உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 29 ...
2801 நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 80
2802 சீய குருநந்தி திருஅம்ப லத்திலே ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை ஆயுறு மேனி அணைபுக லாமே. 81
2803 தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள் ஆனால் அரனடி நேயத்த தாமே. 82 9. ஆகாசப் பேறு
2804 உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1
2805 பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2
2806 அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே. 3
2807 பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4
2808 அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும் பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும் அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5
2809 ஆகாச வண்ணன் அமரர் * குலக்கொழுந்து ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன் ஆகாச # வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம் ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6 * தலக்கொழுந் # வண்ணன்
2810 உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயில்கொண்ட பேதை குலாவி உலாவி வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7
2811 நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே. 8
2812 புறத்துளா காசம் புவனம் உலகம் அகத்துளா காசம்எம் ஆதி அறிவு சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி சகத்துளா காசம் தானம்ச மாதியே. 9 10. ஞானோதயம்
2813 மனசந் தியில்கண்ட மனநன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழிவு என்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1
2814 கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2
2815 மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3
2816 விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4
2817 தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5
2818 விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6
2819 முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம் ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7
2820 நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும் நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது நான்என்ற ஞான முதல்வனே நல்கினான் நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8
2821 ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல் ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9
2822 உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10
2823 காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும் பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11
2824 ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல் மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12 11. சத்திய ஞானானந்தம் * (* சத்திய ஞானாந்தம்)
2825 எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத் தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 1
2826 தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 2
2827 மன்னும் சத்தியாதி மணியொளி மாசோபை அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 3
2828 * சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால் உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம் வைத்த சொருபத்த சத்தி வருகுரு உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 4 * சத்தியஞ் சீவம் சிவஞானம் சாற்றுங்கால்
2829 உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில் மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின் சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 5
2830 நினையும் அளவில் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே. 6
2831 பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபடி உள்புகச் சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 7
2832 அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 8
2833 மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச் சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும் சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 9
2834 சிவமாய் அவமான மும்மலம் தீரப் பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானானந் தத்தே துவமார் துரியம் சொரூபம் தாமே. 10 12. சொரூப உதயம்
2835 பரம குரவன் பரம்எங்கு மாகித் திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்துநின் றானே. 1
2836 குலைக்கின்ற நீரின் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 2
2837 அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே. 3
2838 சமயச் சுவடும் தனையறி யாமல் சுமையற்ற காமாதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர் அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 4
2839 மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 5
2840 உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 6
2841 உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 7
2842 பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப் பரஞ்சோதி யுள்நான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 8
2943 சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கும் மதித்த சொரூபக்குரவன் சுகோதயத் தானே. 9
2944 உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின் கரையற்ற சத்தியாதி காணில் அகார மருவுற்று உகாரம் மகாரம தாக உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 10
2845 தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 11
2846 ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்ப தில்லை இனியோ * ரிடமில்லை நாமாம் முதல்வனும் # நான்என லாமே. 12 * ரிடரில்லை # நாமென 13. ஊழ்
2847 செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1
2848 தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2
2849 ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 3
2850 வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன் கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என் தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென் நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 4
2851 ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென் கானத்து உழுவை கலந்து வளைக்கிலென் ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த ஞானத்து உழவினை நான்உழு வேனே. 5
2852 கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும் பாடது நந்தி பரிசறி வார்க்கே. 6 14. சிவ தரிசனம் * (* சிவரூப தரிசனம்)
2853 சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1
2854 வாக்கும் மனமும் * மறைந்த மறைபொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2 * மிறந்த
2855 பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய் தரனாய் தனாதென ஆறுஅறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 3 15. சிவ சொரூப தரிசனம்
2856 ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை * வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 1 * வேதகம்
2857 உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2 (இப்பாடல் 3035-ம் பாடலாகவும் வந்துள்ளது)
2858 துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும் முன்னி அவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 3
2859 மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 4
2860 சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் * உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 5 * உய்த்து
2861 பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும் அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 6
2862 முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா * சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால் சுத்தி யகன்றோர் சுகானந்த போதரே. 7 * சுத்தி
2863 துரிய அதீதம் * சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8 * சொல்லுறும் 16. முத்தி பேதம், கரும நிருவாணம்
2864 ஓதிய முத்தியடைவே உயிர்பர பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 1
2865 பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2 17. சூனிய சம்பாஷணை * (* மறை பொருட்கூற்று)
2866 காயம் * பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி # யேனே. 1 * பலவகை # யாரே
2867 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் * கிடந்ததென் உள்ளன்பு தானே. 2 * கிடக்குமென்
2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3
2869 * வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது # புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது $ தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண் முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 4 * வழுதிலை # புழுதியைக் கிண்டிப் $ முழுசம் பழுத்தது வாழை இளங்கனி, தொழுது கொண்டறிந்தோர் தொட்டுடை பாரே.
2870 ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 5
2871 பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் * யாகி விளைந்தது தானே. 6 * யங்கே
2872 மூவணை ஏரும் உழுவது முக்காணி தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும் நாஅணைகோலி நடுவில் செறுஉழார் காலணை கோலிக் * களர்உழு வாரே. 7 * களருமுள
2873 ஏற்றம் இரண்டுள ஏழு * துரவுள மூத்தான் இறைக்க இளையான் # படுத்தநீர் பாத்தியிற் பாயாது $ பாழ்ப்பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 8 * கிணறுள # மடைமாறப் $ பாழெங்கும் பாய்ந்தது
2874 பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோர் ஏழுளு ஐந்துள * குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் # பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 9 * பட்டி # அட்டி
2875 ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10
2876 தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல் மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 11
2877 அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி வரிக்கின்ற * நல்ஆன் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 12 * நல்ல கற
2878 * இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக் # கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை $ மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் @ கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 13 * இடர்க் # கிடர்க் $ மிடர்க் @ அடர்க்
2879 விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 14
2880 களர்உழு வார்கள் கருத்தை அறியோம் களர்உழு வார்கள் கருதலும் இல்லைக் களர்உழு வார்கள் களரின் முளைத்த வளர்இள வஞ்சியின் * மாய்தலும் ஆமே. 15 * வாய்த்தலு
2881 கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 16
2882 மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 17
2883 பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் * பாலாச் சொரியுமே. 18 * பாலாய்ச்
2884 ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும் தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 19
2885 எழுதாத புத்தகத் * தேட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத மலராத பூவின் # மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 20 * தெழுத்தின் பயனைக் # மருவின் மணத்தைப்
2886 போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும் கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 21
2887 மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 22
2888 பத்துப் * பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் # வினோதகர் ஈரெண்மர் $ அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23 * பெரும்புலி # விநாயகர் $ வைத்தகுரவர்
2889 இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில் இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24
2890 ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தம் கயிறாக மூவர்கள் * ஊரினுள் நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25 * நாரினும்
2891 கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் * பூழும் நடுவில் # உறைவன நாகையைக் கூகை நணுகல் உறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26 * புள்ளும் # உறைந்தன
2892 குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27
2893 காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும் மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவணை யாமே. 28
2894 கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையி * லுற்ற பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 29 * லெற்றப்
2895 துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள் ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 30
2896 பருந்துங் கிளியும் படுபறை கொட்டத் திருந்திய மாதர் * திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் * பெறலுரு வாகும் இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31 * சிவமணப் பட்டார் # போலுரு
2897 கூடும் பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும் சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 32
2898 இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின் குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும் தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 33
2899 * அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு # நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 34 * அக்கண # நக்கண
2900 கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35 |