http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



திருக்குற்றால மாலை

... தொடர்ச்சி ...

முன்வடி வாய்முன் னிருந்திட லேது முளைக்கருவாப்
பின்வடி வார்க்கும் வினைவடி வேதுகை பேணிநின்ற
என்வடி வேதுபின்யா னென்பதே தென்னை யாட்டிவைக்கும்
உன்வடி வேதுகொல் சொல்லாய்குற் றாலத் துறைபவனே 14

நில்லா வுடம்பி லுயிர் நின்ற தோவுயிர் நின்றிடத்தே
எல்லா வுடம்பு நிலைநின்ற தோவியல் சேர்வடிவம்
பல்லா வுயிரு மொன்றே புறம்போ பகையோவுறவோ
ஒல்லா மலோர்வழி சொல்லாய்குற் றாலத் துறைபவனே 15

வருநாள வர்கள் மனைசந்தைக் கூட்டம் வரவற்றநாள்
திருநாட் கழிந்த மடமொக்கு மேயிதைச் சிந்தித்துநான்
பருநாட் கழிப்பது பாரைய யான்பல நாளுமுன்னை
ஒருநாளிற் காண்ப துரையாய்குற் றாலத் துறைபவனே 16

வாசக் குழந்தையு மாய்மட வார்மண வாளனுமாய்
ஆசைப் பருவமது தப்பினா லந்த மாதருங்கண்
கூசக் கிழங்கொண்டு தோலாகி நாற்றம் குலைக்குமிந்த
ஊசச் சடமென்று போமோகுற் றாலத் துறைபவனே 17


திருத்தப் புகுந்திடி லண்டங்கள் கோடி திருத்துவையென்
கருத்தைத் திருத்தவுனக் கரிதோ கெளவை காட்டுங்கன்ம
வருத்தத்தை மாற்றவோர் மாற்றங் கொடாய்குழல் வாய்மொழியாள்
ஒருத்திக் கொர்பாகங் கொடுத்தாய்குற் றாலத் துறைபவனே 18

காணுறக் கண்டுனைப் போற்றறி யார்கடை யாம்பொசிப்பும்
வீணுறக் கங்களு மேகுறிப் பாரருள் வெள்ளத்தின்பால்
சேணுறக் கண்டு சிவயோக நித்திரை செய்யுமன்பர்
ஊணுறக் கங்குறிப் பாரோகுற் றாலத் துறைபவனே 19

நிறையும் பிரணவ மூடாச் சதுர்மறை நீண்டகொப்பா
அறைகின்ற சாகை கிளையா யறமுத னான்கரும்பிக்
குறைவின்றி ஞான மணநாறுந் தெய்வக் குறும்பலாவில்
உறைகின்ற முக்கட் கனியேகுற் றாலத் துறைபவனே 20

எல்லா வடிவு மொன்றானா லுமங்கங் கிருந்துநல்லார்
பொல்லா தெனவிளை யாட்டிய தாலது போல்மனத்திற்
கல்லாமை கற்பிக்கு மென்பாச நேசங் கருதிலன்பர்
உல்லாச நேசமொப் பாமோகுற் றாலத் துறைபவனே 21

அருவித் துறைபடிந் தாடிவெண் ணீறிட்டு னன்பர்தம்பான்
மருவிப் பணிலமறு கூடுவந் துன்னை வாழ்த்தும்வண்ணம்
கருவிப் பவமறு கூடுசெல் லாக்கதி காட்டுகண்டா
உருவிற் குவமையொன்றில்லாய்குற்றாலத் துறைபவனே 22

விருத்தரையும் வெல்லு மெல்லியர் நேசம் விடுத்துநின்பால்
இருத்தரை மாத்திரைக்கே ஐவ ரோடலை யேத்துமுண்மைக்
கருத்தரைக் கண்டு கருதாமற் சிந்தைக பாடஞ்செய்தால்
ஒருத்தரை நோவ தழகோகுற் றாலத் துறைபவனே 23

நானா ரெனதுடம் பேதுணர் வேதெனை நாட்டினைநீ
யானாரெனத் தெளியே னெளியேன் செண்ப காடவிசூழ்
கானார் சிவமது கங்கையின் மூழ்கக் கருணைசெய்தே
ஊனாற் பிறவி யொழிப்பாய்குற் றாலத் துறைபவனே 24

வேம்பே புழுவுக் கதிரசமாய் வெவ்விடம் கிடந்த
பாம்பே கலுழனுக் காரமுதாய்ப் பற்பல வுயிர்க்கும்
ஆம்போ தபேதமட் டூட்டிய தால்வினை யாம்பொசிப்பை
ஓம்பே னருளமு தூட்டாய்குற் றாலத் துறைபவனே 25

குன்றாத ஞானக் கனியை அஞ்ஞானக் கொடும்பசிக்குத்
தின்றே கவென்னினு மைவரொட் டார்திகைத் தேங்கிமனம்
கன்றா மலுன்னரு ளூடாடி யுள்ளனுங் கள்ளனும்போல்
ஒன்றா குநாளினி யென்றோகுற்றாலத் துறைபவனே 26

பொன்னென்று சொன்ன வுடனே மயக்குமென் புத்தியைநான்
என்னென்று சொல்லி திருத்திக் கொள்வேனெனை யீன்றுசெஞ்சோற்
பன்னென்று சொன்ன படிபோல வுள்ள படியை நெஞ்சில்
உன்னென்று போதித் தருள்வாய்குற் றாலத் துறைபவனே 27




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/thirikoodarasappar/thirukutralamaalai2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs