எட்டாம் திருமுறை

மாணிக்கவாசக சுவாமிகள்

அருளிய

திருவாசகம்

... தொடர்ச்சி - 7 ...

45. யாத்திரைப்பத்து

(அனுபவ ஆதீதம் உரைத்தல்)
தில்லையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னனெம்
     புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
     உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டு அன் பாய்
     ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோங் காலம் வந்ததுகாண்
     பொய்விட் டுடையான் கழல்புகவே. 605

புகவே வேண்டா புலன்களில்நீர்
     புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
     வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
     நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத்
     தளரா திருப்பர் தாந்தாமே. 606

தாமே தமக்குச் சுற்றமும்
     தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
     என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
     அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கப்
     புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607

அடியார் ஆனீர் எல்லீரும்
     அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
     கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச்
     சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேளிப் புயங்கன்தன்
     பூவார் கழற்கே புகவிடுமே. 608

விடுமின் வெகுளி வேட்கைநோய்
     மிகவேர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு
     உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
     அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம்
     புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
     புயங்கன் தானே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும்
     இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
     சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று
     நெஞ்சம் உருகி நிற்போமே. 610

நிற்பார் நிற்கநில் லாவுலகில்
     நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
     புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாம் தாழாதே
     நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற்
     பெறுதற் கரியன் பெருமானே. 611

பெருமான் பேரானந்ததுப்
     பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றிப் பின்னைநீர்
     அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவம்
     திறந்தபோதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
     திருத்தாள் சென்று சேர்வோமே. 612

சேரக் கருகிச் சிந்தனையைத்
     திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
     பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
     ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
     பொய்யிற் கிடந்து புரளாதே. 613

புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
     இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார்
     மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்மின்
     சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருள் ஆர் பெறுவார் அகலிடத்தே
     அந்தோ அந்தோ அந்தோவே. 614

திருச்சிற்றம்பலம்


மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

விலங்குப் பண்ணை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

தேசத் தந்தைகள்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

இந்திய வானம்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

எம்.எல்.
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

Great Failures Of The Extremely Successful
Stock Available
ரூ.270.00
Buy

இதிகாசம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஓடும் நதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

பாபுஜியின் மரணம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

நேர் நேர் தேமா
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

பண்டிகை கால சமையல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

கொலையுதிர் காலம்
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

நந்தகுமார் தற்கொலை?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

தாவூத் இப்ராகிம்
இருப்பு உள்ளது
ரூ.390.00
Buy

சபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

கல்பனா சாவ்லா
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy
46. திருப்படை எழுச்சி

(பிரபஞ்சப் போர்)
தில்லையில் அருளியது
(கலிவிருத்தம்)

திருச்சிற்றம்பலம்

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615

தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616

திருச்சிற்றம்பலம்

47. திருவெண்பா

(அணைந்தேர் தன்மை)
திருப்பெருந்துறையில் அருளியது
(நேரிசை வெண்பா)

திருச்சிற்றம்பலம்

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன்-செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 617

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்-தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து. 618

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையினர் உயிர்ப்பறியேன்-வையத்து
இருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 619

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரம் தீர்க்கும் மருந்து. 620

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலும்மால் கொள்ளும்-இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது
இருந்துறையும் என்நெஞ்சத் தின்று. 621

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை-அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை-யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 624

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான்-மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும். 625

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்து
இருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம்-தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. 627

திருச்சிற்றம்பலம்

48. பண்டாய நான்மறை

(அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்)
திருப்பெருந்துறையில் அருளியது
(நேரிசை வெண்பா)

திருச்சிற்றம்பலம்

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லைக் கடையேனைத்-தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 628

உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த-வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவும் கெடும்பிறவிக் காடு. 629

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை-வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 630

வாழ்ந்தர்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ்-சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 632

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக்-காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 633

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை-பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 634

திருச்சிற்றம்பலம்

49. திருப்படை ஆட்சி

(சீவோபாதி ஒழிதல்)
தில்லையில் அருளியது
(பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. 635

ஒன்றினொடு ஒன்றுமோ ரைந்தினொடு ஐந்தும் உயிர்ப்பறு மாகாதே
உன்னடியார் அடியார் அடியோம் என உய்ந்தன வாகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
காரணமாகும் அனாதி குணங்கள் கருத்துறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமுமெ லாம்அடி யாருட னேசெல நண்ணுது மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 637

என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே. 638

மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே. 639

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யார்அடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம் உடனே உய்யவந்து தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே. 641

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதிவிடாத குணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப்பெறிலே. 642

திருச்சிற்றம்பலம்

50. ஆனந்தமாலை

(சிவானுபவ விருப்பம்)
தில்லையில் அருளியது
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

மின்னே ரனைய பூங்கழல்கள்
     அடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு
     போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னே ரனைய மனக்கடையாய்க்
     கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனிஉன்னைக்
     கூடும் வண்ணம் இயம்பாயே. 643

என்னால் அறியாப் பதம்தந்தாய்
     யான் அது அறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை
     உடையாய் அடிமைக்கு ஆரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
     பழைய அடிய ரொடுங்கூடாது
என்நா யகமே பிற்பட்டிங்கு
     இருந்தேன் நோய்க்கு விருந்தாயே. 644

சீல மின்றி நோன்பின்றிச்
     செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
     சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
     வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
     கொடியேன் என்றோ கூடுவதே. 645

கெடுவென் கெடுமா கெடுகின்றேன்
     கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான்
     பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே
     காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
     நன்றோ எங்கள் நாயகமே. 646

தாயாய் முலையைத் தருவானே
     தாரா தொழிந்தால் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
     நம்பி இனித்தான் நல்குதியே
தாயே என்றுன் தாளடைந்தேன்
     தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
     ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 647

கோவே அருள வேண்டாவோ
     கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னா விடில் என்னை
     அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ
     தக்க வாறன்று என்னாரோ
தேவே தில்லை நடமாடீ
     திகைத்தேன் இனித்தான் தேற்றாயே. 648

நரியைக் குதிரைப் பரியாக்கி
     ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
     பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவினாசி
     அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
     செய்வ தொன்றும் அறியேனே. 649

திருச்சிற்றம்பலம்

51. அச்சோப்பதிகம்

(அனுபவ வழி அறியாமை)
தில்லையில் அருளியது
(கலி விருத்தம்)

திருச்சிற்றம்பலம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 652

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட்டு என்னையுந்தன்
கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 653

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 654

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 655

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 656

சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 657

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658

திருச்சிற்றம்பலம்

திருவாசகம் முற்றிற்று

பிறசேர்க்கை

(இம்மூன்று பாடல்களும் சில ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகின்றன)

செத்திடமும் பிறந்திடமும் இனிச்சாவா திருந்திடமும்
அத்தனையும் அறியாதார் அறியும்அறிவு எவ்அறிவோ
ஒத்தநிலம் ஒத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
அத்தன் எனக்கு அருளியவா(று) ஆர்பெறுவார் அச்சோவே.

படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திரிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
அடிகள் எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

பாதியெனு மிரவுறங்கிப் பகலெமக்கே யிரைதேடி
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனைச்
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

திருச்சிற்றம்பலம்

திருவாசகச் சிறப்புப் பாடல்கள்

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகம் என்னும் தேன்.

திருவா சகமென்னும் தேன்பருகித் தேசமெல்லாம்
கருவே ரறுத்தருளிக் கருங்கடலை வேர்துளைத்திட்டு
உருவா சகமென்னும் உண்மையுணர்ந் துத்தமனார்
திருவா சகமென்னும் தேனினருட் காரணமே.

கற்பாந்தம் காலங் கடவாக் கடல்கடக்கத்
தெப்பமாய் வந்தெனக்குச் சேர்ந்ததே - அப்பன்
உருவா சகங்கொண் டுரைத்த தமிழ்மாலைத்
திருவா சகமென்னும் தேன்.

கண்மதகு மென்புளகக் காடும் படைத்தோனும்
வண்மையருள் மாணிக்க வாசகனு - முண்மையினிற்
றானந்த மாவானுந் தன்னொழிவு காணானு
மானந்த வாதவூரன்.

போதலர்ந்து தேன்சொரியும் பொன்னம் பலத்திலுறை
வாதவூ ரெங்கோமான் வாசகத்தை - ஓதிப்
பிறவிப் பிணிநீக்கிப் பேரின்ப வெள்ளச்
செறிவுக்குள் செல்வர் சிறந்து.

வேதாந்தத்தின் பொருள்விளக்காய் மெய்யாகமத்தின் மதமாயா
நாதாந்தத்தின் சுடருருவாய் ஞானநேயத்தின் விளக்காய்ப்
போதாந்தத்தின் பொருளாகிப் புகழுந் திருவாச கப்பொருளை
மீதாந்தத்தி லுணர்ந்தவரே விட்டார் பாசங் கிட்டாரே.

திருவாசகப் பெருமை

(வெண்பா)

வள்ளுவர் நூல் அன்பர் திரு வாசகம் தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை - ஒள்ளியசீர்
தொண்டர் புராணம் தொகைசித்தி ஓராறும்
தண்டமிழின் மேலாம் தரம்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

(வேறு)

மாசறுமணிபோல் பன்னாள் வாசகமாலை சாத்திப்
பூசனை செய்துபன்னாள் புண்ணியமன்று ளாடும்
ஈசனதடிக்கீ ழெய்தி ஈறிலா அறிவானந்தத்
தேசொடு கலந்து நின்றார் சிவனருள் விளக்க வந்தார்.

திருவாசகச் சிறப்பு

(பழம்பாடல்)

பெருகும் வையை தனை அழைப் பிக்குமே
     பிரம்படிக்குப் பிரான்மேனி கன்றுமே
நரியெ லாம்பரி யாக நடத்துமே
     நாடிமூகை தனைப்பேசு விக்குமே
பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே
     பரமனே டெழுதக் கோவைபாடுமே
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே
     வாத வூரர் வழங்கிய பாடலே.

மாணிக்கவாசகர் வழிபாடு

(திருவிளையாடற்புராணம்)

எழுதரு மறைகள் தேறா
     இறைவனை எல்லில் கங்குல்
பொழுதறு காலத்து என்றும்
     பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமேல் ஏறத்
     துளும்புகண் ணீருள் மூழ்கி
அழுதடி அடைந்த அன்பன்
     அடியவர்க்கு அடிமை செய்வாம்.

(செவ்வந்திப் புராணம்)

தேனூறும் வாசகங்கள் அறுநூறும் திருக்கோவை
நானூறும் அமுதூற மொழிந்தருளும் நாயகனை
வானூறும் கங்கைநிகர் மாணிக்கவாசகனார்
யான் ஊறு படாதவனாக இருபோதும் இறைஞ்சுவனே.

திருச்சிற்றம்பலம்

திருவாசக உண்மை

சிவபுராணம்
தேசுறுமா ணிக்கமெனச் சிறந்ததிரு வாசகத்திற்
பேசுதிருச் சிவபுரா ணத்தவற் பெருமைசொலில்
ஈசர்தமக் கியல்பான திருநாம முதலெவையு
மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட்குறிப்பாம். 1

கீர்த்தித்திருவகவல் - திருவண்டப்பகுதி
புகழ்பெருகுஞ் செய்கையெல்லாம் புகலகவ லொன்றாகும்
திகழ்திருவண் டப்பகுதித் திருவகவல் செப்பியது
தகுசிருட்டி திதியொடுக்கஞ் சாற்றுதிரோ தம்பொதுவாய்
அகலமுறத் தேர்ந்திடவே அருளியநற் பொருளாகும். 2

போற்றித் திருஅகவல் - திருச்சதகம் - நீத்தல் விண்ணப்பம்
முத்திபெறு நெறியறியு மொழி போற்றித் திருவகவல்
சத்திய ஞானந்தருகே சிகர்மோகஞ் சதகமதா
மித்தையுல கினையகற்றி விடாமலெனை யாண்டருளென்
றத்தரறித் திடநீத்தல் விண்ணப்பம் அறைந்ததுவாம். 3

திருவெம்பாவை - திருவம்மானை
மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள்
செலமுழுக வருகவெனச் செப்பல்திரு வெம்பாவை
நலமுறுமந் தணர்வடிவாய் நாரணன்காண் பரியபத
நிலமதில்வந் தாள் கருணை நினைந்தாடல் அம்மானை. 4

திருப்பொற்சுண்ணம் - திருக்கோத்தும்பி
சத்திகளால் தனுகரண புவனபோ கம்கடமை
அத்தனுக்குச் சுண்ணமவை யாமிடிக்கக் கூவுதலே
ஒத்ததிருச் சுண்ணமுயர் போதமொரு வண்டாகச்
சித்தவிகா ரத்தூது செப்பிவிடல் கோத்தும்பி. 5

திருத்தெள்ளேணம் - திருச்சாழல்
பொன்னார்மெய் அண்ணலரும் போதவின்ப மேமிகுந்து
தென்னாதென் னாவெனவே தெள்ளேணங் கொட்டியதா
முன்னார் கலையுமுண ராமூகை யாமேடி
தன்னாற் பதிமுதன்மை சாற்றியதாம் திருச்சாழல். 6

திருப்பூவல்லி - திருவுந்தியார்
தேவரறி யாதசிவன் தேடியே யாண்டநலம்
ஆவலோடுஞ் சொல்லி யடியாரோ டுங்கூடிப்
பூவியந்து கொய்தல் திருப்பூவல்லி யாமரன்சீர்
பாவமுறு தீமையறப் பாடல் திருவுந்தியதே. 7

திருத்தோணோக்கம் - திருப்பொன்னூசல்
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே புண்ணியமாய்
அத்தன் செயுங்கருணைக் காராமை யுண்மிகுந்து
பொத்திய கைகொட்டிப் புகழ்தல் தோணோக்கமருட்
சத்தியிருந் தாடத்தா லாட்டிடுதல் பொன்னூசல். 8

திருவன்னைப்பத்து - குயிற்பத்து
நேயம்மி குந்த நிலைகுலையக் கூடுதலை
ஆயவருள் தாய்க்கங் கறைதலன்னைப் பத்தாகுந்
தூயவருட் குயிலேநற் சோதியெனைக் கூடுதற்குன்
வாயினால் கூவெனமுன் வாழ்த்தல்குயிற் பத்தாமே. 9

திருத்தசாங்கம் - திருப்பள்ளியெழுச்சி
பேர்நாடூ ராறுமலை பெயரூர்தி படைமுரசு
தார்கொடியெ லாமரற்குச் சாற்றல்தசாங் கமதாம்
ஏர்மரு திருப்பள்ளி யெழுச்சிபணி விடைகேட்டு
ஆர்வமுடனாண்டவரற் கன்புசெயு மியல்பே. 10

கோயில் மூத்த திருப்பதிகம் - கோயில் திருப்பதிகம்
செத்திலாப்பத்து - அடைக்கலப்பத்து
கோயின் மூத்த திருப்பதிகஞ் சிதம்பரத்தி லருளடையும்
குறிப்பதாகும் ஏயுங்கோயிற் றிருப்பதிகம் பெருந்துறைத்
தேசிகர் மோகமியம்பலாகு, மாய பசுபோ தம்முற்றுங்
கெடவேண்டலேசெத்தி லாப்பத் தாகும், ஓதுவல்வா
தனைகள் வந்தணுகாமல் அடைக்கலப்பத் துரைத்ததாமே. 11

ஆசைப்பத்து - அதிசயப்பத்து
கருவியுறும் ஊனுடற்கண் வாராமல்
திருவருளிற் கலப்ப தற்கே
அரனடியைப் புகழ்ந்துபெரு கார்வமொடு
பாடுதலே யாசைப் பத்தாம்
வெருவிமலத் தினைச்சீலத் தொன்றாகும்
அடியார்குழாத்துடனே கூட்டும்
பரமரருட் பெருமைமிகு தியைப்புகழ்ந்து
பாடல் அதிசயப் பத்தாமே. 12

புணர்ச்சிப்பத்து - வாழாப்பத்து
ஆண்டகுரு வைப்பிரியா தணைந்துபணி
புரிந்துமிகு மன்போ டின்பம்
பூண்டுகிடக் கப்பெறுவ தென்றுகொலோ
எனும்விருப்பம் புணர்ச்சிப் பத்தாம்
நீண்டவுல கத்தினிற்பற்று ஒன்றிலேன்
இவ்வுடற்க ணின்று வாழேன்
மாண்டகுநின் பதநிழல்கீழ் வருக அருள்
புரியெனுஞ்சொல் வாழாப் பத்தே. 13

அருட்பத்து - திருக்கழுக்குன்றப் பதிகம்
சோதியருட் சுடர்விளக்கே துயர்ப்பிறவிக்
கடல்விடுத் துன் தாள் சேர்தற்கு
ஆதரித்திங் குனையழைத்தால் அதெந்துவெனக்
கேளெனுஞ்சொல் அருட்பத் தாகும்
நீதிமறை பரவுதிருப் பெருந்துறையிற்
குருவடி வாய்நிகழ்ந்த கோலம்
காதலொடுங் காட்டினையே எனுங்களிப்புப்
பகர்தல் திருக்கழுக் குன்றாமே. 14

கண்டபத்து - பிரார்த்தனைப்பத்து
இந்திரிய வயமயங்கா தேயெடுத்துத்
தானாக்கும் எழிலானந்தம்
கந்தமலி தில்லையினுள் கண்டேனென்று
உவந்துரைத்தல் கண்ட பத்தாம்
அந்தமிலா ஆனந்தத் தகலாமல்
எனையழுத்தி ஆள்வாயென்று
சிந்தைகலந் துரைத்ததுவே பிரார்த்தனைப்பத்
தாய்ப்புகலுஞ் செய்கை யாமே. 15

குழைத்தபத்து - உயிருண்ணிப்பத்து
இழைத்தேனில் வாக்கைபொறுத் தினிக்கணமும்
பொறுக்கலேன் ஏழை யேனைக்
குழைப்பதேன் பிழைபொறுத்தாள் என இரங்கிக்
கூறுதலே குழைத்த பத்தாம்
தழைத்துவளர் பேரின்பம் தானாகி
உயிர்தோன்றாத் தன்மை ஆய்த்துன்
பொழிந்துநிறை வைப்பெறுதல் உயிருண்ணிப்
பத்தாவிங் குரைத்த தாமே. 16

அச்சப்பத்து - திருப்பாண்டிப் பதிகம்
தரையில்வல் வினைமுழுதும் வரினும் அஞ்சேன்
சிவசமயத் தவஞ்சா ராதார்
அருகில்வரக் காண்கின்மனம் அஞ்சுமென
இகழ்ந்துரைத்தல் அச்சப் பத்தாம்
புரவியின்மேற் பாண்டியன்முன் வரும்பதத்தை
யாம்பெறுமற் புதம்போல் யாரும்
விரவுமின்கள் என்றடியார்க் குறுதிசொலல்
திருப்பாண்டி விருத்த மாமே. 17

பிடித்தபத்து - திருவேசறவு
மிக்கபிறவித் துயரெ லாமொழிந்து
விபுத்துவமிங் களித்த லாலே
சிக்கறச் சிக்கெனப் பிடித்தேன் நின்னையென்று
துணிவு செப்பல் பிடித்த பத்தாம்
தக்கபரியாய் நரியை ஆக்குதல்போல்
எனைப்பெரிதாய்த் தாக்கித் தாட்கீழ்
அக்கணம்வைத் தனையே என்றிரங்கல்திரு
வேசறவென் றியம்ப லாமே. 18

திருப்புலம்பல் - குலாப்பத்து
கரைந்துருகும் பேரன்புன் கழலிணைக்கே
கற்றாவின் மனம்போ லென்றுந்
திருந்தும் வகை எனக்கருள்க வெனக்கேட்ட
திருப்புலம்ப லாகும் உள்ளம்
விரும்புசிவானந்தவெள்ளம் விழைந்துதில்லை
நாயகனை மிகக்கொண் டாடி
நிரம்புமனக் களிமிகுந்த இறுமாப்பே
குலாப்பத்தாய் நிகழ்த்த லாமே. 19

அற்புதப்பத்து - சென்னிப்பத்து
மாயவுருக் கொண்டுளத்தை மயக்குமின்னார்
கண்வலையுள் மயங்கு வேற்கிங்கு
ஆயுமறி வளித்தாளல் அதிசயமென்று
உரைத்தலற்பு தப்பத் தாகும்
தூயவருட் குருபதத்தைச் சூட்டுதற்குப்
பெற்றவுயர் சுகத்தை நோக்கிச்
சேயமலர்ப் பதத்தருமை யடியரொடும்
வியந்துரைத்தல் சென்னிப் பத்தே. 20

திருவார்த்தை - எண்ணப்பதிகம்
அறம்பெருகும் பெருந்துறையில் தமையாண்ட
செயல்முதலா வான்சீ ராட்டின்
திறமறிவா ரெம்பிரானாவரென
உரைத்தல்திரு வார்த்தை யாகும்
நிறம்வளரு மலர்ப்பொழில்சூழ்ந் தோங்குதிருத்
தில்லைமன்றுள் நிலமன் நாமத்
திறம்பெருகு மின்பமரு ளென்றலெண்ணப்
பத்தெனவுந் திகழ்த லாமே. 21

யாத்திரைப்பத்து - திருப்படை யெழுச்சி
பொல்லாத பவத்தைவிட்டுச் சிவன்கழற்கீழ்ப்
புகுங்காலம் புணர்த்தது எற்கிங்கு
எல்லாரும் வாருமெனக் கருணையினால்
அழைத்திடல் யாத் திரைப்பத் தாகும்
அல்லாத துர்க்குணமா யப்படைகள்
விளையாம லருள்வா ளேந்து
நல்லோர்க ளியாருமெம்மோ டெய்துமெனப்
படையெழுச்சி நவிற லாகும். 22

திருவெண்பா - பண்டாய நான்மறை
தொந்தமா மலமொறுத்துச் சுகம்பெருக்கிப்
பெருந்துறைவாழ் சோதி யென்றன்
சிந்தனையே ஊராகக் கொண்டிருந்தார்
என்றுரைத்த திருவெண் பாவாம்
எந்தைதிருப் பெருந்துறையை யேத்துநம
ரேவாழ்வுற் றிடர்சேர் பாச
பந்துமறுத் திடுவரெனப் பண்டாய
நான்மறையும் பகர்ந்த தாமே. 23

திருப்படையாட்சி-ஆனந்தமாலை-அச்சோப்பதிகம்
வாகுதிருப் பெருந்துறையா ரெழுந்தருளப்
பெறிலெல்லா வளங்கள் முற்றும்
ஆகுமெமக் கல்லாத தாகாதென்று
இயம்பல்படை யாட்சி யாகும்
மோகமிகு மடியரொடும் கூடவிரும்பியது
ஆனந்த மொழியு மீசர்
போகசுக மெனக்களித்தா ரார்பெறுவார்
எனுமருமை புகற லச்சோ. 24

திருச்சிற்றம்பலம்
திருவாசக உண்மை முற்றும்.

வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்

ஆளுடைய அடிகள் அருள்மாலை

(தரவுக் கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்

தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம் நான் அநுபவிக்க அருளுதியே. 1

கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றலறக் கோதறநீ கலந்ததனி
உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே. 2

மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னர்
இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர் இறையே. 3

உருஅண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற
திருஅண்டப் பகுதியெனும் திருஅகவல் வாய்மலர்ந்த
குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
இருஎன்ற தனியகவல் எண்ணமெனக் கியம்புதியே. 4

தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையின் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
வாடுகின்ற வாட்டமெல்லாம் வந்தொருக்கால் மாற்றுதியே. 5

சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
காமமிகு காதலன் தன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்புடையாள் இன்பினும் இன் பெய்துவதே. 6

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைக்கலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவப்படாமல் இனிப்பதுவே. 7

வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்துத்
தருமொழியாம் என்னில் இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பி அயல் கூடுவதேன் கூறுதியே. 8

பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதும் ஓர் மாறன் பிரம்படியால்
புண்சுமந்து கொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே. 9

வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே. 10

திருச்சிற்றம்பலம்

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

மணித்தொகுதி

(நால்வர் நான்மணி மாலையில் மாணிக்கவாசகர் குறித்து அருளியவை)

(நேரிசை ஆசிரியப்பா)

4

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின் 5

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சம்நெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவாசகம் இங்கொருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியில் சுரந்துநீர் பாய 10

மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகின் மற்றையர் இலரே.

8

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே
வாசகம் அதற்கு வாச்சியம்
தூசகல் அல்குல்வேய்த் தோள் இடத்தவனே.

12

கடல்நிற வண்ணன் கண் ஒனு இடந்து
மறைச் சிலம்பு அரற்றும் மலரடிக்கு அணியப்
பரிதி கொடுத்த சுருதி நாயகற்கு
முடிவிளக்கு எரித்தும் கடிமலர்க் கோதையைச்
சுரிகுழல் கருங்கண் துணைவியை அளித்தும் 5

அருமகள் நறும்பூங் கருமயிர் உதவியும்
நெல்முளை வாரி இன்னமுது அருத்தியும்
கோவணம் நேர் தனை நிறுத்துக் கொடுத்தும்
அகப்படும் மணிமீன் அரற்கு என விடுத்தும்
பூட்டி அரிவாள் ஊட்டி அரிந்தும் 10

தலை உடை ஒலிக்கும் சிலையிடை மோதியும்
மெய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்தும்
தந்தையைத் தடிந்தும் மைந்தனைக் கொன்றும்
குற்றம் செய்த சுற்றம் களைந்தும்
பூக்கொளும் மாதின் மூக்கினை அரிந்தும் 15

இளமுலை மாதர் வளமை துறந்தும்
பண்டை நாள் ஒருசிலர் தொண்டர் ஆயினர்;
செங்கண்மாத் தடக்கையில் சங்கம் நாண
முட்டாள் தாமரை முருக்கவிழ் மலர்போல்
வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப! 20

பாடும் பணிநீ கூடும் பொருட்டு
மதுரைமா நகரில் குதிரை மாறியும்
விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும்
நீற்றுஎழில் மேனியில் மாற்றடி பட்டும்
நின்னைத் தொண்டன் என்னக் கொண்டனன் 25

இருக்கும் அடுக்கல் அரக்கன் எடுப்ப
முலைபொர வரைபொரு மொய்ம்பின்
மலைமகள் தழுவ மனமகிழ்வோனே!

16

வலன்மழு உயரிய நலமலி கங்கை
நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல்
முகந்துல குவப்ப உகந்தமா ணிக்க
வாசகனெனுமொரு மாமழை பொழிந்த
திருவா சகமெனும் பெருநீ ரொழுகி 5

ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
நாவெனு மதகில் நடந்து கேட்போர்
செவியெனு மடையிற் செவ்விதிற் செல்லா
உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
வித்தில் சிவமெனு மென்முளை தோன்றி 10

வளர்ந்து கருணை மலர்ந்து
விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே.

20

"வேண்டும் நின் அடியார் மெய்யன்பு எனக்கும்
அருள்செய் சிவனே அலந்தேன் அந்தோ
முறையோ! முறையோ! இறையோனே!" என்று
அழுது செம்பொன் அம்பலக் கூத்தன்
அருளால் பெற்ற அன்பினில் ஒருசிறிது 5

அடியனேற்கும் அருளல் வேண்டும்;
நீயே கோடல் நின் அருள் பெருக்கிற்கு
ஏற்றதன் றுஇள ஏறு உகந்து ஏறியைப்
பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக
திருந்திய வேத சிரப்பொருள் முழுதும் 10

பெருந்துறை இடத்துப் பெரும்சீர்க்
குருந்து உறு நீழலில் கொள்ளைகொள்வோயே.

24

நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ
மனநின் றுருக்கு மதுர வாசக
கலங்குறு புலனெறி விலங்குறு வீர!
திங்கள் வார்சடைத் தெய்வ நாயக
ஒருகலை யேனு முணரான் அஃதான்று 5

கைகளோ முறிபடுங் கைகள் காணிற்
கண்களோ ஒன்று காலையிற் காணும்
மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும்
பழிப்பின் ஒன்று விழிப்பினெரியும்
ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த 10

பழுதில் செய்யுள் எழுதினன் அதனால்
புகழ்ச்சி விருப்பன் போலும்
இகழ்ச்சி அறியா என்பணி வானே.

28

பகிர்மதி தவழும் பவளவார் சடையோன்
பேரருள் பெற்றும் பெறாரின் அழுங்கி
நெஞ்சம்நெஞ் சுருகி நிற்பை நீயே
பேயேன் பெறாது பெற்றார் போலக்
களிகூர்ந்து உள்ளக் கவலை தீர்ந்தேனே 5

அன்னம் ஆடும் அகன் துறைப் பொய்கை
வாதவூர் அன்ப ஆத லாலே
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்" எனும்
செஞ்சொல் பொருளின் தேற்று அறிந்தேனே. 10

32

திருவார் பெருந்துறைச் செழுமலர் குருந்தின்
நிழல்வாய் உண்ட நிகரில் ஆனந்தத்
தேன் தேக் கெறியுஞ் செய்யமாணிக்க
வாசகன் புகன்ற மதுர வாசகம்
யாவரும் ஓதும் இயற்கைத் தாதலின் 5

பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
மட்கலம் நிகர்க்கும் மதுர வாசகம்
ஓதின் முத்தி உறுபயன்
வேதம் ஓதின் மெய்ப்பயன் அறமே

36

தானே முத்தி தருகுவன் சிவன் அவன்
அடியன் வாத ஊரனைக்
கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே.

40

செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூர் அன்ப
பாவெனப் படுவதுன் பாட்டு
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.

திருச்சிற்றம்பலம்


திருவாசகம் : 1 2 3 4 5 6 7சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்