இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Sindhu.P (13-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 291
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!


முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 7 ...

1.61. திருச்செங்காட்டங்குடி

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

656  நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
       முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
       சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
       கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.1

657  வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
       ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச்
       சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
       காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. 1.61.2

658  வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
       கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
       சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேருங்
       கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3

659  தொங்கலுங் கமழ்சாந்தும் அகில்புகையுந் தொண்டர்கொண்
       டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
       செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
       கங்கைசேர் வார்சடையான்* கணபதீச் சரத்தானே. 1.61.4

* யோர்சடையான்

660  பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
       நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
       சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
       காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.5

661  நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
       தண்ணியான் வெய்யான்நம் தலைமேலான் மனத்துளான்
       திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
       கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே. 1.61.6

662  மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
       மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்
       செய்யினார் தண்கழனிச்* செங்காட்டங் குடியதனுள்
       கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. 1.61.7

* அகன்கழனிச்

663  தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த
       பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
       சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடும்
       காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே. 1.61.8

664  ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
       வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
       தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
       கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. 1.61.9

665  செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
       படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
       பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
       கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. 1.61.10

666  கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
       நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
       சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
       மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. 1.61.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - கணபதீசுவரர்
தேவி - திருக்குழல்மாதம்மை

1.62. திருக்கோளிலி

பண் - பழந்தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

667  நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
       ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்
       கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
       கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.1

668  ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
       தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
       பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
       கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.2

669  நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
       டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
       கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
       கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. 1.62.3

670  வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்
       சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
       தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
       கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.4

671  வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்
       நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
       பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
       கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. 1.62.5

672  தாவியவ* னுடனிருந்துங் காணாத தற்பரனை
       ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
       நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
       கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. 1.62.6

* காவியவன்

673  கல்நவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
       சொல்நவிலும் மாமறையான் தோத்திரஞ்செய்* வாயினுளான்
       மின்நவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
       கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.7

* தோத்திரஞ்சேர்

674  அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்
       சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
       மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்
       கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.8

675  நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
       தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
       பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
       கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 1.62.9

676  தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
       இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
       நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
       கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. 1.62.10

677  நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்
       கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
       வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்தமிழ்கொண்
       டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. 1.62.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - கோளிலியப்பர்
தேவி - வண்டமர்பூங்குழலம்மை.

1.63. திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

678  எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
       வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
       சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
       பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1

679  பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
       கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
       இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
       வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2

680  நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
       பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
       அகலாதுறையும் மாநிலத்தில் அயலின் மையாலமரர்*
       புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 1.63.3

* அயலின் மயலாலமரர்;

681  சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
       அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
       செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
       வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 1.63.4

682  தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
       பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே
       அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
       துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே. 1.63.5

683  கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
       அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
       அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
       தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே. 1.63.6

684  முலையாழ்கெழுவ* மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
       நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
       தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
       சிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 1.63.7

* முலையாழ்கெழும்

685  எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்
       கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
       ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்
       பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. 1.63.8

686  துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்
       கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
       அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
       தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. 1.63.9

687  நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
       குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
       அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
       கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. 1.63.10

688  கட்டார் துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
       சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
       நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
       கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. 1.63.11

689  கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி
       நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
       படையார்மழுவன் மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
       கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. 1.63.12

திருச்சிற்றம்பலம்

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.64. திருப்பூவணம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

690  அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
       குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்
       முறையால்* முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்
       திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே. 1.64.1

* முறையார்

691  மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை
       ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்
       கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர் காத்தளித்த
       திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப் பூவணமே. 1.64.2

692  போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க்
       காரார் கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர்
       பாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச்
       சீரார்வாரி சேரநின்ற தென்திருப் பூவணமே. 1.64.3

693  கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர் வார்குழையன்
       கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவண வன்னிடமாம்
       படியார்கூடி நீடியோங்கும் பல்புக ழாற்பரவச்
       செடியார்வைகை சூழநின்ற தென்திருப் பூவணமே. 1.64.4

694  கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த
       போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந் தானிடமாம்
       ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத்
       தேரார்வீதி மாடநீடுந் தென்திருப் பூவணமே. 1.64.5

695  நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே
       சென்றுபேணி யேத்தநின்ற தேவர் பிரானிடமாம்
       குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல்
       தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே. 1.64.6

696  பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
       மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந் தானிடமாம்
       கைவாழ்வளையார்* மைந்தரோடுங் கலவி யினால்நெருங்கிச்
       செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப் பூவணமே. 1.64.7

* கைவாழ்வினையார்

697  மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்
       கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம்
       பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து
       ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப் பூவணமே. 1.64.8

698  பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும்
       கையால்தொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர்
       மையார்பொழிலின் வண்டுபாட வைகை மணிகொழித்துச்
       செய்யார்கமலம் தேனரும்புந் தென்திருப் பூவணமே. 1.64.9

699  அலையார்புனலை நீத்தவருந் தேரரும் அன்புசெய்யா
       நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன் தன்னிடமாம்
       மலைபோல்துன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே
       சிலையார் புரிசை பரிசு பண்ணுந் தென்திருப் பூவணமே. 1.64.10

700  திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப் பூவணத்துப்
       பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல் இன்தமிழால்
       நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம் பந்தன்சொன்ன
       பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே. 1.64.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமி - பூவணநாதர்
தேவி - மின்னாம்பிகையம்மை

1.65. காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

701  அடையார்தம் புரங்கள் மூன்றும் ஆரழ லில்லழுந்த
       விடையார் மேனிய ராய்ச்சீறும் வித்தகர் மேயவிடம்
       கடையார் மாடம் நீடியெங்கு* கங்குல்புறந் தடவப்
       படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே. 1.65.1

* நீடியோங்கும்

702  எண்ணா ரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரான் இமையோர்
       கண்ணா யுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
       மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலுந்தேன் அருந்திப்
       பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.2

703  மங்கை யங்கோர் பாகமாக வாள்*நில வார்சடைமேல்
       கங்கை யங்கே வாழவைத்த கள்வன் இருந்தஇடம்
       பொங்க யஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல்
       பங்க யஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.3

* வான்

704  தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம்
       நீரார் நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம்
       போரார் வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற்
       பாரார் கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.4

705  மைசேர் கண்டர் அண்டவாணர் வானவ ருந்துதிப்ப
       மெய்சேர் பொடியர்* அடியாரேத்த மேவி இருந்தவிடங்
       கைசேர்வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே
       பைசே ரரவார் அல்குலார்சேர் பல்லவ னீச்சரமே. 1.65.5

* மெய்சேர்கோடி

706  குழலினோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக்
       கழலினோசை யார்க்கஆடுங் கடவு ளிருந்தவிடஞ்
       சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
       பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே. 1.65.6

707  வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச் சாடிவிண்ணோர்
       வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தஇடம்
       மந்தலாய மல்லிகையும் புன்னை வளர்குரவின்
       பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே. 1.65.7

708  தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கஅவன்
       தாரரக்குந் திண்முடிகள் ஊன்றிய சங்கரனூர்
       காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெ லாமுணரப்
       பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. 1.65.8

709  அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்
       தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
       வங்கமாரும் முத்தம்இப்பி வார்கட லூடலைப்பப்
       பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே. 1.65.9

710  உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்
       கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்
       தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்
       பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவ னீச்சரமே. 1.65.10

711  பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
       அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம் பந்தன்சொல்
       சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய்
       ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொ டோங்குவரே. 1.65.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பல்லவனேசர்
தேவி - சவுந்தராம்பிகையம்மை

1.66. திருச்சண்பைநகர்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

712  பங்மேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்
       அங்கமாறும் மறைநான்கவையு மானார் மீனாரும்
       வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
       சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே. 1.66.1

713  சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்
       போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்
       மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த
       சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே. 1.66.2

714  மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
       நிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
       பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
       தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே. 1.66.3

715  மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட
       தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
       கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
       சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே. 1.66.4

716  கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம் அருள்செய்த
       குலமார்கயிலைக் குன்றதுடைய* கொல்லை யெருதேறி
       நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார் நறும்பாளை
       சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே. 1.66.5

* குன்றொத்துடைய

717  மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்து மெய்ம்மாலான்
       சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன் மேதக்க
       ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண் வயலுக்கே
       சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே. 1.66.6

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

718  இருளைப்புரையும் நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
       அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண் கந்தத்தின்
       மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையால்
       தரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே. 1.66.8

719  மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசை மேலயனும்
       எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன் மறையோதி
       தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்
       பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே. 1.66.9

720  போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
       நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன் இருநான்கின்
       மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
       சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே. 1.66.10

721  வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்
       சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேய
       அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம் பந்தன்சொல்
       சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே. 1.66.11

திருச்சிற்றம்பலம்

1.67. திருப்பழனம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

722  வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
       பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
       நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
       பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே. 1.67.1

723  கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார் காலனைப்
       புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந் தாளால்
       எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான் மகளோடும்
       பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழன நகராரே. 1.67.2

724  பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல் விழிகட்பேய்
       உறையுமயான மிடமாவுடையார் உலகர் தலைமகன்
       அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
       பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழன நகராரே. 1.67.3

725  உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறும் மயானத்தில்
       இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர் மேலைப்
       பிரமன்றலையில் நறவமேற்ற பெம்மான் எமையாளும்
       பரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே. 1.67.4

726  குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடை யண்ணல்
       கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி
       நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண் டெதிருந்திப்
       பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழன நகராரே. 1.67.5

727  வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின் னொலியோவா
       மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்
       ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார் வாழையின்
       பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே. 1.67.6

728  பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி
       செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்
       கையாடலினார் புனலால்மல்கு சடைமேற் பிறையோடும்
       பையாடரவ* முடனேவைத்தார் பழன நகராரே. 1.67.7

* பைவாயரவ

729  மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறா யெடுத்தான்றோள்
       அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடர வூன்றினார்
       நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான் வம்பாரும்
       பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழன நகராரே. 1.67.8

730  கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன் சடையார்விண்
       முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந் தாவிய
       நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக் காணாத
       படியார்பொடியா டகலமுடையார் பழன நகராரே. 1.67.9

731  கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக் கஞ்சியை
       உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார் பாராட்ட
       வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய் மிகவுண்டு
       பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழன நகராரே. 1.67.10

732  வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணு புரந்தன்னுள்
       நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞான சம்பந்தன்
       பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான் பழனத்தை
       வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார் நல்லாரே. 1.67.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - ஆபத்சகாயர்
தேவி - பெரியநாயகியம்மை

1.68. திருக்கயிலாயம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

733  பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்
       கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர்
       இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்
       கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே. 1.68.1

734  புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
       தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
       பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்* கூர்ந்த
       கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே. 1.68.2

* மழுங்கியிருள்

735  மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்
       மேவுமதியும் நதியும்வைத்த இறைவர் கழலுன்னும்
       தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன்சேர்
       காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே. 1.68.3

736  முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்
       தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்த நுதலினார்
       மன்னீர்மடுவும் படுகல்லறையின் உழுவை சினங்கொண்டு
       கன்னீர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலை மலையாரே. 1.68.4

737  ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல் சேர்வார்
       நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்குந்
       தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல் நெறியோடிக்
       கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலை மலையாரே. 1.68.5

738  தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
       போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்
       மூதாருலகில் முனிவருடனாய் அறநான் கருள்செய்த
       காதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே. 1.68.6

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

739  தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார்
       எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடிய விரல்வைத்தார்
       கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகி வருங்கூற்றைக்
       கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலை மலையாரே. 1.68.8

740  ஊணாப் பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
       பூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்
       பேணாவோடி நேடவெங்கும் பிறங்கும் எரியாகிக்
       காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலை மலையாரே. 1.68.9

741  விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர்
       பொருதுபகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க் கணியராய்
       எருதொன்றுகைத்திங் கிடுவார் தம்பால் இரந்துண் டிகழ்வார்கள்
       கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலை மலையாரே. 1.68.10

742  போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
       காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
       தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்புமடியார்மேல்
       வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே. 1.68.11

திருச்சிற்றம்பலம்

சுவாமி - கயிலாயநாதர்
தேவி - பார்வதியம்மை

1.69. திரு அண்ணாமலை

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

743  பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
       மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள் செய்தார்
       தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
       ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.1

744  மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்
       நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
       வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
       அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே. 1.69.2

745  ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
       ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள்போலும்
       ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
       ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.3

746  இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார்
       தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்
       பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
       அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.4

747  உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார்
       செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீ யெழுவித்தார்
       பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணி முத்தம்
       அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.5

748  எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர் பெருமானார்
       நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
       கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
       அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.6

749  வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல் வினையோடு
       பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறை கோயில்
       முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
       அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.7

750  மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
       நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள் செய்தார்
       திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
       அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே. 1.69.8

751  தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
       மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
       கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
       றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.9

752  தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுண்ணும்
       பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
       வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
       அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே. 1.69.10

753  அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
       நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
       சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
       வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே. 1.69.11

திருச்சிற்றம்பலம்

இது நடுநாட்டிலுள்ளது
சுவாமி - அருணாசலேசுவரர்
தேவி - உண்ணாமுலையம்மை

1.70. திரு ஈங்கோய்மலை

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

754  வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
       தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
       கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
       ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.1

755  சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
       கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
       பாலொத்தனைய மொழியாள்காண ஆடும் பரமனார்
       ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே. 1.70.2

756  கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
       விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
       பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
       எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.3

757  மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான் மகளோடுங்
       குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன் சடைதாழப்
       பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட் டெரியாடும்
       இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே. 1.70.4

758  நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர் கண்ணினார்
       கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன் சடைதாழப்
       பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட் டெரியாடும்
       எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய் மலையாரே. 1.70.5

759  நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றை யரவோடும்
       ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
       சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
       ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே. 1.70.6

760  வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன் விரிகொன்றை
       நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பா னலமல்கு
       தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோ டனலேந்தும்
       எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே. 1.70.7

761  பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற் பொலிவாய
       அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார் விரல்தன்னால்
       நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
       இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே. 1.70.8

762  வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான் மகளோடும்
       பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
       அரியோடயனும் அறியாவண்ணம் அளவில் பெருமையோ
       டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய் மலையாரே. 1.70.9

763  பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும்
       மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில் தேரரும்
       உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோ டுடனாகி
       இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே. 1.70.10

764  விழவாரொலியும் முழவும்ஓவா வேணு புரந்தன்னுள்
       அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
       எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
       கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலை களைவாரே. 1.70.11

திருச்சிற்றம்பலம்

                                                                                                                                                                                                        .

முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் :1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்
இருப்பு உள்ளது
ரூ.160.00மாபெரும் தமிழ்க் கனவு
இருப்பு உள்ளது
ரூ.450.00மக்களைக் கையாளும் கலை
இருப்பு உள்ளது
ரூ.200.00தனிமனித வளர்ச்சி விதிகள் 15
இருப்பு உள்ளது
ரூ.225.00மாறுபட்டு சிந்தியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.115.00மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.215.00லீ குவான் யூ
இருப்பு உள்ளது
ரூ.210.00குறிஞ்சி மலர்
இருப்பு உள்ளது
ரூ.200.00வெற்றிக்கொடி கட்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.450.00இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்
இருப்பு உள்ளது
ரூ.225.00அள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்
இருப்பு உள்ளது
ரூ.180.00கரிப்பு மணிகள்
இருப்பு உள்ளது
ரூ.110.00ரிச்சர்ட் பிரான்ஸன்
இருப்பு உள்ளது
ரூ.130.00உணவு சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.240.00மர்லின் மன்றோ
இருப்பு உள்ளது
ரூ.150.00உயிர் காக்கும் உணவு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.205.00நாட்டுக் கணக்கு – 2
இருப்பு உள்ளது
ரூ.260.00உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.160.00ஆரோக்கிய உணவு
இருப்பு உள்ளது
ரூ.100.00