குகை நமசிவாய தேவர்

இயற்றிய

அருணகிரி அந்தாதி

     திருவண்ணாமலை என்னும் அருணகிரியில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் குறித்துக் குகை நமசிவாய தேவர் அழகான வெண்பாக்களால் இந்நூலைப் பாடியுள்ளார். இதன் காலம் 16-ம் நூற்றாண்டு.

காப்பு

சித்திதரும் புத்திதருஞ் செந்திருவைச் சேர்விக்கும்
பத்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்குங் - கொத்தி
யரிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த
கரிமுகனைக் கைதொழுதக் கால்.

நூல்

கார்கொண்ட மேனியனுங் கஞ்சனுங்கா ணாப் பெருமை
யார்கொண் டுரைசெய்வா ரம்புவியிற் - சீர்கொண்
டருணகிரி மேவுகின்ற வையாநீ வேண்டிக்
கருணைபுரி யாதிருந்தக் கால். 1

காலைமலர் தூவக் கருத்தறியா நாயேற்கு
வேலைவிட முண்ட விமலனே - மேலாய
வாசிகனே கண்பலித்து வாழ்விக்குஞ் சோணகிரித்
தேசிகனே நீகண்டாய் திக்கு. 2

திக்குவே றில்லைத் திருவுளமே யல்லாம
லிக்குவே ளைக்காய்ந்த வீசனே - மிக்கவிடந்
தன்னையுண்ட சோணகிரித் தாணுவே நாயேற்கும்
பின்னையுண்டோ நீயல்லாற் பேசு. 3

பேசுமவர் வஞ்சப் பிறப்பறுக்கு மென்றுலகில்
வீசுபுகழ் சோணகிரி வித்தகா - மாசிலா
வண்ணா மலையானே யன்னைவயிற் றென்னையுருப்
பண்ணா மலையாகண் பார். 4

பாராம னீயிருந்தாற் பார்மீதி னாயேனுக்
காராவார் சோணகிரி யண்ணலே - தீராப்
பிறப்பை யகற்றுதற்கும் பிஞ்ஞகனே சூழ்ந்த
விறப்பை யகற்றுதற்கு மின்று. 5

இன்று போ காவோ விருவினையு மும்மலமு
நின்றுதமி யேனை நெருக்காம - னன்றிதரு
மாரணனே சோணகிரி யத்தனே மாறேடுங்
காரணனே நீநினைந்தக் கால். 6

காலன் றனக்கஞ்சக் காரணமென் னெஞ்சமே
யால முகந்த வருணேசன் - கோலத்தை
நேசமுற்று நீகருதி னீங்காம நின்றலைக்கும்
பாசமுற்று நீக்கும் பரன். 7

பரமனீ யென்று பணிந்துருகிப் பாடிக்
கரஞ்சேர்த்து நீர்சோரக் கண்கள் - வரங்கேட்ட
வென்னவா வின்படியே யீந்தா யிதற்கருணை
மன்னவா காணேன்கைம் மாறு. 8

மாறுகொண்ட தக்கன் மனோரதமெல் லாந்தவிர்த்து
வீறுகொண்ட சோணகிரி வித்தகா - வாறுகொண்ட
செஞ்சடையாய் நின்னைத் தெரிசித்தல் வேண்டுமென்கண்
பஞ்சடையா முன்னே பரிந்து. 9

பரிந்தணிந்த வெண்ணீறும் பாம்புந்தீக் கண்ணு
மரிந்ததலை மாலை யழகுந் - தெரிந்து
நெருக்குமாம் வல்வினையை நீக்குமரு ணேசற்
கிருக்குமாங் கோலங்க ளேத்து. 10

கோலமுதற் றேடிநெஞ்சே கூப்பிட்டுங் காணாத
கோலங் குருவடிவு கொண்டேதா - னாலந்
தரித்தபிரான் சோணேசன் றான்முனிந்து வேளை
யெரித்தபிரான் வந்தா னிதென். 11

என்ன தவப்பயனோ வேழையேற் கென்றறியேன்
முன்னமறை காணாத முக்கண்ணா - நின்னையே
தேடுகைக்குஞ் சோணகிரித் தேசிகனே நின் புகழைப்
பாடுகைக்கும் பெற்ற பயன். 12

பெற்றோம் பலனைப் பிறந்ததனா னெஞ்சமே
யற்றோ மனத்தி லனவரதம் - பற்றுவா
ருள்ளலைக்குந் தீவினையை யோட்டு மருணகிரி
வள்ளலைக்கொண் டாட வரம். 13

வரம்பலிக்கு மெய்ஞ்ஞான வாழ்வே பலிக்குந்
திரம்பலிக்குஞ் செல்வம் பலிக்கு - முரம்பலிக்குஞ்
சோணா சலனைச் சுவாமிதனை யுள்ளத்தே
காணார் கருத்தென் கருத்து. 14

கருத்தி லருணேசன் கஞ்சமலர்த் தாளை
யிருத்தி நினைப்பாரை யென்றும் - வருத்துமோ
நாட்டும் பலவுயிரை நாடோறும் பின்றொடர்ந்து
வாட்டும் பிறவிநோய் வன்பு. 15

வன்பெருக்கிற் கன்மிதக்கும் வாய்முதலை பிள்ளைதரு
மென்புருக்கொள் பெண்ணாயிருக்குமே - யன்பருக்கு
நாட்டுகுரு சோணகிரி நாதனடி யார் மூவர்
பாட்டினிசை கேட்ட பரம். 16

பரமனரு ணேசன் பதம்பணியார்க் கென்றுங்
கருமஞ் சிதையுமெனல் கண்டோம் - அருமந்தக்
கூட்டுத் தலைபோய்க் கொடியதக்கன் வேள்வியிலே
யாட்டுத் தலையாகை யால். 17

ஆலம் வருவதுகண் டஞ்சி யமரர் குழாஞ்
சால மருண் டோடுஞ் சமயத்தி - லோலமென
நின்றா னுலகறிய நேசமடி யாரிடத்துக்
குன்றாத சோணகிரிக் கோ. 18

கோடி விதி மாளிற் குலாவுகம லக்கண்ண
னோடி வடவா லுறங்குமே - நாடுங்கா
லக்கண்ணர் கோடி யழியி னருணகிரி
நக்கனருள் சற்றே நகும். 19

நகுமானை யேந்தருணை நம்பா பிறப்பிற்
புகுவேனைக் காக்கும் புனிதா - தகுமென்னப்
பெற்றதுணை நீயல்லாற் பேருலகி னாயேனுக்
குற்றதுணை மற்றவரா ரோது. 20

ஓதக் கடனஞ்சை யுண்டசோ ணாசலனை
யோதக் கடனெஞ்சே யோதினாற் - பாதம்
பெறலாம் நமது பிணிமூப்புச் சாக்கா
டறலாங் கரையேற லாம். 21

ஆமென்று நம்பி அனுதினமும் போற்றினா
னாமென்று பற்றி நலமாகக் - காமித்துச்
சிட்டாகுஞ் சோணகிரி சிந்தித்தா னெஞ்சமே
விட்டேகும் வெய்ய வினை. 22

வெய்ய பிறவிதனை வேரறுக்குஞ் சோணகிரி
அய்யரடி யார் பாட்டுக் கல்லாமற் - றுய்யகரா
வாய்க்குமோ பிள்ளையுந்தண் வாரிதியிற் கன்மிதந்து
காய்க்குமோ வாண்பனையுங் காய். 23

காய நெகிழாமுன் கண்க ளிருளாமுன்
வாயிலுள்ள பல்லும் வழுவாமுன் - காயம்பார்த்
தோடிநமன் வாராமுன் னுள்ளமே சோணகிரி
நாடி நம வென்றே நட. 24

நடக்குங் குலங்கல்வி நம்மவென்பா ராசை
யடக்கும் வகைசற் றறியார் - தொடுக்கு நூல்
காட்டுமோ சோணேசன் கஞ்சமலர்த் தாளிணையைக்
கூட்டுமோ சொல்லீர் குலம். 25

குலமில்லார் வண்மைக் குணமில்லார் கல்வி
நலமில்லா ரானாலு நன்றே - வலம்வந்
தரிய திருவருணை யண்ணலுக்கா ளாவார்
பெரியவர்க்கு மேலான பேர். 26

பேரும் பெருவாழ்வும் பிள்ளைகளும் வேண்டுவா
ராரும் பரவு மருணேசன் - சீரை
உறக்கத் திலுமறக்க வொண்ணா துரைக்கிற்
பிறக்கக் கிடையாது பின். 27

பின்னறியேன் முன்னறியேன் பேதையேன் பாமாலை
யென்னறியேன் சோணகிரி யீசனே - நின்னருளைக்
கொண்டுரையா நிற்குங் குறியுங் குறிதேடுங்
கண்டுரையா தென்றன் கருத்து. 28

கருத்தறிந்த மெய்யடியார் கண்காண வெள்ளை
யெருத்தில் வருஞ் சோணகிரி யீசா - பருத்த
வலங்கார நால்வேத னைந்தலையு ளொன்றைக்
கலங்காம னீயறுத்தாய்க் கண்டு. 29

கண்டுமிலை யென்பார் கருத்துநா வும்வாழி
யண்டர்கோ வேயருணை யண்ணலே - விண்டுவாஞ்
சங்கையெடுத் தோன்கண் சரணத்திற் சாற்றுமுன்றன்
செங்கையிலே வேதன் சிரம். 30

சிரமாலை தானணிந்து சேவிலுகந் தேறி
யருமா மறைதேடு மண்ணல் - வருமா
முனிக்கூட்டம் போற்று முதல்வனரு ணேச
னினிக்கூட்டான் றுன்பத் தெமை. 31

எமையாளுஞ் சோணகிரி யீசா நின்பாகத்
துமையாளு நீயு முகந்த - சமயத்
திருக்கின்ற கோலத்தை யான்காண வேண்டி
யிருக்குங் கருணைசெய்வா யென்று. 32

என்று மருணேச னிருபதத்தை நம்பாதார்
குன்றில் வனத்திற் குகையதனிற் - சென்று
திரிந்தென் பலமருந்து தின்று சிலகால
மிருந்தெ னிராமலிருந் தென். 33

ஏனமனந் தேட விணையடியுஞ் சீர்முடியுந்
தானவற்றிற் கெட்டாத தாணுவாம் - ஞானத்
தழல்கண்ட மேனித் தலைவனரு ணேசன்
கழல்கண்டார் காணார் கரு. 34

கருமா முகில்வண்ணன் கஞ்சனுக்கு மெட்டாப்
பெருமான் விடையேறும் பெம்மா -- னொருமான்
மழுவேற்குஞ் சோணகிரி மன்னனடி யாரைத்
தொழுவேற்கு முண்டோ துயர். 35

துயர்கொண்டு நாளுந் தொலையாப் பிறப்பி
லயர்கின்ற நாயேற்கு மாவோ - வுயர்தவத்தோ
ராரும் பரவு மருணேச ரம்புயத்தாள்
சேருங் கருத்தொருக்காற் செப்பு. 36

செப்பரிய மால்பிரமர் சிந்தைதனக் கெட்டாத
வப்பரிய சோணகிரி யப்பனே - யெப்பொழுதும்
பெண்ணைவிட்டு நீங்காநின் பேரழகு சந்ததமென்
கண்ணைவிட்டு நீங்காது காண். 37

காணா ரரிபிரமர் கஞ்சமலர்த் தாளிணையை
நாணாம னான்காண நாடியே - சேணாட
ராயும் புகழருணை யண்ணா மலையானே
மாயுந் தமியேன் மனம். 38

மனத்திற் பயமறிந்து மாமுனிவர்க் காகச்
சினத்திற் புரமெரித்த சீமா னனத்தனருள்
தக்கன் றலையறுத்த தாணு வருணகிரி
நக்கன் றுணைமனமே நம்பு. 39

நம்பியிரு நெஞ்சமே நாளு மருணகிரி
யும்பர்கோ னன்றுரைத்த வுண்மையை - நம்பிக்
கெடுத்தாலுஞ் சோணேசன் கேடுபடா தெம்மை
யெடுத்தாலுஞ் சோணேச னென்று. 40

என்றுதரு வாய்மகிழ்ந்தே யான்பெறுவ தெந்தநாள்
இன்று தமியேற் கியம்பிடாய் - நன்றிதரு
மேகனே சோணகிரி யீசனே சேவேறும்
வாகனே சாகா வரம். 41

சாகா வரம்பெறலாஞ் சந்ததமுஞ் சோணகிரி
நாகா பரணன்றா ணாடியே - யேகாந்த
நண்ணுமக்க மாலைகொடு நாவார வைந்தெழுத்தை
யெண்ணு மறவா தெடுத்து. 42

எடுத்த பயனை யிருவினையை யெண்ணா
ரடுத்தசிவ பூசை யறியார் - தொடுத்த
நெறியாகுஞ் சோணகிரி நித்தரடி யாரை
யறியாத மானிடவ ரச்சு. 43

அச்செல்லா மொன்றா யதிலே யிருவகையா
வச்சதென்ன சோணகிரி வள்ளலே யிச்சையிலே
வாழ்ந்து சில பேரிருக்க வாய்புதைத்துக் கைகட்டித்
தாழ்ந்துசில பேரிருக்கத் தான். 44

தானே யுலகுடையோன் றன்னசைவே யெவ்வுயிருக்குந்
தானே யனைவர்க்குந் தந்தையாய்த் - தானே
யனைத்துயிருங் காக்கு மருணேச னென்றான்
மனத்துயரம் போவதே மாண்டு. 45

மாண்டு பிறந்துழலு மாப்பிணியை நீக்குதற்கு
வேண்டு மருந்துனக்கு வேண்டினா - லீண்டுலகில்
வீணேசர் சொல்லை விரும்பாம னெஞ்சமே
சோணேச ரெண்றொருக்காற் சொல். 46

சொல்லரிய நால்வேதஞ் சொன்னபடி யேகருதி
நில்லரிய பூசையிலே நேசமாய் - வெல்லரிய
நஞ்சே தரித்தருளு நாதனடித் தாமரையை
நெஞ்சே மறவாம னீ. 47

நீயே வரல்வேண்டு நின்னைப்போ லானதுணை
நாயேனுக் கியாருண்டு நாடுங்காற் - றாயகமா
மண்ணா மலைமேவு மப்பனே யென்பிறவிப்
புண்ணா மலையகற்றும் போது. 48

போதுமதி சூடும் புனிதர் புவியீன்ற
மாதுபங்க ரண்ணா மலைநாதர் - பாத
மிறுகப் பிடிமனமே யெந்நாளு நின்னைக்
குறுகப் பயப்படுமே கூற்று. 49

கூற்றிருக்கு முன்காலிற் கூறு புறங்காலி
லேற்றிருக்கு மாயவன்க ணெப்பொழுதுஞ் சாற்றுகையி
லம்புயத்தோன் கம்மிருக்கு மண்ணா மலைநாதர்
செம்புயத்திற் காரிணையாஞ் செப்பு. 50

செப்பரிய ஞானச் செழுஞ்சுடரே சோணகிரி
யப்பனே நன்னூ லறிந்தாலு - மிப்புவியிற்
கொண்டகுரு வைப்பொருளாக் கொள்ளார் பயனேது
கண்டவெல்லாம் வீணிலே கற்று. 51

கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதனாற் போமோ பிறவிநோய் - உற்றகட
னஞ்சுகந்து கொண்டருணை நாதரடித்தா மரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி. 52

நெறியுண்டா நல்ல நிலையுண்டா ஞானக்
குறியுண்டா மெண்ணமெலாங் கூடுஞ் - செறிவுண்டா
மாதி யருணகிரி யண்ணலா ரைந்தெழுத்தை
யோதிமட நெஞ்சமே யுன். 53

உன்னக் கருத்துண் டுரைப்பதற்கு நாவுண்டு
பன்னச் சிவநூல் பலவுண்டு - முன்னமறைக்
கெட்டாத சோணகிரி யீசரிரு தாள்பணிய
வொட்டாது பாவ முயர்ந்து. 54

உயர்ந்தவர்க்கு ளெல்லா முயர்ந்திருக்குங்கோவே
நயந்த புகழ்ச் சோணகிரி நாதா - பயந்தமர
ருண்ணப் படாநஞ்சை யுண்டவுன்னைச் சாமவரோ
டெண்ணப் படுவா ரிதென். 55

என்ன சனன மெடுத்தார் புவிமீதி
லன்னமிடா ரின்சொல் லறிகிலார் - முன்னமே
யொன்னார் புரமெரித்த வுண்ணா முலைபாகா
வென்னார் திருநீ றிடார். 56

நீறிடே னைந்தெழுத்தை நேசமுட னேகருதிக்
கூறிடே னென்னையுமாட் கொள்வதனுக் - காறணிந்த
வேணியார் சோணகிரி வித்தகனார் வெற்றிமழுப்
பாணியார்க் கன்றோ பரம். 57

பரகதிக்கு வித்தாமுன் பஞ்சாக் கரத்தைப்
பரபரப்பா யெண்ணாத பாவ - நரகப்
பிறப்பிற்கு மீடாய்ப் பிறந்தருணை யீசா
விறப்பிற்கு மீடாயி னேன். 58

ஏனிருந்து நெஞ்சே யிரவுபக லாயுடலைத்
தானொறுப்பாய்ச் சோணகிரித் தாணுவா - மானுகந்த
வெந்தையா னீங்கு மிருவினைநோய் சிந்திக்குஞ்
சிந்தையான் வேறென் செயல். 59

என்செயலாஞ் சோணேச ரிட்டபடி யேயொழிய
நெஞ்சையெலாம் புண்ணா நினைந்தாலும் - விஞ்ச
வருமோ பெருவாழ்வு வல்லமையா னெஞ்சந்
தருமோ நம்பேராசை தான். 60

தானே யெனத்தகுத் தவமாய்த் தவப்பயனாய்த்
தானே யெனக்கன்னை தாதையாய்த் - தானென்னை
செப்பரிய நின்பாதஞ் சேர்விக்குஞ் சோணகிரி
யப்பனே நீயேறு மான். 61

ஆனவர நல்குநதி யாயிரஞ்சென் றாடுகிலென்
றானம் பதினாறுந் தான்செயிலெ - னானனங்க
ளஞ்சுடையான் சோணகிரி யண்ணறனை யெண்ணாத
நெஞ்சுடையார் பூதலத்தே நின்று. 62

நின்று தவம்புரியாய் நெஞ்சே திருக்கோயிற்
சென்றுசிவ பூசையறஞ் செய்திடாய் - வென்றிதரு
மம்மான் கருத்த னருணேச னம்புயத்தாள்
சும்மா கிடைக்குமோ சொல். 63

சும்மா கிடைக்குமோ சோணாசலன் பாத
மம்மால் விரிஞ்ச னறிகிலார் - நம்மா
லிருந்துகதை சொன்னக்கா லென்னாகு நெஞ்சே
பொருந்த நினையாத போது. 64

போதையிரு பல்லுகுத்துப் புண்டரிகன் றேவியெனும்
மாதையன்று மூக்கரிந்த மாவீரன் - றாதை
விருப்பா மதிசூடி வெண்டலையோ டேந்தி
யிருப்பா னருணேச னின்று. 65

இன்றைக்கு நாளைக் கிறவிற் கெனுந்துயர
மென்றைக்குப் போமருணை யீசனே! - கொன்றைமதி
புன்னை யெருக்கும் புனையுஞ் சடாடவியா
யென்னை நெருக்கு மிவை. 66

நெருக்குமிவை யென்னுயிரை நீங்காமற் சூழ்ந்தே
யிருக்கும் பலபிணிநோ யெல்லா - முருக்கும்வகை
கண்டே னருணேசன் கஞ்சமலர்த் தாள் கருத்திற்
கொண்டே னெனக்கென் குறை. 67

குறையேது மில்லையினிக் கூறுங்கால் வானோர்க்
கிறையாகுஞ் சோணேசற் கென்று - மறைபுகுந்தேம்
பற்றி நமன்றொடரான் பார்க்குங்கா னெஞ்சமே
வெற்றிநமன் கைத்தலத்து வேல். 68

வேலைவிட முண்ட விமல ரருணேசர்
மாலையணி மார்பர் மலர்ப்பதத்தை - மேலமரர்
பண்ணினார் பூசையறம் பண்ணிப் பரகதியி
னண்ணினா ரெல்லா நலம். 69

எல்லார் பிறப்பு மிறப்புமியற் பாவலர்தஞ்
சொல்லாற் றெளிந்தேநஞ் சோணேச - ரில்லிற்
பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்
டிறந்தகதை யுங்கேட்டி லேம். 70

ஏமாந்த சோணகிரி யீசரடி யாரடிக்கே
பூமா மலர்தூவிப் போற்றாதார் - தாமென்றும்
வெஞ்ச மனத்திருக்கும் வேடராய் நாடோறும்
வஞ்சநம னுக்கஞ்சு வார். 71

வஞ்சநம னுக்கஞ்சி வாடுந் தமியேனை
யஞ்சலென்ற சோணகிரி யண்ணலே - நெஞ்சறிய
வாண்டகுரு நீயென் றறியாதார் செய்ததவ
மாண்டமரத் திற்கணைத்த மண். 72

மண்ணிற் பிறந்திறந்து மாயுந்தெய் வங்களோ
டெண்ணப் படாவருணை யீசனே - விண்ணப்ப
மொன்றுண் டடியே னுனைப்பிரியா தேயிருக்க
வென்று தருவா யெனக்கு. 73

தருவா யெனக்குகந்துன் றன்னிருதா டன்னை
மருவார் புரமெரித்த மன்னா - குருவாகி
முன்னை வினையகற்றி மூர்த்தி யருணேச
வென்னைப் பொருளா வெடுத்து. 74

எடுப்பானுங் காப்பானு மேற்பானு மேற்பக்
கொடுப்பானு மேதுங் கொடானும் - விடப்பானம்
பண்ணி யனேகர் பயங்கெடுத்த சோணகிரிப்
புண்ணியனே நீகாணிப் போது. 75

இப்போது பின்னைக் கிலையென் றிரப்போரை
யெப்போதுந் தள்ளா திரங்கியே - முப்போதும்
பூசிப்ப தெந்நாள் புனிதனே சோணகிரி
நேசிப்ப தெந்நா ணினைந்து. 76

நினையேன் றிருக்கோவில் நின்றுகண்ணீர்சோர
நனையேன் பிறப்பறுக்க நாடேன் - புனையேனின்
பொன்னடிக்குப் பூமாலை போற்றி யருணேச
பின்னடிக்கிங் காருதவும் பேர். 77

பேரா யிரமுடைய பெம்மானைச் சோணகிரி
யாரா வமுதை யறியாமல் - வாராது
தீது நலமுந் தெரியுங்கா னெஞ்சமே
யேதுமவ னென்றே யிரு. 78

இருந்துநினைப் பார்த மிருவினையை நீக்கும்
பொருந்துமிடி யிம்மையிலே போக்கு - மருந்தன்றோ
தம்பிரா னெவ்வுயிர்க்குந் தாணு வருணகிரி
யெம்பிரா னோரஞ் செழுத்து. 79

அஞ்செழுத்தை போதுமவர்க் கஞ்சி யவர்தலையிற்
றுஞ்செழுத்தைக் கஞ்சன் றுடைக்குமே - யஞ்சுதலைக்
கொன்றறுத்து நாலா வொருகுறையா நின்றதலை
யின்றறுப்பான் சோணேச னென்று. 80

என்றுநமன் றூதுவரை யேற்கவே தானழைத்து
நின்றுரைக்குஞ் சோணகிரி நித்தனார்க் - கின்றடிமை
யானவர்க்கு நீர் வணங்கி யப்பாலே போமென்று
தானவர்க்குப் புத்தியாய்த் தான். 81

புத்திதருஞ் சோணேசன் பொன்னடியை வாழ்த்துநர்க்குப்
பத்திதரு மெய்ஞ்ஞானம் பாலிக்கு - முத்திதரும்
மாற்றரிய தீவினையை மாற்றுவிக்கு மைந்தெழுத்தைப்
போற்றரிய நெஞ்சமே பூண்டு. 82

பூண்ட வகைக் கெல்லாம் பொருந்துமணி முத்திருக்க
வேண்டும் பசும்பொன் விளைவிருக்கத் - தீண்டாமற்
பொங்கரவுந் தோலெலும்பும் பூண்டா யிதென்னருணைச்
சங்கரா கங்கா தரா. 83

கங்கா தரனே கடையேனை யெந்தநா
ளங்கா தரவா வழைக்குநா - ணங்காதல்
பார்க்குநாள் சோணேச பார்த்துப் பரகதியிற்
சேர்க்குநா ளெந்தநாள் செப்பு. 84

செப்பி லிருவினையைச் சேதமற்ற மும்மலத்தை
யொப்பிலாச் சஞ்சலத்தை யோட்டினே - னிப்போ
தருவாகி நின்ற வருணகிரி யானைக்
குருவாக வென்னுளத்தே கொண்டு. 85

கொண்டநெறி சற்றுங் குலையார் மனத்திருக்கு
மண்டர்கோ வேயருணை யண்ணலே - தொண்டர்க்
கிடையாது நெஞ்ச மிருவினையா லென்று
மடையா தெழுபிறப்பா மல். 86

அல்ல தொரு தெய்வ மறியே னறிந்தாலு
நல்லதென்று நெஞ்சகத்தி னாடேன்யான் - சொல்லரிய
வண்ணா மலைமேவு மண்ணலையு மண்ணலிடத்
துண்ணா முலையாளை யும். 87

உம்மை நினைந்தே யுருகி யருணேசர்
தம்மை நினைந்தார் தமக்கல்லா - லிம்மையிலே
யெல்லாருங் காண வெளிதோ புவிமீதி
னல்லார் துதிக்கு நடம். 88

நடலையறுத் தாளருணை நம்பனுக்கன் பில்லா
ருடலையொறுத் தாலாவ துண்டோ - வடலைநூ
லோதினாற் பாச மொழியுமோ புற்றிலே
மோதினாற் பாம்புசா மோ. 89

மோகமறேன் சோணகிரி மூர்த்தியே மும்மலத்தில்
தாகமறேன் நின்பெருமை தானறியேன் - தாகமதாய்த்
தம்மதென்னுங் காயத்தைத் தானெடுத்துத் தாரணியி
னம்மதென்னுங் கண்டாய் நரி. 90

நரிக்குப் பொதிசோறு நான்சுமந்து நொந்தே
னரிக்கு மரிதா மரனே - தெரிக்குமறை
காணாத சோணகிரிக் கண்ணுதலே நின்பதத்தைப்
பேணாத நாயேன் பிறந்து. 91

பிறந்திறக்குந் தெய்வப் பிணங்களைக் கொண்டாடே
னறந்தழைக்குஞ் சோணகிரி யாரே - பிறந்திறவா
வும்மைப் புகழ்ந்தே வுமக்கடிமை யானபேர்
தம்மைப் புகழ்வதலாற் றான். 92

தானவர்கள் முப்புரத்தைத் தானெரித்து நஞ்சுகந்தீர்
வானவர்க்காச் சோணகிரி வள்ளலே - யேனம்
விருப்பாய் மலரடியை வேண்டினா னீண்ட
நெருப்பா யிருந்ததென்ன நீர். 93

நீராழி நஞ்சுகந்த நித்தரே சோணகிரி
யாரா வமுதரே யய்யரே - பாராளுந்
தாதையே பூசையறந் தானறியா மற்றிரியும்
பேதையேற் காராவர் பின். 94

பின்னை யொருவரில்லை பேருலகிற் றஞ்சமா
வன்னந் தருமருணை யையரே - யென்னை
யெடுப்பதற்குங் காப்பதற்கு மென்பிறவி நோயைக்
கெடுப்பதற்கு நீரே கதி. 95

நீர் கொண்ட வேணி நிமலாவென் னீள்பிறப்பை
யார்தொலைப்பார் நீயல்லா தாயுங்காற் - பார்மீதிற்
பொய்யா வரங்கொடுக்கும் புண்ணியனே சோணகிரி
யையா கருணா லயா. 96

கருணா லயாநின் கழல்பணிய மாட்டே
னருணா சலாவென் றழையேன் - மரணாந்த
காலத்தி லொன்றுங் கருத்தறியேன் கண்ணையுன்றன்
கோலத்தில் வையேன் குறித்து. 97

குறியே னிருபதத்தைக் கூறும் வகைசற்
றறியே னலந்தவர்க்கொன் றாற்றேன் - சிறியேனின்
றாயுமறை தேடரிய வண்ணா மலையானே
மாயுமிருந் தையா மனம். 98

ஐயா மரப்பாவை யாடுவதுஞ் சூத்திரிதன்
கைவாசி யோபாவை கற்றதோ - வெய்யவினை
யென்னிச்சை யோவருணை யீசா படைத்தளிக்கு
முன்னிச்சை யன்றோ வுரை. 99

உரைக்கு மடியா ருயிர்ப்பயிர்வா டாமற்
றரைக்குளா னந்தவெள்ளந் தன்னை - நிறைக்குமே
யெண்ணார் புரமெரித்த யெந்தை யருணகிரிக்
கண்ணா ரமுதமெனுங் கார். 100

நூல் முற்றும்

பயன்

அருணகிரி யந்தாதி யழகுவெண்பா நூறும்
கருணையுடன் கற்றோரைக் கண்டு - அருணையண்ணல்
வீறான பொன்னுவகை வேந்தனுக்கு மாற்றியங்கே
மாறாமல் வைப்பார் மகிழ்ந்து. 1

அஞ்செழுத்தன் சோணேச னாய்ந்துரைத்த வந்தாதி
நெஞ்சழுத்திச் சால நினைப்போர்க்கு - விஞ்சுவகை
யாளும் பதம்பெறலா மன்றரிக்கு மெட்டாத
தாளும் பெறலாகுந் தான். 2

ஆக்கியோன்

அந்தாதி செய்தான் அடியாரை யீடேற்ற
அந்தாதி யாமருணை யண்ணலைச் - சந்ததமும்
மெய்யன் அருணகிரி மேவுங் குகைமீதில்
அய்யன் நமச்சிவா யன். 3

அருணகிரி அந்தாதி முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247