முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 8 ...

1.71. திருநறையூர்ச்சித்தீச்சரம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

765  பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய் நாகத்தர்
       கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர்
       மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில் மகிழ்வெய்திச்
       சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.1

766  பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம் பாடவே
       தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர் விடையேறிக்
       கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்
       செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச் சரத்தாரே. 1.71.2

767  முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
       பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்
       கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலா ரினம்பாயக்
       கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.3

768  பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
       மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும் ஒருகாதர்
       பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்து செண்பகஞ்
       சென்றார்செல்வத் திருவார் நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.4

769  நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
       பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
       தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
       சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 1.71.5

770  நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
       தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத் தெழிலார்வந்
       தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்கு கோபுரந்
       தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.6

771  குழலார்சடையர் கொக்கின்இறகர் கோல நிறமத்தந்
       தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவ ணக்கீளர்
       எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்து* விடையேறிக்
       கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச் சரத்தாரே. 1.71.7

* இசைந்து

772  கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலை மலைதன்னை
       வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்து மனமொன்றி
       உரையார்கீதம் பாடநல்ல வுலப்பி லருள்செய்தார்
       திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.8

773  நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார் மனத்தாராய்
       அடியாரவரும் அருமாமறையும் அண்டத் தமரரும்
       முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வா அருளென்ன
       செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.9

774  நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்ட போர்வையார்
       ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட் டுழல்வீர்காள்
       கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபால மயல்பொழியச்*
       சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே. 1.71.10

* வழியச்

775  குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை
       செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரை
       மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன்
       பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே. 1.71.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - சித்தநாதேசர்
தேவி - அழகாம்பிகையம்மை


என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

எனது இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.585.00
Buy

பொய்த் தேவு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

அறிந்தும் அறியாமலும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

துணையெழுத்து
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

புலன் மயக்கம் - தொகுதி - 2
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

கம்பா நதி
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

The 5 AM Club
Stock Available
ரூ.315.00
Buy

தாமஸ் வந்தார்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பெண்ணென்று சொல்வேன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நலம், நலம் அறிய ஆவல்!
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

காதல் வழிச் சாலை!
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

இறுதி இரவு
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

அரசியலின் இலக்கணம்
இருப்பு உள்ளது
ரூ.515.00
Buy

கடலுக்கு அப்பால்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

அலுவலகத்தில் உடல்மொழி
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy
1.72. திருக்குடந்தைக்காரோணம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

776  வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை
       நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி ஒற்றைக்கண்
       கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கிற்
       காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோ ணத்தாரே. 1.72.1

777  முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுல கும்மேத்தும்
       படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக்
       கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாருங்
       கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே. 1.72.2

778  மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
       குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கில்
       முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார்
       கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே. 1.72.3

779  போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ் வழகாருந்
       தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குட மூக்கில்
       மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார்
       காதார்குழையர் காளகண்டர் காரோ ணத்தாரே. 1.72.4

780  பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர் புறவெல்லாந்
       தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
       கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை
       காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோ ணத்தாரே. 1.72.5

781  மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே அனல்வாளி
       கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில்
       தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள் நலியாமைக்
       காப்பார்காலன் அடையாவண்ணங் காரோ ணத்தாரே. 1.72.6

782  ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை
       மானார்தோலார் புலியினுடையார் கரியின் னுரிபோர்வை
       தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கில்
       கானார்நட்டம் உடையார்செல்வக் காரோ ணத்தாரே. 1.72.7

783  வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
       விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
       உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
       கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே. 1.72.8

784  கரியமாலுஞ் செய்ய பூமேல் அயனுங்கழறிப்போய்
       அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
       தெரியவரிய தேவர்செல்வந் திகழுங் குடமூக்கில்
       கரியகண்டர் காலகாலர் காரோ ணத்தாரே. 1.72.9

785  நாணார்அமணர் நல்லதறியார் நாளுங் குரத்திகள்
       பேணார்தூய்மை* மாசுகழியார் பேச லவரோடுஞ்
       சேணார்மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக்
       கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோ ணத்தாரே. 1.72.10

786  கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்
       திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்
       உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்
       கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே. 1.72.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - காசிவிசுவநாதர், சோமநாதர்
தேவி - விசாலாட்சி, தேனார்மொழியம்மை

1.73. திருக்கானூர்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

787  வானார்சோதி மன்னுசென்னி வன்னிபு னங்கொன்றைத்
       தேனார்போது தானார்கங்கை திங்க ளொடுசூடி
       மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலை யாடுவார்
       கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே. 1.73.1

788  நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர்
       ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றை யெழிலார
       போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாம்
       காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே. 1.73.2

789  சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்ய மலர்க்கொன்றை
       மறையார்பாட லாடலோடு மால்விடை மேல்வருவார்
       இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நல முங்கொண்டார்
       கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே. 1.73.3

790  விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலை யதுசூடித்
       தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
       எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வ நோய்செய்தான்
       கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே. 1.73.4

791  தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
       சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
       ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
       கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே. 1.73.5

792  முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்கு மார்பராய்
       எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லே புகுந்துள்ளத்
       தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேற லார்பூவில்
       களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண் பிறையாரே. 1.73.6

793  மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல் செய்திங்கே
       பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப்
       போவார்போல மால்செய்துள்ளம் புக்க புரிநூலர்
       தேவார்சோலைக் கானூர்மேய தேவ தேவரே. 1.73.7

794  தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல
       முழவம்மொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார்
       குமிழின்மேனி தந்துகோல நீர்மை யதுகொண்டார்
       கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே. 1.73.8

795  அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
       சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியு மன்னினான்
       வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலை யாடுவான்
       கந்தமல்கு கானூர்மேய எந்தை பெம்மானே. 1.73.9

796  ஆமையரவோ டேனவெண்கொம் பக்கு மாலைபூண்
       டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந் நோய்செய்தார்
       ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
       சேமமாய செல்வர்கானூர் மேய சேடரே. 1.73.10

797  கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப்
       பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும் பாடியே
       தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்
       றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லல் அறுப்பாரே. 1.73.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - செம்மேனிநாயகர்
தேவி - சிவயோகநாயகியம்மை

1.74. திருப்புறவம்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

798  நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்து நயனத்தால்
       சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
       புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
       இறைவனறவன் இமையோரேத்த உமையோ டிருந்தானே. 1.74.1

799  உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல் படநாகம்
       விரவி விரிபூங் கச்சாவசைத்த விகிர்தன் னுகிர்தன்னால்
       பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம் பதியாக
       இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.2

800  பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்
       கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி
       அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
       எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.3

801  நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
       கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்
       புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
       எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.4

802  செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்
       தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
       பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
       எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.5

803  பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
       அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
       புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
       என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.6

804  உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
       விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
       பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
       எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.7

805  விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
       திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய
       புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
       எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.8

806  நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
       படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
       பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
       இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.9

807  ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
       கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்
       போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
       ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.10

808  பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக
       மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்
       தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
       பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே. 1.74.11

திருச்சிற்றம்பலம்

திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.75. திருவெங்குரு

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

809  காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
              கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
       ஓலம திடமுன் உயிரொடு மாள
              உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
       மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
              மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
       வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.1

810  பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
              பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
       பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
              பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
       மண்ணினை மூடி வான்முக டேறி
              மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
       விண்ணள வோங்கி வந்திழி கோயில்
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.2

811  ஓரியல் பில்லா உருவம தாகி
              ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
       காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்
              கறுத்தவற்* களித்துடன் காதல்செய் பெருமான்
       நேரிசை யாக அறுபத முரன்று
              நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
       வேரிக ளெங்கும் விம்மிய சோலை
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.3

* கறுத்ததற்

812  வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
              மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
       கொண்டணி சடையர் விடையினர் பூதங்
              கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்*
       பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்
              பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
       வெண்பிறை சூடி உமையவ ளோடும்
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.4

* கூடியமுழவம்

813  சடையினர் மேனி நீறது பூசித்
              தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
       கடைதொறும் வந்து பலியது கொண்டு
              கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
       படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி*
              உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
       விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.5

* பங்கயக்கண்ணி

814  கரைபொரு கடலில் திரையது மோதக்
              கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
       உரையுடை முத்தம் மணலிடை வைகி
              ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
       புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
              புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
       விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.6

815  வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
              மறுகிட வருமத களிற்றினை மயங்க
       ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
              கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
       நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
              நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
       வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.7

816  பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
              பலதலை முடியொடு தோளவை நெரிய
       ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
              ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
       கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
              கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
       வேங்கைபொன் மலரார்* விரைதரு கோயில்
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.8

* மலரா

817  ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
              அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
       சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
              செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
       நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
              கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
       வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.9

818  பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
              பயில்தரு மறவுரை விட்டழ காக
       ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
              எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
       காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
              கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
       வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.75.10

819  விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
              வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
       நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
              நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
       பண்ணியல் பாகப் பத்திமை யாலே
              பாடியு மாடியும் பயில வல்லார்கள்
       விண்ணவர் விமானங் கொடுவர வேறி
              வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. 1.75.11

திருச்சிற்றம்பலம்

திருவெங்குரு என்பது சீகாழிக்கொரு பெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.76. திரு இலம்பையங்கோட்டூர்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

820  மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு
              மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
       நிலையினான் எனதுரை தனதுரை யாக
              நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
       கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
              கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
       இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.1

821  திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
              தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
       நிருமல னெனதுரை தனதுரை யாக
              நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
       கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
              கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
       இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.2

822  பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
              பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
       காலனாம் எனதுரை தனதுரை யாகக்
              கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
       நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
              நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்*
       ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே. 1.76.3

* விண்டேங்கும், விண்டெங்கும்

823  உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
              ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
       விளம்புவா னெனதுரை தனதுரை யாக
              வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
       குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
              கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
       இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.4

824  தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
              தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
       வானுமா மெனதுரை தனதுரை யாக
              வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
       கானமான் வெருவுறக் கருவிர லூகங்
              கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
       ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.5

825  மனமுலாம்* அடியவர்க் கருள்புரி கின்ற
              வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
       தனமிலா னெனதுரை தனதுரை யாகத்
              தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
       புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
              பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
       இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.6

* மனமுலா

826  நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
              நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
       ஊருளான் எனதுரை தனதுரை யாக
              ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
       பாருளார் பாடலோ டாடல றாத
              பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
       ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.7

827  வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
              வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
       ஆருலா மெனதுரை தனதுரை யாக
              ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
       வாருலா நல்லன மாக்களுஞ் சார
              வாரண முழிதரும் மல்லலங் கானல்
       ஏருலாம் பொழிலணி* இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.8

* ஏருலாம் பைம்பொழில்

828  கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
              கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
       உளமழை யெனதுரை தனதுரை யாக
              வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
       வளமழை யெனக்கழை வளர்துளி சோர
              மாசுண முழிதரு மணியணி மாலை
       இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.9

829  உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
              உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
       பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்
              பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
       கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்
              களிமுக வண்டொடு தேனின முரலும்
       இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
              இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.10

830  கந்தனை மலிகனை கடலொலி யோதங்
              கானலங் கழிவளர் கழுமல மென்னும்
       நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
              நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
       எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
              இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
       வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
              வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே. 1.76.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - சந்திரசேகரர்
தேவி - கோடேந்துமுலையம்மை.

1.77. திருஅச்சிறுபாக்கம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

831  பொன்றிரண் டன்ன புரிசடை புரள
              பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
       குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
              குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
       மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
              மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
       அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.1

832  தேனினு மினியர் பாலன நீற்றர்
              தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
       ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
              உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
       வானக மிறந்து வையகம் வணங்க
              வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
       ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.2

833  காரிரு ளுருவ மால்வரை புரையக்
              களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
       நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
              நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
       பேரரு ளாளர் பிறவியில் சேரார்
              பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
       ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.3

834  மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்
              மலைமக ளவளொடு மருவின ரெனவும்
       செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்
              சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
       தம்மல ரடியொன் றடியவர் பரவத்
              தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
       அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.4

835  விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
              விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
       பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
              பலபுக ழல்லது பழியில ரெனவும்
       எண்ணலா காத இமையவர் நாளும்
              ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
       அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.5

836  நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
              நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
       தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
              சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
       காடரங் காகக் கங்குலும் பகலுங்
              கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
       ஆடர வாட ஆடுமெம் மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.6

837  ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
              இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
       கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
              குளிரிள மதியமுங் கூவிள மலரும்
       நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
              மகிழிள வன்னியும் இவைநலம் பகர
       ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.7

838  கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
              கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
       பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய
              பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
       பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்
              பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
       தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே. 1.77.8

839  நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
              நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
       கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
              எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
       தோற்றலார் மாலும் நான்முக முடைய
              தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
       ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.9

840  வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்
              நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
       ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
              உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
       வேதமும் வேத நெறிகளு மாகி
              விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
       ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்
              அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.10

841  மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
              மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
       பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
              பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
       கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
              கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
       டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
              அன்புடை யடியவர் அருவினை யிலரே. 1.77.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - பாக்கபுரேசுவரர்
தேவி - சுந்தரமாதம்மை

1.78. திரு இடைச்சுரம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

842  வரிவள ரவிரொளி யரவரை தாழ
              வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
       கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
              கனலெரி யாடுவர் காடரங் காக
       விரிவளர் தருபொழில் இனமயி லால
              வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
       எரிவள ரினமணி புனமணி சாரல்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.1

843  ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
              அழகினை யருளுவர் குழகல தறியார்
       கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
              நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
       சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
              செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
       ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.2

844  கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
              காதலர் தீதிலர் கனல்மழு* வாளர்
       வானமும் நிலமையும்# இருமையு மானார்
              வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
       நானமும் புகையொளி விரையொடு கமழ
              நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
       ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.3

* கனமழு
# நிலைமையும்

845  கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
              காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
       விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
              வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
       வடமுலை யயலன கருங்குருந் தேறி
              வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
       இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.4

844  கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
              கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
       நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
              நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
       சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
              செழும்புன லனையன செங்குலை வாழை
       ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.5

845  தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
              சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
       பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
              பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
       கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
              குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
       ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.6

846  கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
              கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
       அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
              ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
       பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
              மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
       எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.7

847  தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
              திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
       வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
              வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
       சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
              தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
       ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.8

850  பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
              பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
       தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
              தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
       மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
              மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
       இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.9

851  பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
              பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
       அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
              அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
       கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
              கயலினம் வயலிள வாளைகள் இரிய
       எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
              இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.10

852  மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
              மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
       சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
              சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
       புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
              புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
       இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
              இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே. 1.78.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி - இடைச்சுரநாதர்
தேவி - இமயமடக்கொடியம்மை.

1.79. திருக்கழுமலம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

853  அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
              அரவமும் மதியமும் விரவிய அழகர்
       மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
              மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
       பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
              பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
       கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.1

854  கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
              கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
       பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
              படர்சடை யடிகளார் பதியத னயலே
       வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
              மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
       கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.2

855  எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
              எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
       மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
              வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
       பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
              பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
       கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.3

856  எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
              ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
       திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
              தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
       வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
              மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
       கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.4

857  ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
              உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
       பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
              படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
       நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்
              நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
       காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.5

858  முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
              முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
       பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
              பேரரு ளாளனார் பேணிய கோயில்
       பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
              சாந்தமு மேந்திய கையின ராகிக்
       கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.6

859  கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
              குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
       நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
              நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
       மலைக்கணித் தாவர வன்றிரை முரல
              மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
       கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.7

860  புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
              பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோள்
       பயம்பல படவடர்த் தருளிய பெருமான்
              பரிவொடு மினிதுறை கோயில தாகும்
       வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
              வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
       கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.8

861  விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
              வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
       பலங்களால் நேடியும் அறிவரி தாய
              பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
       மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்
              மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
       கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.9

862  ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
              அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
       நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
              மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
       சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
              தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
       காம்பன தோளியொ டினிதுறை கோயில்
              கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.10

863  கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
              கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
       வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
              வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
       ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
              உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
       மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
              விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. 1.79.11

திருச்சிற்றம்பலம்

கழுமலம் என்பது சீகாழிக்கொரு பெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.80. கோயில்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

864  கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
       செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
       முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
       பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1.80.1

865  பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
       சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
       பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
       மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே. 1.80.2

866  மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
       கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
       பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
       செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. 1.80.3

867  நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
       பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
       சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
       இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே. 1.80.4

868  செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
       செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
       செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
       செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 1.80.5

869  வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
       திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
       கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
       பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. 1.80.6

870  அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
       மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
       சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
       தலையால் வணங்குவார் தலையா னார்களே. 1.80.7

871  கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
       சீரா லேமல்கு சிற்றம் பலமேய
       நீரார் சடையானை நித்த லேத்துவார்
       தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே. 1.80.8

872  கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
       காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
       சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
       மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. 1.80.9

873  பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
       முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
       சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
       நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. 1.80.10

874  ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
       சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
       சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
       கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே. 1.80.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - திருமூலத்தானநாயகர், சபாநாதர்
தேவி - சிவகாமியம்மைமுதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode - PDF
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode
     ஏலாதி (உரையுடன்) - Unicode
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode
     மூவருலா - Unicode
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)