உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 24 ...
2301 காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல் நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே. 3 12. கலவு செலவு
2302 கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விடவரு நீக்கத்துப் பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்ற தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. 1
2303 வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையை அல்லும் பகலும் * அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே. 2 * அறிவுடன் 13. நின்மல அவத்தை
2304 ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர் ஆமையின் உள்ளே *யழுவைகள் ஐந்துள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே. 1
2305 காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம் மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக் காலனும் இல்லை கருத்தில்லை தானே. 2
2306 ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது தான்மா மறையறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால் ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே. 3
2307 உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின் கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே. 4
2308 எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர் பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச் செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே. 5
2309 காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. 6
2310 ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து ஏனை அருள்செய் * தெரிநனா அவத்தையில் ஆன வகையை விடும்அடைத் தாய்விட ஆன மாலதீதம் அப்பரந் தானே. 7 * தெரிசனா வவத்தையில்
2311 சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச் சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே. 8
2312 வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான் வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே. 9
2313 கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை நிறஞ்சேர் ததிமத்தன் * மலத்தே நின்றங்கு அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்து # கிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே. 10 * மலத்தினில் # திரங்கா
2314 தானே சிவமான தன்மை தலைப்பட ஆன மலமும்அப் பாச பேதமும் ஆன குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன்மதி போல்பலராவே. 11
2315 நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத்தக்க மாலும் திசைமுகன் தானும் உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே. 12
2316 ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாமே. 13
2317 ஆடிய காலில் * அசைக்கின்ற வாயுவும் தாடித் தெழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேதாக மங்களும் நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே. 14 * அசைகின்ற
2318 * முன்னை அறிவினில் செய்த முதுதவம் # பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அஃதன்றிப் பின்னை அறிவது பேயறி $ வாகுமே. 15 * முன்னைப் பிறவியிற் # பின்னைப் பிறவியிற் $ வாமே
2319 செயலற் றிருக்கச் சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் * சிவயோகம் தேடார் செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே. 16 * சிவோகமுந் தேறார்
2320 தான்அவ னாகும் சமாதிகை கூடினால் ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம் ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே. 17
2321 தொலையா அரனடி * தோன்றும் அம் சத்தி தொலையா இருளொளி தோற்ற அணுவும் தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே. 18 * தோன்றுமைஞ்
2322 தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம் ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே. 19
2323 அறிகின்றி * லாதன ஐஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியா திருந்தேன் அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே. 20 * லாதான
2324 தான்அவ னாகிய ஞானத் தலைவனை வானவ ராதியை மாமணிச் சோதியை ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே. 21
2325 ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிய அருளே சிவானந்த மாமே. 22
2326 ஆனந்த மாகும் அரனருட் சத்தியில் தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில் கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே. 23
2327 அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. 24
2328 சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச் சித்தும் அசித்தும் * சிவசித்த தாய்நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே. 25
2329 தானே அறியான் அறிவிலோன் தானல்லன் தானே அறிவான் அறிவு சதசத்தென்று ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. 24
2330 தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும் தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே. 27
2331 தன்னை அறிந்து சிவனுடன் தானாக மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும் பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. 28
2332 ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம் தானுறும் இச்சை உயிராகத் தற்பரன் மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான் மோனிகள் * ஞானத்து முத்திரை பெற் றார்களே. 29 * ஞானத்தின் முத்தி
2333 உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம் உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே. 30
2334 தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர் கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும் பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே. 31
2335 இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி இல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமென்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே. 32
2336 உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே. 33
2337 சேரும் சிவமானார் ஐம்மலம் * தீர்ந்தவர் ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர் பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர் ஆருங்கண் டோரார் அவையருள் என்றே. 34 * தீந்தவர்
2338 எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின் எய்தினர் செய்யும் இருஞான சத்தியின் எய்தினர் செய்யும் இருஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறையருள் தானே. 35
2339 திருந்தினர் விட்டார் திருவில் நரகம் திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம் திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே. 36
2340 அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் * அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவனரு ளாமே. 37 * அறிவால்
2341 அருளான சத்தி அனல் வெம்மை போல பொருள் அவனாகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும் திருவருள் ஆனந்தி செம்பொரு ளாமே. 38
2342 ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள் பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப் * பேதித்துப் பேதியா வாறுஅருட் பேதமே. 39 * பேதித்த வேதியர் பேரருட் பேதமே
2343 பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் புணர்போதம் போதமும் நாதமும் நாத முடனாத நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள்இச்சை யாமே. 40
2344 மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப் பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள் ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே. 41
2345 ஆறாது அகன்று தனையறிந் தானவன் ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள் தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே. 42
2346 தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. 43
2347 சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர் சார்ந்தவர் * சத்த அருள்தன்மை யாரே. 44 * அச்சுதர்
2348 தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம் தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத் தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர் தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே. 45
2349 * தன்னினில் தன்னை அறியும் தலைமகன் * தன்னினில் தன்னை # அறியத் தலைப்படும் * தன்னினில் தன்னைச் $ சார்கிலன் ஆகில் * தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே. 46 * தன்னில் # அறியில் $ அறிவிலன் ஆயிடில்
2350 அறியகி லேன்என்று அரற்றாதே நீயும் நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை இருசுட ராகி இயற்றவல் லானும் ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. 47
2351 மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும் உண்ணின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனே கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் * அவ்வண்ணம் ஆகிநின்றானே. 48 * இவ்வண்ண
2352 ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று கூம்புகின் றார்குணத் தின்னொடும் * கூறுவர் தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர் கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே. 49 * கூடுவர்
2353 குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார் குறிஅறி யார்கடங் கூடல் பெரிது குறிஅறி யாவகை கூடுமின் கூடி அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே. 50
2354 ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம் வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத் தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர் தானே பிறப்போடு இறப்பறி யாரே. 51 14. அறிவுதயம்
2355 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் * தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. 1 * தான் கெடுகின்றனன்
2356 அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச் சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப் பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே. 2
2357 அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் * றருள்செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளால் # அறிந்தே அறிவு வடிவென் $ றருந்திருந் தானே. 3 * றறிவித்தான் என் நந்தி # அறிந்தும் $ றறிந்து மிலேனே
2358 அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு * அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே. 4 * அறிவல்லால் ஆதாரம்
2359 ஆயு மலரின் அணிமலர் * தன்மேலே பாய இதழ்கள் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த # மாகியே போய அறிவாய்ப் $ புணர்ந்திருந் தானே. 5 * மேலது வாய இதழும் # மாகிப் போய் மேய $ விளைந்தது
2360 மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து முன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே. 6
2361 அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின் அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம் அறிவுஅறி வாக அணிமாதி சித்தி அறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே. 7
2362 அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம் அறிவுஅறி யாமை யாரும் அறியார் அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால் அறிவுஅறி யாமை அழகிய வாறே. 8 (இப்பாடல் 2637-ம் பாடலாகவும் வந்துள்ளது)
2363 அறிவுஅறி யாமையை நீவி யவனே பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே. 9
2364 அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது அறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது அறிவுடை யார்நெஞ்சொ * டாதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. 10 * டாதிப் பகவானும்
2365 * மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும் பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே. 11 * மாயனுமாய
2366 என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை * அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னை # யிட்டு என்னை உசாவுகின் றானே. 12 * அறியும் அறிவை அறிந்தபின் # விட் டுன்னை
2367 மாய விளக்கது நின்று மறைந்திடும் தூய விளக்கது நின்று சுடர்விடும் காய விளக்கது நின்று கனன்றிடும் சேய விளக்கினைத் தேடுகின் றேனை. 13
2368 தேடுகின் றேன்திசை எட்டோடு இரண்டையும் நாடுகின் றேன்நல மேஉடை யானடி பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக் கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே. 14
2369 முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன் மன்னிச் சிவமாக வாரா பிறப்பே. 15 15. ஆறு அந்தம்
2370 வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் * தகுமெட்டு யோகாநந்த அந்தமும் ஆதிக்க # லாந்தமும் ஆறந்தம் ஆமே. 1 * தருமெட்டின்; தகுமெட்டின் # லாந்தமொடாறந்த
2371 அந்தம்ஓர் ஆறும் அறிவார் * அதிசுத்தர் அந்தம்ஒர் ஆறும் # அறிவார் அமலத்தர் அந்தம்ஓர் ஆறும் $ அறியார் அவர்தமக்கு அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே. 2 * அமலத்தர் # அறியார் மலத்தர் $ அறியா தவர்தமக்
2372 தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு தேனார் பராபரம் * சேர்சிவ யோகமாய் ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. 3 * சேரச் சிவோகமாய்
2373 நித்தம் பரனோ * டுயிருற்று நீள்மனம் சத்தம் முதல் # ஐந்தும் தத்துவத் தால்நீங்கச் சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. 4 * டிருந்து # ஐந்து தத்துவந் தானீங்கிச்
2374 மேவும் பிரமனே விண்டு உருத்திரன் * மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் # விடாவாறாறு ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள $ தாமே. 5 * மேவு மெய்; மேவுமே யீசன் # விடருனா $ தாகும்
2375 உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா * தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல் # எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. 6 * நாதாந்தம் # எள்ளிடின் நாதாந்தத் தேற்றிடும்
2376 தேடும் இயம நியமாதி சென்றகன்று ஊடும் சமாதியில் உற்றுப் * படர்சிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. 7
2377 கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளன வாம் * விந்து உள்ளே ஓடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. 8 * விந்து முள்ளே
2378 தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு அளியவ னாகிய மந்திரம் தந்திரம் * தெளிவுப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9 * தெளியவுப
2379 ஆகும் அனாதி கலைஆ கமவேதம் ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல் ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம் ஆகும் சிவபோ தகம்உப தேசமே. 10
2380 தேசார் * சிவமாகும் தன்ஞானத் தின்கலை ஆசார நேய மறையும் கலாந்தத்துப் பேசா உரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே. 11 * சிவமாகு
2381 தான்அவ னாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. 12
2382 ஆறந்த * மும்சென்று அடங்கும்அந் நேயத்தே ஆறந்த # ஞேயம் அடங்கிடும் ஞாதுரு கூறிய ஞானக் குறியுடன் வீடவே தேறிய மோனம் $ சிவானந்த மாமே. 13 * முன்சென் # மேய மடங்கிடு $ சிவா னந்த வண்மையே
2383 உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம் உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. 14
2384 ஆவுடை யாளை அரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூளி யருளிய கோனைக் கருதுமே. 15
2385 கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில் வருசமயப் புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. 16
2386 * வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. 17 * வேதாந்த
2387 வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம் மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே. 18
2388 அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி பண்டுறு நின்ற பராசக்தி என்னவே கொண்டவன் அன்றிநின் * றான்தங்கள் கோவே. 19 * றான்எங்கள்
2389 கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே பாவனைத் தும்படைத் தர்ச்சனை * பாரிப்ப ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. 20 * பாலிப்ப
2390 ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் தானே. 21
2391 அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரனுறு தோயாச் சிவாநந்தி * யாமே. 22 * யாகுமே
2392 வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம் சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. 23
2393 * சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால் நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. 24 * சிவமான
2394 சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. 25
2395 சிவனைப் * பரமனுள் சீவனுள் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால் நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம் தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே. 26 * பரனுட்
2396 தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. 27
2397 வேதமோடு ஆகமம் மெய்யாம் * இறைவன்நூல் ஓதும் # பொதுவும் சிறப்பும்என்று உள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. 28 * இறைநூல் # சிறப்பும் பொதுவுமென்
2398 பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம் விராமுத்தி ரானந்தம் * மெய்நடன ஆனந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே. 29 * மென்னட
2399 ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில் ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. 30
2400 அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே. 31 |