Chennai Library - சென்னை நூலகம் - Works of S.Lakshmi Subramanian - Bhuvana Mohini
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter
facebook
9176888688
நன்கொடைக்கு கீழ் பட்டனை சொடுக்குக

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 549  
புதிய உறுப்பினர்:
Ashak, S.Viswanathan
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
ஈராக் : கார் குண்டு தாக்குதலில் 21 பேர் பலி
டிசம்பர்-2-ம் தேதி மிலாடிநபி விடுமுறை
ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா
அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு
நீதிபதியை முகநூலில் விமர்சித்த பெண் கைது
டிச.31க்குள் ஆர்கே நகர் தேர்தல்
தமிழகத்தில் புதியதாக 70 மணல் குவாரிகள்
1. பொன்னியின் செல்வன் | 2. பார்த்திபன் கனவு | 3. சிவகாமியின் சபதம் | 4. அலை ஓசை | 5. தியாக பூமி | 6. கள்வனின் காதலி | 7. பொய்மான்கரடு | 8. மோகினித் தீவு | 9. சோலைமலை இளவரசி | 10. மகுடபதி | 11. பொன் விலங்கு | 12. குறிஞ்சி மலர் | 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) | 14. சமுதாய வீதி | 15. சாயங்கால மேகங்கள் | 16. ஆத்மாவின் ராகங்கள் | 17. நெஞ்சக்கனல் | 18. துளசி மாடம் | 19. ராணி மங்கம்மாள் | 20. பிறந்த மண் | 21. கபாடபுரம் | 22. வஞ்சிமா நகரம் | 23. நெற்றிக் கண் | 24. பாண்டிமாதேவி | 25. சத்திய வெள்ளம் | 26. ரங்கோன் ராதா | 27. ஊருக்குள் ஒரு புரட்சி | 28. ஒரு கோட்டுக்கு வெளியே | 29. வேருக்கு நீர் | 30. ஆப்பிள் பசி | 31. வனதேவியின் மைந்தர்கள் | 32. கரிப்பு மணிகள் | 33. வாஷிங்டனில் திருமணம் | 34. நாகம்மாள் | 35.பூவும் பிஞ்சும் | 36. பாதையில் பதிந்த அடிகள் | 37. மாலவல்லியின் தியாகம் | 38. வளர்ப்பு மகள் | 39. அபிதா | 40. அநுக்கிரகா | 41. பெண் குரல் | 42. குறிஞ்சித் தேன் | 43. நிசப்த சங்கீதம் | 44. உத்தர காண்டம் | 45. மூலக் கனல் | 46. கோடுகளும் கோலங்களும் | 47. நித்திலவல்லி | 48. அனிச்ச மலர் | 49. கற்சுவர்கள் | 50. சுலபா | 51. பார்கவி லாபம் தருகிறாள் | 52. மணிபல்லவம் | 53. பொய்ம் முகங்கள் | 54. சுழலில் மிதக்கும் தீபங்கள் | 55. சேற்றில் மனிதர்கள் | 56. வாடா மல்லி | 57. வேரில் பழுத்த பலா | 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே | 59. புவன மோகினி | 60. பொன்னகர்ச் செல்வி | 61. மூட்டம்புதிது
புதிய வெளியீடு
திரை உலக செய்திகள்
நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை - பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குபதிவு | சிறு வயது விஜய் சேதுபதியாக நடிக்கும் எம்.பாஸ்கரின் மகன் ஆதித்யா! | யுனிசெஃபின் பிரபல தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார் | தீபிகா படுகோனே தலைக்கு ரூ.10 கோடி: பாஜக பிரமுகர் அறிவிப்பு | தொடரும் எதிர்ப்பு: பத்மாவதி ரிலீஸ் ஒத்திவைப்பு!21. காசியாத்திரை தொடக்கம்

     கெண்டை கொண்டலர்ந்த கண்ணினார்கள் கீதவோசை போய்
     அண்டரண்டம் ஊடலுக்கும் அந்தன் ஆரூரென்பதே;
     நிரைத்த மாளிகைத் திருவின் நேராளர்கள் வெண்ணகை
     அரத்த வாய் மடந்தையர்கள் ஆரூர் என்பதே!

          - திருஞானசம்பந்தர்

     மறைந்து நின்றபடி, தந்தை சொல்லுவதையே கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சுலக்‌ஷணா. அரசரின் அருகே அமர்ந்து அவரையே உற்றுப் பார்த்தபடி கேட்கத் தொடங்கினாள் அகல்யாபாய். அரசர் கண்களை மூடி, பக்தி பூர்வமாக அந்த நிகழ்ச்சியை எண்ணி, மனத்திரையில் கொண்டு வந்து நிறுத்திக் கதையாகக் கூறத் தொடங்கினார்.

     “முத்துசாமி தீட்சிதர் திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசப் பெருமானின் சந்நிதிக்குப் போய் நின்று தனது கிருதிகளைப் பாடுவது வழக்கம். அந்த ஆலயத்தைச் சார்ந்த கமலம் என்ற தேவதாசி மிகுந்த சங்கீத ஞானம் படைத்தவள். தீட்சிதரின் பக்திமணம் கமழும் பாடலை மறைந்து நின்று கேட்டு, மனம் உருகிக் கண்ணீர் வடிப்பாள். தீட்சிதர் திரும்பிய பின் அவர் நின்ற இடத்தைத் தொட்டு வணங்குவாள். மானசீகமாக அவரைத் தனது குருநாதராகவே எண்ணி வழிபட்டு வந்தாள் கமலம்.

     தீட்சிதர் எந்த வேலைக்கும் போகவில்லை. பிரபுக்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறும் வழக்கமும் அவருக்கு இல்லை. அதனால் வீட்டில் தெய்வீக மணம் கமழ்ந்தாலும், அடுப்பில் சமைக்கக்கூடப் போதுமான பொருள் இன்றியே இருந்தது. ஒருநாள் தீட்சிதரின் மனைவி இதைப் பற்றி தனது கணவரிடம் கூறி முறையிட்டாள். அவரோ புன்னகையுடன், ‘நான் மகாலட்சுமியைப் பூசித்து வணங்குகிறேன். அவள் என் அன்னை அல்லவா? குழந்தைக்கு எப்போது சோறு போட வேண்டும் என்று தாய்க்குத் தெரியும்!’ என்று சொல்லிவிட்டார்.

     இந்தச் செய்தி கமலத்தின் காதை எட்டிற்று. அவள் தனது நகை நகைகளைக் கடைக்குச் சென்று அடகு வைத்தாள். அந்தப் பணத்தில் சமைப்பதற்குரிய பொருட்களை நிறைய வாங்கி வண்டியில் வைத்து அனுப்பி விட்டாள். வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. தீட்சிதரின் மனைவி அதைக் கண்டு அகமகிழ்ந்து போனாள். ஆனால் தீட்சிதரோ அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வண்டிக்காரன் உள்ளே வந்து அவரை அடிபணிந்து வணங்கி, ‘ஐயா, இதைத் தங்கள் சிஷ்யையான தேவதாசி கமலம் அனுப்பி வைத்தார்கள். இதைத் தனது காணிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்!’ என்று கூறினான். தீட்சிதர் புன்னகையுடன், ‘அப்பா, அந்தப் பெயருள்ள மாது யாரையும் எனக்குத் தெரியாது. மேலும் நான் யாரிடமும் கைநீட்டி எதையும் பெறும் வழக்கமும் இல்லை. இதை அவர்களுடைய வீட்டிலேயே கொண்டு போய் இறக்கி விடு!’ என்று சொல்லி விட்டார்.

     தீட்சிதரின் மனைவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வண்டி திரும்பிப் போய்விட்டது. அவள் அழுது கொண்டே, ‘நாளைக்குச் சாப்பிட மணி அரிசி இல்லையே சுவாமி! என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டாள். ‘கவலைப்படாதே! கமலம் கொடுத்து நாம் சாப்பிட வேண்டாம். அன்னை கமலாம்பிகை கொடுப்பாள். பார்த்துக் கொண்டே இரு!’ என்று சொல்லி விட்டார்.

     தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு அரசு அதிகாரி ஒருவர் வருவதாக இருந்தது. அது கடைசி நிமிடத்தில் நின்று போய் விட்டது. அவர் வருகையை முன்னிட்டு விருந்து வைக்க உள்ளூர் அதிகாரி நிறைய சமையல் சாமான்களை வாங்கிப் போட்டிருந்தார். மேலதிகாரி வராமற் போகவே, ‘இதை நம்முடைய ஊரில் உள்ள மிக உயர்ந்த மனிதர் ஒருவருக்குக் கொடுத்து விடலாம்!’ என்று எண்ணினார். யோசித்துப் பார்த்த போது முத்துசாமி தீட்சிதரே அந்த மரியாதைக்கு உகந்தவ எனத் தோன்றிற்று. தான் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டார் என்று ஆலய நிர்வாகிகளை அழைத்து, அவர்கள் மூலம் அனுப்பி வைத்தார்.

     வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. தீட்சிதருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆலய நிர்வாகிகள் உள்ளே வந்து வணக்கம் கூறினார்கள். ‘என்ன விஷயம்? எதற்கு இதெல்லாம்?’ என்று கேட்டார் தீட்சிதர். ‘சுவாமி, தங்கள் அன்னை இந்த திவ்விய தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் - கமலாம்பிகை இதனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மறுக்காமல் இதனைப் பிரசாதமாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும்!’ என்று சொன்னார்கள். தீட்சிதர் கண்களை மூடிக் கொண்டு, கரங்குவித்து, கமலாம்பிகையை வணங்கிப் பாடிவிட்டு, அந்த சாமான்களைக் கொண்டு வந்து வைக்க அனுமதித்தார். தீட்சிதரின் மனைவி அந்தத் தெய்வீக அருளை எண்ணி எண்ணி மனம் உருகிப் போனாள்” என்று நிறுத்தினார் அரசர்.

     “சுவாமி! என்னிடம் கூறிய போது அந்தத் திருவாரூரில் தாசிக்கு மகான் அருளியதாகக் கூறினீர்களே? கதை முடிந்து விட்டதா?” என்று கேட்டாள் அகல்யாபாய்.

     “பொறு அகல்யா! கதை இன்னும் முடியவில்லை. மேலே சொல்லுவதைக் கேள்! மேலே சொல்லுவதைக் கேள்! தாசி கமலத்துக்கு இந்தச் செய்தி தெரிந்தது. அவரை நாடி அவருடைய இல்லத்துக்கு வந்து வணங்கினாள். ‘சுவாமி! எப்படியோ தங்கள் சிரமம் தீர்ந்தது. தாங்கள் கஷ்டப்படக்கூடாது என்று என்னுடைய ஐயனையும் தேவியையும் வேண்டிக் கொண்டேன். அவர்கள் கருணை கூர்ந்து தங்களுடைய சிரமத்தைப்போக்கி விட்டார்கள்!’ என்று சொல்லிக் கண்ணீர் உகுத்தாள்.

     தீட்சிதர் கருணை நிறைந்த குரலில், ‘நான் திரும்பி அனுப்பியதற்காக வருத்தப்பட வேண்டாம் அம்மணி! உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கியே தியாகராசப் பெருமானும் கமலாம்பிகையும் எனக்கு அருளியதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள்!’ என்றார்.

     ‘சுவாமி! தாங்கள் எப்போதும் சம்ஸ்கிருத மொழியிலேயே கிருதிகளை உருவாக்குகிறீர்கள். நான் அவ்வளவு தூரம் படித்தவள் அல்ல! எனது தாய்மொழி தெலுங்கு. அந்த மொழியில் எனக்குப் புரியும்படி தாங்கள் இரண்டு கிருதிகளை எனக்காக இயற்றி அருள வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டாள். தீட்சிதர் அவ்வாறே தோடி ராகத்தில் ‘ரூபே மூஜுச்சி’ என்ற வர்ணத்தையும் ‘நிசதி’ என்ற ஸ்ரீரஞ்சனி ராக தெலுங்குதாருவையும் இயற்றித் தெலுங்கு மொழியில் பாடியும் காட்டினார்.

     அவள் தேவதாசியாக இருக்கலாம். ஆனால் அவளுடைய தெய்வப் பற்றும், குருபக்தியும் அவரை மிகக் கவர்ந்து விட்டது. அதற்காகவே காலம் எல்லாம் கமலத்தின் பெயர் நிலைத்து நிற்கும்படி இரண்டு கிருதிகளை அபூர்வமாகத் தெலுங்கில் இயற்றிவிட்டார்!

     யாரையும் அவர்களுடைய குலத்தை வைத்து மதிப்பிடக் கூடாது அகல்யா! சேற்றிலும் செந்தாமரை முளைக்கிறது அல்லவா? தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அந்த அம்மையார் யார்? கோவலனுக்கும் தாசியான மாதவிக்கும் பிறந்த மகள் அல்லவா? சித்திரசேனா அந்தக் குலத்தில் பிறந்தவளாக இருக்கலாம். ஆனால் அவளுடைய அபூர்வக் கலைத்தொண்டை நாம் நன்கு மதிக்க வேண்டாமா? கலைமகளின் அருள்பட்ட இடம் எதுவானாலும் அது எனக்குச் சொர்க்கம் அகல்யா! அதனால் தான் தினந்தோறும் நான் சரசுவதி மஹால் நிலையத்தில் நுழையும் போதெல்லாம் அங்கே வரும் அறிஞர்கள் காலடிபட்ட படியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். அது வெறும் நூல் நிலையம் அல்ல அகல்யா! கலைமகள் வாழும் திருக்கோயில்!” என்று கூறி, உணர்ச்சிப் பெருக்கால் நாத்தழுதழுக்க நிறுத்திக் கொண்டார் சரபோஜி.

     அகல்யாதேவியின் விழிகளும் அதை உணர்ந்து நீரில் மிதந்தன. “சுவாமி! நான் கூறியதில் தவறு ஏதேனும் இருப்பின் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி அரசரின் தாளைத் தொட்டு வணங்கினாள். அரசர் அவளை அள்ளி எடுத்து, முதுகில் தட்டி ஆறுதல் கூறினார்.

     அவ்வளவையும் இரகசியமாகவே நின்று கவனித்துக் கொண்டிருந்த சுலக்‌ஷணா, கண்களில் துளிர்த்த நீரை மெல்லத் துடைத்தபடி அங்கிருந்து நழுவிப் போனாள்.

     மன்னரின் காசி யாத்திரைக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன. தனது அதிகாரிகளை அழைத்து, மகன் சிவாஜியையும் வைத்துக் கொண்டு தாம் காசி யாத்திரையை முடித்துத் திரும்பும் வரையில் சிறப்பாக விழாக்கள் எந்தெந்த வகையில் நடக்க வேண்டுமோ அவற்றுக்கான உத்தரவுகளை அளித்தார் மன்னர்.

     அரண்மனையில் விழாக்கள் எப்படி நடைபெற வேண்டும்? ரெசிடெண்ட் துரை அவற்றில் என்னென்ன விதத்தில் பங்கு பெற வேண்டும்? கிறிஸ்துமஸ், ஜனவரி முதல் தேதி ஆகிய பண்டிகைகளுக்கு ரெசிடெண்ட் துரைக்கும் மற்ற ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் என்னென்ன மரியாதைகள் செய்யப்பட வேண்டும்? சமஸ்தான அதிகாரிகளுக்கு சிமோலங்கணமான இரண்டாவது தினத்தில் என்னென்ன மரியாதைகள் செய்யப்பட வேண்டும்? காசி யாத்திரைக்கு அரசருடன் செல்லும் அதிகாரிகள், பணியாளர்களின் இல்லங்களில் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு, மேலும் எந்தவிதமாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்? அரச குடும்பத்தில் இளவரசன் சிவாஜியும் அவனது தங்கை சுலக்‌ஷணாவும் வெளியே செல்ல எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும்? எவ்வளவு நாட்களுக்கு அவர்கள் ஒன்றாக வெளியே சென்று தங்கலாம்? அரசரின் பிறந்த நாள், வளந்த பஞ்சமியன்று நடக்கும் தர்பார், தேவஸ்தானங்களில் ரத உத்ஸ்வம், மடங்களில் வியாசபூஜை ஆகியவை எப்படி கொண்டாடப்பட வேண்டும்? பௌர்ணமி இரவில் தானதர்மம், சமஸ்தானத்திற்காகப் பாக பூஜை ஆகியவை எப்படி நடைபெற வேண்டும்?

     *இத்தனை விவரங்களையும் எழுத்து மூலமாக எழுதி உத்தரவுகளை அளித்தார் மன்னர் சரபோஜி. யாத்திரைக்குத் தன்னுடன் எடுத்துச் செல்ல எட்டுப் பெட்டிகளில் மருந்துகள், பெயர்கள், அளவு ஆகியவற்றை கட்டி வைக்கச் செய்தார். சமஸ்தான மருத்துவரைத் தவிர டாக்டர் எட்டன் என்ற ஆங்கிலேய மருத்துவரையும் அழைத்துக் கொண்டார்.

     (* தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் - கே.எம்.வெங்கட்ராமய்யா.)

     சென்னை சென்று ஆந்திர மாநிலம் வழியாகப் பூரி ஜெகந்நாதரின் திருத்தலத்தைப் பொங்கல் பண்டிகையன்று அடையுமாறு திட்டமிடப்பட்டது. அரசர் தனிப் பல்லக்கிலும் அரச மாதேவியர் தனித்தனிப் பல்லக்கிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கூடவே காவலுக்கு குதிரையில் ஆயுதங்களும் துப்பாக்கியும் ஏந்திய வீரர்கள் வந்தார்கள். ஆட்களும் சாமான்களை வைத்த வண்டிகளும் தொடர்ந்து வர ஏற்பாடாயிற்று.

     செல்லும் வழியில் ஆங்காங்கே தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க, கும்பெனி சர்க்கார் அந்தந்த ஊரில் உள்ள தாசில்தார்களுக்கு ஆணை பிறப்பித்தது. மன்னர் திரும்பி வர சுமார் இரண்டரை ஆண்டு காலத்துக்கு மேல் ஆகும் எனக் கணிக்கப்பட்டு, அதுவரையில் அவருக்கு அவ்வப்போது தஞ்சையைப் பற்றிய செய்திகள் குதிரை வீரர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

     மன்னரின் யாத்திரை நன்கு முடிந்து திரும்பி வரச் சிறப்பு வழிபாடுகள் வெவ்வேறு ஆலயங்களிலும், கிறித்துவத் தேவாலயங்களிலும், தர்க்காக்களிலும் நடத்தப்பட்டன. குறுநில மன்னர்கள் தஞ்சைக்கு வந்து தங்கி இருந்து அரச குடும்பத்தினரை வழி அனுப்பி வைத்தார்கள்.

     எவ்வளவோ உறுதியுடனிருந்தும் சுலக்‌ஷணாவைப் பிரிந்து விடைபெறும் போது யமுனாதேவியும், அகல்யாதேவியும் கண்ணீர் விட்டு விட்டனர். கூட இருந்த சிவாஜி தனது தங்கையைச் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

     சற்று விலகிக் கூட்டத்தினரிடையே இருந்த புவனமோகினியைப் பார்த்து விட்டாள் அரசி அகல்யாதேவி. ஆனால் அவளை அழைக்கவோ, ஏதும் சொல்லவோ முற்படவில்லை. மன்னர் சரபோஜி இதைக் கவனித்தார். அவளை அருகே அழைத்து ஆசி கூறினார். அவளுக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி சார்க்கேலிடமும் கூறினார்.

     யாத்திரைக் குழு ஊர்வலமாகப் புறப்பட்டது.

     திரையிட்டு மூடிய பல்லக்கில் அமர்ந்து கொண்டாள் அகல்யாபாய். அவள் மனதில் என்னென்னவோ நினைவுகள் சுழன்று சுழன்று வந்தன. சிறிது தூரம் போனதும் திரையை விலக்கிப் பார்த்தாள். தூரத்தில் அரண்மனை வாயிலில் சிவாஜியும், சுலக்‌ஷணாவும் நின்று கையசைப்பது தெரிந்தது. கூடவே அவர்களுடன் நின்று புவனமோகினியும் அவர்களைப் பார்த்துக் கையை அசைப்பதுத் தெரிந்தது.

     அதைக் கண்டதும் அகல்யாவின் மனம் அதிர்ச்சி அடைந்தது. கண்களை மூடிக் கொண்டு, பிருகதீசுவரரை மானசீகமாக வணங்கி, ‘எல்லாம் நல்லபடியாக நடந்தேறத் தாங்கள் தான் அருள்புரிய வேண்டும் சுவாமி!’ என்று வேண்டிக் கொண்டாள் இளையராணி...


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்

1861 | 1862 | 1863 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 2017


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)


gowthampathippagam.in
மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
gowthampathippagam.in
தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy

உங்கள் கருத்துக்கள்


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)

தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)

புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்

பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம் :  அபிதா

சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை

ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்

ரமணிசந்திரன்

சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்

சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்

க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு

கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்

மகாத்மா காந்தி :  சத்திய சோதனை

ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி

பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி

என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி

விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்

கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)

பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)

ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்

வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்

சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை

மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா

கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்

ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை

திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்

ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை

முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்

நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம்

இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை

உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா

பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை

கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்

பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா

ஆன்மீகம் :  தினசரி தியானம்