பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 27 ...
2601 மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 7
2602 எய்திய காலத் திருபொழு துஞ்சிவன் மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. 8
2603 எய்துவ தெய்தா தொழிவ திதுவருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. 9
2604 கைகலந் தானை கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே. 10
2605 மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம் * கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. 11 * கைத்தாள்
2606 உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின் மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 12
2607 வம்பு பழுத்த * மலர்ப்பழம் ஒன்றுண்டு தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா தம்புகொண் டெய்திட் டகலத் # துரத்திடிற் செம்பொற் சிவகதி சென் $ றெய்த லாமே. 13 * பலாப்பழம் # துரத்திடிற் $ றெய் தலுமாமே
2608 மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத்தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. 14
2609 மனமது தானே நினையவல் லாருக்குக் கினமெனக் கூறு மிருங்காய மேவற் றனிவினி னாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 15 39. ஞானி செயல்
2610 முன்னை * வினைவரின் முன்னுண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே. 1 * நிலைவரின்
2611 தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் சென்னியின் வைத்த சிவனரு ளாலே. 2
2612 மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால் தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. 3 40. அவா அறுத்தல்
2613 வாசியு மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே. 1
2614 மாடத்து ளானலன் மண்டபத் தானலன் கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் தானே. 2
2615 ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. 3
2616 அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே * படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. 4 * படுபழி
2617 உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே. 5
2618 நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் * துன்தொழி லற்றுச் சுத்தம தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. 6 * உன்தொழி
2619 உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம் பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் வண்மை யருள்தான் * அடைந்தபின் ஆறுமே. 7 * அடைந்தபின்
2620 அவனிவன் ஈசனென் றன்புற நாடிச் சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார் பவனிவன் பல்வகை யாமிப் பிறவி புவனிவன் போவது பொய்கண்ட போதே. 8
2621 கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம் நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. 9
2622 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் * சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால் முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 10 * சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால் 41. பக்தியுடைமை
2623 முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்தனைச் சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 1
2624 அடியார் அடியார் * அடியார்க் கடிமைக் கடியவனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியா னிவனென் றடிமைகொண் டானே. 2 * அடியாரடிமைக்
2625 நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர் பாரிற் * பயனாரைப் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி யாகிநின் றானே. 3 * பயனாகும்
2626 ஒத்துல கேழும் அறியா ஒருவனென் ற்த்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப் பத்தர்தம் பத்தியிற் * பாற்படில் அல்லது முத்தினை யார்சொல்ல முந்துநின் றாரே. 4 * பாற்படல்
2627 ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல் நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே. 5
2628 பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான் முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால் அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற் பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே. 6
2629 பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகப் குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே. 7
2630 உறுதுணை நந்தியை உம்பர் பிரானை பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின் * செறிதுணை செய்து சிவனடி சிந்தித் துறுதுணை யாயங்கி யாகிநின் றானே. 8 * செறுதுணை
2631 வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக் கானவன் என்றுங் கருவரை யானென்றும் ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே. 9
2632 நிலைபெறு கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே. 10 42. முத்தியுடைமை
2633 முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த போதரே. 1
2634 வளங்கனி தேடிய வன்றாட் பறவை உளங்கனி தேடி யுழிதரும் போது களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே. 2 43. சோதனை
2635 பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா நடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. 1
2636 அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் நானே. 2
2637 அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய வாறே. 3
2638 குறியாக் * குறியினிற் கூடாத கூட்டத் தறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ் செறியாச் செறிவே சிவமென லாமே. 4 * குறிப்பினிற்
2639 காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும் பாலினுள் நெய்யும் * பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்குங் கலந்துநின் றானே. 5 * பழத்தின்
2640 விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. 6
2641 நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான் * கொள்ள எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ் சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே. 7 * சொன்ன
2642 தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே. 8
2643 தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே. 9
2644 அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தை * தாய் கேளியான் ஒக்குஞ் செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும் இவ்வழி நந்தி இயல்பது தானே. 10 * தாயும்
2645 எறிவது ஞானத் * துறைவாள் உருவி அறிவது னோடேயவ் வாண்டகை யானைச் செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப் பறிவது பல்கணப் பற்றுவி டாரே. 11 * திறைவாள்
2646 ஆதிப் பிரான்தந்த வாள்ங்கைக்கொண்டபின் வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம் ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமே. 12
2647 அந்தக் கருவை * யருவை வினைசெய்தற் பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச் சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. 13 * யருவினை செயலப்
2648 உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக் கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத் திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப் புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே. 14 எட்டாம் தந்திரம் முடிவு பெற்றது ஒன்பதாம் தந்திரம் * (* இது மகுடாகமத்தின் சாரம் என்பர்) 1. குருமட தரிசனம்
2649 பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1
2650 இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2
2651 நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3
2652 இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் * இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு # வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4 * மடமும் # மனமும்
2653 முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5
2654 அகமுக மாம்பீடம் ஆதார மாகும் சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6
2655 மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7 2. ஞானகுரு தரிசனம்
2656 ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக் குருபரன் கும்பிடு * தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 1 * தந்திடில்
2657 துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசஒண் ணாதே. 2
2658 ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. 3
2659 கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல் குருவின் உருவம் * குறித்த அப் போதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 4 * குறித்த பொழுதே
2660 அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. 5
2661 தோன்ற அறிதலும் * தோன்றல் தோன்றாமையும் மான்ற அறிவு மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. 6 * தோன்றித்
2662 சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. 7
2663 மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச் சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப * தாமே. 8 * தானே
2664 தானான வண்ணமும் கோசமும் சார்தரும் தானாம் பறவை வனமெனத் தக்கன தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில் தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. 9
2665 மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு அருவினை கண்சோரும் * அழிவார் அகத்தே. 10 * அடியார்; அடியவ ராகத்தே
2666 தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப் பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில் தலைப்பட லாகும் தருமமும் தானே. 11
2667 நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. 12
2668 தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. 13
2669 நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. 14
2670 வந்த மரகத மாணிக்க ரேகைபோல் சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம் இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. 15
2671 உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணு நீரனல் காலொடு வானுமாய் விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. 16
2672 பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு உரிய பதியும்பா ராக்கி நின்றானே. 17
2673 அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில் தம்பர மல்லது தாமறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. 18
2674 கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 19 3. பிரணவ சமாதி
2675 தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற் * காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 1 * சூக்கும்
2676 ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. 2
2677 ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே. 3
2678 வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் * அருக்கம் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. 4 * வருக்கஞ்
2679 மலையும் மனோபவம் மருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம்சித்த மாகும் நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. 5
2680 சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்கு ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந் * தேறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 6 * தேறிய 4. ஒளி
2681 ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடனிருந் தானே. 1
2682 புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 2
2683 விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்து நின்றானே. 3
2684 இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் திங்களும் * கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 4 * காண
2685 மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம் * பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம் நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும் மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 5 * பாரொளி
2686 மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 6
2667 விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 7
2688 விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருத்தது தானே. 8
2689 இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன் துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. 9
2690 உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன் வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 10
2691 விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக் களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 11
2692 போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 12
2693 உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது பண்டில்லை என்னும் * பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை # மானுடர் கண்ட கருத்துறில் விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 13 * பரகதி # மானிடர்
2694 சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையி * னாரிருள் வீசில் உடலுறு ஞானத் துறவியின் ஆமே. 14 * னாயிருள்
2695 ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 15
2696 ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர் பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 16
2697 தானே யிருக்கும் அவற்றில் தலைவனும் தானே யிருக்கும் அவனென நண்ணிடும் வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 17 5. தூல பஞ்சாக்கரம்
2698 ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 1
2699 அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2
2700 அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன் சிகராதி தான்சிவ வேதமே கோணம் நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 3 |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |