எட்டாம் திருமுறை

மாணிக்கவாசக சுவாமிகள்

அருளிய

திருவாசகம்

... தொடர்ச்சி - 6 ...

29. அருட்பத்து

(மகா மாயா சுத்தி)
திருப்பெருந்துறையில் அருளியது
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

சோதியே சுடரே சூழொளி விளக்கே
     சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
     பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
     நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என் றரு ளாயே. 458

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
     கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி
     உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 459

எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா
     ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே தக்கநற் காமன்
     தனதுடல் தழலெழ விழித்த
செங்கண் நாயகனே திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 460

கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
     கண்ணனும் நண்ணுதற்கு அரிய
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன
     வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 461

துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
     துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
     பொங்கொளி தங்குமார் பின்னே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 462

துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
     துதைந்தெழு துளங்கொளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
     உறுசுவை அளிக்கும் ஆரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 463

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
     மேவலர் புரங்கள் மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
     கருந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 464

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
     மொட்டறா மலர்பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
     பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 465

மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
     மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவம்
     கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
     அதெந்துவே என்றரு ளாயே. 466

திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்டு
     என்னுடை எம்பிரான் என்றென்று
அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
     அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
     போதராய் என்றரு ளாயே. 467

திருச்சிற்றம்பலம்


சே குவேரா: வேண்டும் விடுதலை!
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

வாழ்க்கை ஒரு பரிசு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

அள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

ஒரு நாள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ரகசியக் கடிதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

அலை ஓசை
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

மைக்கேல் டெல்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மோகத்திரை
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

உங்களால் முடியும்!
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மக்களைக் கையாளும் திறன்
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

நிமித்தம்
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
இருப்பு உள்ளது
ரூ.345.00
Buy

பைப்லைனில் பணம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

புலன் மயக்கம் - தொகுதி - 4
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

எளிய தமிழில் சித்தர் தத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
30. திருக்கழுக்குன்றப் பதிகம்

(சற்குரு தரிசனம்)
திருக்கழுக்குன்றத்தில் அருளியது
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
     மான் உன்நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கி லாததோர் இன்ப மேவரும்
     துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கிலாததோர் வித்து மேல்விளை
     யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே. 468

பிட்டு நேர்பட மண்சுமந்த
     பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத
     சழக்க னேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு
     நாயி னுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள் வான்வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே. 469

மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி
     மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி
     மேல் விளைவ தறிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவடிகள்
     இரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கினேன் கலங்காமலே வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே. 470

பூணொணாததொரன்பு பூண்டு
     பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொணாததொர் நாணம் எய்தி
     நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாத பெருந்துறைப் பெருந்
     தோணி பற்றி உகைத்தலுங்
காணொணாத் திருக்கோலம் நீவந்து
     காட்டி னாய் கழுக்குன்றிலே. 471

கோல மேனிவராக மேகுண
     மாம்பெருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்திலாத என்
     சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நான் உனை
     நச்சி நச்சிட வந்திடும்
காலமேஉனை ஓதநீ வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே. 472

பேதம் இல்லதொர் கற்பளித்த
     பெருந்துறைப் பெரு வெள்ளமே
ஏதமேபல பேச நீஎனை
     ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை அற்ற
     தனிச்சரண் சரணாம் எனக்
காதலால் உனை ஓதநீ வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே. 473

இயக்கி மார் அறு பத்து நால்வரை
     எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதோர் மும்மலப்பழ
     வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின்
     தூய்ம் மலர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே. 474

திருச்சிற்றம்பலம்

31. கண்டபத்து

(நிருத்த தரிசனம்)
தில்லையில் அருளியது
(கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 475

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகும் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 476

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 477

கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து வனப்பெய்தி இருக்கும் வண்ணம்
பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. 478

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. 479

பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென்று இவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. 480

பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன் இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. 481

அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே. 482

பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 483

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 484

திருச்சிற்றம்பலம்

32. பிரார்த்தனைப்பத்து

(சதா முத்தி)
திருப்பெருந்துறையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

கலந்து நின்னடி யாரோ டன்று
     வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
     புகுந்து நின்றது இடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே
     உலவா இன்பச் சுடர்காண்பான்
அலர்ந்து போனேன் அருள்செய்யாய்
     ஆர்வங் கூர அடியேற்கே. 485

அடியார் சிலர் உன் அருள்பெற்றார்
     ஆர்வங் கூர யான் அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி
     முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடுவினையைக்
     களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே
     ஓவா துருக அருளாயே. 486

அருளா ரமுதப் பெருங்கடல்வாய்
     அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
     எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
     வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
     உடையாய் பெறநான் வேண்டுமே. 487

வேண்டும் வேண்டும் மெய்யடியார்
     உள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த
     அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய்
     தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாது
     மிக்க அன்பே மேவுதலே. 488

மேவும் உன்றன் அடியாருள்
     விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணால்
     பங்கா உன்றன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ
     பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்து
ஆவி யாக்கை யானெனதென்
     றியாது மின்றி அறுதலே. 489

அறவே பெற்றார் நின்னன்பர்
     அந்த மின்றி அகநெகவும்
புறமே கிடந்து புலைநாயேன்
     புலம்பு கின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய்யன்பு
     பேரா ஒழியாய் பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
     மாளா இன்ப மாகடலே. 490

கடலே அனைய ஆனந்தம்
     கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
இடரே பெருக்கி ஏசற்றிங்
     கிருத்த லழகோ அடிநாயேன்
உடையாய் நீயே அருளுதியென்று
     உணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச்
     சோதீ இனித்தான் துணியாயே. 491

துணியா உருகா அருள்பெருகத்
     தோன்றும் தொண்ட ரிடைப்புகுந்து
திணியார் மூங்கில் சிந்தையேன்
     சிவனே நின்று தேய்கின்றேன்
அணியா ரடியார் உனக்குள்ள
     அன்பும் தாராய் அருளளியத்
தணியா தொல்லை வந்தருளித்
     தளிர்ப்பொற் பாதந் தாராயே. 492

தாரா அருளொன் றின்றியே
     தந்தாய் என்றுன் தமரெல்லாம்
ஆரா நின்றார் அடியேனும்
     அயலார் போல அயர்வேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத்
     திருத்தி ஆண்ட சிவலோகா
பேரா னந்தம் பேராமை
     வைக்க வேண்டும் பெருமானே. 493

மானோர் பங்கா வந்திப்பார்
     மதுரக் கனியே மனநெகா
நானோர் தோளாச் சுரையொத்தால்
     நம்பி இத்தால் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனையுணர்ந்தே
     உருகிப் பெருகும் உள்ளத்தைக்
கோனே அருளுங் காலந்தான்
     கொடியேற் கென்றோ கூடுவதே. 494

கூடிக்கூடி உன்னடியார்
     குளிப்பார் சிரிப்பர் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன்
     வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
     கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
ஆடிஆடி ஆனந்தம்
     அதுவே யாக அருள்கலந்தே. 495

திருச்சிற்றம்பலம்

33. குழைத்தபத்து

(ஆத்தும நிவேதனம்)
திருப்பெருந்துறையில் அருளியது
(அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
     காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி உண்டோ தான்
     உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
     பிறைசேர் சடையாய் முறையோஎன்று
அழைத்தால் அருளா தொழிவதே
     அம்மானே உன்னடி யேற்கே. 496

அடியேன் அல்லல் எல்லாம்முன்
     அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎம்
     கோவே ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாதது
     எத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா
     தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497

ஒன்றும் போதா நாயேனை
     உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
     ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
     குணமாம் என்றே நீகொண்டால்
என்றான் கெட்டது இரங்கிடாய்
     எண்தோள் முக்கண் எம்மானே. 498

மானேர் நோக்கி மணவாளா
     மன்னே நின்சீர் மறப்பித்திவ்
ஊனே புகஎன் தனைநூக்கி
     உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை
     அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும்நாள்
     என்றென் றுன்னைக் கூறுவதே. 499

கூறும் நாவே முதலாக்
     கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ
     தீமைநன்மை முழுதும்நீ
வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லை
     மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
     திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500

வேண்டத்தக்க தறிவோய்நீ
     வேண்டமுழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
     வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
     யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
     அதுவும் உன்றன் விருப்பன்றே. 501

அன்றே என்றன் ஆவியும்
     உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
     கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
     எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
     நானோ இதற்கு நாயகமே. 502

நாயிற் கடையாம் நாயேனை
     நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
     வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான்
     என்ன தோஇங் கதிகாரம்
காயத் திடுவாய் உன்னுடைய
     கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503

கண்ணார் நுதலோய் கழலிணைகள்
     கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான்
     அவைவே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
     வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
     அடிமை சால அழகுடைத்தே. 504

அழகே புரிந்திட் டடிநாயேன்
     அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
     காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
     புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே
     கோனே என்னைக் குழைத்தாயே. 505

திருச்சிற்றம்பலம்

34. உயிருண்ணிப்பத்து

(சிவானந்த மேலிடுதல்)
திருப்பெருந்துறையில் அருளியது
(கலிவிருத்தம்)

திருச்சிற்றம்பலம்

பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம்அ தாய் என்
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 506

நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்
தேனர்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானேர்களும் அறியாததேர் வளமீந்தனன் எனக்கே. 507

எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் எனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே. 508

வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என் தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 509

பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே. 510

கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே. 511

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே. 512

கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே. 513

எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே. 514

வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால் உனை நல்காய் என லாமே. 515

திருச்சிற்றம்பலம்

35. அச்சப்பத்து

(ஆனந்த முறுதல்)
தில்லையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
     பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
     கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
     உண்டென நினைந்தெம் பெம்மான்
கற்றிலா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 516

வெருவரேன் வேட்கை வந்தால்
     வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
     எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர்
     தேவர் எத் தேவரென்ன
அருவரா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன்
     வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
     அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
     இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 518

கிளியனார் கிளவி அஞ்சேன்
     அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
     வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
     தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 519

பிணியெலாம் வரினும் அஞ்சேன்
     பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன்
     தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்தும் காணாச்
     சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 520

வாளுலாம் எரியும் அஞ்சேன்
     வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
     சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
     தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 521

தகைவிலாப் பழியும் அஞ்சேன்
     சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
     பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை
     முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 522

தறிசெறி களிறும் அஞ்சேன்
     தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
     விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச்
     சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 523

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
     மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
     நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
     திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 524

கோணிலா வாளி அஞ்சேன்
     கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
     நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
     வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
     அம்மநாம் அஞ்சு மாறே. 525

திருச்சிற்றம்பலம்

36. திருப்பாண்டிப் பதிகம்

(சிவானந்த விளைவு)
திருப்பெருந்துறையில் அருளியது
(கட்டளைக் கலித்துறை)

திருச்சிற்றம்பலம்

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறியாது என்றன் உள்ளமதே. 526

சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. 527

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று பேணுமினே. 528

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு
இறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம் எக் காலத்துள்ளும்
அறிவுஒண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே. 529

காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530

ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத்
தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தாள்
பாண்டிய னார்அருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே. 531

மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. 532

அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்து இடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533

விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திக் கொளப் பட்ட பூங்கொடியார்
மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே. 534

கூற்றைவென் றாங்குஐவர் கோக்களையும் வென்றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால்
ஏற்றுவந் தாருயிர் உண்ட திறல் ஒற்றைச் சேவகனே
தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே. 535

திருச்சிற்றம்பலம்

37. பிடித்தபத்து

(முத்திக் கலப்புரைத்தல்)
திருத்தோணிபுரத்தில் அருளியது
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
     யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
     வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீருடைக் கழலே
     செல்வமே சிவபெரு மானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 536

விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
     வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய்
     முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
     கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 537

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
     அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
     புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
     செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 538

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
     பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
     போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
     செல்வமே சிவபெருமானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 539

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
     உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
     விழுமியது அளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
     செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 540

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு
     அளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
     பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
     செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 541

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
     பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
     பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
     செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 542

அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
     ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
     செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
     பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 543

பால்நினைத் தூட்டும் தாயினும் சாலப்
     பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
     உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
     செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 544

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
     பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
     ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்
     தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே. 545

திருச்சிற்றம்பலம்

38. திருவேசறவு

(சுட்டறிவு ஒழித்தல்)
திருப்பெருந்துறையில் அருளியது
(கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547

ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆவாவென்று
ஓதமலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548

பச்சைத்தாள் அரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்
துற்றிருமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்
பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேலென்று ஆண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551

என்பாலைப் பிறப்பறுத்து இங்கு இமையவர்க்கும் அறியவொண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது
என்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552

மூத்தானே மூவாத முதலனே முடிவில்லா
ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவுஆமாறு
அருளெனக்கிங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554

நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555

திருச்சிற்றம்பலம்
39. திருப்புலம்பல்

(சிவானந்த முதிர்வு)
திருவாரூரில் அருளியது
(கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. 556

சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. 557

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 558

திருச்சிற்றம்பலம்

40. குலாப் பத்து

(அனுபவம் இடையீடு படாமை)
தில்லையில் அருளியது
(கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 559

துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 560

என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 561

குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிரியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 562

பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 563

கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே
நம்பும்மென் சிந்தை நணுகுஎம்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 564

மதிக்குந் திறலுடைய வல்அரக்கன் தோள்நெரிய
மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்கு
அதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565

இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567

கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 568

திருச்சிற்றம்பலம்

41. அற்புதப்பத்து

(அனுபவ மாற்றாமை)
திருப்பெருந்துறையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும்
     ஆழியுள் அகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான்
     தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன்
     பொன்னடி யிணைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர்
     அற்புதம் விளம்பேனே. 569

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர்
     இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந்
     தலைதடு மாறாகிப்
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து
     பொற்கழ லிணைகாட்டி
வேந்த னாய்வெளியே என்முன் நின்றதோர்
     அற்புதம் விளம்பேனே. 570

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
     நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
     கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய
     அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய
     அற்புதம் அறியேனே. 571

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
     பொய்களே புகன்றுபோய்க்
கருங் குழலினார் கண்களால் ஏறுண்டு
     கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத்
     திருவொடும் அகலாதே
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய
     அற்புதம் அறியேனே. 572

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்
     மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
     குலாவியே திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட
     மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர்
     அற்புதம் அறியேனே. 573

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
     மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான்
     பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல்
     கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய
     அற்புதம் அறியேனே. 574

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
     இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான்
     தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
     மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய
     அற்புதம் அறியேனே. 575

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின
     இருவினை அறுத்தென்னை
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன்
     உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத்து உயர்ந்ததன்
     பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்துஅடி யார் அடிக் கூட்டிய
     அற்புதம் அறியேனே. 576

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்
     புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்
     கிணங்கியே திரிவேனை
இச்ச கத்துஅரி அயனுமெட் டாததன்
     விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
     அற்புதம் அறியேனே. 577

செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது
     செறிகுழலார் செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும்
     உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன்
     இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய
     அற்புதம் அறியேனே. 578

திருச்சிற்றம்பலம்

42. சென்னிப்பத்து

(சிவ விளைவு)
திருப்பெருந்துறையில் அருளியது
(ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

தேவ தேவன்மெய்ச் சேவகன்
     தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணா
     முத லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி
     அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னிச் சுடருமே. 579

அட்டமூர்த்தி அழகன்இன்னமு
     தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன்
     தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
     பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம்
     சென்னி மன்னி மலருமே. 580

நங்கை மீரெனை நோக்குமின் நங்கள்
     நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை
     மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம்
     உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னிப் பொலியுமே. 581

பத்தர் சூழப் பராபரன்
     பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
     தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந்து இல்புகுந்தெமை
     ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னி மலருமே. 582

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
     மதித்திடா வகை நல்கியான்
வேய தோளுமை பங்கன் எங்கள்
     திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறஊறநீ
     கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னித் திகழுமே. 583

சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு
     தீவினை கெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே
     பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும்
     அப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னி மலருமே. 584

பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன்
     பேரருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்கள்
     அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட
     பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம்
     சென்னி மன்னித் திகழுமே. 585

புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையில்
     பொய் தனையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான்
     என்னு டையப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் தூய்மலர்க்
     கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னி மலருமே. 586

வம்ப னாய்த்திரி வேனைவாவென்று
     வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்துஅப்
     புறத்தனாய் நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க்கருளி மெய்யடி
     யார்கட் கின்பந் தழைந்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னித் திகழுமே. 587

முத்த னைமுதற் சோதியைமுக்கண்
     அப்பனை முதல் வித்தனைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு
     நாமம்பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள்
     பாசந்தீரப் பணியினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம்
     சென்னி மன்னித் திகழுமே. 588

திருச்சிற்றம்பலம்

43. திருவார்த்தை

(அறிவித்து அன்புறுதல்)
திருப்பெருந்துறையில் அருளியது
(ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

மாதிவர் பாகன் மறைபயின்ற
     வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணையடியார்
     குலாவுநீதி குண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
     புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த
     அருளறி வார் எம்பிரானாவாரே. 589

மாலயன் வானவர் கோனும்வந்து
     வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து
     நன்னெறி காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடம் நீடு
     குலாவு மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணைஅளிக்குந்
     திறமறி வார்எம் பிரானாவாரே. 590

அணிமுடி ஆதி அமரர்கோமான்
     ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப்
     பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெடநல்கும் பெருந்துறையெம்
     பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும்
     வகையறிவார் எம்பிரானா வாரே. 591

வேடுரு வாகி மகேந்திரத்து
     மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
     சித்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
     ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட
     இயல்பறி வார்எம் பிரானா வாரே. 592

வந்திமை யோர்கள் வணங்கியேத்த
     மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டுஅற நல்கும்எங்கள்
     பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன்று
     ஓங்கு மதிலிலங்கை அதினில்
பந்தணை மெல்விர லாட்கருளும்
     பரிசளி வார்எம் பிரானாவாரே. 593

வேவத் திரிபுரம் செற்ற வில்லி
     வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே
     எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
     எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
     கிடப்பறி வார்எம் பிரானாவாரே. 594

நாதம் உடையதோர் நற்கமலப்
     போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்திலர் தூவியேத்த
     ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
     புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்து அருள் செய்பெருமை
     அறியவல் லார்எம் பிரானாவாரே. 595

பூவலர் கொன்றைய மாலைமார்பன்
     போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
     வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
     இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
     உருவறி வார்எம் பிரானாவாரே. 596

தூவெள்ளை நீறணி எம்பெருமான்
     சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன்
     தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணை காட்டித்
     தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும்
     கிடப்பறி வார்எம் பிரானா வாரே. 597

அங்கணன் எங்கள் அமரர் பெம்மான்
     அடியார்க் கமுதன் அவனி வந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர
     இகபரம் ஆயதோர் இன்பம் எய்தச்
சங்கம் கவரந்துவண் சாத்தினோடுஞ்
     சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த
     வகையறி வார்எம் பிரானா வாரே. 598

திருச்சிற்றம்பலம்

44. எண்ணப்பதிகம்

(ஒழியா இன்பத்து உவகை)
தில்லையில் அருளியது
(ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

பாருரு வாய பிறப்பற வேண்டும்
     பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
     செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் ஆர முதேஉன்
     அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி
     என்னையும் உய்யக்கொண் டருளே. 599

உரியேன் அல்லேன் உனக் கடிமை
     உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று
     அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
     என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
     பொய்யோ எங்கள் பெருமானே. 600

என்பே உருகநின் அருள்அளித்துன்
     இணைமலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட
     முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
     உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
     நாதா நின்னருள் நாணாமே. 601

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
     உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
     பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
     முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
     இனிப்பிரிந் தாற்றேனே. 602

காணும தொழிந்தேன் நின்திருப் பாதம்
     கண்டு கண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன்
     பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
     தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங்
     காணவும் நாணுவனே. 603

பாற்றிரு நீற்றெம் பரமனைப்
     பரங்கரு ணையோடு எதிர்த்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ்
     சோதியை நீதி யிலேன்
போற்றியென் அமுதே என நினைந் தேத்திப்
     புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை
     ஆவஎன் றருளாயே. 604திருவாசகம் : 1 2 3 4 5 6 7சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     தலைமுறை இடைவெளி - Unicode
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode
     புயல் - Unicode
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
     விசிறி வாழை - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
     சர்மாவின் உயில் - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode - PDF
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
     ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode - PDF
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode - PDF
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode - PDF
     மூவருலா - Unicode - PDF
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
இரட்டை மணிமாலை நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)