சீர்காழி அருணாசலக் கவிராயர் இயற்றிய காழியந்தாதி காப்பு சூழியந் தாதிக்குத் தாவென நிர்த்தஞ்செய் சோதியிதழ் வீழியந் தாதிக்குத் தூதுசென் றோன்முன்னொர் வேந்தனரு ளாழியந் தாதிக்குத் தானீ யெனக்கங்கை யாறளித்தோன் காழியந் தாதிக்குக் காப்பாகுங் காழிக் கணபதியே. நூல் மணிகண் டமேனி நெடுமாலும் வேதனும் வானுமொன்பான் கணிகண் டவாணரு முய்யமை வாரிக் கடுவையள்ளி யணிகண் டகாழி யரசே யெனையுன் னடிபரவப் பணிகண் டவல்வினை யெய்தாமெய்ஞ் ஞானப் பதம்பெறவே. 1 பதத்தரங் கத்தர் நயனார விந்தம் பரித்ததண்டா யுதத்தரங் கத்த ரவம்புனை காழியில் யோகர்சென்னி யிதத்தரங் கத்தர் குருலிங்க சங்கம மென்னுமும்மை விதத்தரங் கத்தரென் பார்பணி கேட்பவண மெய்த்திருவே. 2 திருவம் பலங்களி கூரநின் றாடிய செல்வர்பன்னா ளுருவம் பலமுயங் காதருட் காழியி லுற்றவர்க்கே தருவம் பலமென வாழ்குரு நாதர்பொற் றாண்மறவா திருவம் பலமொழி நெஞ்சேயஞ் சேலினி யேதமுற்றே. 3 முற்றா மதிக்கு முகம்வாடுங் கிள்ளையை மோந்துபல்கா லொற்றா மதிக்கு முரைசெய்ய நாணு முயிர்வருந்தச் சுற்றா மதிக்குந் ததியா யிரவைத் தொலைக்கவரு மெற்றா மதிக்கும தென்னெனுங் காழி யிறையவனே. 4 இறையவ னஞ்ச வயற்காழி யீச னெழுதருநான் மறையவ னஞ்ச மணிமுடி வாங்கிய வள்ளல்கண்ட நிறையவ னஞ்ச மமுதாய்ப் பருகிய நித்தன்விண்ணேழ் குறையவ னஞ்சலி யாதளித் தானடி கும்பிடுமே. 5
விம்பத் தனத்தி யுரித்தபி ரான்வெள்ளி வெற்பெடுக்குங் கம்பத் தனத்தி நெரித்தாளுங் காழிக் கடவுள்பொற்றா ணம்பத் தனத்தியக் கேசனன் னோரடி நம்புவனே. 6 நம்பா னலந்தர நின்றோர்வண் டாடு நறுங்கமலக் கொம்பா னலங்கரித் தூர்காழி நாதர்தங் கொச்சையின் லம்பா னலங்கழி யேசெக்கர் மாலை யடுத்தநிலா விம்பா னலம்பொருட் கேகின ரூருக்கு வெண்பிறையே. 7 பிறைக்கண் ணனைமலர்ப் பூங்கோடு பாயப் பெருகமுத நறைக்கண் ணனைவயற் பாய்காழி நாயக நான்சமனங் கறைக்கண் ணனையினிக் காணாதுன் சேவடி காணமண்மேன் முறைக்கண் ணனைமுலை யுண்ணா தருளுண்ண முன்னுகவே. 8 முன்னந் தியான நிறத்தானை மூவர்க்கு முன்னவனை நன்னந் தியான முகைத்தானைக் காழியி னாயகனைச் சொன்னந் தியான மருஞ்சுதை நேர்கவி சொல்லிநெஞ்சே யின்னந் தியானமுஞ் செய்யே மிருவினைக் கென்செய்வமே. 9 செய்ய வனத்தன் றிகழ்காழி மேவுஞ் சிவனுலக முய்ய வனத்தன்னை வேணிவைத் தோனுக் குவந்தமலர் கொய்ய வனத்தன் புறுதரு வாயுருக் கொண்டவருந் துய்ய வனத்தன் புகழருள் வாரிதி தோய்குவரே. 10 தோயம் பரவை முடிக்கணிந் தோர்தமிழ்த் தூதுகங்குல் வாயம் பரவைமுன் சென்றோர்தென் காழியை வாழ்த்துநர்போ லாயம் பரவை யுறுமிடை நீர்மையி தாகிலென்ன மாயம் பரவை வரைவாய்த் தனித்து மணந்ததுவே. 11 மணமண் டலங்கலந் தோளர்கங் காளர் மணியெயில்வான் கணமண் டலந்தொடுங் காழியுள் ளோர்பதங் காணவல்ல குணமண் டலம்புவி மேலன்பர்க் காமன்றிக் கோளரவின் பணமண் டலந்தொட்டு மேதுகண் டான்விழிப் பங்கயனே. 12 பங்கா ரணங்கை வருவோர் விடங்கண்டு பண்ணவர்தா மங்கா ரணங்கையுண் ணாதுண்ணுங் காழியி லத்தர்வெற்பிற் பொங்கா ரணங்கைம் முடிநாகஞ் சூழப் புதையிருள்வா யெங்கா ரணங்கை வடிவேலொ டெய்த லியல்பல்லவே. 13 பல்லவம் போது துணையடி யேசெங்கை பங்கயமே நல்லவம் போது மிணைவிழி யேசிறு நாண்மதிதான் வில்லவம் போது நுதலே சிறிதன்பு மேவினுமவ் வல்லவம் போதுமென் றாள்காழி யீசர் வரைமகட்கே. 14 வரைக்கா வலவன் றவத்தால் வனசத்தில் வந்ததெய்வப் பரைக்கா வலவ னுறைகாழி வாய்வெம் பரிக்குமனு வுரைக்கா வலவன் கொடிமணித் தேர்கணத் தோட்டுகதேன் விரைக்கா வலவன் மதியகந் தோயும் வியனகர்க்கே. 15 நகரா வணமறை யோர்காண நாவல நம்பியொன்றும் பகரா வணம்படி யோலைக்கு மேலும் பழமறையே நிகரா வணங்கொண் டளித்தாய்தென் காழியி னீண்டமணிச் சிகரா வணங்கறி யாவென்னை யாளவுஞ் செய்குவையே. 16 வையங் கனக மனைமக்க ளென்ரு மருண்டுவெறும் பொய்யங் கனக மதித்தேனை யுன்னடி போற்றிநிற்கச் செய்யங் கனக முதுவீ டருளொளி சேர்சிகரச் சையங் கனகந் தரந்தோயுங் காழியிற் சங்கரனே. 17 சங்காழி யானைமுன் கொண்டோடு மாயவன் றான்முதலோர் பொங்காழி யானை யுறும்போது தோணியிற் போந்தருள்செய் யங்காழி யானையுற் றேவல்செய் யாம லகந்தையென்னும் வெங்காழி யானை வருமேவல் கொள்ள மெலிந்தனனே. 18 மெலிக்குஞ் சரம்பெறு தென்றலங் காமனை வென்றறுகால் கலிக்குஞ் சரந்திகழ் வாகையெம் மான்வளர் காழிவெற்பி லொலிக்குஞ் சரமொன் றடுநாளிற் பேதை யுயிர்புரப்பான் வலிக்குஞ் சரந்தொட்டு நின்றானன் னேயொரு மன்னவனே. 19 மன்னவ னந்த வமண்மூடுங் கூடலில் வாகைபெற்றோன் சொன்னவ னந்த விசைத்தமி ழாய சுருதிகொண்டேயான் முன்னவ னந்த நடுவான காழி முதல்வனெம்மா னென்னவ னந்த னிகராய பேரறி வெய்துமன்றே. 20 அன்றுவந் திக்கு மணித்தேர் நடாத்தண்ண லான்கமலந் தின்றுவந் திக்கு நிரைமேயுங் காழிச் சிவபெருமா னென்றுவந் திக்கு மடியாரைப் போற்றுவ மேழ்பிறப்புங் கன்றுவந் திக்குவிண் ணோர்தமைத் திக்கென்று காணலமே. 21 அலங்கா ரணிமுடி யாரன்ப ருள்ளத் தருளுருவா யிலங்கா ரணிபங்கர் காழியன் னீரிட ரெய்தலுள்ளங் கலங்கா ரணியங் கடந்தீ ரினித்தண் கழுமலமு மலங்கா ரணிமல ரோடையுங் கூடமு மாடமுமே. 22 மாடகத் தந்தி மணிவீணை யார்மக வான்பணியு நாடகத் தந்தி யணிகாழி வாழ்சட்டை நாதர்வெற்பன் கோடகத் தந்தி னுடங்கிடை யார்க்கன்பு கொள்ளவரி யோடகத் தந்தி வனசமொப் பான தொளிமுகமே. 23 முகக்கணிச் சிக்குமெய்ம் மூவடி வானவர் மூரிவென்றி தகக்கணிச் சிக்கு மலர்க்கைதந் தோர்பனந் தாளிற்செங்கை யகக்கணிச் சிக்கு வளைந்தோர்தென் காழி யமலர்பொற்றாள் புகக்கணிச் சிக்கு மனங்கடந் தோர்க்கில்லைப் புன்பிறப்பே. 24 புன்னாகத் தாரகங் காளதென் காழிப் புனிதவுமை முன்னாகத் தாரகஞ் சொல்வாய தக்கன் முகம்புகுநாள் வன்னாகத் தாரகங் காரங் களைந்தருண் மாமணியே யென்னாகத் தாரகந் தீர்ப்பா னிருந்தரு ளென்றைக்குமே. 25 லன்றருந் தந்த மிலார்காழி வெற்பி லடுங்கவணாற் குன்றருந் தந்த மணிகளொவ் வொன்று கொழுங்கதிர்போன் மின்றருந் தந்த மணிவிரும் போமிலை வேலரசே. 26 அரசங் கரிபங்க கங்கா தரவென் றனவரதம் வரசங் கரிபுகழ் காழியர் வெற்பன் மணப்பொருட்டான் முரசங் கரிமிசை யார்ப்பச் சொரிந்த முழுநிதி காண் பரசங் கரிய நெடுமலர்க் கூந்தற் பணிமொழியே. 27 மொழியா வருந்திரு நீறிட மாறன் முதுகுநிமிர்த் தழியா வருந்ததி யன்னாளொ டின்புற வாற்றினெதிர் வழியா வருந்தமிழ் சொன்னாரைக் காழியில் வைத்தருள்கூர் விழியா வரும்பவ மீட்டுமெய் தாதுனை வேண்டுவனே. 28 வேண்டா மலைய முறுகானெஞ் சேயென்று மேவுநிறை நாண்டா மலைய மலைவதெல் லாமுரை நம்மைவினை யீண்டா மலைய மொழித்தாளுங் காழி யிறைவர்தினஞ் சேண்டா மலைய மருமுடி யார்தந் திருச்செவிக்கே. 29 திருக்கா தருண வொலிக்கருள் காழிச் சிவபெருமான் சுருக்கா தருணமக் கீயும் பிரான்வரைச் சூழிருளின் கருக்கா தருண வெயில்விரி கானிலெங் கன்னிதன்னை யருக்கா தருண மிதுகாக்க வேண்டுநல் லன்புகொண்டே. 30 கொண்டலை யாறு முயன்றூருந் திங்களைக் கோட்டுவைக்குந் தண்டலை யாறு மருவிய காழியர் தாள்பணிந்தேன் பண்டலை யாறுமை யாறுமற் றேனென் பரஞ்சுமக்கு மண்டலையாறு மினியாறும் வேதன் மலர்க்கரமே. 31 கரத்தே வரையுங் கவிகொண்டு நாட்டினுங் காட்டினுஞ்சேர் புரத்தே வரையும் புகழ்வீர் வருமுத்தி புத்தியென்னோ வரத்தே வரையுயர் தென்காழி நாதரை வன்றொண்டரா தரத்தே வரையிருட் டூதரை யோதுந் தமிழ்மறந்தே. 32 மறவா மனம்புக மன்னுயிர் காளந்த மாவலிபா லுறவா மனம்புக் குயர்ந்தோன் முதுகெலும் பூன்றிநின்ற திறவா மனம்புகழ் சேர்காழி வாணன் றிருவடியே பெறவா மனம்புரிந் தாற்புத்தி யாமவன் பேரினையே. 33 பேரா வந்திரி சூலங்கை தாங்கிய பிஞ்ஞகவான் காரா வந்திரி யாச்சோலைக் காழிக் கழுமலமா மூரா வந்திரி நந்தீ வினையையென் றோதிநில்லாத் தேரர வந்திரி வார்பெறு வார்கழுச் சேகரமே. 34 சேகரக் கங்கை யிறையோ னரக்கனைச் சீறுமுண்மை யாகரக் கங்கை யளித்தோன்றென் காழிகண்டஞ்சலியா மூகரக் கங்கை படைத்தும் படித்திலர் மோனவருட் சாகரக் கங்கை யுறாதுற்று வீடென்று சார்குவரே. 35 சாரா வரம்பை மதிகதி ராவி தபனன்விண்கால் பாரா வரம்பை யிடத்தார்தென் காழிப் பரமரென்னி னேரா வரம்பை யுளைநீத் தருளு நிமலர்பொற்றாட் பேரா வரம்பையுற் றேனினி வேட்கை பிறிதில்லையே. 36 இல்லங் கமலையிருக்கநல் லோருற் றிருக்கவென்று நல்லங் கமலை வினைதீர்ந் திருக்கவு நாடினையேற் செல்லங் கமலை யிடப்பாகர் காழியிற் சென்றுநெஞ்சே வில்லங் கமலைகொண் டான்பேரி லொன்றை விளம்புகவே. 37 புகலன் பரியங் கருநாண் மதுரைப் புரவலன்மு னிகலன் பரியெனக் காட்டிய காழி யிறைவன்கொன்றை யகலன் பரிசனத் தார்மலர்த் தாள்பணிந் தன்புசெய்யும் பகலன் பரிபவங் கூர்கூற் றினுக்குப் பயந்திலனே. 38 இலம்பக மாயவ னாகத்தன் காழி யிறைகுருகா சலம்பக மாயவன்சூர் மாயவேல்கொண்ட தந்தைதந்தை நலம்பக மாயவன் பாற்கொண்ட செய்கைமெய்ஞ் ஞானமிக்கோர் புலம்பக மாயவன் றான்பதி யென்று புகன்றிடுமே. 39 புகவா சகம்புகழ் தென்காழி தன்னிற் புகுந்திறைநூன் முகவா சகமிசைத் தோதிநெஞ் சேபுண் முடிசுமந்த நகவா சகம்புனை வோயெனிற் கோள்விடு நாண்மதியந் தகவா சகங்கெடு மேலே துனக்கொரு சஞ்சலமே. 40 சலசந் திரிகைக் கெழுபாத ரண்டமுஞ் சத்தியுமட் கலசந் திரிகைக்கு நேர்செயுங் காழிக் கடவுள்வெற்ப பலசந் திரிகைக் கெரிமூட்டும் வேட்டுவர் பைங்கொடியோ நலசந் திரிகைக்கு வாடுமுன் பாலன்பு நல்குவதே. 41 நல்லா ரவாரந் திகழ்காழி யாரடி நாண்மலர்மேற் கல்லா ரவார மணிந்துகை கூப்பிக் கவுணியர்வாய்ச் சொல்லா ரவார வுரையாத மக்களிற் றோட்டறுகம் புல்லா ரவார முறும்பசு வாயினும் போதனன்றே. 42 போதத்தி யாகந் தருங்காழி நாதனைப் பூங்கரத்தாற் காதத்தி யாகங் கிழித்தபி ரானைக் கருதிலரேன் மோதத்தி யாக வருமிடர் வாய்ப்பட்டு முன்புதக்க னேதத்தி யாக மிழந்தாங் கிழப்ப ரிருந்தவமே. 43 தவனம் படாவருந் தீப்பவ மாறிடத் தண்ணனிகூர் சிவனம் படாமுலை பங்கனங் காழித் திருவனையாய் கவனம் படாவிழி நின்பா லிலைவிற் கழைகுழைக்கு மவனம் படாமன்னர் தேர்மீது வெள்வளை யார்த்ததுவே. 44 ஆரா தனைவரு மன்பர்தென் காழி யமலரச்சங் கூரா தனைவரும் வாழநஞ் சுண்டவர் கோயிலெய்தா வோரா தனைவருஞ் சூழாது கால னுறாதுபவஞ் சேரா தனைவருந் தாதுய்யு மாறென்று தேர்குவனே. 45 தேரங் கவிக்கு மலர்செவி யாயத் திரிபுரத்தோர் போரங் கவிக்கு நகையாய்தென் காழியிற் பூங்கடுக்கைத் தாரங் கவிக்கு மகளிர்பொன் னாசையிற் சஞ்சலித்தெந் நேரங் கவிக்கும் வினையேனைக் காக்கவு நின்கடனே. 46 கடலம் பரமங்கை பொன்முக னேர்தருங் காழியெந்தா யடலம் பரமை யொருவேள்விக் கேகிய வாரமுதே யுடலம் பரமென் றுனைநோக் கிலாவிழி யுற்றமலப் படலம் பரமருந் தாலொழி யாதுன் பணியன்றியே. 47 பணிவல் லியந்தொழ நின்றாடுங் காழிப் பரமகொங்கை மணிவல் லியம்பிகை தன்பாக வென்று மருவுங்கொல்லோ வணிவல் லியங்கனை யாரிடத் தாசையி னாயிரத்தோர் துணிவல் லியம்புயன் போற்றுநின் பால்வைக்கத் தோற்றுவதே. 48 தோற்றங் கரையா மதிற்காழி மாமலைத் தூயர்வைகை யாற்றங் கரைய மணலேந்து நாயக ரக்கமணி நீற்றங் கரையகந் தாழ்வாரைத் தாழ்பவர் நீண்டபுகழ் மாற்றங் கரைய வருமா லயனண்டர் மன்னவனே. 49 மன்னந் திருப்புடை மாமரு தூரிற்பொன் வண்ணங்கொள்ள வன்னந் திருப்புடை வேதிச்சித் தேச ரழைத்ததனான் முன்னந் திருப்புடை மெய்சாய்க்குங் காழி முதலையுற்றாற் சொன்னந் திருப்புடை யேவந்து நல்குஞ் சுமந்துகொண்டே. 50 நமையச் சிலையளி நாண்வில்லி யென்செயு நாட்கதிர்சூ ழிமையச் சிலைதனை முப்புர வேந்த ரெதிர்ந்தவந்நா ளமையச் சிலைசெய்த காழியெம் மான்வரை யாரணங்கே. 51 வரையா யிரம்பணி தென்காழி மால்வரை வாணன்முன்னூ லுரையா யிரந்திர மின்மணி யானவ னுற்றுருகிப் பரையா யிரந்த மநுவோதுந் தேசிகன் பத்தர்க்கருட் கரையா யிரங்கி வருஞ்சென்ம வாரி கடப்பதற்கே. 52 கடமாதங் கம்பணி வெண்ணுவ லீசர் கனத்ததன தடமாதங் கந்திகழ் காழியர் செங்கலைத் தண்டமிழ்க்காய் வடமாதங் கம்படச் செய்தளித் தோர்தம்மை வாழ்த்துமன்ப ரிடமாதங் கம்புரு மோகற்ப காலங்க ளெய்தினுமே. 53 எய்தவ ரம்புர மெய்தாமல் வேளை யெரித்தயன்கங் கொய்தவ ரம்புரம் வென்றதென் காழியர் கூடனகர்க் கைதவ ரம்புர மாற்றவந் தாரென் கருத்தில்வைப்பார் செய்தவ ரம்புரந் தந்தகன் வீறட்ட சேவடியே. 54 வடிவந் தனமென் றிறுமாந் துளீர்முன் வகுத்தவிதிப் படவந் தனமென் றுணரீ ரனந்தம் பழமறைநூன் முடிவந் தனங்க ணருள்புரி காழி முதல்வனம்பொ னடிவந் தனமறி யீரறி வீர்நர காலயமே. 55 ஆல விருக்க நிழற்சன காதிய ரன்புசெய்யக் கோல விருக்க விடையோதுங் காழிக் குருபரனே நூல விருக்க மயில்பாக நெஞ்சிலுன் னூபுரத்தாள் சால விருக்கவைப் பாரடிக் கீழெனைத் தான்வைக்கவே. 56 வையஞ் சலந்தர னாலழி யாதட்டு வாகைகொண்டு செய்யஞ் சலந்தர மெண்ணாது தக்கனுந் தெய்வமென்றோ ரையஞ் சலந்தர மாற்றிய காழி யருமருந்தே மெய்யஞ் சலந்தரக் கூற்றெய்து நாளில் வெளிநிற்பையே. 57 பையா டனந்தன் புகழ்காழிப் பிள்ளைக்குப் பாலருளுங் கையா டனந்தன மாய்க்கொண்ட கோன்றந்தகாத லெண்ணார் மெய்யா டனந்தன் மருகோன் வெறியயர் வெங்களத்தே மையா டனந்தன் பொருட்டா லடுதன் மரபல்லவே. 58 பலங்கற் பகமிடு வானுங் கமலமும் பாப்பணையும் புலங்கற் பகவல்லி யார்க்கரு ளாரியன் புள்ளெடுத்த விலங்கற் பகவன் வளர்காழி மாநகர் மேலியங்கே யிலங்கற் பகனொடிப் போதிருப் போர்த மிருக்கைகளே. 59 இருப்ப ரணங்கருத் தென்றே யரசுசெ யீசர்வெள்ளிப் பொருப்ப ரணங்கொழித் தாள்காழி யார்வரைப் பூங்கிளிகா டருப்ப ரணஞ்சும் புனமயில் காள்சென்ற தாரைசொல்வீர் விருப்ப ரணம்புனை யாவெரிந் வேட்டுவர் மென்கொடியே. 60 கொடியவென் பாரிடஞ்சூழ் கூத்தவேட்டுருக் கொண்டுமன்ன னெடியவென் பாரிடஞ்சேரன்ன மேயென்றநித்த விண்ணோர் கடியவென் பாரிடம் போற்றுந் தலைபுனை காழிக்கங்கை முடியவென் பாரிடங் கொள்ளா வினைகெட முன்னுகவே. 61 முன்ன விராவண மேவிய வேணியன் முத்தமிழ்க்காய்ப் பின்ன விராவண நம்பிமுன் காட்டும் பிரான்கதிநீ யென்ன விராவணன் பாலருள் காழிய னேதிலர்பான் மன்ன விராவண னம்பினர் பாலுறை வண்ணத்தனே. 62 வண்ணந் தலைவரும் வாயில்வைத் தூதி வளர்புடவிக் கண்ணந் தலைவரு மெய்தாமற் காத்தவர் காக்கநஞ்ச முண்ணந் தலைவ ருமைபாகர் காழியை யோதுநெஞ்சே யெண்ணந் தலைவரு மெண்ணரும் வீடு மெளிவருமே. 63 வருமன் பரசமை யந்தோளி பங்கன் மதனைக்கண்ணாற் பொருமன் பரசமை யங்கையன் காழிப் புரந்தருள்கூர் கருமன் பரசமை யம்புகு தாதெனைக் காத்தருளுந் தருமன் பரசமை யங்கண்டு போற்றத் தருமறிவே. 64 அறியாப் படிவனைக் காழிப் பிரானையொ ராயிழைமுன் செறியாப் படிதறி நின்றெழுந் தானைத் தினந்தமிழ்க்காய் நெறியாப் படிமிசைக் காசுவைத் தானை நினைந்துசொல்லீர் குறியாப் படிதொடுத் தல்லோரைப் பாடியென் கூடுவதே. 65 கூடலஞ் சங்கம் பெறுங்கவி தேருங் குழைச்செவியென் பாடலஞ் சங்கம் பெறாக்கவி தேர்ந்தருள் பாலிக்குமோ நீடலஞ் சங்கந் தகர்ப்பக் கருவென்று நித்திலங்கொண் டோடலஞ் சங்கம் பலைகாட்டுங் காழி யொருமுதலே. 66 ஒருவான் பணிமுடி தானாக லிங்க முவந்திருத்தித் திருவான் பணிசெய வாங்கேயவ் வெண்கதிர் செங்கதிரைப் பொருவான் பணியவன் வைகலு மேத்தப் பொருவிடைமேல் வருவான் பணியுர கத்தான்றென் காழி மலையண்ணலே. 67 மலையம் புகலிக் கடுங்கா லுலாவ வளைந்தமுந்நீ ரலையம் புகலித் திடவயர் வாளுயிர்க் கியார்துணைகாண் சிலையம் புகலித் திருமா லெனப்பெற்ற சேவகநன் னிலையம் புகலிப் பெருங்காழிக் கேகொண்ட நின்மலனே. 68 மலப்புற வம்பனை மெய்ம்மூக்கு நாச்செவி மால்விழியாம் புலப்புற வம்புகும் வேடனை யாண்டருள் பூப்பதென்னாள் கலப்புற வம்பிகை யோடெயில் சூழ்கடற் காழியெனுந் தவப்புற வந்தனி லேவீற் றிருக்கின்ற சற்குருவே. 69 குருகணி கைக்கைந் தெழுத்தோ துங்கிள்ளையைக் கொண்டுலவா வருகணி கைக்குலத் தோரேவல் செய்யவும் வாய்த்திடுமோ வொருகணி கைக்கும் வினைதீரக் காழி யொருவன்பொற்றா ளருகணி கைக்கெழு வோரேவல் செய்தில மாயினுமே. 70 ஆயகங் கந்தரஞ் சேர்மதிற் காழி யமர்ந்ததெய்வ நாயகங் கந்தரன் பாங்காசி வாழ்விச்வ நாதனென்றா லேயகங் கந்தரங் கம்பகைக் கோதிய தென்னமின்னுந் தீயகங் கந்தர மாரற் குயிர்நிலை செப்பிடுமே. 71 செப்ப வருந்திவ சந்தொறு மோடித் திரிந்துபன்றி யொப்ப வருந்தி யுடற்கன்பு வைப்பவ ரூழிநமன் கைப்ப வருந்தி மெலிவார்நங் காழிக் கடவுட்கன்பு வைப்ப வருந்தி மலரோன் விதியில் வருந்திலரே. 72 இலவ தரத்தி யொருபாக மாதவ ரீட்டுமகத் தலவ தரத்தி தனைவென்ற காழித் தலைவமுன்னூல் வலவ தரத்தி னிலையெழுத் தான்மண் மறந்துவிண்மேற் செலவ தரத்தி னெனைக்காப் பதுநின் றிருவடியே. 73 திருக்கங் கணஞ்சிலை நாணாகப் பூட்டித் திரிபுரத்தை முருக்கங் கணம்ப னுறைகாழிக் கோயிலின் முன்புசெல்லார் நெருக்கங் கணம்புனை யார்பணி யார்பணி நேர்ந்ததொண்டர் வருக்கங் கணம்புகு தார்பிறந் தாவதென் மண்ணிடத்தே. 74 இடக்கா சினிபணி யெம்பெரு மான்றிசை யெட்டுமளந் தடக்கா சினிபுடை சூழ்காழி வாழெந்தை யாடரவப் படக்கா சினிவந்த நூபுரத் தாளைப் பணியிலுடல் விடக்கா சினிவரு மோவரு மோமறு வேதனையே. 75 போதா ரணிய மரும்பாதத் தன்பர் பொருளென்பரோ மாதா ரணியம் புயத்தேந்து மாட்சியும் வானவர்பொற் காதா ரணிய வரசாட்சி யும்பிற காட்சியுமே. 76 காணரும் பன்னகங் காட்டிய வல்குற் கரும்பனையார் வீணரும் பன்ன முலைக்கிரங் காதருள் வேலையமு தூணரும் பன்ன மிசைமா தவரு மொலிமறைநூல் வாணரும் பன்ன வருங்காழி மாமலை வானவனே. 77 வான வரம்பன் பரிமேல் வரவெள்ளை வாரணமேன் ஞான வரம்பன் வரவருள் காழியி னம்பர்வெற்பிற் கான வரம்பன்ன கண்ணியைக் கண்டெய்துங் காளைவர மான வரம்பன் முறைதருந் தேவர்க்கு மாற்றரிதே. 78 அரியுடை யக்க விணைத்தாளர் காழி யமலர்தென்ன னெரியுடை யக்கவி யோதிய சேய்தொழு மீசர்வெற்பில் விரியுடை யக்கவிர் சூழ்கான் வருமிவள் வேடர்தழை வரியுடை யக்கவிர் மாலைமின் னீபுவி மாமன்னனே. 79 மாமா சுகந்த மணிமிடற் றாய்பொன் மலர்ந்தகொன்றை தாமா சுகந்த மலர்ச்சோலைக் காழியிற் சங்கரனே காமா சுகந்தவ நோக்கிய வாகையிக் கன்னிக்குண்மை யாமா சுகந்த விரவலர் வாளி யவன்விடிலே. 80 விடிய வருங்கதிர் சூழ்மதிற் காழி விமலர்வெற்பி னெடிய வருந்ததி யன்னார் மனைவயி னீடுமிரா முடிய வருந்தி யிராதன்ப ரெய்தினு மொய்ம்மதிபோற் கடிய வருங்குடிச் சேவலுந் தாயர்வெங் காவலுமே. 81 காவடு வான முயர்காழி யீசர் கவுரிகொங்கைப் பூவடு வான மணிமார்ப வெற்பினிற் போர்புரிகைம் மாவடு வானன்பி னாலேனல் காவன் மறந்துநிற்குந் தீவடு வானங் கொடுந்தா யகத்திற் செறிக்குமன்றே. 82 செறிவா னரம்பையர் தங்கேள்வர் பூசிக்குந் தேமலரின் பிறிவா னரந்த மணநீக்கு மென்றலை பேதையர்நல் லறிவா னரம்புளர் வோர்பந் தெறிய வருங்கனிகொண் டெறிவா னரம்பயி லுஞ்சோலைக் காழி யிறையடிக்கே. 83 அடியா வனசத்த வாரிதி மாலறி யாதனநீண் முடியா வனசத்த னாடரி தேனு முழுதறியும் படியா வனசத்த னென்றிக ழானென்னைப் பண்ணவருங் கடியா வனசத்த மார்தமிழ்க் காழிக் கறைக்கண்டனே. 84 கண்டலங் கான மலரே குருகணி கைச்சிறியார் வண்டலங் கான மகிழ்புன்னை யேகங்குல் வந்தனரோ விணடலங் கான மருமல ரோன்றெழும் வேணியருட் கொண்டலங் கானந்தக் கூத்தாடுங் காழிநங் கொற்றவரே. 85 கொற்றுருத் திக்கு நெடிதுயிர்க் கும்பணிக் கோலர்பொன்னிச் சொற்றுருத் திக்கு வளைக்கண்டர் காழியர் தோளையல்லான் மற்றுருத் திக்கு மதியா வொருத்திக்கு மாதர்குழா முற்றுருத் திக்கு வளைக்கின்ற வேள்வரி னுட்பகையே. 86 உள்ளத் தருக்கு மழுக்காறு மன்றி யுறுதியெண்ணாக் கள்ளத் தருக்கும் வெளிப்படு மோதெண் கடலையங்கை வள்ளத் தருக்கு முன்போற்றுங் காழி வரதர்பொன்மான் கொள்ளத் தருக்கும் வினைதீர்ப் பவர்தங் குரைகழலே. 87 குரமா விலைசெய்த தென்காழி யீசர் குவட்டுமன்னர் கரமா விலையுறக் கண்டோ மிலைமுன்கைக் கட்டியில்லைச் சரமா விலையிவர் தாம்வேட்டஞ் செய்தது தானுமவர் வரமா விலையன்றி யுண்டோ கரிநிரை மானிரையே. 88 மானகங் காள மணிப்புய னேதிரை வாரிதிபோ லானகங் காள மொலிகாட்டுங் காழி யருமருந்தே போனகங் காள மெனக்கொண்ட தேவவெப் போதுதமி யேனகங் காள மொழித்தொழி யாமுத்த் யெதுவனே. 89 துவரத் தனையொளி வேணிப் பிரானையின் சொல்லமுதங் கவரத் தனையன் றனக்கமு தந்தந்த சாதலியா ரிவரத் தனையுயர் காழியெம் மானையுற் றேவல்செய்யு மவரத் தனைவரும் பெற்றார்பெற் றேனில்லை யவ்வரத்தே. 90 வரவாம் பலதளை யுற்றோர் வதன மதிக்கனிவா யிரவாம் பலமலை தன்பாகர் சாழி யிமயவெற்பிற் குரவாம் பலபரி யன்பர்பொற் றேரிற் குறித்தசங்கந் தரவாம் பலமெய்த லாலணங் கேமணந் தானெய்துமே. 91 எய்த்தவ ராக வினக்குரு ளைக்கமு தீந்துசெல்வ முய்த்தவ ராகமஞ் சேர்காழி நாத ருணர்வுகுன்றா மெய்த்தவ ராக முடைய பிரானென்னை வேண்டிவந்தார் பொய்த்தவ ராகவ மஞ்சேன் வெஞ்சேற்கொடிப் போர்மதனே. 92 மதவத் திரமக வைப்பெற்ற காரணர் வல்லியத்தோ லிதவத் திரமெனக் கொண்டதென் காழி யிறைவர்வெற்பில் விதவத் திரமத வேளெய்யும் போதன்பர் மென்மலர்த்தா ருதவத் திரமனத் தன்பாமென் பாங்கி யொருத்தியுமே. 93 ஒருகா தரம்பெறச் சாய்ந்திறு மாந்தென் னுரைகளெல்லா மிருகா தரம்பொரு வேலென்ற புல்லரை யேத்தறியே னருகா தரங்கணி காட்டுநங் காழி யரனையுற்றேன் றருகா தரந்தடுத் தேன்றொடுத் தேன்முத் தமிழ்சொல்லவே. 94 சொற்பனங் காயமென் றெண்ணியப் பாலவஞ் சூழ்பசு நூல் விற்பனங் காய விறைஞான மாமது மேவியபி னுற்பனங் காய மலராமென் றார்க்கு முரைத்தருளா நிற்பனங் காய புகழ்க்காழி மாமலை நிற்பவனே. 95 நினக்கடங் காத மயக்கந் தரவெற்ப நேரிழைபூந் தனக்கடங் காத னிறைத்ததென் றாலென்ன சாற்றுவன்யான் வனக்கடங் காதவன் மேனியில் வீச மலர்ந்தபுட்ப வினக்கடங் காதங் கமழ்காழி நாத ரிருங்கிரிக்கே. 96 கிரிசர மன்றி யிருசர மன்றிக் கிடைத்த வெம்போர்க் கரிசர மம்புக வென்றருள் காழிக் கடவுளர்தா மரிசர மம்புயத் தோன்பாக னாகவைத் தாண்டருளும் பரிசர மங்கையர் மங்கல நாணைப் படைத்ததுவே. 97 படைக்கலங் காரந் தகன்காட்டு நாளுன் பதங்களுக்கே யடைக்கலங் காரங் குரிமின்னல் யாக்கையென் றாய்ந்துவினை யிடைக்கலங் காரஞ் சலிக்கருள் காழி யிறைநடத்து நடைக்கலங் காரம் பெறுமூர்தி யாதி நரைவிடையே. 98 நரமா மடங்க லுரிசாத் தியசட்டை நாதவனந் தரமா மடந்தை திருக்கோலக் காவிற் றவஞ் செயநல் வரமா மடங்கலு மாலோடு தந்து மணஞ்செய்வித்த பரமா மடந்தவிர்த் தாளென்னைக் காழிப் பராபரனே. 99 பரத முடிக்க நடஞ்செய்யுங் காழிப் பரமர்வைகு மிரத முடிச்சி சுரத்தெதிர் நோக்கி யிறைஞ்சிமுன்னாள் விரத முடித்த திருநக ரித்திரு மின்னொடன வரத முடிக்கட் கரங்கூப்பி நிற்குமொர் மாமணியே. 100 ***** வாழி சிகர மலைச்சட்டை நாயகர் வானவரான் வாழி சுருதியுங் காழியந் தாதியும் வாழிபொன்னி வாழி தென் காழித் தலத்தன்பர் யாவரும் வாழியென்றும் வாழிதென் கூடற் சிதம்பர நாத மகாமுனியே. திருச்சிற்றம்பலம் காழியந்தாதி முற்றிற்று |
எனது இந்தியா ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்வகைப்பாடு : வரலாறு விலை: ரூ. 650.00 தள்ளுபடி விலை: ரூ. 585.00 அஞ்சல்: ரூ. 0.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
டாக்டர் வைகுண்டம் - கதைகள் ஆசிரியர்: ஜெயராமன் ரகுநாதன்வகைப்பாடு : சிறுகதை விலை: ரூ. 255.00 தள்ளுபடி விலை: ரூ. 230.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|