இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் 12வது ஆண்டில்
     
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
6 மாதம்
ரூ.118 (ரூ.100+18 GST)
2 வருடம்
ரூ.354 (ரூ.300+54 GST)
6 வருடம்
ரூ.590 (ரூ.500+90 GST)
15 வருடம்
ரூ.1180 (ரூ.1000+180 GST)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
எமது தமிழ்ச் சேவைகள் மேலும் சிறக்க எமக்கு நிதியுதவி அளித்து உதவுங்கள். இந்தியாவில் உள்ளவர்கள் கீழ் உள்ள (PayUmoney) பட்டனை சொடுக்கி நேரடியாக நன்கொடை அளிக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக இணையம் மூலம் நன்கொடை அளிக்கலாம். (Axis Bank | Anna Salai, Chennai | SB Account | A/c Name : G.Chandrasekaran | A/c No.: 168010100311793 | IFS Code: UTIB0000168 | SWIFT Code : AXISINBB168) (நன்கொடையாளர்கள் விவரம்)
  மொத்த உறுப்பினர்கள் - 447 
புதிய உறுப்பினர்: S.Ramusengamalai
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

புதிய வெளியீடுமுதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 2 ...

1.11. திருவீழிமிழலை

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

108  சடையார்புன லுடையானொரு சரிகோவணம் உடையான்
       படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
       மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
       விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.1

109  ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
       மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
       ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
       வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே. 1.11.2

110  வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
       உம்மன்பினோ டெம்மன்புசெய் தீசன்உறை கோயில்
       மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
       விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே. 1.11.3

111  பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
       உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
       மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
       விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. 1.11.4

112  ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
       தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
       தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
       மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே. 1.11.5

113  கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
       எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
       வல்லாய்* எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
       வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே. 1.11.6

* வல்வாய்

114  கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
       புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
       வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
       விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே. 1.11.7

115  முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
       தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
       பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த
       மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.8

116  பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
       ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
       வண்டாமரை மலர்மேல்மட அன்னம்நடை பயில
       வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே. 1.11.9

117  மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
       இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
       பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
       விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே. 1.11.10

118  வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
       காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
       யாழின்இசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
       ஊழின்மலி* வினைபோயிட உயர்வானடை வாரே. 1.11.11

* ஊழின்வலி

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வீழியழகர்
தேவி - சுந்தரகுசாம்பிகை

1.12. திருமுதுகுன்றம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

119  மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
       தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாங்
       கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
       முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. 1.12.1

120  தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
       இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
       மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
       முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.2

121  விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
       டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
       களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
       முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.3

122  சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
       நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
       அரசார்வர* அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
       முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 1.12.4

* அரசாரர

123  அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
       கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
       மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
       முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.5

124  ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
       கோவாதஇன் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
       சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
       மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.6

125  தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடிய*
       மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
       விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
       முழவோடிசை நடமுஞ்செயும்# முதுகுன்றடை வோமே. 1.12.7

* முடியர்
# நடமுன் செயும்

127  செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
       கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
       மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா*
       முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே. 1.12.8

* குறை யில்லா

127  இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
       செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
       புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
       முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. 1.12.9

128  அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
       மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
       கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
       முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. 1.12.10

129  முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
       புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
       நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
       பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே. 1.12.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமி - பழமலைநாதர்
தேவி - பெரியநாயகியம்மை

1.13. திருவியலூர்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

130  குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவப்
       பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
       அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
       விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. 1.13.1

131  ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
       ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்*
       மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
       வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 1.13.2

* புலியுடையான்

132  செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
       பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
       உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட வுரைமேல்
       விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. 1.13.3

133  அடைவாகிய அடியார்தொழ அலரோன்தலை யதனில்
       மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
       கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
       மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. 1.13.4

134  எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
       பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
       கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
       விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. 1.13.5

135  வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
       திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
       அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
       விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே. 1.13.6

136  மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
       ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
       தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
       மேனாடிய* விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. 1.13.7

* மேனாடியர்

137  பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
       கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
       சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
       விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.8

138  வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
       அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
       உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
       விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.9

139  தடுக்கால்உடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
       பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
       கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
       விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. 1.13.10

140  விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
       தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
       துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
       விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே. 1.13.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - யோகாநந்தேசுவரர்
தேவி - சவுந்தரநாயகியம்மை (சாந்தநாயகியம்மை என்றும் அழைப்பர்)

1.14. திருக்கொடுங்குன்றம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

141  வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
       கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
       ஆனிற்பொலி யைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
       தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே. 1.14.1

142  மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
       குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
       அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
       எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே. 1.14.2

143  மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
       குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
       கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
       வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே. 1.14.3

144  பருமாமத கரியோடரி யிழியும்* விரி சாரல்
       குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
       பொருமாஎயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த
       பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.4

* யிரியும்

145  மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
       கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
       நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
       பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே. 1.14.5

146  கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
       கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
       அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
       பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே. 1.14.6

147  மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
       குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
       அரவத்தொடும் இளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
       நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே. 1.14.7

148  முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
       குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
       ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
       பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.8

149  அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
       குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
       மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
       இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே. 1.14.9

150  மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
       குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
       புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
       பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே. 1.14.10

151  கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்
       கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
       ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
       ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே. 1.14.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமி - கொடுங்குன்றேசுவரர் (கொடுங்குன்றீசர் என்றும் அழைப்பர்)
தேவியார் - அமுதவல்லியம்மை (குயிலமுதநாயகி என்றும் அழைப்பர்)

1.15. திருநெய்த்தானம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

152  மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
       கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
       செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
       நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.1

152  பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
       பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
       அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
       நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே. 1.15.2

154  பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
       வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
       தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
       நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.3

155  சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
       நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்*
       கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
       நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே. 1.15.4

* னுறைவிடமாம்

156  நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
       பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
       நிகரான்மண லிடுதன்கரை* நிகழ்வாயநெய்த் தான
       நகரான்அடி யேத்தந்நமை நடலையடை யாவே. 1.15.5

* தண்கரை

157  விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
       உடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய
       புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தநெய்த் தானம்*
       அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே. 1.15.6

* சூழ்ந்த நெய்த்தானம்

158  நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
       தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
       கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
       தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே. 1.15.7

159  அறையார்கடல் இலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
       இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
       நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்
       கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே. 1.15.8

160  கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
       சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
       காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
       ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே. 1.15.9

161  மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
       புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
       நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
       சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே. 1.15.10

162  தலமல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
       நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
       பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
       சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே. 1.15.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - நெய்யாடியப்பர்
தேவி - வாலாம்பிகையம்மை, இளமங்கையம்மை

1.16. திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

163  பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
       போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
       காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
       ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே. 1.16.1

164  மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
       புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
       கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
       அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே. 1.16.2

165  கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
       பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
       சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
       துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே. 1.16.3

166  தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
       பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
       மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
       அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே. 1.16.4

167  மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
       கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
       பொத்தின்னிடை ஆந்தைபல பாடும்புள மங்கை
       அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.5

168  மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
       பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
       என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
       அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே. 1.16.6

169  முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
       பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கைக்
       கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
       அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.7

170  இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
       விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
       புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
       அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.8

171  செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
       பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
       வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
       அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.9

172  நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
       போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
       ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
       சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே. 1.16.10

173  பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
       அந்தண்புனல் வருகாவிரி ஆலந்துறை யானைக்
       கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன்
       சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே. 1.16.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பசுபதிநாதர், ஆலந்துறைநாதர்
தேவி - பல்வளைநாயகி, அல்லியங்கோதை

1.17. திருஇடும்பாவனம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

174  மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
       தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
       சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
       இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.1

175  மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
       நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
       கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
       இலையார்தரு பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. 1.17.2

176  சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும்* எந்தை
       ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
       கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
       ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. 1.17.3

* சித்தரவர் சிந்தித்தொழும்

177  பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
       தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
       குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
       எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.4

178  பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்
       செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
       கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
       எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே. 1.17.5

179  நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
       அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
       குறிநீர்மையர் குணமார்தரு* மணமார்தரு குன்றில்
       எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே. 1.17.6

* குளமார்தரு

180  நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
       பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்*
       கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
       ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.7

* பாங்காய்க்

181  தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
       ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
       கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
       ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.8

182  பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
       தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
       மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
       இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.9

183  தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச் சமண் நடப்பார்*
       உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
       மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
       இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 1.17.10

* சமண்டப்பர்

184  கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
       இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை
       அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
       படியாற்சொன்ன* பாடல்சொலப் பறையும்வினை தானே. 1.17.11

* படியார்சொன்ன

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சற்குணநாதர்
தேவி - மங்களநாயகியம்மை

1.18. திருநின்றியூர்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

185  சூலம்படை* சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு#
       பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
       காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
       நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே. 1.18.1

* சூலப்படை
# சாத்துஞ் சுடுநீறு

186  அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
       நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
       நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்*
       பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே. 1.18.2

* நயந்தானாம்

187  பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
       அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
       நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
       உறையும்மிறை யல்லாதென துள்ளம் முணராதே. 1.18.3

188  பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
       ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
       தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
       ஆண்டகழல் தொழிலல்லது* அறியாரவ ரறிவே. 1.18.4

* தொழலல்லது

189  குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
       நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
       அழலின்வலன் அங்கையது ஏந்தி* யன லாடுங்
       கழலின்னொலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே. 1.18.5

* எய்தி

190  மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
       சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
       வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
       யூரன்கழ லல்லாதென துள்ளம் முணராதே. 1.18.6

191  பற்றியொரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும்
       பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
       சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
       நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே. 1.18.7

* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

192  நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
       அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
       நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெம்
       செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. 1.18.9

193  நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
       அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
       நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
       மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. 1.18.10

194  குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
       நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
       நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
       குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே. 1.18.11

* படியார்சொன்ன

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மகாலட்சுமீசுவரர்
தேவி - உலகநாயகி

1.19. திருக்கழுமலம் - திருவிராகம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

195  பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறை
       இறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகை
       கறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கனல் உருவினன்
       நறையணி மலர்நறு விரைபுல்கு நலம்மலி கழல்தொழன் மருவுமே. 1.19.1

196  பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை
       அணிபடு கழுமலம் இனிதம ரனலுரு வினன்அவிர் சடைமிசை
       தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை உமைதலை வனைநிற
       மணிபடு கறைமிட றனைநல மலிகழ லிணைதொழன் மருவுமே. 1.19.2

197  வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
       விரியுறு சடைவிரை புரைபொழில் விழவொலி மலிகழு மலம்அமர்
       எரியுறு நிறஇறை வனதடி யிரவொடு பகல்பர வுவர்தம
       தெரியுறு வினைசெறி கதிர்முனை இருள்கெட நனிநினை வெய்துமதே. 1.19.3

198  வினைகெட மனநினை வதுமுடி கெனில்நனி தொழுதெழு குலமதி
       புனைகொடி யிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன்
       மனைகுட வயிறுடை யனசில வருகுறள் படையுடை யவன்மலி
       கனைகட லடைகழு மலம்அமர் கதிர்மதி யினன்அதிர் கழல்களே. 1.19.4

199  தலைமதி புனல்விட அரவிவை தலைமைய தொருசடை யிடையுடன்
       நிலைமரு வவொரிட மருளினன் நிழன்மழு வினொடழல் கணையினன்
       மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினனல
       கலைமரு வியபுற வணிதரு கழுமலம் இனிதமர் தலைவனே. 1.19.5

200  வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
       கரைபொரு திரையொலி கெழுமிய கழுமலம் அமர்கன லுருவினன்
       அரைபொரு புலியதள் உடையினன் அடியிணை தொழவரு வினையெனும்
       உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே. 1.19.6

201  முதிருறு கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில்
       உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி அதளிடை யிருள்கடி
       கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர்மழு மலிபடை
       அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே. 1.19.7

202  கடலென நிறநெடு முடியவ னடுதிறல் தெறஅடி சரணென
       அடல்நிறை படையரு ளியபுக ழரவரை யினன்அணி கிளர்பிறை
       விடம்நிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை யவனுமை
       உடனுறை பதிகள்தன் மறுகுடை யுயர்கழு மலவியன் நகரதே. 1.19.8

203  கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன்
       விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலணி விழவமர்
       கழுமலம் அமர்கன லுருவினன் அடியிணை தொழுமவ ரருவினை
       எழுமையு மிலநில வகைதனி லெளிதிமை யவர்விய னுலகமே. 1.19.9

204  அமைவன துவரிழு கியதுகி லணியுடை யினர்அமண் உருவர்கள்
       சமையமும் ஒருபொரு ளெனுமவை சலநெறி யனஅற வுரைகளும்
       இமையவர் தொழுகழு மலமம ரிறைவன தடிபர வுவர்தமை
       நமையல வினைநல னடைதலி லுயர்நெறி நனிநணு குவர்களே. 1.19.10

205  பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு
       கருகிய நிறவிரி கடலடை கழுமலம் உறைவிட மெனநனி
       பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன்
       மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே. 1.19.11

திருச்சிற்றம்பலம்

கழுமலம் என்பது சீர்காழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்.
தேவி - திருநிலைநாயகி.

1.20. திருவீழிமிழலை - திருவிராகம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

206  தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ
       டடல்அசு ரரொடம ரர்கள்அலை கடல்கடை வுழியெழு மிகுசின
       விடம்அடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
       திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே. 1.20.1

207  தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
       வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்
       உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
       திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே. 1.20.2

208  மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
       தலையினொ டழலுரு வனகரம் அறமுனி வுசெய்தவ னுறைபதி
       கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
       சிலைமலி மதில்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 1.20.3

209  மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
       பெருவலி யினன்நலம் மலிதரு கரனுர மிகுபிணம் அமர்வன
       இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
       தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே. 1.20.4

210  அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை யிருவர்கள்
       பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி
       மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
       திணிபொழில் தருமணம் மதுநுக ரறுபத முரல்திரு மிழலையே. 1.20.5

211  வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
       விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
       அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு
       திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே. 1.20.6

212  நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை ஒளிமுதல்
       மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
       சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவர னுறைபதி
       *திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே. 1.20.7

* திலதமிதென

213  அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
       கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
       வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
       சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே. 1.20.8

214  அயனொடும் எழிலமர் மலர்மகள் மகிழ்கண* னளவிடல் ஒழியவொர்
       பயமுறு வகைதழல் நிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
       சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
       செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே. 1.20.9

* மகிழ்வண

215  இகழுரு வொடுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகினர்
       திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடஅடி யவர்மிக அருளிய
       புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி
       திகழ்சுரர் தருநிகர்* கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே. 1.20.10

216  சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
       தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
       மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
       இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே. 1.20.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வீழியழகர்.
தேவி - சுந்தரகுசாம்பிகை.

                                                                                                                                                                                                        .

முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் :1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
வெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17
அரசு கட்டில்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
கபாடபுரம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
சிவகாமியின் சபதம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
சோலைமலை இளவரசி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
நித்திலவல்லி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பாண்டிமாதேவி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பார்த்திபன் கனவு
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
புவன மோகினி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பொன்னகர்ச் செல்வி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பொன்னியின் செல்வன்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மணிபல்லவம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மதுராந்தகியின் காதல்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மாலவல்லியின் தியாகம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மோகினித் தீவு
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
ராணி மங்கம்மாள்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
வஞ்சிமா நகரம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
வெற்றி முழக்கம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ

A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z

1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018