முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 4 ... 1.31. திருக்குரங்கணில்முட்டம் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 327 விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்கும் கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயும் கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. 1.31.1 328 விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக் கடைசேர்கரு மென்குளத் தோங்கிய* காட்டில் குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம் உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. 1.31.2 * குழல்தொங்கிய 329 சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான் காலன்றனை ஆருயிர் வவ்விய காலன் கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத் தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. 1.31.3 330 வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில் தோடார்குழை யான்நல பாலன நோக்கிக் கூடாதன செய்த குரங்கணில் முட்டம் ஆடாவரு வாரவ ரன்புடை யாரே. 1.31.4 331 இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக் கறையார்மிடற் றான்கரி கீறிய கையான் குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத் துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே. 1.31.5 332 பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங் கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக் குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம் நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே. 1.31.6 333 மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத் தோடார்குழை தானொரு காதில்* இலங்கக் கூடார்மதி லெய்து குரங்கணில் முட்டத் தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. 1.31.7 * காதினில் 334 மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங் கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. 1.31.8 335 வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும் அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங் குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணில் முட்டம் நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.* 1.31.9 * நிற்கிலாவே 336 கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும் வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல் குழுமின்சடை யண்ணல் குரங்கணில் முட்டத் தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே. 1.31.10 337 கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன் கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டம் சொல்லார் தமிழ் மாலை செவிக்கினி தாக வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே. 1.31.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - வாலீசுவரர் தேவி - இறையார்வளையம்மை.
1.32. திருவிடைமருதூர் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.1 339 தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப் படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன் இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.2 340 வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல் எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ. 1.32.3 341 அந்தம்மறி யாத அருங்கல முந்திக் கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல் வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன் எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.4 342 வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய் பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய ஈசன்உறை கின்ற இடைமரு தீதோ. 1.32.5 343 வன்புற்றிள நாகம் அசைத் தழகாக என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி அன்பிற்பிரி யாதவ ளோடும் உடனாய் இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.6 344 தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப் போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால் ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல் ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. 1.32.7 345 பூவார்குழ லார்அகில் கொண்டு புகைப்ப ஓவாதடி யாரடி யுள்* குளிர்ந் தேத்த ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ. 1.32.8 * யாரடிகள் 346 முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன் நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப் பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.9 347 சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல் எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. 1.32.10 348 கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன் எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல் பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள் விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே. 1.32.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மருதீசர் தேவி - நலமுலைநாயகியம்மை 1.33. திரு அன்பிலாலந்துறை பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 349 கணைநீடெரி மாலர வம்வரை வில்லா இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர் பிணைமாமயி* லுங்குயில் சேர்மட அன்னம் அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே. 1.33.1 * பிணையா மயிலுங் 350 சடையார்சது ரன்முதி ராமதி சூடி விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன் கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே. 1.33.2 352 ஊரும்மர வம்சடை மேலுற வைத்துப் பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர் நீருண்கய லும்வயல் வாளை வராலோ டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.3 353 பிறையும்மர வும்முற வைத்த முடிமேல் நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார் மறையும்பல வேதிய ரோத ஒலிசென் றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.4 354 நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல் கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார் மாடும்முழ வம்மதி ரம்மட மாதர் ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே. 1.33.5 355 நீறார்திரு மேனிய ரூனமி லார்பால் ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான் வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.6 356 செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக் கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும் அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே. 1.33.7 357 விடத்தார் திகழும்மிட றன்நட மாடி படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே. 1.33.8 358 வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும் பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம் அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே. 1.33.9 359 தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல் வெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே. 1.33.10 360 அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல் கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன் பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய் விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. 1.33.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. அன்பில் என வழங்கப்பெறும். சுவாமி - சத்தியவாகீசர், ஆலந்துறைநாதர் தேவி - சௌந்தரநாயகி 1.34. சீகாழி பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 360 அடலே றமருங் கொடியண்ணல் மடலார் குழலா ளொடுமன்னுங் கடலார் புடைசூழ் தருகாழி தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1.34.1 361 திரையார் புனல்சூ டியசெல்வன் வரையார் மகளோ டுமகிழ்ந்தான் கரையார் புனல்சூழ் தருகாழி நிரையார் மலர்தூ வுமினின்றே. 1.34.2 362 இடியார் குரல்ஏ றுடையெந்தை துடியா ரிடையா ளொடுதுன்னுங் கடியார் பொழில்சூழ் தருகாழி அடியார் அறியார் அவலம்மே. 1.34.3 363 ஒளியார் விடமுண் டவொருவன் அளியார் குழல்மங் கையொடன்பாய் களியார் பொழில்சூழ்* தருகாழி எளிதாம் அதுகண் டவரின்பே. 1.34.4 * புனல்சூழ் 364 பனியார் மலரார் தருபாதன் முனிதா னுமையோ டுமுயங்கிக் கனியார் பொழில்சூழ் தருகாழி இனிதாம் அதுகண் டவரீடே. 1.34.5 365 கொலையார் தருகூற் றமுதைத்து மலையான் மகளோ டுமகிழ்ந்தான் கலையார் தொழுதேத் தியகாழி தலையால் தொழுவார் தலையாரே. 1.34.6 366 திருவார் சிலையால் எயிலெய்து உருவார் உமையோ டுடனானான் கருவார் பொழில்சூழ் தருகாழி மருவா தவர்வான் மருவாரே. 1.34.7 367 அரக்கன் வலியொல் கஅடர்த்து வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான் சுரக்கும் புனல்சூழ் தருகாழி நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 1.34.8 368 இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான் உருவிற் பெரியா ளொடுசேருங் கருநற் பரவை கமழ்காழி மருவப் பிரியும் வினைமாய்ந்தே. 1.34.9 369 சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற அமைந்தான் உமையோ டுடன் அன்பாய்க் கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 1.34.10 370 நலமா கியஞான சம்பந்தன் கலமார் கடல்சூழ் தருகாழி நிலையா கநினைந் தவர்பாடல் வலரா னவர்வான் அடைவாரே. 1.34.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.35. திருவீழிமிழலை பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 371 அரையார் விரிகோ வணஆடை நரையார் விடையூர் திநயந்தான் விரையார் பொழில்வீ ழிம்மிழலை உரையால் உணர்வார் உயர்வாரே. 1.35.1 372 புனைதல் புரிபுன் சடைதன்மேல் கனைதல் லொருகங் கைகரந்தான் வினையில் லவர்வீ ழிம்மிழலை நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. 1.35.2 373 அழவல் லவரா டியும்பாடி எழவல் லவரெந் தையடிமேல் விழவல் லவர்வீ ழிம்மிழலை தொழவல் லவர்நல் லவர்தொண்டே. 1.35.3 374 உரவம் புரிபுன் சடைதன்மேல் அரவம் அரையார்த் தஅழகன் விரவும் பொழில்வீ ழிம்மிழலை பரவும் மடியார் அடியாரே. 1.35.4 375 கரிதா கியநஞ் சணிகண்டன் வரிதா கியவண் டறைகொன்றை விரிதார் பொழில்வீ ழிம்மிழலை உரிதா நினைவார் உயர்வாரே. 1.35.5 376 சடையார் பிறையான் சரிபூதப் படையான் கொடிமே லதொர்பைங்கண் விடையான் உறைவீ ழிம்மிழலை அடைவார் அடியார் அவர்தாமே. 1.35.6 377 செறியார் கழலுஞ் சிலம்பார்க்க நெறியார் குழலா ளொடுநின்றான் வெறியார் பொழில்வீ ழிம்மிழலை அறிவார் அவலம் அறியாரே. 1.35.7 378 உளையா வலியொல் கஅரக்கன் வளையா விரலூன் றியமைந்தன் விளையார் வயல்வீ ழிம்மிழலை அளையா வருவா ரடியாரே. 1.35.8 379 மருள்செய் திருவர் மயலாக அருள்செய் தவனார் அழலாகி வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 1.35.9 380 துளங்குந் நெறியா ரவர்தொன்மை வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை உளங்கொள் பவர்தம் வினையோய்வே. 1.35.10 381 நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன் குளிரார் சடையான் அடிகூற மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. 1.35.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வீழியழகர் தேவி - சுந்தரகுசாம்பிகை 1.36. திரு ஐயாறு (திருவையாறு) பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 382 கலையார் மதியோ டுரநீரும் நிலையார் சடையா ரிடமாகும் மலையா ரமுமா மணிசந்தோ டலையார் புனல்சே ருமையாறே. 1.36.1 383 மதியொன் றியகொன் றைவடத்தன் மதியொன் றவுதைத் தவர்வாழ்வும் மதியின் னொடுசேர் கொடிமாடம் மதியம் பயில்கின் றவையாறே. 1.36.2 384 கொக்கின் னிறகின் னொடுவன்னி புக்க சடையார்க் கிடமாகுந் திக்கின் னிசைதே வர்வணங்கும் அக்கின் னரையா ரதையாறே.* 1.36.3 * வரையார்தவையாறே 385 சிறைகொண் டபுரம் மவைசிந்தக் கறைகொண் டவர்கா தல்செய்கோயில் மறைகொண் டநல்வா னவர்தம்மில் அறையும் மொலிசே ருமையாறே. 1.36.4 386 உமையா ளொருபா கமதாகச் சமைவார் அவர்சார் விடமாகும் அமையா ருடல்சோர் தரமுத்தம்* அமையா வருமந் தணையாறே. 1.36.5 * சேர்தர முத்தம், சேர்தரு முத்தம் 387 தலையின் தொடைமா லையணிந்து கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம் நிலைகொண் டமனத் தவர்நித்தம் மலர்கொண் டுவணங் குமையாறே. 1.36.6 388 வரமொன் றியமா மலரோன்றன் சிரமொன் றையறுத் தவர்சேர்வாம் வரைநின் றிழிவார் தருபொன்னி அரவங் கொடுசே ருமையாறே. 1.36.7 389 வரையொன் றதெடுத் தஅரக்கன் சிரமங் கநெரித் தவர்சேர்வாம் விரையின் மலர்மே தகுபொன்னித் திரைதன் னொடுசே ருமையாறே. 1.36.8 390 *சங்கக் கயனும் மறியாமைப் பொங்குஞ் சுடரா னவர்கோயில் கொங்கிற் பொலியும் புனல்கொண்டு# அங்கிக் கெதிர்காட் டுமையாறே. 1.36.9 * சங்கத்தயனும் # புனல்கொண்ட 391 துவரா டையர்தோ லுடையார்கள் கவர்வாய் மொழிகா தல்செய்யாதே தவரா சர்கள்தா மரையானோ டவர்தா மணைஅந் தணையாறே. 1.36.10 392 கலையார் கலிக்கா ழியர்மன்னன் நலமார் தருஞான சம்பந்தன் அலையார் புனல்சூ ழுமையாற்றைச் சொலுமா லைவல்லார் துயர்வீடே. 1.36.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - செம்பொன்சோதீசுரர் தேவி - அறம்வளர்த்தநாயகியம்மை. 1.37. திருப்பனையூர் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 393 அரவச் சடைமேல் மதிமத்தம் விரவிப் பொலிகின் றவனூராம் நிரவிப் பலதொண் டர்கள்நாளும் பரவிப் பொலியும் பனையூரே. 1.37.1 394 எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் உண்ணின் றுமகிழ்ந் தவனூராம் கண்ணின் றெழுசோ லையில்வண்டு பண்ணின் றொலிசெய் பனையூரே. 1.37.2 395 அலரும் மெறிசெஞ் சடைதன்மேல் மலரும் பிறையொன் றுடையானூர் சிலரென் றுமிருந் தடிபேணப் பலரும் பரவும் பனையூரே. 1.37.3 396 இடியார் கடல்நஞ் சமுதுண்டு பொடியா டியமே னியினானூர் அடியார் தொழமன் னவரேத்தப் படியார் பணியும் பனையூரே. 1.37.4 397 அறையார் கழல்மேல் அரவாட இறையார் பலிதேர்ந் தவனூராம் பொறையார் மிகுசீர் விழமல்கப் பறையா ரொலிசெய் பனையூரே. 1.37.5 398 அணியார் தொழவல் லவரேத்த மணியார் மிடறொன் றுடையானூர் தணியார் மலர்கொண் டிருபோதும் பணிவார் பயிலும் பனையூரே. 1.37.6 399 அடையா தவர்மூ எயில்சீறும் விடையான் விறலார் கரியின்தோல் உடையான் அவனெண்* பலபூதப் படையா னவனூர் பனையூரே. 1.37.7 * அவனொண் 400 இலகும் முடிபத் துடையானை அலல்கண் டருள்செய் தஎம்மண்ணல் உலகில் லுயிர்நீர் நிலமற்றும் பலகண் டவனூர் பனையூரே. 1.37.8 401 வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் சிரமுன் னடிதா ழவணங்கும் பிரமன் னொடுமா லறியாத பரமன் னுறையும் பனையூரே. 1.37.9 402 *அழிவல் லமண ரொடுதேரர் மொழிவல் லனசொல் லியபோதும் இழிவில் லதொர்செம் மையினானூர் பழியில் லவர்சேர் பனையூரே. 1.37.10 * அழிவில் லமணஃ தொடுதேரர் 403 பாரார் *விடையான் பனையூர்மேல் சீரார் தமிழ்ஞா னசம்பந்தன் ஆரா தசொன்மா லைகள்பத்தும் ஊரூர் நினைவா ருயர்வாரே. 1.37.11 * விடையார் திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சௌந்தரியநாதர், அழகியநாதர் தேவி - பெரியநாயகியம்மை 1.38. திருமயிலாடுதுறை பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 404 கரவின் றிநன்மா மலர்கொண்டு* இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன் றியசெஞ் சடையான்வாழ் வரமா மயிலா டுதுறையே. 1.38.1 * மலர்கொண்டே 405 உரவெங் கரியின் னுரிபோர்த்த பரமன் னுறையும் பதியென்பர் குரவஞ் சுரபுன் னையும்வன்னி மருவும் மயிலா டுதுறையே. 1.38.2 406 ஊனத் திருள்நீங் கிடவேண்டில் ஞானப் பொருள்கொண் டடிபேணுந் தேனொத் தினியா னமருஞ்சேர் வானம் மயிலா டுதுறையே. 1.38.3 407 அஞ்சொண் புலனும் மவைசெற்ற மஞ்சன் மயிலா டுதுறையை நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல் துஞ்சும் பிணியா யினதானே. 1.38.4 408 தணியார்* மதிசெஞ் சடையான்றன் அணியார்ந் தவருக் கருளென்றும் பிணியா யினதீர்த் தருள்செய்யும் மணியான் மயிலா டுதுறையே. 1.38.5 * கணியார் 409 தொண்ட ரிசைபா டியுங்கூடிக் கண்டு துதிசெய் பவனூராம் பண்டும் பலவே தியரோத வண்டார் மயிலா டுதுறையே. 1.38.6 410 அணங்கோ டொருபா கம்அமர்ந்து இணங்கி யருள்செய் தவனூராம் நுணங்கும் புரிநூ லர்கள்கூடி வணங்கும் மயிலா டுதுறையே. 1.38.7 411 சிரங்கை யினிலேந் தியிரந்த பரங்கொள் பரமேட் டிவரையால் அரங்கவ் வரக்கன் வலிசெற்ற வரங்கொள் மயிலா டுதுறையே. 1.38.8 412 ஞாலத் தைநுகர்ந் தவன்தானும் கோலத் தயனும் மறியாத சீலத் தவனூர் சிலர்கூடி மாலைத் தீர்மயிலா டுதுறையே. 1.38.9 413 நின்றுண் சமணும் நெடுந்தேரர் ஒன்றும் மறியா மையுயர்ந்த வென்றி யருளா னவனூராம் மன்றன் மயிலா டுதுறையே. 1.38.10 414 நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் மயல்தீர் மயிலா டுதுறைமேல் செயலா லுரைசெய் தனபத்தும் உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 1.38.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மாயூரநாதர் தேவி - அஞ்சநாயகியம்மை. 1.39. திருவேட்களம் பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 415 அந்தமும் ஆதியு மாகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்திலங்க மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச் சந்த மிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் மயலே ததும்ப வெந்தவெண் ணீறு மெய்பூசும் வேட்கள நன்னக ராரே. 1.39.1 415 சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச் சங்கவெண் டோடு சரிந்திலங்கப் புடைதனிற் பாரிடஞ் சூழப் போதரு மாறிவர் போல்வார் உடைதனில் நால்விரற் கோவண ஆடை உண்பது மூரிடு பிச்சைவெள்ளை விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னக ராரே. 1.39.2 416 பூதமும் பல்கண மும்புடை சூழப் பூமியும் விண்ணும் உடன்பொருந்தச் சீதமும் வெம்மையு மாகிச் சீரொடு நின்றவெஞ் செல்வர் ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை உள்ளங் கலந்திசை யாலெழுந்த வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னக ராரே. 1.39.3 418 அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம் அமையவெண் கோவணத் தோடசைத்து வரைபுல்கு மார்பி லோராமை வாங்கி யணிந் தவர்தாந்* திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந் தேனலங் கானலில் வண்டுபண்செய்ய விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னக ராரே. 1.39.4 * அணிந்தவரதர் 419 பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல் பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட் கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும் வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள நன்னக ராரே. 1.39.5 420 கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற் கண்கவ ரைங்கணை யோனுடலம் பொறிவளர் ஆரழ லுண்ணப் பொங்கிய பூத புராணர் மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை வெறிவளர் கொன்றையந் தாரார் வேட்கள நன்னக ராரே. 1.39.6 421 மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை மாமலை வேந்தன் மகள்மகிழ நுண்பொடிச் சேர நின்றாடி நொய்யன செய்யல் உகந்தார் கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக் காலனைக் காலாற் கடிந்துகந்தார் வெண்பொடிச் சேர்திரு மார்பர் வேட்கள நன்னக ராரே. 1.39.7 422 ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார் அமுத மமரர்க் கருளி சூழ்தரு பாம்பரை யார்த்துச் சூலமோ டொண்மழு வேந்தித் தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித் தண்மதி யம்மய லேததும்ப வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னக ராரே. 1.39.8 423 திருவொளி காணிய பேதுறு கின்ற திசைமுக னுந்திசை மேலளந்த கருவரை யேந்திய மாலுங் கைதொழ நின்றது மல்லால் அருவரை யொல்க எடுத்த அரக்கன் ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த வெருவுற வூன்றிய பெம்மான் வேட்கள நன்னக ராரே. 1.39.9 424 அத்தமண் டோய்துவ ரார்அமண் குண்டர் யாதுமல் லாவுரை யேயுரைத்துப் பொய்த்தவம் பேசுவ தல்லால் புறனுரை யாதொன்றுங் கொள்ளேல் முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச மூரிவல் லானையின் ஈருரி போர்த்த வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னக ராரே. 1.39.10 425 விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து பேணிய வேட்கள மேல்மொழிந்த பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவமி லாரே. 1.39.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பாசுபதேசுவரர் தேவி - நல்லநாயகியம்மை 1.40. திருவாழ்கொளிபுத்தூர்* (* திருவாளொளிபுற்றூர்) பண் - தக்கராகம் திருச்சிற்றம்பலம் 426 பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப் பூதகணம் புடை சூழக் கொடியுடை யூர்திரிந் தையங் கொண்டு பலபல கூறி வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் கடிகமழ் மாமல ரிட்டுக் கறைமிடற் றானடி காண்போம். 1.40.1 427 அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத் தையம் புரைகெழு வெண்டலை யேந்திப் போர்விடை யேறிப் புகழ வரைகெழு மங்கைய தாகமொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர் விரைகமழ்* மாமலர் தூவி விரிசடை யானடி சேர்வோம். 1.40.2 * விரைகெழு 428 பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப் புன்றலை யங்கையி லேந்தி ஊணிடு பிச்சையூ ரையம் உண்டி யென்று பலகூறி வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தாள்நெடு மாமல ரிட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.3 429 தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி ஊரிடு பிச்சை கொள்செல்வம் உண்டி யென்று பலகூறி வாரிடு மென்முலை மாதொரு பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் காரிடு மாமலர் தூவி கறைமிடற் றானடி காண்போம். 1.40.4 430 கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதிலொர் வெண்குழை யோடு புனமலர் மாலை புனைந்தூர் புகுதி யென்றே பலகூறி வனமுலை மாமலை மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர் இனமல ரேய்ந்தன தூவி எம்பெரு மானடி சேர்வோம். 1.40.5 431 அளைவளர் நாகம் அசைத்தன லாடி அலர்மிசை அந்தணன் உச்சிக் களைதலை யிற்பலி கொள்ளுங் கருத்தனே கள்வனே யென்னா *வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தளையவிழ் மாமலர் தூவித் தலைவன தாளிணை சார்வோம். 1.40.6 * வளையொலி என்றும் பாடம் 432 அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து வழிதலை யங்கையி லேந்தி உடலிடு பிச்சை யோடைய முண்டி யென்று பலகூறி மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தடமல ராயின தூவித் தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.7 433 உயர்வரை யொல்க எடுத்த அரக்கன் ஒளிர்கட கக்கை அடர்த்து அயலிடு பிச்சை யோடையம் ஆர்தலை யென்றடி போற்றி வயல்விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச் சயவிரி மாமலர் தூவி தாழ்சடை யானடி சார்வோம். 1.40.8 434 கரியவன் நான்முகன் கைதொழு தேத்தக் காணலுஞ் சாரலு மாகா எரியுரு வாகி யூரையம் இடுபலி யுண்ணி யென்றேத்தி வரியர வல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர் விரிமல ராயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம். 1.40.9 435 குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கை யினார் புறங்கூற வெண்டலை யிற்பலி கொண்டல் விரும்பினை யென்று விளம்பி வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த் தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடிசேர்வோம். 1.40.10 436 கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங் கரைபொரு காழிய மூதூர் நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம் பந்தன் வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும் வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச் சொல்லிய பாடல்கள் வல்லார் துயர்கெடு தல்எளி தாமே. 1.40.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மாணிக்கவண்ணவீசுரர் தேவி - வண்டார்பூங்குழலம்மை. |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |