Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Sambandar Thevaram - Thirumurai one
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter
facebook
9176888688
நன்கொடைக்கு கீழ் பட்டனை சொடுக்குக

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 552  
புதிய உறுப்பினர்:
Dr.S.Seshadri, Karthik, Nagaraj
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி
சென்னை: 1.5கிலோ தங்கம் பறிமுதல்
டிச.15-ஜன.5 வரை பார்லி குளிர்கால தொடர்
பஞ்சாப்: தொழிற்சாலை இடிந்து 13 பேர் பலி
ஈராக் : கார் குண்டு தாக்குதலில் 21 பேர் பலி
டிசம்பர்-2-ம் தேதி மிலாடிநபி விடுமுறை
ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா
அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு
தமிழகத்தில் புதியதாக 70 மணல் குவாரிகள்
1. பொன்னியின் செல்வன் | 2. பார்த்திபன் கனவு | 3. சிவகாமியின் சபதம் | 4. அலை ஓசை | 5. தியாக பூமி | 6. கள்வனின் காதலி | 7. பொய்மான்கரடு | 8. மோகினித் தீவு | 9. சோலைமலை இளவரசி | 10. மகுடபதி | 11. பொன் விலங்கு | 12. குறிஞ்சி மலர் | 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) | 14. சமுதாய வீதி | 15. சாயங்கால மேகங்கள் | 16. ஆத்மாவின் ராகங்கள் | 17. நெஞ்சக்கனல் | 18. துளசி மாடம் | 19. ராணி மங்கம்மாள் | 20. பிறந்த மண் | 21. கபாடபுரம் | 22. வஞ்சிமா நகரம் | 23. நெற்றிக் கண் | 24. பாண்டிமாதேவி | 25. சத்திய வெள்ளம் | 26. ரங்கோன் ராதா | 27. ஊருக்குள் ஒரு புரட்சி | 28. ஒரு கோட்டுக்கு வெளியே | 29. வேருக்கு நீர் | 30. ஆப்பிள் பசி | 31. வனதேவியின் மைந்தர்கள் | 32. கரிப்பு மணிகள் | 33. வாஷிங்டனில் திருமணம் | 34. நாகம்மாள் | 35.பூவும் பிஞ்சும் | 36. பாதையில் பதிந்த அடிகள் | 37. மாலவல்லியின் தியாகம் | 38. வளர்ப்பு மகள் | 39. அபிதா | 40. அநுக்கிரகா | 41. பெண் குரல் | 42. குறிஞ்சித் தேன் | 43. நிசப்த சங்கீதம் | 44. உத்தர காண்டம் | 45. மூலக் கனல் | 46. கோடுகளும் கோலங்களும் | 47. நித்திலவல்லி | 48. அனிச்ச மலர் | 49. கற்சுவர்கள் | 50. சுலபா | 51. பார்கவி லாபம் தருகிறாள் | 52. மணிபல்லவம் | 53. பொய்ம் முகங்கள் | 54. சுழலில் மிதக்கும் தீபங்கள் | 55. சேற்றில் மனிதர்கள் | 56. வாடா மல்லி | 57. வேரில் பழுத்த பலா | 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே | 59. புவன மோகினி | 60. பொன்னகர்ச் செல்வி | 61. மூட்டம்புதிது
புதிய வெளியீடு
திரை உலக செய்திகள்
நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை - பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குபதிவு | சிறு வயது விஜய் சேதுபதியாக நடிக்கும் எம்.பாஸ்கரின் மகன் ஆதித்யா! | யுனிசெஃபின் பிரபல தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார் | தீபிகா படுகோனே தலைக்கு ரூ.10 கோடி: பாஜக பிரமுகர் அறிவிப்பு | தொடரும் எதிர்ப்பு: பத்மாவதி ரிலீஸ் ஒத்திவைப்பு!


முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 3 ...

1.21. திருச்சிவபுரம் - திருவிராகம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

217  புவம்வளி கனல்புனல் புவி *கலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி
       திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை யவைதம
       பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
       சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே. 1.21.1

* கலைபுரை

218  மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
       நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
       அலைகடல் நடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
       சிலைமலி மதிள்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே. 1.21.2

219  பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி
       குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி தருமுயி ரவையவை
       முழுவதும் அழிவகை நினைவொடு *முதலுரு வியல்பர னுறைபதி
       செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே. 1.21.3

* முதலுருவிய வரனுரைபதி

220  நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
       நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
       குறைவில பதம்அணை தரஅருள் குணமுடை யிறையுறை வனபதி
       சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே. 1.21.4

221  சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
       மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும் உணர்பவர்
       தனதெழி லுருவது கொடுஅடை தகுபர னுறைவது நகர்மதிள்
       கனமரு வியசிவ புரம்நினை பவர்கலை மகள்தர நிகழ்வரே. 1.21.5

222  சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
       உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
       அருதவ* முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
       திருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன் நிலனிடை நிகழுமே. 1.21.6

* தருதவ

223  கதமிகு கருவுரு வொடு வுகிரிட * வட வரைகண கணவென
       மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
       இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட அருள்செய்த
       பதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே. 1.21.7

* வுகிரிடை

224  அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
       இசைகயி லையையெழு தருவகை இருபது கரமவை நிறுவிய
       நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
       திசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே. 1.21.8

225  அடல்மலி படையரி அயனொடும் அறிவரி யதொரழல் மலிதரு
       சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்
       விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவன்நகர்
       திடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர் வழிபுவி திகழுமே. 1.21.9

226  குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில
       திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை
       உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினில்நல
       கணமரு வியசிவ புரம்நினை பவரெழி லுருவுடை யவர்களே. 1.21.10

227  திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
       நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபதும் நவில்பவர்
       நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
       புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநலம் மிகுவரே. 1.21.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரிநாயகர்
தேவி - பெரியநாயகியம்மை

1.22. திருமறைக்காடு - திருவிராகம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

228  சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி
       தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
       கொலைமலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
       மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.1

229  கரமுத லியஅவ யவமவை கடுவிட அரவது கொடுவரு
       வரல்முறை அணிதரு மவனடல் வலிமிகு புலியத ளுடையினன்
       இரவலர் துயர்கெடு வகைநினை இமையவர் புரமெழில் பெறவளர்
       மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.2

230  இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழி லுருவினன்
       முழையினின் மிகுதுயி லுறுமரி முசிவொடும் எழமுள ரியொடெழு
       கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும்
       மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.3

231  நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை
       பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு
       தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கள்தம
       மலமறு வகைமனம் நினைதரு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.4

232  கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு
       பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
       விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
       அதிநிபு ணர்கள்* வழி படவளர் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.5

* மதிநிபுணர்கள்

233  கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி
       முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம்
       உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர்
       மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.6

234  இருநில னதுபுன லிடைமடி தரஎரி புகஎரி யதுமிகு
       பெருவளி யினில் அவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
       இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவன் இனமலர்
       மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.7

235  சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடும் இருபது
       கனமரு வியபுயம் நெரிவகை கழலடி யிலொர்விரல் நிறுவினன்
       இனமலி கணநிசி சரன்மகிழ் வுறவருள் செய்தகரு ணையனென
       மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.8

236  அணிமலர் மகள்தலை மகனயன் அறிவரி யதொர்பரி சினிலெரி
       திணிதரு திரளுரு வளர்தர அவர்வெரு வுறலொடு துதிசெய்து
       பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகடல் திரளெழும்
       மணிவள ரொளிவெயில் மிகுதரு மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.9

237  இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு
       செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம்
       முயல்பவர் துவர்படம் உடல்பொதி பவரறி வருபரன் அவனணி
       வயலினில் வளைவளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.10

238  வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர்பர மனைநினை
       பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
       இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
       இசைமலி தமிழொரு பதும்வல அவருல கினிலெழில் பெறுவரே. 1.22.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - மறைக்காட்டீசுரர்
தேவி - யாழைப்பழித்தமொழியம்மை

1.23. திருக்கோலக்கா

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

239  மடையில் வாளை பாய மாதரார்
       குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
       சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
       உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1.23.1

240  பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி
       கொண்டான் கோலக் காவு கோயிலாக்
       கண்டான் பாதங் கையாற் கூப்பவே
       உண்டான் நஞ்சை உலக முய்யவே. 1.23.2

241  பூணற் பொறிகொள் அரவம் புன்சடை
       கோணற் பிறையன் குழகன் கோலக்கா
       மாணப் பாடி மறைவல் லானையே
       பேணப் பறையும் பிணிக ளானவே. 1.23.3

242  தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
       மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
       குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
       இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. 1.23.4

243  மயிலார் சாயல் மாதோர் பாகமா
       எயிலார் சாய எரித்த* எந்தைதன்
       குயிலார் சோலைக் கோலக் காவையே
       பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1.23.5

* எயிலார் புரமூன் றெரித்த

244  வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
       கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
       கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
       அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. 1.23.6

245  நிழலார் சோலை நீல வண்டினங்
       குழலார் பண்செய் கோலக் காவுளான்
       கழலால் மொய்த்த பாதங் கைகளால்
       தொழலார் பக்கல் துயர மில்லையே. 1.23.7

246  எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை
       முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
       குறியார் பண்செய் கோலக் காவையே
       நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. 1.23.8

247  நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
       ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
       கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
       ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. 1.23.9

248  பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
       உற்ற துவர்தோ யுருவி லாளருங்
       குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
       பற்றிப் பரவப் பறையும் பாவமே. 1.23.10

249  நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
       குலங்கொள் கோலக் காவு ளானையே
       வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
       உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. 1.23.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சத்தபுரீசுவரர்
தேவி - ஓசைகொடுத்தநாயகி

1.24. சீர்காழி

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

250  பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
       காவா யெனநின் றேத்துங் காழியார்
       மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்
       பாவா ரின்சொற் பயிலும் பரமரே. 1.24.1

251  எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
       கந்த மாலை கொடுசேர் காழியார்
       வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
       அந்தி நட்டம் ஆடும் அடிகளே. 1.24.2

252  தேனை வென்ற மொழியா ளொருபாகங்
       கான மான்கைக் கொண்ட காழியார்
       வான மோங்கு கோயி லவர்போலாம்
       ஆன இன்பம் ஆடும் அடிகளே. 1.24.3

253  மாணா வென்றிக் காலன் மடியவே
       காணா மாணிக் களித்த காழியார்
       நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
       பேணார் புரங்கள் அட்ட பெருமானே. 1.24.4

254  மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
       காடே றிச்சங் கீனுங் காழியார்
       வாடா மலராள் பங்க ரவர்போலாம்
       ஏடார் புரமூன் றெரித்த இறைவரே. 1.24.5

255  கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
       கங்கை புனைந்த சடையார் காழியார்
       அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
       செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே. 1.24.6

256  கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
       கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
       அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
       பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 1.24.7

257  எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
       கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
       எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
       பொடிக்கொள்* நீறு பூசும் புனிதரே. 1.24.8

* பொடிக்கண்

258  ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்
       தோற்றங் காணா வென்றிக் காழியார்
       ஏற்ற மேறங் கேறு மவர்போலாம்
       கூற்ற மறுகக் குமைத்த குழகரே. 1.24.9

259  பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
       கரக்கும் உரையை விட்டார் காழியார்
       இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
       அருப்பின் முலையாள் பங்கத் தையரே. 1.24.10

260  காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
       சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
       பாரார் புகழப் பரவ வல்லவர்
       ஏரார் வானத் தினிதா இருப்பரே. 1.24.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.25. திருச்செம்பொன்பள்ளி

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

261  மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
       திருவார் செம்பொன் பள்ளி மேவிய
       கருவார் கண்டத் தீசன் கழல்களை
       மருவா தவர்மேல் மன்னும் பாவமே. 1.25.1

262  வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
       சீரார் செம்பொன் பள்ளி மேவிய
       ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
       சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 1.25.2

263  வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
       திரையார் செம்பொன் பள்ளி மேவிய
       நரையார் விடையொன் றூரும் நம்பனை
       உரையா தவர்மே லொழியா வூனமே. 1.25.3

264  மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
       செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
       எழிலார் புரிபுன் சடையெம் இறைவனைத்
       தொழுவார் தம்மேல் துயர மில்லையே. 1.25.4

265  மலையான் மகளோ டுடனாய் மதிளெய்த
       சிலையார் செம்பொன் பள்ளி யானையே
       இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
       நிலையா வணங்க நில்லா வினைகளே. 1.25.5

266  அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
       சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
       கறையார் கண்டத் தீசன் கழல்களை
       நிறையால் வணங்க நில்லா வினைகளே. 1.25.6

267  பையார் அரவே ரல்கு லாளொடுஞ்
       செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
       கையார் சூல மேந்து கடவுளை
       மெய்யால் வணங்க மேவா வினைகளே. 1.25.7

268  வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
       தேனார் செம்பொன் பள்ளி மேவிய
       ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
       ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. 1.25.8

269  காரார் வண்ணன் கனகம் அனையானுந்
       தேரார் செம்பொன் பள்ளி மேவிய
       நீரார் நிமிர்புன் சடையெம் நிமலனை
       ஓரா தவர்மே லொழியா ஊனமே. 1.25.9

270  மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
       பேசா வண்ணம் பேசித் திரியவே
       தேசார் செம்பொன் பள்ளி மேவிய
       ஈசா என்ன நில்லா இடர்களே. 1.25.10

271  நறவார் புகலி ஞான சம்பந்தன்
       செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
       பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
       உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 1.25.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சொர்ணபுரீசுவரர்
தேவி - சுகந்தவனநாயகியம்மை, மருவார்குழலியம்மை

1.26. திருப்புத்தூர்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

272  வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
       திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
       கங்கை தங்கு முடியா ரவர்போலும்
       எங்கள் உச்சி உறையும் இறையாரே. 1.26.1

273  வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
       தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
       ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
       ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. 1.26.2

274  பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
       தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
       ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
       தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 1.26.3

275  நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
       தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
       ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
       ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.4

276  இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
       திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
       பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
       வசை விளங்கும் வடிசேர்* நுதலாரே. 1.26.5

* மடிசேர்

277  வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
       தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
       ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
       வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 1.26.6

278  நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
       செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
       தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
       மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. 1.26.7

279  கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
       திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
       இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
       அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. 1.26.8

280  மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
       தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
       பெருகி வாழும் பெருமா னவன்போலும்
       பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. 1.26.9

281  கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
       தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
       ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
       ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.10

282  நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
       செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
       சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
       அல்லல் தீரும் அவலம் அடையாவே. 1.26.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமி - புத்தூரீசர், திருத்தளிநாதர்
தேவி - சிவகாமியம்மை

1.27. திருப்புன்கூர்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

283  முந்தி நின்ற வினைக ளவைபோகச்
       சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
       அந்தம் இல்லா அடிகள் அவர்போலுங்
       கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 1.27.1

284  மூவ ராய முதல்வர் முறையாலே
       தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
       ஆவ ரென்னும் அடிகள் அவர்போலும்
       ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. 1.27.2

285  பங்க யங்கள் மலரும் பழனத்துச்
       செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
       கங்கை தங்கு சடையா ரவர்போலும்
       எங்கள் உச்சி உறையும் மிறையாரே. 1.27.3

286  கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
       திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
       உரையின் நல்ல பெருமா னவர்போலும்
       விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. 1.27.4

287  பவள வண்ணப் பரிசார் திருமேனி
       திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்
       அழக ரென்னும் அடிகள் அவர்போலும்
       புகழ நின்ற புரிபுன் சடையாரே. 1.27.5

288  தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
       திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
       பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும்
       விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. 1.27.6

289  பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
       தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
       ஆர நின்ற அடிகள் அவர்போலும்
       கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. 1.27.7

290  மலையத னாருடை யமதில் மூன்றும்
       சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்
       தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
       மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே. 1.27.8

291  நாட வல்ல மலரான் மாலுமாய்த்
       தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
       ஆட வல்ல அடிகள் அவர்போலும்
       பாட லாடல் பயிலும் பரமரே. 1.27.9

292  குண்டு முற்றிக் கூறை யின்றியே
       பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
       வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
       கண்டு தொழுமின் கபாலி வேடமே. 1.27.10

293  மாட மல்கு மதில்சூழ் காழிமன்
       சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
       நாட வல்ல ஞான சம்பந்தன்
       பாடல் பத்தும் பரவி வாழ்மினே. 1.27.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சிவலோகநாதர்
தேவி - சொக்கநாயகியம்மை

1.28. திருச்சோற்றுத்துறை

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

294  செப்ப நெஞ்சே நெறிகொள்* சிற்றின்பம்
       துப்ப னென்னா தருளே துணையாக
       ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
       றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.1

* நெறிகள்

295  பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
       தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
       மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
       ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.2

296  செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
       கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
       தைய லாளொர் பாக மாயஎம்
       ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.3

297  பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
       துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
       மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
       அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.4

298  பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
       மறையும் ஓதி மயானம் இடமாக
       உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
       அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.5

299  துடிக ளோடு முழவம் விம்மவே
       பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
       படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
       அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6

300  சாடிக் காலன் மாளத் தலைமாலை
       சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
       பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
       தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.7

301  பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
       கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
       எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
       அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.8

302  தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
       அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
       விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்*
       எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.9

* விதியான்மிக்க

303  *கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
       ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
       நீதி நின்று நினைவார் வேடமாம்
       ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.10

* போதுசாற்றி

304  அந்தண் சோற்றுத் துறைஎம் ஆதியைச்
       சிந்தை செய்ம்மின் அடியா ராயினீர்
       சந்தம் பரவு ஞான சம்பந்தன்
       வந்த வாறே புனைதல் வழிபாடே. 1.28.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - தொலையாச்செல்வர், ஓதவனேசுவரர்
தேவியார் - ஒப்பிலாவம்மை, அன்னபூரணி

1.29. திருநறையூர்ச்சித்தீச்சரம்

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

305  ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
       நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
       சீரு லாவு மறையோர் நறையூரில்
       சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.1

306  காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
       ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
       வீடு மாக மறையோர் நறையூரில்
       நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 1.29.2

307  கல்வி யாளர் கனகம் அழல்மேனி
       புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
       மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில்
       செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.3

308  நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
       ஆட வல்ல அடிக ளிடமாகும்
       பாடல் வண்டு பயிலும் நறையூரில்
       சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.4

309  உம்ப ராலும் உலகின் னவராலும்
       தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
       நண்பு லாவு மறையோர் நறையூரில்
       செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.5

310  கூரு லாவு படையான் விடையேறிப்
       போரு லாவு மழுவான் அனலாடி
       பேரு லாவு பெருமான் நறையூரில்
       சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. 1.29.6

311  அன்றி நின்ற அவுணர் புரமெய்த
       வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
       மன்றில் வாச மணமார் நறையூரிற்
       சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.7

312  அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
       நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
       பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில்
       திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.8

313  ஆழி யானும் அலரின் உறைவானும்
       ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
       சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
       நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 1.29.9

314  மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
       கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
       உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
       செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. 1.29.10

315  மெய்த்து லாவு மறையோர் நறையூரில்
       சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
       அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
       பத்தும் பாடப் பறையும் பாவமே. 1.29.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சித்தநாதேசர்
தேவி - அழகாம்பிகையம்மை

1.30. திருப்புகலி

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

316  விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
       கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
       பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
       பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே. 1.30.1

317  ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
       மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்
       தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
       பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே. 1.30.2

318  வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
       புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
       மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்
       பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.3

319  கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
       அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
       இயலாலுறை யும்மிடம் எண்திசை யோர்க்கும்
       புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.4

320  காதார்கன பொற்குழை தோட திலங்கத்
       தாதார்மலர் தண்சடை* யேற முடித்து
       நாதான்உறை யும்மிட மாவது நாளும்
       போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.5

* தன்சடை

321  வலமார்படை மான்மழு* ஏந்திய மைந்தன்
       கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
       குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
       புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.6

* மாமழு

322  கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்
       செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
       அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்
       பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே. 1.30.7

323  தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல
       எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற
       கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
       பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே. 1.30.8

324  மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
       தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
       நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
       பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 1.30.9

325  உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
       அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்
       கிடையாதவன் தன்நகர் நன்மலி பூகம்
       புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே. 1.30.10

326  இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்
       புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
       உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
       வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே. 1.30.11

திருச்சிற்றம்பலம்

திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

                                                                                                                                                                                                        .

முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் :1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்

1861 | 1862 | 1863 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 2017


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)


gowthampathippagam.in
ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

உங்கள் கருத்துக்கள்


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)

தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)

புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்

பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம் :  அபிதா

சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை

ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்

ரமணிசந்திரன்

சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்

சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்

க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு

கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்

மகாத்மா காந்தி :  சத்திய சோதனை

ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி

பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி

என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி

விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்

கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)

பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)

ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்

வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்

சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை

மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா

கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்

ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை

திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்

ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை

முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்

நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம்

இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை

உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா

பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை

கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்

பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா

ஆன்மீகம் :  தினசரி தியானம்