முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 6 ...

1.51. திருச்சோபுரம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

548  வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி*
       மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
       கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்
       தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. 1.51.1

* விளங்குமெழில்

549  விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
       சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்
       கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
       தொடைநெகிழ்ந்த* வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. 1.51.2

* நிகழ்ந்த

550  தீயராய வல்லரக்கர் செந்தழ லுள் ளழுந்தச்
       சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்
       பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
       தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. 1.51.3

551  பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்
       தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
       வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்
       தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.4

552  நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
       ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
       ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்
       தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.5

553  கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
       பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
       அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
       துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. 1.51.6

554  குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
       கற்றகேள்வி* ஞானமான காரண மென்னைகொலாம்
       வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
       துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. 1.51.7

* கற்றல்கேள்வி

555  விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்
       குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
       இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
       துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. 1.51.8

556  விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்
       கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
       இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்
       தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே. 1.51.9

557  புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேயுரைத்துப்
       பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
       மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
       துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. 1.51.10

558  சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்
       சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தால்
       ஞாலம்மிக்க தண்டமிழால் ஞானசம் பந்தன்சொன்ன
       கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே. 1.51.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - சோபுரநாதர்
தேவி - சோபுரநாயகியம்மை


உயிருள்ள மூலிகை மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சிந்தா நதி
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

ஒரு நிமிட மேலாளர்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

ரத்தம் ஒரே நிறம்
இருப்பு இல்லை
ரூ.315.00
Buy

எம்.ஜி.ஆர்
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

மரப்பசு
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

ஜெயமோகன் குறுநாவல்கள்
இருப்பு உள்ளது
ரூ.370.00
Buy

அலை ஓசை
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

உலகத்துச் சிறந்த நாவல்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

புண்ணியம் தேடுவோமே..! - பாகம் 2
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

இந்தியா 1948
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மலர் மஞ்சம்
இருப்பு உள்ளது
ரூ.590.00
Buy

கங்கணம்
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

ஏந்திழை
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

தொலைந்து போனவர்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

உடல் ஆயுதம்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-4
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ரசிகன்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy
1.52. திருநெடுங்களம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

559  மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
       பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
       குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
       நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.1

560  கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
       தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
       மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
       நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.2

561  நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
       என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
       பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
       நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. 1.52.3

562  மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
       அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
       தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
       நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.4

563  பாங்கினல்லார்* படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
       தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
       தாங்கிநில்லா# அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
       நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.5

* பாங்கிநல்லார்
# தாங்கிநல்லா

564  விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
       கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
       அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
       நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.6

565  கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
       மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
       ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
       நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.7

566  குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
       அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
       என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
       நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.8

567  வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
       சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
       கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
       நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.9

568  வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
       தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
       துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
       நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.10

569  நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
       சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
       நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
       பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. 1.52.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - நித்தியசுந்தரர்
தேவி - ஒப்பிலாநாயகியம்மை.

1.53. திருமுதுகுன்றம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

570  தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
       நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
       மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
       மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. 1.53.1

571  பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்
       எற்றுநீர்தீக் காலு* மேலை விண்ணிய மானனொடு
       மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
       முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. 1.53.2

* தீகாலும்

572  வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
       நாரிபாகம்* நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
       சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்
       மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. 1.53.3

* நாரிபாகர்

573  பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
       நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
       நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
       ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே. 1.53.4

574  வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
       செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
       தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
       முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. 1.53.5

575  சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
       சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்
       அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு
       மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 1.53.6

*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

576  மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
       இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
       புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
       முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. 1.53.8

577  ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்
       கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
       ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்
       மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. 1.53.9

578  உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
       நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
       மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
       முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. 1.53.10

579  மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
       பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
       .... .... .... .... .... .... .... ....
       .... .... .... .... .... .... .... .... 1.53.11

* 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமி - பழமலைநாதர்
தேவி - பெரியநாயகியம்மை

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

1.54. திருஓத்தூர்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

580  பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
       ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
       ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
       கூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1
581  இடையீர் போகா இளமுலை யாளையோர்
       புடையீ ரேபுள்ளி மானுரி
       உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
       சடையீ ரேயும தாளே. 1.54.2
582  உள்வேர் போல நொடிமையி னார்திறம்
       கொள்வீ ரல்குலோர் கோவணம்
       ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
       கள்வீ ரேயும காதலே. 1.54.3

583  தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
       ஆட்டீ ரேயடி யார்வினை
       ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
       நாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4

584  குழையார் காதீர்* கொடுமழு வாட்படை
       உழையாள் வீர்திரு வோத்தூர்
       பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
       அழையா மேயருள் நல்குமே. 1.54.5

* காதா

585  மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
       தக்கார் தம்மக்க ளீரென்
       றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
       நக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6

586  தாதார் கொன்றை தயங்கு முடியுடை
       நாதா என்று நலம்புகழ்ந்
       தோதா தாருள ரோதிரு வோத்தூர்
       ஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7

587  என்றா னிம்மலை யென்ற அரக்கனை
       வென்றார் போலும் விரலினால்
       ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
       என்றார் மேல்வினை யேகுமே. 1.54.8

588  நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
       சென்றார் போலுந் திசையெலாம்
       ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
       நின்றீ ரே* யுமை நேடியே. 1.54.9

* நின்றாரே

589  கார மண்கலிங் கத்துவ ராடையர்
       தேரர் சொல்லவை தேறன்மின்
       ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
       சீர வன்கழல் சேர்மினே. 1.54.10

590  குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
       அரும்பு கொன்றை யடிகளைப்
       பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
       விரும்பு வார்வினை வீடே. 1.54.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - வேதநாதர்
தேவி - இளமுலைநாயகியம்மை.

1.55. திருமாற்பேறு

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

591  ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
       நீறு சேர்திரு மேனியர்
       சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
       மாறி லாமணி கண்டரே. 1.55.1

592  தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
       அடைவா ராமடி கள்ளென
       மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
       றுடையீ ரேயுமை யுள்கியே. 1.55.2

593  பையா ரும்மர வங்கொடு வாட்டிய
       கையா னென்று வணங்குவர்
       மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
       ஐயா நின்னடி யார்களே. 1.55.3

594  சால மாமலர் கொண்டு சரணென்று
       மேலை யார்கள் விரும்புவர்
       மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
       நீல மார்கண்ட நின்னையே. 1.55.4

595  மாறி லாமணி யேயென்று வானவர்
       ஏற வேமிக ஏத்துவர்
       கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
       நீற னேயென்று நின்னையே. 1.55.5

596  உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்
       பரவா தாரில்லை நாள்களும்
       திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
       றரையா னேயருள் நல்கிடே. 1.55.6

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

597  அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
       உரைகெ டுத்தவன் ஒல்கிட
       வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
       பரவி டக்கெடும் பாவமே. 1.55.8

598  இருவர் தேவருந் தேடித் திரிந்தினி*
       ஒருவ ராலறி வொண்ணிலன்#
       மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்
       பரவு வார்வினை பாறுமே. 1.55.9

* திரிந்ததில்
# லறிவுண்டிலன், லறியுண்டிலன்

599  தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
       நீசர் தம்முரை கொள்ளெலுந்*
       தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
       ஈச னென்றெடுத் தேத்துமே. 1.55.10

* கொள்ளலும்

600  மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
       மன்னும் மாற்பேற் றடிகளை
       மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
       பன்ன வேவினை பாறுமே. 1.55.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - மால்வணங்குமீசர்
தேவி - கருணைநாயகியம்மை.

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

1.56. திருப்பாற்றுறை

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

601  காரார் கொன்றை கலந்த முடியினர்
       சீரார் சிந்தை செலச்செய்தார்
       பாரார் நாளும் பரவிய பாற்றுறை
       ஆரா ராதி முதல்வரே. 1.56.1

602  நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
       சொல்லார் நன்மலர் சூடினார்
       பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
       எல்லா ருந்தொழும் ஈசரே. 1.56.2

603  விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
       எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
       பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
       யுண்ணா ணாளும் உறைவரே. 1.56.3

604  பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
       ஏவின் அல்லா ரெயிலெய்தார்
       பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
       ஓவென் சிந்தை யொருவரே. 1.56.4

605  மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென
       தாகம் பொன்னிற மாக்கினார்
       பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
       நாகம் பூண்ட நயவரே. 1.56.5

606  போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
       நாதர் வந்தென் நலங்கொண்டார்
       பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
       வேத மோதும் விகிர்தரே. 1.56.6

607  வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
       கோடல் செய்த குறிப்பினார்
       பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
       ஆடல் நாகம் அசைத்தாரே. 1.56.7

608  வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
       எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
       பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
       மவ்வல் சூடிய மைந்தரே. 1.56.8

608  ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
       ஆன வண்ணத்தெம் அண்ணலார்
       பான லம்மலர் விம்மிய பாற்றுறை
       வான வெண்பிறை மைந்தரே. 1.56.9

610  வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
       வந்தென் நன்னலம் வௌவினார்
       பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
       மைந்தர் தாமோர் மணாளரே. 1.56.10

611  பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
       பத்து நூறு பெயரானைப்
       பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
       பத்தும் பாடிப் பரவுமே. 1.56.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - திருமூலநாதர்
தேவி - மோகாம்பிகையம்மை.

1.57. திருவேற்காடு

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

612  ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
       வெள்ளி யானுறை வேற்காடு
       உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
       தெள்ளி யாரவர் தேவரே. 1.57.1

613  ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
       வேடங் கொண்டவன் வேற்காடு
       பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
       சேட ராகிய செல்வரே. 1.57.2

614  பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
       வேத வித்தகன் வேற்காடு
       போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
       கேதம் எய்துத லில்லையே. 1.57.3

615  ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
       வீழ்ச டையினன் வேற்காடு
       தாழ்வி டைமனத் தாற்பணிந் தேத்திட
       பாழ்ப டும்மவர் பாவமே. 1.57.4

616  காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
       வீட்டி னானுறை வேற்காடு
       பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
       ஓட்டி னார்வினை ஒல்லையே. 1.57.5

617  தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
       வேலி னானுறை வேற்காடு
       நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
       மாலி னார்வினை மாயுமே. 1.57.6

618  மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
       வில்லி னானுறை வேற்காடு
       சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
       செல்ல வல்லவர் தீர்க்கமே. 1.57.7

619  மூரல் வெண்மதி சூடும் முடியுடை
       வீரன் மேவிய வேற்காடு
       வார மாய்வழி பாடு நினைந்தவர்
       சேர்வர் செய்கழல் திண்ணமே. 1.57.8

620  பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
       விரக்கி னானுறை வேற்காட்டூர்
       அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
       நெருக்கி னானை நினைமினே. 1.57.9

621  மாறி லாமல ரானொடு மாலவன்
       வேற லானுறை வேற்காடு
       ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
       கூறி னார்க்கில்லை குற்றமே. 1.57.10

622  விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
       கண்டு நம்பன் கழல்பேணிச்
       சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
       கொண்டு பாடக் குணமாமே. 1.57.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - வேற்காட்டீசுவரர்
தேவி - வேற்கண்ணியம்மை.

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

1.58. திருக்கரவீரம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

623  அரியும் நம்வினை யுள்ளன ஆசற
       வரிகொள் மாமணி போற்கண்டங்
       கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
       பெரிய வன்கழல் பேணவே. 1.58.1

624  தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
       திங்க ளோடுடன் சூடிய
       கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
       சங்க ரன்கழல் சாரவே. 1.58.2

625  ஏதம் வந்தடை யாவினி நல்லன
       பூதம் பல்படை யாக்கிய
       காத லான்திக ழுங்கர வீரத்தெம்
       நாதன் பாதம் நணுகவே. 1.58.3

626  பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
       மறையும் மாமணி போற்கண்டங்
       கறைய வன்திக ழுங்கர வீரத்தெம்
       இறைய வன்கழல் ஏத்தவே. 1.58.4

627  பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
       விண்ணி னார்மதி லெய்தமுக்
       கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
       நண்ணு வார்வினை நாசமே. 1.58.5

628  நிழலி னார்மதி சூடிய நீள்சடை*
       அழலி னாரழ லேந்திய
       கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
       தொழவல் லார்க்கில்லை துக்கமே. 1.58.6

* சூடினன் நீள்சடை

629  வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
       அண்டன் ஆரழல் போலொளிர்
       கண்ட னாருறை யுங்கர வீரத்துத்
       தொண்டர் மேற்றுயர் தூரமே. 1.58.7

630  புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
       சினவ லாண்மை செகுத்தவன்
       கனல வனுறை கின்ற கரவீரம்
       எனவல் லார்க்கிட ரில்லையே. 1.58.8

631  வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
       தெள்ளத் தீத்திர ளாகிய
       கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
       உள்ளத் தான்வினை ஓயுமே. 1.58.9

632  செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
       கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்*
       கடிய வன்னுறை கின்ற கரவீரத்
       தடிய வர்க்கில்லை யல்லலே. 1.58.10

* கொள்ளன்மின்

633  வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
       சேடன் மேற்கசி வால்தமிழ்
       நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
       பாடு வார்க்கில்லை பாவமே. 1.58.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - கரவீரேசுவரர்
தேவி - பிரத்தியட்சமின்னாளம்மை.

1.59. திருத்தூங்கானைமாடம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

634  ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
              யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
       அடங்கு மிடங்கருதி நின்றீ ரெல்லாம்
              அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
       கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்குங்
              கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
       தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.1

635  பிணிநீர சாதல் பிறத்தலிவை
              பிரியப் பிரியாத பேரின்பத்தோ
       டணிநீர மேலுலகம் எய்தலுறில்
              அறிமின் குறைவில்லை ஆனேறுடை
       மணிநீல கண்ட முடையபிரான்
              மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
       துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.2

636  சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
              சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
       ஆமா றறியா தலமந்துநீர்*
              அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
       பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
              புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
       தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.3

* தலம்வந்துநீர்

637  ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
              உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
       மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
              மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
       மூன்று மதிலெய்த மூவாச்சிலை
              முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
       தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.4

638  மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
              மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
       வியல்தீர மேலுலக மெய்தலுறின்
              மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
       உயர்தீர வோங்கிய நாமங்களா
              லோவாது நாளும் அடிபரவல்செய்
       துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.5

639  பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா
              படர்நோக் கின்கண் பவளந்நிற
       நன்னீர்மை குன்றித் திரைதோலொடு
              நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
       பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
              புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
       தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.6

640  இறையூண் துகளோ டிடுக்கண் எய்தி
              யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
       நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
              நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
       பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப்
              பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
       துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.7

641  பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
              பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
       இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
              இறையே பிரியா தெழுந்துபோதுங்
       கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
              காதலியுந் தானுங் கருதிவாழுந்
       தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.8

642  நோயும் பிணியும் அருந்துயரமும்
              நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
       வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
              மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
       தாய அடியளந்தான் காணமாட்டாத்
              தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
       டோயும் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.9

643  பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
              பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
       முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
              மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
       திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
              திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
       துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
              தூங்கானை மாடம் தொழுமின்களே. 1.59.10

644  மண்ணார் முழவதிரும் மாடவீதி
              வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
       பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
              பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
       கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்
              கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
       விண்ணோ ருலகத்து மேவிவாழும்
              விதியது வேயாகும் வினைமாயுமே. 1.59.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - சுடர்க்கொழுந்தீசர்
தேவி - கடந்தைநாயகியம்மை

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

1.60. திருத்தோணிபுரம்

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

645  வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
       ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்
       துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
       பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. 1.60.1

646  எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
       அறிவுறா தொழிவதுவும் அருவினையேன்* பயனன்றே
       செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
       வெறிநிறார்# மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 1.60.2

* அருவினையின்
# வெறிநீறார்

647  பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
       கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
       செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
       பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. 1.60.3

648  காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
       பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
       சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
       ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. 1.60.4

649  பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
       காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்
       தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
       நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. 1.60.5

650  சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
       வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
       தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
       கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. 1.60.6

651  முன்றில்வாய் மடற்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
       அன்றில்காள் பிரிவுறுநோய் அறியாதீர் மிகவல்லீர்
       தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
       கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. 1.60.7

652  பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
       ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
       தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
       கோனாரை என்னிடத்தே* வரவொருகாற் கூவாயே. 1.60.8

* என்னிடைக்கே

653  நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
       பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
       சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
       விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. 1.60.9

654  சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
       முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்
       துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்குமிளம்
       பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 1.60.10

655  போர்மிகுத்த வயல்தோணி புரத்துறையும் புரிசடையெங்
       கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வன்கமலத்
       தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
       சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 1.60.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - தோணியப்பர்
தேவி - திருநிலைநாயகியம்மைமுதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     தலைமுறை இடைவெளி - Unicode
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode
     புயல் - Unicode
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
     விசிறி வாழை - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
     சர்மாவின் உயில் - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode - PDF
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
     ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode - PDF
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode - PDF
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode - PDF
     மூவருலா - Unicode - PDF
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
இரட்டை மணிமாலை நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)