|
|
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும். |
திருக்குற்றாலக் குறவஞ்சி தற்சிறப்புப்பாயிரம்
விநாயகர் துதி
பூமலி யிதழி மாலை புனைந்தகுற் றாலத் தீசர் கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட மாமதத் தருவி பாயு மலையென வளர்ந்த மேனிக் காமலி தருப்போ லைந்து கைவலான் காவலனே. 1 முருகக் கடவுள்
பன்னிருகைவேல்வாங்கப் பதினொருவர்படைதாங்கப்பத்துத்திக்கும் நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப் பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த் தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ்தந்தானே. 2 திரிகூடநாதர்
கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ் சதர்வேதம் கிளைக ளீன்ற களையெலாஞ் சிவலிங்கம் கனியெலாம் சிவலிங்கம் கனிக ளீன்ற சுளையெலாஞ் சிவலிங்கம் வித்தெலாஞ் சிவலிங்க சொரூ பமாக விளையுமொரு குறும்பலவின் முறைத்தெழுந்தசிவக்கொழுந்தை வேண்டு வோமே.3 குழல்வாய்மொழியம்மை
தவளமதிதவழ்குடுமிப்பனிவரையின்முளைத்தெழுந்துதகைசேர்முக்கட் பவளமலை தனிலாசை படர்ந்தேறிக் கொழுந்துவிடடுப் பருவ மாகி அவிழுநறைப் பூங்கடப்பந் தாமரையு மீன்றொரு கோட்டாம்ப லீன்று குவலயம்பூத் தருட்கொடியைக் கோதைகுழல்வாய்மொழியைக் கூறுவோமே. 4 சைவசமயாச்சாரியார் நால்வருள் மூவர்
தலையிலே யாறிருக்க மாமிக்காகத் தாங்குகடலேழழைத்த திருக்குற்றாலர் சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச் செழித்தகுற வஞ்சிநாடகத்தைப் பாட அலையிலே மலைமிதக்க ஏறினானும் அத்தியிலே பூவையந்நாளழைப்பித் தானும் கலையிலே கிடைத்தபொருளாற்றிற் போட்டுக் கனகுளத்தில் எடுத்தானுங் காப்பதாமே. 5 அகத்தியமுனிவர், மாணிக்கவாசக சுவாமிகள்
நித்தர்திரி கூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி முத்தர்திரு மேனியெல்லா முருகவே தமிழுரைத்த முனியைப் பாடி இத்தனுவி லாத்துமம்விட்டிறக்குநாட்சி லேட்டுமம்வந் தேறா வண்ணம் பித்தனடித் துணைசேர்ந்த வாதவூ ரானடிகள் பேணுவோமே. 6 சரசுவதி
அடியிணை மலருஞ் செவ்வா யாம்பலுஞ் சிவப்பினாளை நெடியபூங் குழலு மைக்க ணீலமுங் கறுப்பினாளைப் படிவமும் புகழுஞ் செங்கைப் படிகம்போல் வெளுப்பாம்ஞானக் கொடிதனைத் திருக் குற்றாலக் குறவஞ்சிக் கியம்புவோமே. 7 நூற்பயன்
சிலைபெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச் செல்வருக்குந் தேவருக்கு மிரங்கி மேனாள் கொலைகளவு கட்காமங் குருத்து ரோகங் கொடியபஞ்ச பாதகமும் தீர்த்த தாலே நிலவணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப் பலவளஞ்சேர் குறவஞ்சி நாடகத்தைப்படிப் பவர்க்குங் கேட்பவர்க்கும் பலனுண்டாமே. 8 அவையடக்கம்
தாரிணை விருப்ப மாகத் தலைதனில் முடிக்குந் தோறும் நாரினைப் பொல்லா தென்றே ஞாலத்தோர் தள்ளு வாரோ? சீரிய தமிழ்மா லைக்குட் செல்வர்குற்றாலத் தீசர் பேரினா லெனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே. 9
|
எமது வலைதளங்கள் |
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |
| ||||||||||||||
|
|
|
|