35 தாயும், மகளும் வீட்டிற்கு வந்தார்கள். மேகலை, தனது அறைக்குள் நுழையப் போனாள். உடனே கங்காதேவி, அவள் கையைப் பற்றி, செல்லமாக கன்னத்தைக் கிள்ளி, தனது அறைக்குள் கொண்டு வந்தாள். மூவர் புரளக்கூடிய பெரிய கட்டில், மாடத்தில் முர்கேவாலி மாதா. சுவர்களில் பல்வேறு வகைப் படங்கள். கங்காதேவி மகளுக்கு விளக்கினாள். “இந்த ஆயில் பெயிண்டிங் எங்க தாத்தா படம். அசல் ராஜ்புத். இது எங்க அம்மா படம். எப்படி ராணி மாதிரி இருக்காள் பாரு... அது என் அக்கா... இவன் என் அண்ணன்... இவனுக்கு நான் தம்பியாகாமல், தங்கையாய் ஆன கோபத்துல துப்பாக்கியை எடுத்து சுட வந்தான். பாலுல விஷத்தைக் கூடக் கலந்தான். அண்ணனுக்கு தம்பி, தங்கையா மாறுனாலும், தங்கைக்கு எப்பவும் அண்ணன் அண்ணன்தானே... அதனால அவனை என்னால் வெறுக்க முடியல... ஒனக்கும் ஒரு வகையில், இவன் உங்க பக்கம் சொல்றது மாதிரி தாய் மாமன்... பழைய ஜமீன் மாமன்...”
“நெசமாவே சொல்றேன்... நீ என் மகளா வந்ததுக்கு பெருமைப்படறேன்... இன்னும் பல ஜென்மங்கள்ள நீ மகளாய் வாரதுக்கு நான் ஆயிரம் தடவை கூட அலியாய்ப் பிறக்கத் தயார். ஆனால் ஒரு கண்டிஷன்... அடுத்த ஜென்மத்துல நீ நெசமாவே பெண்ணாப் பிறக்கணும். நானும், அப்படிப் பிறந்தால், சந்தோஷம்... இதே பிறப்பு தான் தலையில் எழுதி வச்சது என்றால், நெசமான பெண்ணா பிறக்கற ஒன்னை, நான் தத்து எடுத்துக்கணும். இதுதான் என் ஆசை... இப்படி இப்போகூட பல அலிங்க நெசமான ஆண்களையும், பெண்களையும் குழந்தையிலேயே தத்து எடுத்து வளர்க்காங்க... நான் கும்பிட்ட முர்காதேவி, என்னைக் கைவிடலை... உன்னை மாதிரி கள்ளங்கபடம் இல்லாத அதே சமயம், புத்திசாலியான ஒரு மகள் கிடைத்ததுல நான் படுற சந்தோஷத்துக்கு அளவே இல்லடி பேட்டி... இப்போ எனக்கே என் எல்லை தெரியுதுடி. எப்போ சாவு வந்தாலும் சந்தோஷமா போவேண்டி... ஒனக்கு என்கிட்ட மகளாய் வந்ததுல சந்தோஷமோ, இல்லியோ, ஆனால், எனக்கு சந்தோஷம் தாங்க முடியலைடி...” மேகலையால் தாள முடியவில்லை. அம்மாவைக் கட்டிக்கொண்டு “எனக்கும்தான். எனக்கும்தான்” என்று அவள் கழுத்திலேயே வார்த்தைகள் உரசும்படி கையைச் சுற்றி விம்மினாள். ஐந்து நிமிட நேர உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள்... தாயும் மகளும் அங்கேயே சேலை மாற்றினார்கள். கங்காதேவி தனது பட்டுப்புடவையை மடித்து வைக்கும் மகளைப் பார்த்தபடியே, நைட் கவுன் போட்டுக் கொண்டாள். மகள் கழுத்தில் ஒரு செயினை மட்டும் விட்டுவிட்டு, மீதியை அவளிடம் கொடுத்தாள். மாடத்தில் வைக்கப்பட்ட ஒரு சாவிக்கொத்தை அவளிடம் நீட்டினாள். பிறகு, எதேச்சையாகப் பேசினாள். “கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்கோடி... ஒரு மாதம் கழிச்சு ஹார்மோன் ஊசி போட்டால், மார்பகத்துல ‘பேடு’ தேவையே இல்லை... பெரிசாயிடும். வெட்டுப் புண்ணு இப்பதான் ஆறியிருக்கு... இது முடிஞ்சதும் அது மேல நெனவு வரும். அதனாலதான் சொன்னேன்...” மேகலை “நை மாதாஜி, நை” என்று அவசர அவசரமாய் சொல்லிக்கொண்டே அம்மாவிடம் வந்தாள். உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினாள். “உன்னிஷ்டம். ஆனாலும் சொல்ல வேண்டியது என் கடமை, உனக்கும் ஆசாபாசம் உண்டு... ஆம்பளைங்க மேல ஒரு ‘இது’ வரும். அந்த மாதிரி சமயத்தில், அதோ பார்... நான் அடையாளம் காட்டாத மீசைக்காரன்... பத்து வருஷத்துக்கு முன்னால ஒரு வாரத்துக்கு ஒரு தடவை இங்க வருவார்... அப்புறம் மாரடைப்புல செத்துட்டார்... எனக்கும் இப்ப வயசாயிட்டது... அவரோட நினைப்பு கூடிக்கிட்டே இருக்குது. ஆனால் ‘அந்த நெனப்பு’ போயிட்டது...” “நானும், உங்ககிட்ட எதையும் ஒளிக்க விரும்பலம்மா. எனக்கும், ஒருத்தர் இருக்கார். ஆனால், என் அளவில தான் இருக்கார்... நானும் அவரைக் காதலிக்கேன். அவருக்கு இது தெரியாது. தெரிஞ்சால், ஒருவேளை காறிக்கூடத் துப்புவார்... நானும் அவர்கிட்ட தெரியப்படுத்தப் போறதில்ல. காதல் ஒரு வழிப் பாதையா இருந்தாலும் காதல் காதல்தானம்மா... எங்க இலக்கியத்துல இதைப் பொருந்தாக் காமம் என்று சொல்லுவாங்க... இருக்கட்டுமே... பொருந்துதோ பொருந்தலியோ... அவரு இருக்கிற இந்த மனசுக்குள்ள... அடுத்தவன் போக முடியாதும்மா...” கங்காதேவி மகளையே பார்த்தபடி நின்றாள். மனத்திற்குள் வியாபித்த மீசைக்காரன் லேசாய் விலகி, மருமகனைப் பற்றிய ஒரு வடிவக் கோட்டை அந்த மனமே போட்டுக்கொண்டது. இதற்குள் மேகலை, தனது பழைய அறைக்குள் ஓடிப்போய், பழைய சூட்கேஸோடு வந்தாள். துணிகளையும் அங்கேயும் இங்கேயுமாய்ச் சிதற அடித்துவிட்டு ஒரு புகைப்படத்தை நாணிக்கோணியபடி, கங்காதேவியிடம் காட்டினாள். அவள் செல்லமாக அதட்டினாள். “இப்படியாடி படத்தை கசக்கி வைக்கிறது. நான் சொல்றேன். சாமுத்திரிகா லட்சணப்படி இவன் நல்லவன். அரவானுக்கு முப்பத்திரண்டு லட்சணங்கள் இருந்தால், இவனுக்கு இருபதாவது தேறும். இவனை நினைத்தால், எவன் நெணைப்புமே வாராதுடி... இதைக் கொஞ்சம் பெரிசு படத்தி பிரேம் போட்டு மாட்டிடலாம். ஒன் மேஜையிலேயே வச்சுக்கோ. அப்புறம் ஒங்க அம்மா அப்பா, அடிக்கடி என்கிட்டச் சொல்வியே அக்கா, அவங்க படம் இருந்தாலும் கொடு. பிரேம் போடுவோம். இந்த வீட்ல இனிமேல் ஒனக்குத்தாண்டி முதல் மரியாதை. நான் முர்கேமாதாவோட ஆலமரத்தடியில் ஒதுங்கப்போற கிழவி...” மேகலை, மீண்டும் சுயம்புவாகி, பெற்றொரை நினைத்தான். கூடப்பிறந்தவர்களை நினைத்தான். சின்னப் பிள்ளைகளை நினைத்தான். கண்கள் பொங்கின. இதயம் கழண்டுவிடும் போலிருந்தது. பிறகு உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி, மனத்தை ஒரு நிறுத்து நிறுத்திக் கங்கா தேவியின் தோளில் சாய்ந்து மேகலையாய் ஒலமிட்டாள். “எல்லாமே நீதாம்மா. நீதாம்மா...” அப்போது - சுயம்புவின், கத்தலைப்போல் ஆயிரம் ஆயிரம் கத்தல்கள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அலிகளின் புலம்பல்கள். பலத்த ஒப்பாரி. அங்குமிங்குமான காலடிச் சத்தங்கள். ‘மாதாஜி மாதாஜி’ என்ற புலம்பல்கள். தாயும், மகளும் வெளியே எட்டிப் பார்த்துப் பரபரத்தார்கள். படபடத்தார்கள். தாயும், மகளும், வாயும், வயிறும்கூட வேறில்லாதவர்கள் போல் வெளியே வந்து என்ன, என்ன என்ற ஒரே வார்த்தையை ஒரே சமயம் அடுக்கடுக்காய்க் கேட்டார்கள். அவர்களைக் கண்டதும் அழுது கொண்டிருந்த எல்லா அலி ஜீவன்களும் அங்கே ஓடி வந்தன. கீழே புரண்டவள்களும், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டவள்களும், தலைவிரி கோலமாக அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் சொல்ல முற்பட்டனர். இதனால் வேகமான சுழலில் நீர் மொள்ள முடியாது என்பதுபோல், வாய்க்குள் இருந்து வார்த்தைகளை எடுக்க முடியாமல், அல்லாடினார்கள். ஒரே ஒருத்தி நீலிமா ‘மாதாஜி இந்திரா மர்கயா... மாதாஜிகோ... பாடிகாட்ஸ்... மார்த்தியா...’ என்று அரற்றினாள். அப்போது எல்லா அலிகளும் மீண்டும் ஒரேயடியாய் அழுதார்கள். சிலர் வளையல்களைத் தலையில் அடித்தே உடைத்தார்கள். நீலிமாதான் சிறிது சமாளித்து ‘ரொக்கே, ரொக்கே’ என்று சொல்லிவிட்டு, கண்ணிரும் கம்பலையுமாய் ஒப்பித்தாள். “மாதாஜி. நம்மையெல்லாம் மனுஷஜீவனா மதிச்சு, வீடு கட்டி விளக்கேத்தித் தந்த இந்திராஜியை... அவங்களுக்குக் காவல் காக்கிற போலிஸே சுட்டுக் கொன்னுட்டாங்களாம். அம்மாவை ஆஸ்பத்திரியில பார்த்துட்டு, அலைமோதி வந்தவங்க அழுதுகிட்டே சொல்றாங்க...” “இருக்காது. இருக்க முடியாது. எங்கம்மா இந்திராஜி சாகமாட்டாள். அவள்மேல் குண்டு பாய்ந்தாலும், குண்டுதான் சாகும். நம்மோட அம்மா சாகமாட்டாள்.” கங்காதேவி, ஒப்பாரி போடுகிறவர்களே, அன்னை இந்திரா இறந்துவிட்டதாக தங்கள் ஆசைக்கு ஒரு வெளிப்பாடு செய்கிறார்கள் என்பதுபோல் அவர்களை ஒட்டுமொத்தமாய் கோபத்தோடு பார்த்தாள். ஒரு சிலரை அடிக்கக்கூடக் கையை ஓங்கினாள். ஆனால், யதார்த்தம், அவள் விருப்பத்திற்கு விரோதமாகக் கூத்தாடியது. கோரதாண்டவமிட்டது. கடைகள் ‘டப்டப்’ பென்று மூடப்பட்டன. ஆங்காங்கே சாலைகளில் ஓடிய பஸ்கள் அப்படி அப்படியே நின்றன. மக்கள் கும்பல் கும்பலாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருசில இடங்களில் மயான அமைதியோடு கூடிய நடை. இன்னும் சில இடங்களில் ‘குய்யோ முறையோ’ என்ற கூப்பாடோடு ஓடிய மனிதக் காலடிச் சத்தங்கள். கங்காதேவி நிலை குலைந்தாள். நம்ப முடியாதது, நடந்துவிட்டது. அரவான் தன்னைத்தானே காவுக்குச் சம்மதம் கொடுத்ததுபோல், அம்மாவும் தன்னையே காவு கொடுத்து விட்டாள். எல்லாத் தலைவர்களும் மானிடத்தின் மூன்றாவது தரப்பைப் பற்றித் தெரியாமலும், தெரிந்து கொள்ள விரும்பாமலும், அலிகளை அலட்சியப்படுத்தியபோது இந்த அன்னை, அவர்களை அரவணைத்தவள். இன்னும் உயிரோடு இருந்தால், என்னவெல்லாமோ செய்திருப்பாள். செய்தாலும் செய்யாவிட்டாலும், பரவாயில்லை. அவள் உயிரோடு இருந்திருந்தால் அதுவே அவள் செய்தது மாதிரி... கங்காதேவி, கனத்த சிந்தனையுடன் முர்கே மாதாவை முறைத்துப் பார்த்தாள். பிறகு அந்தத் திட்டில் ஏறி, குடைசாய்ந்து கிடந்தாள். கீழே நின்ற அலிகளோ ‘மாதா மாதா.. எதுக்குமே பிரயோசனப்படாத எங்களை எடுத்துட்டு எங்க அம்மாவைக் கொடுத்துடும்மா’ என்றார்கள். பலர், தத்தம் முகத்தில் மாறிமாறி அடித்துக்கொண்டார்கள். இந்தத் தாக்கத்தில் தன் முகத்திலும் அடிக்கப் போன கங்காதேவியை, மேகலை பிடித்துக் கொண்டாள். நீலிமா பின்னால் வந்து தாங்கிக்கொண்டாள். முர்கே மாதாவிடம், கங்காதேவி தலையை அவலத்தனமாக ஆட்டியபடியே முறையிட்டாள். “எம்மா, எம்மா... எத்தனையோ வேலைக்கு மத்தியில் இந்தப் பக்கம் வந்து எங்களை விசாரிக்கிற தாயே... தேர்தலுக்கு முன்னால வராமல் பின்னால் வந்த மாதா... ஒன்னைப் பேடித்தனமாய் கொன்னுட்டாங்களே... முர்கேமாதா, நீ ஒரு மூர்க் மாதா. எங்க அம்மாவோட சாவை தாங்கிக்க சக்தியாவது கொடுடி...” மேகலையும், கேவிக் கேவி அழுதாள். அன்னை இந்திராவுக்கு ஒரு அழுகையும் அவளுக்காக இப்படி அழும் தாய்க்காக ஒரு அழுகையுமாய் அழுதாள். கங்காதேவி எழுந்தாள். எல்லோரும் அவளையே பார்த்தபோது அவள் ஒருவர் ஒருவருக்காய்ச் சொல்வது போன்ற உரத்த குரலில் சொன்னாள். “வாங்க எல்லோரும் போகலாம். அம்மாவக் கடைசியா பார்ப்போம்!” கவுனோடு புறப்படப்போன கங்கா தேவியை, நீலிமாவும், லட்சுமியும் வீட்டுக்குள் கொண்டு போனார்கள். அவர்களே அவளுக்குப் புடவை கட்டிவிட்டார்கள். மேகலை எதுவும் புரியாமல் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தாள். கங்காதேவி மகளிடம் சொன்னாள். “உனக்கு இன்னும் வெட்டுப்பட்ட இடம் ஆறலடி. கூட்டத்திலே இடிபட்டு ஏதாவது ஆயிடப்படாதும்மா. நீ இங்கேயே இரு லட்சுமி! நீயும் இங்கே இருந்து என் மகள பத்திரமா பார்த்துக்கடி.” “நீங்க இந்தக் கோலத்தோட போக வேண்டாம்மா. எனக்காக பத்துப் பதினைந்து நாளா ராத்தூக்கம் இல்லாமல் போனவங்க நீங்க... டி.வி. யிலதான் அம்மாவக் காட்டுவாங்களே. இங்கேயே பார்த்துக்கலாம்... கூட்டத்தில இடிபட்டு ஏதாவது ஆயிடப்படாதும்மா...” “என் மாதாவின் காலுல தலையை வெச்சிட்டு வரணும் மகளே. இல்லாட்டால், நான் உயிரோட இருக்கிறதுல அர்த்தமில்லடி... லட்சுமி, ஜாக்கிரதைடி...” லட்சுமி, மேகலையின் கையை உரிமையோடு பற்றிய போது, கங்காதேவி ஒரு ராணித் தேனி பறப்பதுபோல் நடந்தாள். உடனே, அத்தனை சேலா அலிகளும் அவள் பின்னால் நடந்தார்கள். அத்தனை பேரும், அவளைப் போலவே அழுது நடந்தார்கள். ‘மாதாஜி அமர் ஹை... ஜிந்தாபாத், இந்திரா காந்தி ஜிந்தாபாத்!’ வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
Think and Win like Dhoni மொழி: English பதிப்பு: 15 ஆண்டு: 2019 பக்கங்கள்: 138 எடை: 120 கிராம் வகைப்பாடு : Self Improvement ISBN: 978-81-8495-890-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 199.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: Think and Win Like Dhoni is not just a usual book about cricket, but a book that will help you to beat the odds. Get ahead of your competitors using tips and tricks from the Indian captain Mahendra Singh Dhoni’s life, shared by the man himself! Everyone says MS Dhoni is lucky. But have you ever wondered why he is so lucky? How does he manage to cash in on opportunities? How does he remain calm in the face of immense pressure? What makes him a great leader and a youth icon? Discover the mind power of the boy who travelled the road of exclusivity, from being a regular Ranchi lad to a world-famous cricketer. Learn how to build confidence, dismiss fear and perform top-class so that you enjoy immense success in work and life. நேரடியாக வாங்க : +91-94440-86888
|