http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


திருக்குற்றாலப்பதிகம்
பண்- குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள் 1

பொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம்
கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்
அடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் 2

செல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்
வில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக
நல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள் 3


பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்
நக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள் 4

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்
இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர் 5

மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் குற்றாலம்
கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்
பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள் 6

நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீட்சோலைக்
கோல மஞ்ஞை பேடையொ டாடும் குற்றாலம்
காலன் தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்எம்
சூல பாணி நன்னகர் போலும் தொழுவீர்காள் 7

போதும் பொன்னு முந்தி யருவி புடைசூழக்
கூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம்
மூதூரிலங்கை முட்டிய கோனை மிறைசெய்த
நாதன் மேய நன்னகர் போலும் நமரங்காள் 8

அரவின் வாயில் முள்ளெயி றேய்ப்ப வரும்பீன்று
குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்
பிரமன் னோடு மாலறி யாத பெருமைஎம்
பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள் 9

பெருந்தட் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்
இருந்துண் டேரும் நின்றுட் சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் 10

மாட வீதி வருபுனல் காழி யார்மன்னன்
கோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்
நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே 11


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/thirugnanasambandar/thirukutralapathikam.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs