பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : Paul Raj   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எமது சென்னைநூலகம்.காம் இணைய நூலகம் அரசு தளமோ அல்லது அரசு சார்ந்த இணையதளமோ அல்ல. இது எமது தனி மனித உழைப்பில் உருவாகி செயல்பட்டு வரும் இணையதளமாகும். எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே வாசகர்கள் எமது தளத்தில் உறுப்பினராக இணைந்தோ அல்லது தங்களால் இயன்ற நன்கொடை அளித்தோ, இந்த இணைய நூலகம் செம்மையாக செயல்பட ஆதரவளிக்க வேண்டுகிறேன். (கோ.சந்திரசேகரன்)
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்
புதிய வெளியீடு : ரோஜா இதழ்கள் - 8 (03-06-2023 : 21:35 IST)


முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 11 ...

1.101. திருக்கண்ணார்கோயில்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1091  தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
       பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
       கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
       நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. 1.101.1

1092  கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
       வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக்
       கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
       செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. 1.101.2

1093  பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
       எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
       கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
       கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 1.101.3

1094  தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்
       மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க்
       குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
       கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே. 1.101.4

1095  மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
       செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
       குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்
       கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே. 1.101.5

1096  விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
       உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
       கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
       நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே. 1.101.6

1097  முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
       பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
       தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
       கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7

1098  பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
       நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
       முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
       திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே. 1.101.8

1099  செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்
       அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்
       தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத்
       தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே. 1.101.9

1100  தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்
       சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
       ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்
       ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே. 1.101.10

1101  காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த
       பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்
       நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்
       பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே. 1.101.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - கண்ணாயிரேசுவரர்
தேவி - முருகுவளர்கோதையம்மை


சின்னஞ்சிறு பழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.390.00
Buy

நிர்வாகத் திறமை
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

வெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

வெளிச்சத்தின் நிறம் கருப்பு - பாகம் - 2
இருப்பு உள்ளது
ரூ.330.00
Buy

கம்பா நதி
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

நவீனகால இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

ரயிலேறிய கிராமம்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

இந்திய வழி
இருப்பு உள்ளது
ரூ.325.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

இனிப்பு தேசம்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சித்தர் பாடல்கள் - பாகம் 1 (புரட்சிச் சித்தர் சிவவாக்கியர்)
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

நேற்றின் நினைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

சர்மாவின் உயில்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

நிலா நிழல்
இருப்பு இல்லை
ரூ.120.00
Buy

மருந்தும்... மகத்துவமும்...!
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ரசவாதி
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy
1.102. சீகாழி

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1102  உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
       கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
       அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
       சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே. 1.102.1

1103  மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
       கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
       மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே
       ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே. 1.102.2

1104  இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
       களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
       அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
       றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே. 1.102.3

1105  எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக்
       கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
       பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
       நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே. 1.102.4

1106  மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்
       கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
       உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
       குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே. 1.102.5

1107  குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
       கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
       வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை
       அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே. 1.102.6

* இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.102.7

1108  உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
       கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
       இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
       சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே. 1.102.8

1109  ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
       காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
       பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
       மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே. 1.102.9

1110  மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
       கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்
       தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
       நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே. 1.102.10

1111  வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
       கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
       அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
       படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே. 1.102.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.103. திருக்கழுக்குன்றம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1112  தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
       ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
       நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
       காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.1

1113  கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
       பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
       பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
       காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.2

1114  தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
       தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
       வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
       கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.3

1115  துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
       பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
       இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
       கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.4

1116  பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
       மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
       மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
       கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.5

1117  வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
       கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
       உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
       கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.6

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.103.7

1118  ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
       நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
       பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
       காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.8

1119  இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
       தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
       மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
       கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.9

1120  தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
       பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
       சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
       காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.10

1121  கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
       நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
       பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
       புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே. 1.103.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - வேதகிரீசுவரர்
தேவி - பெண்ணினல்லாளம்மை

1.104. திருப்புகலி

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1122  ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
       சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
       ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
       ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே. 1.104.1

1123  ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
       சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
       ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
       மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே. 1.104.2

1124  ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
       நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
       பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
       வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. 1.104.3

1125  வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
       கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
       அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
       புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே. 1.104.4

1126  சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
       ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
       வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
       பாட இனிதுறையும் புகலிப் பதியாமே. 1.104.5

1127  மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
       நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
       அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
       புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே. 1.104.6

1128  மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
       கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
       செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
       அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே. 1.104.7

1129  வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
       நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
       பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
       ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே. 1.104.8

1130  தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
       ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
       மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
       போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே. 1.104.9

1131  வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
       அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
       வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
       புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே. 1.104.10

1132  வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
       போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
       நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
       ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே. 1.104.11

திருச்சிற்றம்பலம்

திருப்புகலி என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.105. திருஆரூர்

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1133  பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
       சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
       கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
       ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே. 1.105.1

1134  சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
       ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
       பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
       காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே. 1.105.2

1135  உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே
       கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்
       வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
       அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே. 1.105.6

1136  வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின்
       ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப்
       பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
       நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே. 1.105.7

1137  வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
       காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி
       ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று
       பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே. 1.105.8

1138  கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்
       மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
       அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்
       தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.105.6

1138  நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
       ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
       சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
       ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே. 1.105.7

* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.105.8

1140  வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
       நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்
       அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
       புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. 1.105.9

1141  செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
       இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல்
       அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த்
       தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே. 1.105.10

1142  நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
       அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
       வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
       சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே. 1.105.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வன்மீகநாதர்
தேவி - அல்லியங்கோதையம்மை

1.106. திருஊறல்

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1143  மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
       நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
       தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
       ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே. 1.106.1

1144  மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
       மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
       தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்
       ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே. 1.106.2

1145  ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
       கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம்
       வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
       ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.3

1146  நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
       கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
       மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
       உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.4

1147  எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
       சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
       கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
       உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே. 1.106.5

* இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 1.106.6

1148  கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
       மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
       செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
       ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.8

1149  நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
       தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
       பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
       ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.9

1150  பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
       என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
       தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
       உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே. 1.106.10

1151  கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
       ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
       நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
       பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே. 1.106.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
சுவாமி - உமாபதீசுவரர்
தேவி - உமையம்மை

1.107. திருக்கொடிமாடச்செங்குன்றூர்

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1152  வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
       பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
       கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
       அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. 1.107.1

1153  அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
       மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
       குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
       தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.2

1154  பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
       ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
       கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
       நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 1.107.3

1155  வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
       காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
       சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
       நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே. 1.107.4

1156  பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
       பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
       குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
       மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே. 1.107.5

1157  ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
       தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
       கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
       பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே. 1.107.6

1158  நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
       வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
       கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
       சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே. 1.107.7

1159  மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
       தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
       கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
       தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.8

1160  செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
       அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
       கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
       நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே. 1.107.9

1161  போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
       ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
       கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
       வேதியனைத் தொழநும் வினையான வீடுமே. 1.107.10

1162  அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
       தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
       கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
       நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே. 1.107.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமி - அர்த்தநாரீசுவரர்
தேவி - அர்த்தநாரீசுவரி

1.108. திருப்பாதாளீச்சரம்

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1163  மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
       பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
       அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
       பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.1

1164  நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
       தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
       ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
       பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே. 1.108.2

1165  நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
       போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
       தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
       பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.3

1166  அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
       மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
       செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
       பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே. 1.108.4

1167  பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
       தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
       தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
       பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே. 1.108.5

1168  கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
       விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
       பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
       பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.6

1169  விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
       வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
       விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
       பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.7

1170  மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
       தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
       கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
       பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.8

1171  தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்
       காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
       பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
       பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே. 1.108.9

1172  காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
       ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
       மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
       பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.10

1173  பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
       பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
       தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
       இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே. 1.108.11

திருச்சிற்றம்பலம்

1.109. திருச்சிரபுரம்

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1174  வாருறு வனமுலை மங்கைபங்கன்
       நீருறு சடைமுடி நிமலனிடங்
       காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
       சீருறு வளவயற் சிரபுரமே. 1.109.1

1175  அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
       திங்களொ டரவணி திகழ்முடியன்
       மங்கையொ டினிதுறை வளநகரஞ்
       செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே. 1.109.2

1176  பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
       திரிந்தவர் புரமவை தீயின்வேவ
       வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
       தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.3

1177  நீறணி மேனியன் நீள்மதியோ
       டாறணி சடையினன் அணியிழையோர்
       கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
       சேறணி வளவயல் சிரபுரமே. 1.109.4

1178  அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
       சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
       குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
       திருந்திய புறவணி சிரபுரமே. 1.109.5

1179  கலையவன் மறையவன் காற்றொடுதீ
       மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
       கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
       சிலையவன் வளநகர் சிரபுரமே. 1.109.6

1180  வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
       தானவர் புரமெய்த சைவனிடங்
       கானமர் மடமயில் பெடைபயிலுந்
       தேனமர் பொழிலணி சிரபுரமே. 1.109.7

1181  மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
       கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
       இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
       செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.8

1182  வண்ணநன் மலருறை மறையவனுங்
       கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
       விண்ணுற வோங்கிய விமலனிடம்
       திண்ணநன் மதிலணி சிரபுரமே. 1.109.9

1183  வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
       கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
       பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
       செற்றவன் வளநகர் சிரபுரமே. 1.109.10

1184  அருமறை ஞானசம் பந்தனந்தண்
       சிரபுர நகருறை சிவனடியைப்
       பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
       திருவொடு புகழ்மல்கு தேசினரே. 1.109.11

திருச்சிற்றம்பலம்

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.110. திருவிடைமருதூர்

பண் - வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1185  மருந்தவன் வானவர் தானவர்க்கும்
       பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
       அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
       இருந்தவன் வளநகர் இடைமருதே. 1.110.1

1186  தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
       கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
       நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
       ஏற்றவன் வளநகர் இடைமருதே. 1.110.2

1187  படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
       நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
       முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
       இடைமரு தினிதுறை யெம்மிறையே. 1.110.3

1188  பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
       துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
       கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
       இணையிலி வளநகர் இடைமருதே. 1.110.4

1189  பொழிலவன் புயலவன் புயலியக்குந்
       தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
       கழலவன் கரியுரி போர்த்துகந்த
       எழிலவன் வளநகர் இடைமருதே. 1.110.5

1190  நிறையவன் புனலொடு மதியும்வைத்த
       பொறையவன் புகழவன் புகழநின்ற
       மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
       இறையவன் வளநகர் இடைமருதே. 1.110.6

1191  நனிவளர் மதியொடு நாகம்வைத்த
       பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
       முனிவரொ டமரர்கள் முறைவணங்க
       இனிதுறை வளநகர் இடைமருதே. 1.110.7

1192  தருக்கின அரக்கன தாளுந்தோளும்
       நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
       றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
       எரித்தவன் வளநகர் இடைமருதே. 1.110.8

1193  பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
       வரியர வணைமறி கடற்றுயின்ற
       கரியவன் அலரவன் காண்பரிய
       எரியவன் வளநகர் இடைமருதே. 1.110.9

1194  சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
       புந்தியில் உரையவை பொருள்கொளாதே
       அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
       எந்தைதன் வளநகர் இடைமருதே. 1.110.10

* ஓத்து என்பது வேதம்.

1195  இலைமலி பொழிலிடை மருதிறையை
       நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
       பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
       உலகுறு புகழினொ டோ ங்குவரே. 1.110.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மருதீசர்
தேவி - நலமுலைநாயகியம்மைமுதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்