5. ஆற்றங்கரையில் அரச குடும்பம்

     வளைபடும் முத்தம் பரதவர் பகரும்
     கடல் கெழு கொண்கன் காதல் மடமகள்
     கெடலரும் துயரம் நல்கி
     படல் இன் பாயல் வௌவியோளே!

               - ‘வளைப்பத்தி’ல் புலவர் அம்மூவனார்

     மஞ்சத்தில் இரவு முழுவதும் பல்வேறு நினைவுகளுடனும் கனவுகளுடனும் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தாள் அகல்யாபாய். மன்னர் அவளைத் தூங்க அனுப்பிவிட்டு, யமுனாபாயின் சயன அறைக்குப் போய்விட்டார். அவர் உடன் இருந்திருந்தாலும் அவரிடம் ஏதேனும் சொல்லிச் சமாதானமாகப் பதில்களைப் பெற்றிருப்பாள். அந்த விசாலமான தோள்களில் சாய்ந்து தனது மனத்தின் பாரத்தைத் தவிர்த்துக் கொண்டிருப்பாள்.

     ஆனால், அது இன்று சாத்தியமாகவில்லை. ஏற்கெனவே ஒதுங்கிப் போய்விட்ட மூத்த ராணி, மன்னர் வராமலேயே போனால் வருத்தமும் ஏமாற்றமும் அடையக்கூடும். அந்த நினைவிலேயே அவரும் யமுனாவைத் தேடிப் போயிருக்கலாம். எண்ணும் போது சற்று வேதனையாக இருந்தது. இந்நேரம் மன்னனின் அரவணைப்பில் அக்காவின் மென்மையான உடல் கனிந்து போயிருக்கும். அவளுக்கு அந்த சுகமும் கிடைக்கவில்லையே?

     திருவையாற்றுக்கு சிவாஜியையும் சுலக்‌ஷணாவையும் அழைத்துப் போவது என்று அரசர் தீர்மானித்து விட்டார். முடிவு செய்துவிட்டால் அவருடைய மனத்தை யாராலும் மாற்ற முடியாது. ஆலயத்துக்குப் போய் வரலாம். ஐயாறப்பனையும் - அறம் வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து திரும்பலாம்; ஆனால் அந்த தேவதாசிகள் ஆடுவதைக் கள்ளம் அறியாப் பெண் அருகே அமர்ந்து பார்க்க அனுமதிக்கலாமா? ஏற்கெனவே ஆசையை சுடர்விடச் செய்துவிட்ட அவள், அதை வளர்க்கவும் காரணமாக இருப்பதா?


இனிப்பு தேசம்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தமிழ் சினிமா 100: சில குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy

அறம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

காலகண்டம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

மாபெரும் தமிழ்க் கனவு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

வீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.330.00
Buy

வஸந்த்! வஸந்த்!
இருப்பு இல்லை
ரூ.130.00
Buy

பேலியோ டயட்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மறக்கவே நினைக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சதுரகிரி யாத்திரை
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

கொலையுதிர் காலம்
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

சின்னஞ்சிறு பழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

மகாநதி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இரட்டையர்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஆட்கொல்லி
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

காசி யாத்திரை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
     தேவதாசிகள் மகரகண்டி, ஐங்கலச ஜிமிக்கி, காதுப்பட்டை, கைமோதிரம், கை உருமாலை ஆகியவற்றை அணியக்கூடாது. ஆயினும் சுந்தரிக்கு அரசர் அவற்றை அணிய சலுகைகள் கொடுத்திருந்தார். அவளுடைய ஆடற் கலைக்குக் கிடைத்த பாராட்டாக அது இருக்கக்கூடும். இருந்தாலும், சுந்தரியின் நாட்டியம் என்றாலே அரண்மனையில் யாருக்கும் பிடிப்பதில்லை. அரசரிடம் உரிமை கொண்டாடுவதைப் போல அவள் மன்றத்திலேயே நடந்து கொள்வாள். நயனங்களின் அசைவால் கவர்ச்சியைக் காட்டிக் கொள்வாள். அவள் நாட்டியம் என்றாலே அதனால் தான் அகல்யா போக விரும்பவில்லை.

     நினைவுகள் அலை புரண்ட வண்ணம் இருந்தன. விடியற்காலை நேரத்தில், மஹாலில் மணி முழங்கிய ஒலி கேட்டது. அரைக்கனவில் அதைக் கேட்ட வண்ணம் அகல்யா உறக்கத்தில் அழுந்திப் போனாள். காலைக் கதிரொளி முகத்தில் பரவும் நேரத்தில், தாதி தன்னை எழுப்பத் துயில் நீங்கி எழுந்தாள்.

     முற்பகல் பூஜை முடிந்த பின் திருவையாற்றுக்குப் புறப்பட வேண்டும் என்று அரசரிடமிருந்து செய்தி வந்து விட்டது. நீராடுவதற்கு அவசரமாய்ப் புறப்பட்டுச் சென்றாள் அகல்யா. போகும் போது சுலக்‌ஷணாவை எழுப்பித் தயார் செய்ய வேண்டும் என்று தாதியிடம் சொல்லிவிட்டுப் போனாள். அன்று காலையில் சாயாதானம் செய்வதாக நிச்சயித்திருந்தாள். அதற்குத் தாமிரப் பாத்திரமும் உருக்கிய நெய்யும் தயார் செய்து வைக்கும்படி சொல்லிவிட்டுப் போனாள் அகல்யா.

     நீராடிப் புத்தாடை அணிந்து நெற்றியில் குங்குமம் துலங்க, மணையில் வந்து அமர்ந்தாள் அகல்யா. அம்மனுக்கு பூஜை செய்துவிட்டுத் தானம்பெற்றுச் செல்ல புரோகிதர் வந்திருந்தார். பூஜை நடைபெறும் போது மகளை அழைத்து வரச் செய்து வணங்கச் செய்தாள். அதன் பின் அவளுடைய கையாலேயே, அந்த தானத்தையும் வழங்கச் செய்தாள்.

     புரோகிதர் போன பிறகு, “இதுவரை நான் சாயாதானம் செய்ததே இல்லையே அம்மா? இது எதற்கு?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா. “தாமிரப் பாத்திரத்தில் உருக்கிய நெய்யை வைத்து அதில் முகம் குனிந்து தனது நிழலைப் பார்க்கும் போது, அந்த இளமையும் அழகும் வாடாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம்!” என்றாள் அகல்யா.

     “அப்படியா! ஆனால் நான் அப்படி எதையும் வேண்டிக் கொள்ளவில்லையே அம்மா?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     “உன்னை எனக்குத் தெரியாதா? தானம் கொடுக்கும் வேளையில் நீ ஏதாவது குறுக்குக் கேள்வி கேட்டாயானால், என் மனம் வேதனைப்பட்டிருக்கும். ஆகையால் முதன் முதலாக நீ சாயாதானம் அளிக்கும் சமயம், அப்படி ஒரு சந்தர்ப்பம் வரவேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். நீ முகம் குனிந்து பார்க்கும் நேரத்தில் உனக்காக நானே வேண்டிக் கொண்டுவிட்டேன்!” என்று மகளை அணைத்துக் கொண்டாள் அவள்.

     “அம்மா - நல்ல அம்மா” என்று கூறிச் சோழிப் பற்கள் தெரியச் சிரித்தபடி, தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள் சுலக்‌ஷணா. அந்த வேளையில் உவகை பூக்க, மனம் மணக்க, நெஞ்சு மலர நெகிழ்ந்து போனாள் அன்னை.

     திருவையாற்றுக்குப் புறப்பட அலங்கார ‘கோச்சு’ வண்டியும் உடன்வர குதிரைகளும் தயாராக நின்றன. கொடி மரியாதையும், துப்பாக்கி மரியாதையும் செய்யப்பட்டது. குதிரை வீரர்கள் முன்னே செல்ல மன்னரின் கோச்சு வண்டி புறப்பட்டது. மெல்லிய சல்லாத் துணியின் வழியே கடை வீதியைப் பார்த்த வண்ணம் வந்தாள் சுலக்‌ஷணா.

     “மகளே! இன்று தரிசனத்தில் அம்மனுக்கு நான் காணிக்கையாகக் கொடுத்த கல்லிழைத்த கிரீடத்தையும், காதணியையும் பார்க்கப் போகிறாய்! அதற்குரிய வைரம் வட நாட்டிலிருந்து சிறப்பாகத் தருவிக்கப்பட்டது. உன்னுடைய தாய் உடன் இருந்து தேர்ந்தெடுத்தது!” என்றார் அரசர்.

     “அப்பா! அவளிடம் சொல்லி ஆசையைத் தூண்டி விட்டு விடாதீர்கள். அதே போல தனக்கும் ஒரு காதணி வேண்டும் என்று அவள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!” என்றான் சிவாஜி குறும்பாக.

     “அதில் என்ன தவறு அண்ணா? பெண்கள் காதணியைக் கேட்காமல் உடைவாளையா வாங்கித் தரச் சொல்வார்கள்?” என்று திருப்பிக் கேட்டாள் சுலக்‌ஷணா. அவர்களுடைய வாதத்தைக் கேட்டு இளநகை அரும்ப அமர்ந்திருந்தாள் இளையராணி.

     கோச்சு வண்டி நின்றது.

     “என்னம்மா ஆயிற்று? ஏன் வண்டி நின்று விட்டது?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா. திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தாள். ஆற்றில் நீர் நிறைந்து செல்வது தெரிந்தது. குதிரை வீரர்கள் கீழே இறங்கித் தெப்பத்தைக் கரையில் நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.

     “பார்த்தாயா சுலக்‌ஷணா? நம்முடைய ‘கோச்சு’ வண்டியும் குதிரைகளும் அப்படியே தெப்பத்தில் ஏறப் போகின்றன. தெப்பம் ஆற்றைக் கடந்து மறுகரையை அடைந்ததும், வண்டி மறுபடி சாலையில் ஓடத் தொடங்கும்!” என்றான் சிவாஜி.

     “அப்படியானால் திருவையாற்றுக்கு இப்படி ஆற்றைக் கடக்காமல் போகவே முடியாதா அண்ணா?” என்று கேட்டாள் சுலக்‌ஷணா.

     “முடியாது! அது மட்டுமல்ல, இப்படி ஐந்து முறை நாம் ஆற்றைக் கடந்து போயாக வேண்டும். அதனாலேயே ஐயாறு என்று அந்த ஊருக்குப் பெயரும் ஏற்பட்டது. ஈசனுக்கும் ஐயாறப்பன் என்று பெயர்!”

     “நல்லது அண்ணா! நாம் ‘கோச்சு’ வண்டியிலிருந்து இறங்காமலே போய்விடுகிறோம். தெப்பம் நம்மை அப்படியே அழைத்துக் கொண்டு போய்விடுகிறது. சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? நடந்தும் பரிசலில் ஏறியும் போக வேண்டியதுதானா?”

     தங்கையின் கேள்விக்குப் பதிலை நாடித் தந்தையை நிமிர்ந்து பார்த்தான் சிவாஜி. மன்னர் சரபோஜியின் முகம் ஒரு கணம் வாடிற்று.

     “உண்மைதான் மகளே! நீ கேட்கும் கேள்வி என்னுடைய மனத்தையும் உறுத்திக் கொண்டிருக்கிறது. காவிரி தன் வெள்ளத்தால் சேதம் ஏற்படாமலிருக்க ஆங்காங்கே சிறு அணைகளும், இதைப் போல சாலைகளில் பாலங்களும் அமைக்க, நான் கவர்னருக்கு எழுதி அனுப்பி இருக்கிறேன். இதுவரையில் அவரிடமிருந்து பதில் வரவில்லை. அப்படி பதில் கிடைக்காவிட்டால் இந்தப் பாலங்களை நானே என் செலவில் கட்டி விடுவதாக இருக்கிறேன். வெண்ணாறும் குடமுருட்டியும் பிற ஆறுகளும் என்றென்றும் என் பெயரைச் சொல்லும் பாக்கியம் எனக்கே கிடைக்கட்டும்” என்றார் அரசர்.

     தெப்பத்தில் ‘கோச்சு’ வண்டியில் அமர்ந்தபடி ஆற்றைக் கடந்து செல்வதை ரசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுலக்‌ஷணா.

     பசுமையான வயல்களும், தோப்புகளும் கண்ணைக் கவர்ந்தன. குயில் கூவிற்று. அக்காக் குருவி கத்திற்று. காவிரி வெள்ளம் மோதி மோதிப் பெரிய பாம்பு மூச்சுவிட்டுப் புரள்வது போல அசைந்தது. யானை நகர்ந்து கொடுப்பதைப் போலப் புரண்டது. மீன் குத்திப் பறவை ஒன்று தண்ணீருக்குள் செங்குத்தாகப் பாய்ந்து முழுகிச் சிலுப்புவதைப் பார்த்தவள், “தந்தையே! அது என்ன பறவை!” என்று வியப்புடன் கேட்டாள்.

     “அது மீன் குத்தி மகளே! உனக்குத் தெரியாதா? நீ பார்த்ததில்லையா?” என்று பரிவும் பரிதாபமும் கலந்த குரலில் கேட்டார் மன்னர்.

     “நான் அரண்மனையை விட்டு வெளியூருக்கு வந்ததில்லையே? இதைப் போல ஆற்றையும், கழனிகளையும், சோலைகளையும் இப்போதுதானே பார்க்கிறேன்? அரண்மனையில் கிளி, மயில், புறா போன்ற பறவைகளைத் தவிர வேறு எதையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லையே!” என்று கொஞ்சம் மனக்குறையுடன் சொன்னாள் சுலக்‌ஷணா.

     “நீ நிறைய பார்க்க ஏற்பாடு செய்கிறேன் மகளே! காவேரியின் மடியில் தவழும் இயற்கையின் அழகை நாமே பார்த்து ஒன்றிப் போகாவிட்டால் எப்படி? இந்த இயற்கையின் அழகுதான் கவிஞர்களையும், கலைஞர்களையும் பாடவும் இசைக்கவும் வைத்தது. இங்கே கண்டியூருக்கு அருகில் திருப்பூந்துருத்தி என்ற ஊரில் தான் ஸ்ரீநாராயண தீர்த்தர், ‘கிருஷ்ணலீலா தரங்கிணி’யைப் பாடினார். கண்ணனின் லீலைகளை அற்புதமாக இசை வடிவில் உருவாக்கினார். நாம் இப்போது போகப் போகிறோமே அந்த திருவையாற்றில் தான், இப்போது தியாகராஜ சுவாமிகள் இராமபிரானைப் பற்றி நயம் நிறைந்த கீர்த்தனைகளை உருவாக்கிப் பாடிக் கொண்டிருக்கிறார். நாம் தஞ்சைக்குத் திரும்பிப் போன பிறகு ஒருநாள் உன்னை நூல் நிலையத்துக்கு அழைத்துப் போகிறேன். எல்லா கலைத்துறைகளிலும் கிடைக்கும் அரிய தகவல்களை அங்கே சேகரித்துத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அங்கே வந்து பார். அப்புறம் நீ அந்தப்புரத்துக்குத் திரும்பி வரக்கூட விரும்பமாட்டாய். ஏனென்றால் நாம் வாழுமிடம் சாதாரண அரண்மனை; அதுவோ சரசுவதி தேவியே கொலுவிருக்கும் சரசுவதி மஹால்” என்று உணர்ச்சி ததும்பச் சொன்னார் சரபோஜி.

     “தந்தையே! இப்போது நீங்கள் தியாகராஜ சுவாமிகள் என்று குறிப்பிட்டீர்களே? அந்த மகானை நாம் இன்று பார்க்கப் போகிறோமா? நாம் அழைத்தால் அவர் கோவிலுக்கு வருவாரா? நாம் விரும்பினால் அவருடைய இசையைக் கேட்க முடியுமா? நாம் விரும்பும் கீர்த்தனைகளை அவர் பாடுவாரா?” என்று ஆவலோடு குறுக்கிட்டுக் கேட்டான் இளவரசன் சிவாஜி.

     சரபோஜி ஒருமுறை பெருமூச்சு விட்டார். ஒரு கணம் ஏதோ யோசனையில் இருந்தார். பிறகு தயங்கிய குரலில், “எனக்குத் தெரியாது மகனே. அந்த சுவாமிகளின் தாய்வழிப் பாட்டனார் கிரிராஜ கவி என்பவர். அவர், ராஜமோகனக் குறவஞ்சி, சாஹேந்திர சரித்திரம் போன்ற அற்புத நூல்களைப் படைத்தவர். நமது முன்னோரான சாஹஜி மகாராஜாவுடன் இருந்து பல சாகித்தியங்களைப் புனைந்தவர். அவர் வழி வந்த சுவாமிகளை அவரே பாடக் கேட்டு மகிழ வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். ஆனால்...” என்று நிறுத்தினார் மன்னர்.

     “ஆனால் என்ன தந்தையே? என்ன தயக்கம்?”

     “அவரைப் பற்றி நான் கேள்விப்படுவது வேறு. பக்தியில் தோய்ந்து திளைத்த அந்த மகான் லௌகிகமான வசதிகளையும், செல்வங்களையும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்று சொல்லுகிறார்கள். தமது கீர்த்தனைகளைக் கூட அந்த மகான் தனது உஞ்சவிருத்தியில் சீடர்களுடன் பாடியபடி தெருவில் நடந்து வருவதாகவே கேள்விப்படுகிறேன். மக்கள் அங்கேதான் அந்த தேவகானத்தைக் கேட்டு மகிழ்கிறார்கள். பாத்திரத்தில் அரிசியை இட்டு வணங்குகிறார்கள். இவையெல்லாம் சாதாரண மக்களுக்குச் சாத்தியமானவை. நம் போன்ற அரச குடும்பத்தினருக்கு அத்தகைய பாக்கியம் அவ்வளவு எளிதாகக் கிடைக்க முடியாதல்லவா?”

     “அவர் எங்கே குடியிருக்கிறார் தந்தையே?”

     “நமது முன்னோர் துளசிங்க மகாராஜா என்பவர் அவருடைய தந்தை இராமபிரும்மம் என்பவருக்குத் திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டைக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டிலேயே தான் இரு பகுதிகளில் அண்ணனும் தம்பியுமாக ஜபேசன் என்பவரும் தியாகராஜருமாக இருந்து வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

     “தந்தையே! நான் அங்கே போய்ப் பார்க்க முடியுமா?” என்று ஆவலுடன் கேட்டான் சிவாஜி.

     “மகனே! நீ என்ன சொல்லுகிறாய்? நீ யார் என்பதைக் கூட மறந்து பேசுகிறாயா?” என்று பதற்றத்துடன் குறுக்கிட்டாள் இளையராணி அகல்யாபாய். அவளுடைய தோளில் கையை வைத்து அவளை அமைதிப்படுத்துவது போலப் புன்னகை செய்தார் சரபோஜி.

     திருவையாற்றில் பஞ்சநதீசுவர சுவாமி சந்நிதியில் நின்று அரசரும் தேவியாரும் வழிபட்டனர். குழந்தைகள் இருவரும் கூட இருந்தார்கள். அர்ச்சனை முடிந்து பிரசாதம் பெற்று, தர்மசம்வர்த்தனி அம்மன் சந்நிதிக்குப் போனபோது, அம்மனுக்கு கல்லிழைத்த கிரீடம்ம் காதணியும் பூட்டியிருந்தார்கள். கண்களை மூடி அங்கே தன்னை மறந்து நின்றாள் இளையராணி.

     “அம்பிகே! பிரகதீசுவரர் ஆலயத்தில் ஒரு லட்சம் விளக்குகளை ஏற்றி ஒரு லட்சம் தாமரை மலர்களால் பூசித்தது போல இங்கேயும் செய்கிறேன். என்னுடைய கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடு. என்னுடைய குழந்தைகளுக்கு நல்ல புத்தியைக் கொடு. நானும் என் கணவரும் காசிக்குச் செல்லும் போது நல்லவை மட்டுமே அங்கும், தஞ்சையிலும் நடக்க உனது அருள் மழை பொழியட்டும். அறம் வளர்த்த நாயகியே! எங்கள் குலம் வளர அருள் செய்!” என்று வேண்டிக் கொண்டாள் அகல்யாபாய்.

     சுவாமி சந்நிதிக்கு நேரே வெளியே திறந்த வெளியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையைச் சுற்றிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மன்னரும், ராணியாரும் குழந்தைகளும் அமர, தனியாக ஆசனம் போடப்பட்டிருந்தது. விளக்கொளியால் சூழ்ந்த அந்த இடமே மாயாபுரியைப் போலத் தோன்றிற்று.

     நடனமாட வந்த கணிகையர் சுந்தரியும் விஜயாவும் மேடை அருகில் வந்து மன்னரை வணங்கி மேடை மீது ஏறினார்கள். அவர்கள் இருவரும் அணிந்திருந்த பட்டுடையையும், நகைகளையும் லேசான கசப்பு உணர்ச்சியுடன் பார்த்தாள் இளையராணி.

     சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய ‘சரபேந்திர பூபாள குறவஞ்சி’ இன்னும் முற்றுப் பெறவில்லை. அதில் அவர் எழுதி முடித்திருந்த பகுதியிலிருந்து சில பாடல்களை அங்கே ஐயாறப்பன் சந்நிதியில் பாடி ஆட வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த விருப்பத்தை நிறைவேற்றவே மன்னர் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டார்.

     அந்த இசை நாட்டிய நாடகத்தின் முழு வடிவத்தையும் தஞ்சைப் பெரியகோவிலில், சித்திரைத் திருவிழாவின் போது எட்டாம் நாளன்றும், அஷ்டக் கொடித் திருவிழாவின் போது - ஒன்பதாம் நாளன்றும், அடுத்த ஆண்டு மன்னர் காசியிலிருந்து திரும்பிய பின் நடித்துக் காட்டுவதாக இருந்தது. அதற்கு ஒரு முன்னுரை போலவே இதைப் பார்க்க ஒரு மணி நேரம் வந்திருக்க ஒப்புக் கொண்டிருந்தார் சரபோஜி மன்னர்.

     இசை ஒலிக்க, வாத்தியங்கள் முழங்க, நாட்டியம் ஆரம்பமாயிற்று. ஒளி மின்னி மறையும் மின்னலைப் போலக் கண்ணைப் பறிக்கும் அழகுடனும் கலைநயத்துடனும் ஆடினாள் சுந்தரி. பாதங்களின் அசைவுக்கேற்ப இடையும் கழுத்தும் கண்களும் அசைவது கவிதையின் நயமாக மிளிர்ந்தது. துள்ளிய பாதங்களுக்கு இணையாகக் கமலப் பூவாக விரிந்த கைகளும், முகபாவமும் கருத்தைக் கவர்ந்தன. விரகதாபமும், இன்பத்தின் துய்ப்பும், பிரிவின் ஏக்கமும் முகத்தில் தெரிய சுந்தரி ஆடிய போது அனைவரின் உணர்வும் கசிந்து உருகியது. நேரம் போனதே தெரியாமல் பார்த்து நின்ற அரசர், புஷ்பாஞ்சலி நடனம் வந்தபோது தான் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார்.

     நாட்டியம் முடிந்து படி இறங்கி வந்து இருவருமே மன்னரிடம் பொற்காசு முடிப்பைப் பெற்றுக் கொண்டனர். அது வரையில் அவர்கள் இருவரையுமே வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருந்த சுலக்‌ஷணாவைச் சிறிது கவலையுடன் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்த அகல்யாவும் இருக்கையை விட்டு எழுந்திருந்தாள்.

     பின் தாம் தங்குமிடத்துக்கு அரச குடும்பத்தினர் வந்து சேர்ந்ததும் சிவாஜி தந்தை அருகில் தயங்கியபடி நின்றான்.

     “ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா சிவாஜி?” என்று கனிந்த குரலில் கேட்டார் அரசர். அதற்கு இளவரசன் கூறிய பதிலைக் கேட்டுச் சற்றே அதிர்ச்சி அடைந்தார் சரபோஜி!


புவன மோகினி : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்