் சோதியை அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 18 * ச் செழுஞ்சுடர்ச் 38. இதோபதேசம்
2102 மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. 1
2103 செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல வரநெறி நாடுமின் நீரே. 2
2014 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை * நாணாமே சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. 3 * நாளுமே
2105 போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக் காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 4
2106 இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில் புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின் எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று அக்காலம் உன்ன அருள்பெற லாமே. 5
2107 போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன் சாகின்ற போதும் தலைவனை நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. 6
2108 பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப் பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 7
2109 கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப் பாடியுளே நின்று பாதம் பணிமின்கள் ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 8
2110 விடுகின்ற சிவனார் மேல்எழும் போது நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம் கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன் * இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 9 * இடுகின்ற தும்மை
2111 ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சுடை அண்ணல் * திருவடி வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 10 * இவரென்று
2112 இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை அன்புறு வீர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்துப் பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 11
2113 மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. 12
2114 சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன் பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல் * காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. 13 * காட்டுஞ்
2115 * முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி அதுவிரும் பாரே. 14 * முத்திரைஞான முழுத் தமிழ்
2116 நியமத்த னாகிய நின்மலன் வைத்த உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார் பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால் சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. 15
2117 இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை * நஞ்சற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. 16 * நஞ்சத் தவர்க்
2118 பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும் செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 17
2119 சிவனை வழிபட்டார் * எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடின் கூடலும் ஆமே. 18 * எண்ணிலி
2120 நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக் கருமங்க ளாலே கழிதலில் கண்டு குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால் பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 19
2121 ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற மேற்கொண்டவர்வினை போயற நாடொறும் நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின் மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே. 20 ஏழாம் தந்திரம் முற்றிற்று எட்டாம் தந்திரம் * (* இது சுப்பிர பேதாகமத்தின் சாரம் என்பர்) 1. உடலிற் பஞ்சபேதம்
2122 காயப்பை ஒன்று சரக்குப் பலவுள * மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப்பை மண்ணா மயங்கிய வாறே. 1 * மாயப் படைதனில் மற்றுமோர்
2123 அத்தன் அமைத்த உடல்இரு கூறினில் சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால் சத்த பரிச ரூப ரசகந்தம் புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே. 2
2124 எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவே கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே. 3
2125 இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவ மலால்உடல் ஒன்றென லாமே. 4
2126 ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கவர் நின்றது யாரே அறிவார் * அறுபத்தெட் டாக்கையை யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே. 5 * அறுபத்தோ
2127 எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள் கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில் புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற நண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே. 6
2128 * உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன் ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம் கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி அடங்கியே அற்றது ஆரறி வாறே. 7 * உடம்புகள்
2129 ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால் தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும் கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியே ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே. 8
2130 மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே. 9
2131 காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல் சேய இடம்அண்மை செல்லவும் வல்லது காயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டு ஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே. 10
2132 நாகம் உடல்உரி போலும்நல் அண்டச மாக நனாவில் கனாமறந் தல்லது போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே. 11
2133 உண்டு நரக சுவர்கத்தில் உள்ளன கண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோல் பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே. 12
2134 தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன் ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும் ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே. 13
2135 ஞானிக்குக் காயம் * சிவமாகும் நாட்டிடில் ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும் மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும் மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே. 14 * சிவமே தனுவாகும்
2136 விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனு * எஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும் மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே. 15 * தஞ்ஞானத்
2137 மலமென்று உடம்பை மதியாத ஊமர் தலமென்று வேறு தரித்தமை கண்டீர் நலமென்று இதனையே நாடி இருக்கில் பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே. 16
2138 நல்ல வசனத்து வாக்கு மனாதிகள் மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவிசத்த மாதி மனத்தையும் மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே. 17 2. உடல் விடல்
2139 பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும் விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. 1
2140 அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள் கழிகின்ற * காலவ் விரதங்கள் தானம் மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே. 2 * காலம்
2141 இலையாம் இடையில் எழுகின்ற காமம் * முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத் தலையாய மின்னுடல் தாங்கித் திரியும் சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே. 3 * முலைவாய் 3. அவத்தை பேதம் - கீழால் அவத்தை
2142 ஐஐந்து * மத்திமை யானது சாக்கிரம் கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர் பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனை மெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே. 1 * மத்திமமானது
2143 முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச் செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி அப்பதி யாகும் நியதி முதலாகச் செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே. 2
2144 இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும் பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே. 3
2145 பாரது பொன்மை பசுமை உடையது நீரது வெண்மை செம்மை நெருப்பது காரது மாருதம் கறுப்பை உடையது வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4
2146 பூதங்கள் ஐந்தும் பொறியவை * ஐந்துளும் ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமோடு ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே. 5 * ஐயைந்தும்
2147 இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை படுபர சேனையும் பாய்பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர் அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 6
2148 உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் * உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார் மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7 * உடம்போடுயிரின் உடம்பறி
2149 இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள் முருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்து உருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே. 8
2150 ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலை அளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்து அளிக்கும் கலைகளி னால்அறு பத்து ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. 9
2151 மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும் பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம் மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய் * உன்னின் முடிந்தது ஒருபூத சயமே. 10 * உன்னி முடிந்தது பூத சமயமே
2152 முன்னிக்கு ஒருமகன் * மூர்த்திக் கிருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்கு # ப்பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை $ கன்னியைக் கன்னியே காதலித் தானே. 11 * முத்திக்கிருவராம் # ஐவர்மின் னாளில்லை கன்னியை $ கன்னிக்குக் கன்னி
2153 கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே. 12
2154 நின்றவன் * நிற்கப் பதினாலில் பத்துநீத்து ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே. 13 * நிற்பப்
2155 தானம் இழந்து தனிபுக்கு இதயத்து மானம் அழிந்து மதிகெட்டு மாலாகி ஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தின் மேனி அழிந்து சுழுத்தியது ஆமே. 14
2156 கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்தன் * காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து விழுமப் பொருளுடன் மேவிநின் றானே. 15 * போதம்
2157 தானத்து எழுந்து தருக்கு துரியத்தின் வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக் கானத்து எழுந்த கருத்தின் தலையிலே ஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே. 16
2158 ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில் ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் * ஓமய முற்றது உள்ளொளி பெற்றது # நாமய மற்றது நாம்அறி யோமே. 17 * ஊமைய மற்றது # நாமைய
2159 துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே நரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தன பரிய புரவியும் * பாறிப் பறந்தது துரிய # மிறந்திடம் சொல்லஒண் ணாதே. 18 * பாரிற் பரந்தது # மிருந்திடம்
2160 மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில் வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்கு ஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்து ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே. 19
2161 உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும் அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவது நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்து எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே. 20
2162 அதிமூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி நிதமான கேவலம் இத்திறம் சென்று பரமாகா ஐஅவத் தைப்படு வானே. 21
2163 ஆசான்முன் னேதுயில் மாண வகரைத் தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல் நேசாய ஈசனும் நீடுஆண வத்தரை ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே. 22
2164 மஞ்சொடு மந்தா கினிகுட மாம்என விஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதி எஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல் அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே. 23
2165 படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான்வரும் போது * அடியுடை ஐவரும் அங்குஉறை வோரும் துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே. 24 * வடியுடை; படியடை
2166 நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின் நேரான வாறுஉன்னி நீடு நனவினில் நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. 25 4. மத்திய சாக்கிராவத்தை
2167 சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயை சாக்கிரம் தன்னிற் சுழுத்திதற் காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. 1
2168 மாயை எழுப்பும் கலாதியை மற்றதின் நேய விராகாதி ஏய்ந்த துரியத்துத் தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னி ஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே. 2
2169 மேவிய அந்த கண் விழிகண் குருடனாம் ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டு மேவும் தடிகொண்டு * சொல்லும் விழிபெற மூவயின் ஆன்மா முயலும் கருமமே. 3 * செல்லும்
2170 மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல் அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்று சத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே. 4
2171 வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும் உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன் பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே. 5
2172 நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன் வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன் கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன் வேறான நாலேழு வேதாந்த தத்துவமே. 6
2173 ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை கோலங்கொண்டு ஆங்கே குணத்தினுடன் புக்கு மூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும் காலங்கொண் டான்அடி காணலும் ஆமே. 7
2174 நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே. 8
2175 ஆவன ஆக அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் * ஏவன செய்யும் # இலங்கிழை யோனே. 9 * ஏவனெவன் # இளங்கிளை
2176 பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும் தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே. 10
2177 விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான் தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால் வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. 11
2178 நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம் மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவை கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. 12
2179 ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி * வயிணவர்க்கு ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே. 13 * வைணவர்க்
2180 தத்துவ மானது தன்வழி நின்றிடில் வித்தக னாகி விளங்கி யிருக்கலாம் பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழி தத்துவம் ஆவது அகார எழுத்தே. 14
2181 அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்தி அறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே. 15
2182 சாக்கிர சாக்கிர மாதி * தனில்ஐந்தும் ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறு நீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே. 16 * நிலையைந்தும்
2183 ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்கு ஆணவ மாதிநான் காமாற்கு அரனுக்கு ஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்ப ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே. 17 5. அத்துவாக்கள்
2184 தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1
2185 நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும் கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2
2186 சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத் தாக்கிய * வன்பான தாண்டவம் சார்ந்துஅது தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. 3 * வன்பான் 6. சுத்த நனவாதி பருவம்
2187 நானவாதி தூலமே சூக்கப் பகுதி அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே. 1
2188 நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் * நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் # சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவுஓட நன்செய்தி யானதே. 2 * நகர்ந்தார் # சுழுனை
2189 செறியுங் கிரியை சிவதத் துவமாம் பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி குறிதல் திருமேனி குணம்பல வாகும் அறிவில் சராசரம் அண்டத் தளவே. 3
2190 ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம் ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம் போதம் கலைகாலம் நியதிமா மாயை நீதிஈ றாக நிறுத்தினன் என்னே. 4
2191 தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம் ஈசன் அனல்வித்தை இராகம் கலைகால மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மாஈ * றாறே. 5 * ராறே
2192 ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம் * காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. 6 * காண முளையும் தவிடு
2193 பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. 7
2194 உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம் அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக் கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே. 8
2195 தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம் சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம் பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம் மற்றது உண்டிக் கனவுநன வாதலே. 9
2196 நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில் கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனலுண் பகுதியே தற்கூட்டும் மாயை நனவில் துரியம் அதீதம் தலைவந்தே. 10
2197 ஆறாறில் ஐஐந்து அகல நனாநனா ஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனா வேறான ஐந்தும் விடவே நனாவினில் ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே. 11
2198 மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச் சேயதே வலவிந் துடன் செல்லச் சென்றக்கால் ஆய தனுவின் பயனில்லை யாமே. 12
2199 அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா அதீதத் துரியம் அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவாகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே. 13
2200 ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர் பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின் மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே. 14 |