இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Sindhu.P (13-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 291
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!


முதல் திருமுறை

திருஞானசம்பந்தர்

அருளிய

தேவாரம்

... தொடர்ச்சி - 9 ...

1.81. சீர்காழி

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

875  நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
       சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
       வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
       கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே. 1.81.1

876  துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
       தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
       ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
       களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே. 1.81.2

877  ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
       சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
       பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
       காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. 1.81.3

* இப்பதிகத்தில் 4,5,6,7-ம் செய்யுட்கள் மறைந்துபோயின.

878  இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
       நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
       பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
       கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே. 1.81.8

879  மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
       தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
       ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்
       காலம் பகராதார் காழிந் நகர்தானே. 1.81.9

880  தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
       பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
       மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
       கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே. 1.81.10

881  வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
       ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
       பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
       பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே. 1.81.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

1.82. திருவீழிமிழலை

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

882  இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
       திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
       தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
       விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே. 1.82.1

883  வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
       ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
       கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
       வேதத் தொலியோவா வீழி மிழலையே. 1.82.2

884  பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
       துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
       மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
       வெயிலும் பொலிமாதர்* வீழி மிழலையே. 1.82.3

* போன்மாதர்

885  இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
       நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
       குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
       விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. 1.82.4

886  கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
       பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்
       மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
       விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே. 1.82.5

887  மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
       ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
       சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
       மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. 1.82.6

888  மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
       கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
       நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
       விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே. 1.82.7

889  எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
       கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
       படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
       விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. 1.82.8

890  கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
       தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
       படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்
       விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே. 1.82.9

891  சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
       நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
       தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
       மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே. 1.82.10

892  மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
       ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி
       ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
       வாய்மைத் திவை*சொல்ல வல்லோர் நல்லோரே. 1.82.11

* வாய்மெய்த்திவை

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - வீழியழகர்
தேவி - சுந்தரகுசாம்பிகை

1.83. திரு அம்பர்மாகாளம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

893  அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
       மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
       விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்
       சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. 1.83.1

894  தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
       வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
       ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
       ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. 1.83.2

895  திரையார் புனலோடு செல்வ மதிசூடி
       விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
       நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
       உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே. 1.83.3

896  கொந்தண்* பொழிற்சோலைக் கோல வரிவண்டு
       மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
       கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
       எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே. 1.83.4

* கொந்தம்

897  அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
       மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
       துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
       பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. 1.83.5

898  பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
       வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
       விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
       கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. 1.83.6

899  மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
       வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
       கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
       தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. 1.83.7

900  கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
       மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
       இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
       நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 1.83.8

901  சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
       மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
       நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
       இறையான் கழலேத்த எய்தும் இன்பமே. 1.83.9

902  மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
       கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
       வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
       ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே. 1.83.10

903  வெருநீர்* கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
       திருமா மறைஞான சம்பந் தனசேணார்
       பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
       உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே. 1.83.11

* வெரிநீர்

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - காளகண்டேசுவரர்
தேவி - பட்சநாயகியம்மை

1.84. திரு நாகைக்காரோணம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

904  புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
       நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
       வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்*
       கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.1

* வழிபட

905  பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
       அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
       மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக்
       கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.2

906  பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
       ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
       தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த*
       காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.3

* செல்வத் திரைசூழ்ந்த

907  மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
       அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப்
       பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
       கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.4

908  ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
       சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
       பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
       காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.5

909  ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
       வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
       ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
       கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.6

910  அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
       விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
       வரையார் வனபோல வளரும்வங்கங்கள்
       கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.7

911  வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோள்
       இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
       பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
       கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.8

912  திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
       பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
       செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
       கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.9

913  நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
       அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்
       பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
       கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே. 1.84.10

914  கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
       நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
       உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்
       கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே. 1.84.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - காயாரோகணேசுவரர்
தேவி - நீலாயதாட்சியம்மை

1.85. திருநல்லம்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

915  கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
       றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
       வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
       நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.1

916  தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
       துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
       கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
       நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.2

917  அந்தி மதியோடும் அரவச் சடைதாழ
       முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
       சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
       நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.3

918  குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
       மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
       தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்
       நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே. 1.85.4

919  மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
       பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
       துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
       நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.5

920  வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
       பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
       ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
       நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.6

921  அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
       கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
       வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
       நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.7

922  பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
       கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
       எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி
       நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே. 1.85.8

923  நாகத் தணையானும் நளிர்மா மலரானும்
       போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்
       ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
       நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே. 1.85.9

924  குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
       அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
       பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
       நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே. 1.85.10

925  நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
       கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
       தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
       கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே. 1.85.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - உமாமகேசுவரர்
தேவி - மங்களநாயகியம்மை, அங்கோல்வளையம்மை

1.86. திருநல்லூர்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

926  கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
       நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
       முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
       பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. 1.86.1

927  ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
       வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன
       நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
       கூறு மடியார்கட் கடையா குற்றமே. 1.86.2

928  சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ
       ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
       நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
       பாடும் மடியார்கட் கடையா பாவமே. 1.86.3

929  நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
       நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
       காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு
       தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே. 1.86.4

930  ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ
       நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
       தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
       போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே. 1.86.5

931  கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
       நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
       செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
       சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே. 1.86.6

932  எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
       நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா
       தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்
       தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே. 1.86.7

933  காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்
       நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
       ஏம* மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்
       தீப மனத்தார்கள் அறியார் தீயவே. 1.86.8

* ஏக, ஏவ

934  வண்ண மலரானும் வையம் அளந்தானும்
       நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
       தண்ண* மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
       எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே. 1.86.9

* தண்ணன்

935  பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
       நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
       நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
       எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே. 1.86.10

936  தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
       நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
       வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்
       விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே. 1.86.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பெரியாண்டேசுவரர்
தேவி - திரிபுரசுந்தரியம்மை

1.87. திருவடுகூர்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

937  சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
       கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
       கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
       வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே. 1.87.1

938  பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
       ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
       கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
       ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.2

939  சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
       ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச
       ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
       பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.3

940  துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
       கவர வெரியோட்டிக்* கடிய மதிலெய்தார்
       கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
       பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.4

* வெரியூட்டி

941  துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
       தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்
       பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
       அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.5

942  தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
       கிளரும் அரவார்த்துக்* கிளரும் முடிமேலோர்
       வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
       ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.6

* அரவாட்டிக்

943  நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
       முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்*
       கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
       அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.7

* உள்ளார்

944  பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
       மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
       பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்
       கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.8

945  சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
       கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
       வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
       அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.9

946  திருமா லடிவீழத் திசைநான் முகனாய
       பெருமான் உணர்கில்லாப்* பெருமான் நெடுமுடிசேர்
       செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
       அருமா வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.10

* உணர்கில்லான்

947  படிநோன் பவையாவர் பழியில் புகழான
       கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்
       படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
       அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே. 1.87.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - வடுகூர்நாதர்
தேவி - வடுவகிர்க்கண்ணியம்மை

1.88. திரு ஆப்பனூர்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

948  முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
       ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
       செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
       பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.1

949  குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
       விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
       அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
       பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.2

950  முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
       பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
       அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
       பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.3

951  பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
       துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
       அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
       பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.4

952  தகர மணியருவித் தடமால்வரை சிலையா
       நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
       அகர முதலானை அணியாப்ப னூரானைப்
       பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.5

953  ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
       காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
       ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
       பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.6

954  இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
       கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
       இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
       பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.7

955  கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
       உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
       அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானைப்
       பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.8

956  கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
       அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
       எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
       பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 1.88.9

957  செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
       பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை
       ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
       பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே. 1.88.10

958  அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
       சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
       நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
       சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே. 1.88.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமி - ஆப்பனூர்காரணர்
தேவி - குரவங்கமழ்குழலம்மை

1.89. திரு எருக்கத்தம்புலியூர்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

959  படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
       உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
       சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
       விடையான் அடியேத்த மேவா வினைதானே. 1.89.1

960  இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
       நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
       சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற்
       கலையான் அடியேத்தக் கருதா வினைதானே. 1.89.2

961  விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
       பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
       எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
       அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே. 1.89.3

962  அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
       விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
       வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
       திரையார் சடையானைச் சேரத் திருவாமே. 1.89.4

963  வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
       சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
       ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
       வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 1.89.5

964  நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
       புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
       தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
       தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 1.89.6

* இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

965  ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
       தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
       கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
       தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே. 1.89.8

966  மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
       நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
       இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
       கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. 1.89.9

967  புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
       சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
       நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
       அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே. 1.89.10

968  ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
       சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
       ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
       பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே. 1.89.11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமி - நீலகண்டேசுரர்
தேவி - நீலமலர்க்கண்ணம்மை.

1.90. திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்

பண் - குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

969  அரனை உள்குவீர், பிரம னூருளெம்
       பரனை யேமனம், பரவி உய்ம்மினே. 1.90.1

970  காண உள்குவீர், வேணு நற்புரத்
       தாணுவின் கழல், பேணி உய்ம்மினே. 1.90.2

971  நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
       ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே. 1.90.3

972  அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
       வெங்கு ருமன்னும், எங்க ளீசனே. 1.90.4

973  வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
       தாணி நற்பொனைக், காணு மின்களே. 1.90.5

974  பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
       ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. 1.90.6

975  கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
       அரசை நாடொறும், பரவி உய்ம்மினே. 1.90.7

976  நறவ மார்பொழிற், புறவம் நற்பதி
       இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே. 1.90.8

977  தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
       அன்று நெரித்தவா, நின்று நினைமினே. 1.90.9

978  அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
       பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே. 1.90.10

979  தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
       நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே. 1.90.11

980  தொழும னத்தவர், கழும லத்துறை
       பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 1.90.12

திருச்சிற்றம்பலம்

திருப்பிரமபுரமென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி

                                                                                                                                                                                                        .

முதல் திருமுறை : திருஞானசம்பந்தர் தேவாரம் :1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


சாவித்ரி
இருப்பு உள்ளது
ரூ.145.00உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.160.00ஜூலியஸ் சீஸர்
இருப்பு உள்ளது
ரூ.200.00பெண்களுக்கான இயற்கை மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00மக்களைக் கையாளும் திறன்
இருப்பு உள்ளது
ரூ.85.00மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.195.00மாறுபட்டு சிந்தியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.115.00சித்தர்களின் காம சமுத்ரா
இருப்பு உள்ளது
ரூ.180.00எம்.ஜி.ஆர்
இருப்பு உள்ளது
ரூ.300.00எம்.ஆர். ராதா
இருப்பு உள்ளது
ரூ.150.00உணவு சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.240.00டேவிட்டும் கோலியாத்தும்
இருப்பு உள்ளது
ரூ.270.00ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!
இருப்பு உள்ளது
ரூ.90.00சுனிதா வில்லியம்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.90.00பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்
இருப்பு உள்ளது
ரூ.140.00சந்திரபாபு
இருப்பு உள்ளது
ரூ.160.00எலான் மஸ்க்
இருப்பு உள்ளது
ரூ.140.00ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.300.00நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.110.00