Chennai Library - சென்னை நூலகம் - Works of S.Lakshmi Subramanian - Bhuvana Mohini
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter facebook
9176888688 
admin@chennailibrary.com +91-9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 491  
புதிய உறுப்பினர்:
M.Lakshmanan
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
காவிரி தீர்ப்பு: தமிழகத்துக்கு ஏமாற்றம்
6வது போட்டி: கோலி சதம்-இந்தியா வெற்றி
மணிசங்கர் ஐயர் மீது தேசத் துரோக வழக்கு
டி.என்.சேஷனுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
மெக்சிகோவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்
சினிமா செய்திகள்
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது:கமல்
மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்
ஏப்ரல் 13-ல் வெளியாகிறது மெர்க்குரி
ஜிப்ஸி படத்திற்கு பூஜை போட்ட ஜீவா
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!

அன்புடையீர்! நீங்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை எமது சென்னைநூலகம்.காம் தளத்தில் மின்னூல் வடிவிலும் (யூனிகோட் மற்றும் பிடிஎப்), எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் நூல் வடிவிலும் வெளியிட விரும்பினால் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும். (பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)

புதிய வெளியீடு11. அரசரின் அழைப்பு

     மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
          மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
     கருங்கயற்கண் விழித்தொல்கி
          நடந்தாய் வாழி காவேரி!
     கருங்கயற்கண் விழித்தொல்கி
          நடந்தவெல்லாம் நின் கணவன்
     திருந்து செங்கோல் வளையாமை
          அறிந்தேன்; வாழி காவேரி!

               -சிலப்பதிகாரம்

     அவரிடமிருந்து பதில் வராததால் சுலக்‌ஷணா எழுந்து அமர்ந்து கொண்டு முழங்கால்களுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மன்னர் அவளருகே அமர்ந்து தலையை மெல்ல வருடியபடி, “மகளே! நீ நகை கேள்; நான் வாங்கித் தருகிறேன். நான் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்; அன்புக் கட்டளைக்குப் பணிகிறேன். ஆனால், இப்போது கேட்டாயே...? அது அவ்வளவு எளிதானது அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார்.

     “அப்பா! என்ன சொல்லுகிறீர்கள்? மன்னராகிய தாங்கள் அழைத்தால் சுவாமிகள் வராமல் இருந்து விடுவாரா? தாங்கள் மரியாதை செய்து போற்ற விரும்புவதாகச் சொல்லி அனுப்பினால் அவர் வர மறுத்து விடுவாரா? நாம் அவருடைய தெய்வீக இசையைக் கேட்கத்தானே விரும்புகிறோம்? அதில் தவறு ஏதும் இல்லையே?” என்று மனக் குமுறலுடன் கேட்டாள், சுலக்‌ஷணா.

     “சுவாமி! தாங்கள் சுலக்‌ஷணா விரும்புகிறபடி சொல்லி அனுப்புவதில் தவறு ஏதும் இல்லை என்றே நானும் நினைக்கிறேன். அந்த மகான் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர் என்று கேள்விப்பட்டேன். அதனால் தங்கள் அழைப்பையும் அவர் ஒரு பெருமையாக மதித்து சபைக்கு வருவார் என்றே எனக்குத் தோன்றுகிறது! சுலக்‌ஷணா மட்டும் அல்ல; சுவாமிகளின் கீர்த்தனங்களை அவரே பாடிக் கேட்க வேண்டும் என்று நானும் ஆவலாக இருக்கிறேன். தங்களுடைய மகளின் பிறந்தநாளன்று அந்த நற்காரியம் நடக்கட்டுமே?” என்று அகல்யாவும் வற்புறுத்திச் சொன்னாள்.

     “எனக்கு ஆட்சேபணை இல்லை. தகுந்த மரியாதைகளுடன் பண்டிதர் மூலமாக நான் அழைப்பை அனுப்புகிறேன். அவர்கள் வந்தால் எனக்குப் பெருமகிழ்ச்சியே ஏற்படும். ஆயினும் எவ்வளவு தூரம் இந்த ஆசை நிறைவேறும் என்பதுதான் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை!” என்று கூறிவிட்டு வெளியே வந்தார் மன்னர்.

     அரசரைப் போக விடாமல் கையைப் பற்றி இழுத்தவாறே மகள் சுலக்‌ஷணாவும் உடன் வந்தாள். அவளுக்காக மயிலாடுதுறையிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த மாம்பழத்தை மன்னரே தமது கையால் நறுக்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் செய்தபடி, அவரை அமரச் செய்து தானும் மடியில் அமர்ந்து கொண்டாள்.

     மகளுக்கு மாம்பழத்தை நறுக்கிக் கொடுத்தபடி மன்னர் யோசனையில் ஆழ்ந்தார். திருவையாற்றில் திருமஞ்சன வீதியில் சிறுவீடு ஒன்றில், இராமபிரான் திருவுருவத்திற்கு முன் அமர்ந்து பாடும் நாத யோகியைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போனார் அவர்.

     வைகறைப் பொழுதில் காவேரி ஆற்றில் நீராடிவிட்டுத் திரும்பி வந்தார் தியாகராஜ சுவாமிகள். காவேரிக் கரையில் சில நிமிடங்கள் நின்று, ரகசியம் பேசும் நீரின் சலசலப்பையும், வெள்ளிக் கீற்றாய் உதிரும் வைகறையின் சிரிப்பையும், திரும்பி வந்த வழியெல்லாம் புள்ளினங்கள் கூவிய இனிமையையும் எண்ணி மனம் அதில் தோய்ந்து நின்றது.

     “மேலுகோ தயாநிதி - மேலுகோ தாசரதி...” என்று சௌராஷ்டிர ராகத்தில் பாடியபடியே ராமபிரானையும் சீதா தேவியையும் துயில் எழுப்பினார் சுவாமிகள். குழந்தையை எழுப்பி கண்களைத் துடைக்கும் தாயின் வாஞ்சை அவருடைய கண்களில் தெரிந்தது. ‘பொலபொல’ என்று விடியும் வேளையில் விக்கிரகங்களைத் தேய்த்து நீராட்டி அலங்காரம் செய்து பீடத்தில் அமர்த்தினார்.

     எதிரே அமர்ந்து கொண்டு, கமலாம்பாள் கொண்டு வந்த பழத்தையும் பாலையும் நைவேத்தியம் செய்யத் தொடங்கினார். கனிரசமும், பாலும், தேனும், கற்கண்டும் கொடுத்து குழந்தையை மகிழ்விப்பது போல மனம் நெகிழ்ந்து பாடி நைவைத்தியம் செய்தார். பின் கண்களை மூடிக் கொண்டு ‘நீ பஜன கான...” என்று பாடத் தொடங்கினார்.

     “இராமபிரானே! உன்னுடைய பெயரைச் சொல்லுவது உனது குணங்களையும் புகழ்வது பாடுவது. இந்த இரண்டும் சேர்ந்து கிடைக்கும் இனிய அனுபவம் இருக்கிறதே...? இது வேறு எதில் கிடைக்கும் ராமா? வாதங்களிலும் யோக சித்திகளிலும் உன்னைப் பற்றிய உண்மையைத் தேடுபவர்களுக்கு இது புரியவில்லையா? உனது அழகு மிகுந்த முக தரிசனத்தில் சகல தத்துவங்களையும் அறிந்து கொண்டுவிடலாமே?” என்று மனம் உருகிப் பாடினார்.

     தெருவில் ‘கடகட’வென்று மாட்டுவண்டி ஓடிற்று. உப்பு விற்கும் கிராமத்துப் பெண்டிரின் கூவல் அலை மோதிற்று. ஆனால் எந்தச் சத்தத்திலும், எந்த ஒலி வெள்ளத்திலும் தனது நாத உபாசனையின் பார்வையிலிருந்து அவர் சுழலவில்லை. பாடி முடித்து கண்களை மூடி அமர்ந்திருந்தார். சீதையின் கருணை ததும்பும் நயனமும் அபயகரமும் அவர் நெஞ்சில் அமுதமழை பெய்து கொண்டிருந்தன. இமையிலிருந்து பூத்த நீர் கன்னத்தில் கசிந்தது.

     இதோ சீடர்கள் வந்து விடுவார்கள். அவர்களிடம் இந்தப் பாடலைப் பாடவேண்டும். நேற்று அவர்கள் ஓலைச் சுவடிகளில் குறித்துக் கொண்டார்கள். காவேரிப் படித்துறையில் அமர்ந்து கொண்டு பாடிப் பார்த்துப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். வெங்கட்ரமணன் வந்து அவர் முன்னிலையில் அமர்ந்து அதை மீண்டும் பாடிக் காட்டுவான். இன்று அவர்களை உட்கார வைத்துப் பாட வேண்டும். அவர் பாட அவர்கள் மீண்டும் பாடுவார்கள். ராமச்சந்திரமூர்த்திக்கு ஒவ்வொரு மாலையாகப் போடுவதைப் போல அது அழகாக இருக்கும்...

     மானம்புச்சாவடி வெங்கடசுப்பன், தில்லைஸ்தானம் ராமன், நெய்க்காரப்பட்டி சுப்பு, உமையாள்புரம் கிருஷ்ணன், நங்கவரம் நீலகண்டன், திருவொற்றியூர் கணேசன்... ஒவ்வொருவராக இடுப்பின் மேல் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உள்ளே வந்து அவரை வணங்கினார்கள்.

     பூஜா பிரசாதமாகச் சந்தனமும் குங்குமமும் எடுத்து இட்டுக் கொண்டார்கள். அன்று மங்களகரமான தினம். சுவாமிகள் உஞ்சவிருத்தியில் காவேரியைப் பற்றி பாடப் போகிறார். ‘கணீர்’ என்ற குரலில் அவர் பாடச் சீடர்கள் பின் தொடர்ந்து பாடியபடியே செல்லப் போகிறார்கள். இறைவனே பரம ரசிக சிகாமணியாக அதைப் பின் தொடர்ந்து வந்து கேட்பான். அனுமன் பக்தி பரவசமாகிக் கண்ணீர் சொரிந்த வண்ணம் அடியொற்றிப் பின் வருவான்.

     சுவாமிகள் தெருவில் இறங்கி விட்டார். தம்பூரை எடுத்துக் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல மார்போடு அணைத்துக் கொண்டார். தாள ஒலி கூட நடந்து வந்தது. தெருவாசலில் அரிசியைச் செம்பில் போட வந்த சுமங்கலிகள் கைகூப்பி நின்றனர். காவேரியின் அழகை, பெருமையை, நடையை, நிறைவைப் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்து பாடினார் சுவாமிகள். ‘ளார்வெடலின’ என்ற அசாவேரி கீர்த்தனை நயமாக இழைந்தது.

“நல்லவர், தீயவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் வாரி வழங்கியபடி பவனிவரும் காவேரியின் அழகைப் பாருங்கள்! ஒருபுறம் வேகத்துடனும் மற்றொருபுறம் பெருகி வரும் பேரொலியுடனும், எப்போதும் அலைபாய்ந்து வரும் குமரி காவேரி, குயில்கள் இசைபாட பசுமை தோரணம் கட்ட, அரங்கநாதனுக்கு மாலையாக அமைந்து, எங்கும் வளம் தந்து வருகிறாள். அவள் இங்கே பஞ்ச நதீசுவரரையும் தரிசிக்க வருகிறாள். இரு கரைகளிலும் நின்று மறையவர் குழாம் இந்த தேவியை ‘ராஜராஜேசுவரி’ என்று போற்றி மலர் தூவி பூஜிக்கிறது பாருங்கள்! தியாகராஜனால் வணங்கப்படும் இந்தக் காவேரித் தாயைப் பாருங்கள்!”

இசையின் இனிமையும், சொல் நயமும், பொருளின் செறிவும் கலந்து இழைந்தன, பாடும் போது! ‘நாமும் எளிதில் பாடிவிடலாம்’ என்று யாரும் எண்ணி ஏங்கக்கூடிய எளிமை. உருகி நெஞ்சு கரையப் பாடும் போது பக்தியில் பரவசமாகி ஒன்றிவிடும் உள்ளம். இதுவன்றோ நாதோபாசனை? அலைகள் தவழ்ந்து தவழ்ந்து சிலிர்க்க, காவேரி கூடவே மென்நடை நடந்து வருவது போல உணரும் இதுவல்லவோ கவிஞரின் கருணை? செம்பில் அரிசி நிறைய நிறைய, பஞ்ச நதீசுவரர் ஆலயத்தை நான்கு வீதிகளிலும் வலம் வந்து வீடு திரும்பினார், தியாகராஜ சுவாமிகள். வீட்டு வாசலில் கூட்டம் கூடி இருந்தது. குதிரைகள் நின்றன. அலங்கார முகபடாம்கள் ஒளிர்ந்தன. கட்டுடலும் முண்டாசுத் தலையுமாகச் சிப்பாய்கள் நின்றனர். சுவாமிகளுக்கு எதுவும் புரியவில்லை.

தமையனார் ஜபேசன் ஓடி வந்தார். “தியாகராஜ வா உள்ளே வந்து பார்! உனக்காக காத்துக் கொண்டிருக்கும் ராஜ மரியாதைகளைப் பார்! உன்னை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் ராஜப் பிரதிநிதிகளைப் பார். நீ தினந்தோறும் பூஜித்த ராமபிரான் உன்னைக் கைவிடவில்லை. உன் வீடு தேடி ஐஸ்வரிய லட்சுமி வந்திருக்கிறாள்!” என்று அவருடைய கையைப் பற்றி இழுத்தார். சுவாமிகளின் நெற்றி சுருங்கிற்று. கால்கள் பூமியில் தோய்ந்து நின்று மேலே நடக்க மறுத்தன. வாசலுக்கு மெல்ல வந்து நின்றதும், கமலாம்பாள் செம்பில் நீர் கொண்டு வந்து பாதங்களைக் கழுவினாள்.

‘சீதாபதி! இது என்ன சோதனை? என்னுடைய மனம் உறுதியாக இருக்கிறதா என்று தட்டிப் பார்க்கிறாயா? நான் பயப்படமாட்டேன். ரகுகுல திருமகனான நீ துணை இருக்கும்போது எனக்கு என்ன பயம்?’ என்று எண்ணியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தார் சுவாமிகள்.


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன்
2. பார்த்திபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. தியாக பூமி
6. கள்வனின் காதலி
7. பொய்மான்கரடு
8. மோகினித் தீவு
9. சோலைமலை இளவரசி
10. மகுடபதி
11. பொன் விலங்கு
12. குறிஞ்சி மலர்
13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
14. சமுதாய வீதி
15. சாயங்கால மேகங்கள்
16. ஆத்மாவின் ராகங்கள்
17. நெஞ்சக்கனல்
18. துளசி மாடம்
19. ராணி மங்கம்மாள்
20. பிறந்த மண்
21. கபாடபுரம்
22. வஞ்சிமா நகரம்
23. நெற்றிக் கண்
24. பாண்டிமாதேவி
25. சத்திய வெள்ளம்
26. ரங்கோன் ராதா
27. ஊருக்குள் ஒரு புரட்சி
28. ஒரு கோட்டுக்கு வெளியே
29. வேருக்கு நீர்
30. ஆப்பிள் பசி
31. வனதேவியின் மைந்தர்கள்
32. கரிப்பு மணிகள்
33. வாஷிங்டனில் திருமணம்
34. நாகம்மாள்
35.பூவும் பிஞ்சும்
36. பாதையில் பதிந்த அடிகள்
37. மாலவல்லியின் தியாகம்
38. வளர்ப்பு மகள்
39. அபிதா
40. அநுக்கிரகா
41. பெண் குரல்
42. குறிஞ்சித் தேன்
43. நிசப்த சங்கீதம்
44. உத்தர காண்டம்
45. மூலக் கனல்
46. கோடுகளும் கோலங்களும்
47. நித்திலவல்லி
48. அனிச்ச மலர்
49. கற்சுவர்கள்
50. சுலபா
51. பார்கவி லாபம் தருகிறாள்
52. மணிபல்லவம்
53. பொய்ம் முகங்கள்
54. சுழலில் மிதக்கும் தீபங்கள்
55. சேற்றில் மனிதர்கள்
56. வாடா மல்லி
57. வேரில் பழுத்த பலா
58. சிலையும் நீயே சிற்பியும் நீயே
59. புவன மோகினி
60. பொன்னகர்ச் செல்வி
61. மூட்டம்
62. மண்ணாசைபுதிது
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 491  
புதிய உறுப்பினர்:
M.Lakshmanan
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
உங்கள் கருத்துக்கள்

வாசர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அன்புடையீர்! எனது சென்னைநூலகம்.காம் அரசு நூலகமோ அல்லது அரசு உதவி பெறும் நூலகமோ அல்ல. இது எனது தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் உழைப்பினால் உருவானதாகும். ஆகவே எனது நூலகம் தொடர்பாக என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். இந்தியாவில் உள்ளவர்கள் எனது சென்னைநூலகம்.காம் இணையதளத்திற்கு நன்கொடை அளிக்க கீழே உள்ள பேயூ மணி (PayU Money) பட்டனை சொடுக்கி பணம் அனுப்பலாம். வெளிநாடு வாழ் அன்பர்கள் நேரடியாக எமது ஆக்ஸில் வங்கிக்கு இணையம் வழி பணம் அனுப்பலாம். (வங்கி விவரம்: G.Chandrasekaran, SB A/c No.: 168010100311793 Axis Bank, Anna Salai, Chennai. IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168). (ரூ.2000/- அல்லது அதற்கு மேல் நிதி அளிப்பவர்கள் எமது தளத்தில் “வாழ்நாள்” உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.) அன்புடன் கோ.சந்திரசேகரன் (பேசி: +91-94440-86888, 91768-88688 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)மேலும் விவரங்களுக்கு
  நன்கொடையாளர்கள் 

கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


gowthampathippagam.in
வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
gowthampathippagam.in
என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
gowthampathippagam.in
சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
gowthampathippagam.in
தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)