உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 23 ...
2201 புரியட் டகமே பொருந்தல் நனவு புரியட் டகந்தன்னில் மூன்று கனவு புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே. 15
2202 நனவில் நனவு புனலில் வழக்கம் நனவிற் கனவு நினைத்தல் மறத்தல் நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே. 16
2203 கனவில் நனவுபோல் காண்டல் நனவாம் கனவினில் கண்டு மறத்தல் கனவாம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அனுமாதி செய்தலில் ஆன துரியமே. 17
2204 சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவுஅறி வாலே * யழிகை சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே. 18 * யறிகை
2205 துரிய நனவா * மிதமுணர் போதம் துரியக் கனவாம் அகமுணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரமெனத் தோன்றிடும் தானே. 19 * மிதமுரை
2206 அறிவுஅறி கின்ற அறிவு நனவாம் அறிவுஅறி யாமை அடையக் கனவாம் அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்தி அறிவுஅறி வாகும் ஆன துரியமே. 20
2207 தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு ஞானம் தனதுரு வாகி நயந்தபின் தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டு மேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே. 21
2208 ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியாம் மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை ஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே. 22
2209 ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின் ஈதென்று அறியும் இயல்புடை * யோனே. 23 * யோரே
2210 உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய் அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி இயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே. 24
2211 சத்தி * யிராகத்தில் தான்நல் உயிராகி ஒத்துறு பாச மலம்ஐந்தோடு ஆறாறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் # மலம்அறு மாறே. 25 * யராகத்திற்; விராகத்திற் # மயமறு
2212 சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச் சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச் சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே. 26
2213 மலக்கலப் பாலே மறைந்தது சத்தி மலக்கலப் பாலே மறைந்தது ஞானம் மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு மலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே. 27
2214 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு * வகைக்கின்ற நெஞ்சினுள் # ஆனைக்கன்று ஐந்து பகைக்கின்ற $ நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. 28 * அசைக்கின்ற # ஆனைகளைந்தும் $ நெஞ்சிற் பகையிவ ராமே
2215 கதறு பதினெட்டுக் * கண்களும் போகச் சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும் விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் அதிர வருவதோர் ஆனையும் ஆமே. 29 * கணங்களும்
2216 நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக் கனவகத் தேஉள் கரணங்க ளோடு முனவகத் தேநின்று உதறியுட் புக்கு நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே. 30
2217 நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய் ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச் சென்று துரியாதீ தத்தே சிலகாலம் நின்று பரனாய் நின்மல னாமே. 31
2218 ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத் தான்உலகு உண்டு சதாசிவ மாசத்தி மேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகி மோனம் அடைந்தொளி மூலத் னாமே. 32
2219 மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக் கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற விண்டவர் தாமரை மேலொன்றும் கீழாக அண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே. 33
2220 போதறி யாது புலம்பின புள்ளினம் மாது அறி யாவகை நின்று மயங்கின வேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறை சூதறி வாருச்சி சூடிநின் றாரே. 34
2221 கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித் திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை பருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே. 35
2222 ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத் தான விளக்கொளி யாம்மூல சாதனத்து ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே. 36
2223 உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய விண்நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில் கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே. 37
2224 அறியாத * வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியாது அறிவானை யார்அறிவாரே. 38 * வத்தை
2225 துரிய தரிசனம் சொற்றோம் * வியோமம் அரியன தூடணம் அந்தண வாதி பெரியன கால பரம்பின் துரியம் அரிய அதீதம் அதீதத்த தாமே. 39 * யார்க்கும்; வியாத்தம்
2226 மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்றது நீவுதல் மாயையாம் கேவல மாகும் * சகலமா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. 40 * சகலமாம் 7. கேவல சகல சுத்தம்
2227 தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும் பின்னம் உறநின்ற பேத சகலனும் மன்னிய சத்தசத் துச்சத சத்துடன் துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே. 1
2228 தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. 2
2229 ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்து ஆம்உயிர் மாயை * எறிப்ப அறிவுற்று காமியம் மாமேய மும்கல வாநிற்பத் தாம்உறு பாசம் சகலத்து ஆமே. 3 * எழுப்ப அறிவுறக்
2230 சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர் நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள் நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே. 4
2231 தாவிய மாயையில் தங்கும் பிரளயம் மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே. 5
2232 ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர் ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. 6
2233 ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர் போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டு ஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம் தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே. 7
2234 ஒரினும் மூவகை நால்வகை யும்உள தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை சார்இய லாயவை * தாமே தணப்பவை வாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே. 8 * தானே
2235 * பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்று எய்யாமை நீங்கவே # எய்தவன் தானாகி மெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்கு எய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே. 9 * மெய்யான # வெய்யவன்
2236 அனாதி பசுவியாத்தி யாகும் இவனை அனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலம் அச்சக லத்திட்டு அனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே. 10
2237 அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு தந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத் தின்பால் துரியத் திடையே அறிவுறத் தன்பால் தனையறி தத்துவந் தானே. 11
2238 ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்தி ஐயன் * சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே. 12 * சிவஞ்சத்தி
2239 ஐஐந்து * மான்மாவில் ஆறோடு அடங்கியும் மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபாகத் தேகாண # எய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே. 13 * மானவில் # எய்தும்
2240 ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயைப் பிரளயா கலராகும் * காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே. 14 * காணம்
2241 ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயை பிரளயா கலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே. 15
2242 கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர் கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால் ஆவயின் கேவலத்து அச்சக லத்தையும் மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே. 16
2243 மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவ மாய சகலத்துக் காமிய மாமாயை ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே. 17
2244 * மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர் மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்து அம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே. 18 * மும்மல மைம்மலங் கூடி முயங்குவோர்
2245 சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச் சத்துஅசத்து ஓடத் * தனித்தனி பாசமும் மத்த இருள்சிவ னான கதிராலே தொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே. 19 * தனித்தளை
2246 தற்கே வலம்முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே. 20
2247 அறிவின்றி * முத்தன் அராகாதி சேரான் குறியொன்றி # லாநித்தன் கூடான் காலதி செறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன் கிறியன் மலவியாபி கேவலம் தானே. 21 * மூத்தோன் # லாதித்தன்
2248 விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத ஞான பரையும் தனுச்சுத்தி விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர் வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே. 22
2249 கேவல மாதியின் பேதம் கிளக்குறில் கேவல மூன்றும் கிளரும் சகலத்துள் ஆவயின் மூன்று மதிசுத்த மூடவே ஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே. 23
2250 கேவலத்தில் கேவலம் அதீதா தீதம் கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம் கேவத் திறசுத்தம் கேடில்விஞ் * ஞாகலர்க்கு ஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே. 24 * ஞான கலர்க்
2251 சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம் சகல சகலமே சாக்கிர சாக்கிரம் சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே. 25
2252 சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல் சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம் சுத்த சகலம் துரிய விலாசமாம் சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே. 26
2253 சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமே ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே. 27
2254 சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம் சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காது ஆக்கு பரோபதி * யாஉப சாந்தத்தை நோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே. 28 * யாமுப
2255 பெத்தமும் முத்தியும் * பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும் அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல்இல்லை தானே. 29 * பேணுஞ் சகலமுஞ்
2256 எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோடு எய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவே எய்தும் உயிர்இறை பால்அறி வாமே. 30
2257 ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர் ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார் ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யாள்பவர் ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே. 31
2258 கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும் உரிய சுழுனை முதல்எட்டும் சூக்கத்து அரிய கனாத்துலம் அந்தன வாமே. 32
2259 ஆணவம் ஆகும் * அதீதம்மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம் பேணும் கனவும் மாமாயை திரோதாயி காணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே. 33 * அதீதத்து
2260 அரன்முத லாக அறிவோன் அதீதத்தன் அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோர் அருளும் அறைவார் சகலத்துற் றாரே. 34
2261 உருவுற்றுப் போகமே போக்கியம் துற்று மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி வரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே. 35
2262 இருவிடை ஒத்திட இன்னருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக் குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. 36
2263 ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு ஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப் பேறான ஐவரும் போம்பிர காசத்து நீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே. 37
2264 தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான் தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான் உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே. 38
2265 சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம் நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம் வாக்கும் மனமும் மருவல்செய் யாவே. 39
2266 அப்பும் அனலும் அகலத்து ளேவரும் அப்பும் அனலும் அகலத்து ளேவாரா அப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில் அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே. 40
2267 * அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம் உறும்ஏழு மாயை # உடன்ஐந்தே சுத்தம் பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்து உறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே. 41 * அறுநான்கு சுத்தம் # உடனணைந்தே
2268 மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே. 42 8. பராவத்தை
2269 அஞ்சும் * கடந்த அனாதி பரன்தெய்வம் நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட வஞ்சத் திருந்த வகையறிந் தேனே. 1 * கந்தவன் ஆதி
2270 சத்தி பராபரம் சாந்தி தனிலான சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன் சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே. 2
2271 ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறாறுக்கு அப்பால் * அறிவாம் அவர்கட்கே ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. 3 * அறிவார்
2272 அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு நஞ்சுற நாடி நயம்செய்யு மாறே. 4
2273 உரிய நனாத்துரி யத்தில் இவளாம் அரிய துரிய நனவாதி மூன்றில் பரிய பரதுரி யத்தில் பரனாம் திரிய வரும்துரி யத்தில் சிவமே. 5
2274 பரமாம் அதீதமே பற்றறப் பற்றப் பரமாம் அதீதம் பயிலப் பயிலப் பரமாம் அதீதம் * பயிலாத் தபோதனார் பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே. 6 * பயிலாத போதம்
2275 ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும் வாயு மனமும் கடந்துஅம் * மயக்கறின் தூய அறிவு சிவானந்த மாகிப்போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே. 7 * மயக்கந்
2276 துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. 8
2277 நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின் * மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன்வடி வாமே. 9 * மன்றலு
2278 விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்திடை ஈடான மாயை பொருந்தும் துரியம் புரியல்தா னாகும் தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே. 10
2279 உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய் உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. 11
2280 கருவரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே. 12
2281 அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணுஅசை வின்கண் ஆனகனவும் அணுஅசை வில்பரா தீதம் கழுத்தி * பணியில் பரதுரி யம்பர மாமே. 13 * பணிவில்
2282 பரதுரி யத்து நனவும் பரந்து விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி உருவுறு கின்ற * சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவதுரி யத்தனு மாமே. 14 * சுழுனையும்
2283 பரமா நனவின்பின் பால்சக முண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே. 15
2284 சீவன் துரியம் முதலாகச் சீரான ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும் ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுவித்துநின் றானே. 16
2285 பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில் பரம்பரன் மேலாம் பரநன வாக விரிந்த கனாவிடர் வீட்டும் சுழுனை உரந்தகு மாநந்தி யாம்உண்மை தானே. 17
2286 சார்வாம் பரசிவஞ் * சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப் பாலாய்ப் பிரமன் அரியம ராபதி தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே. 18 * சத்திபால் நாதமாம்
2287 கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும் உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மை அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார் குறிப்பது கோலம் அடலது வாமே. 19
2288 பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம்இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியலுற்று இன்புற்ற வாறே. 20
2289 பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கர ணங்களாம் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. 21
2290 மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் * பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே. 22 * பரத்துள்
2291 ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி ஈறார் பரையின் இருளற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. 23
2292 துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம் புரியப் பரையில் பராவத்தா போதம் திரிய பரமம் துரியம் தெரியவே. 24
2293 ஐந்தும் சகலத்து அருளால் * புரிவற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம் அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே. 25 * புரிவுற்றுப்
2294 ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும் பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. 26
2295 நின்றான் அருளும் பரமும்முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. 27 9. முக்குண நிர்க்குணம்
2296 * சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால் வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் # மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே. 1 * சாத்திய பேதம்; சாத்திய வேதம் # ஆய்த்திடு 10. அண்டாதி பேதம்
2297 பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல்அள வாகப் பொறியொளி * பொன்னணி யென்ன விளங்கிச் செறியும் அண் டாசனத் தேவர் பிரானே. 1 * பொன்மணி; பொன்னொளி
2298 ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல் மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க் தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே. 2 11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்
2299 அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம் முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே. 1
2300 புருட னுடனே பொருந்திய * சித்தம் அருவமொ டாறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும் அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே. 2 * தேசும் |