ரா. இராகவையங்கார்

இயற்றிய

திருப்புல்லாணி யமக வந்தாதி

காப்பு

நம்மாழ்வார்

புளிப்புற் றிராவுல கைக்கைத் தறுபகை பொன்றவழனீ
றுளப்பற் றுவர்த்துத் துவரப் புறப்பற் றொழித் தொண்டமிழ்
அளித்துப் பெயருந் தித்திக்கக் குருகை யினாரமுதைக்
களித்துப் பருகிற் றுலகுண் டுமிழருட் கார்ப்புயலே. 1

திருமங்கை மன்னன்

ஒண்புல்ல னிட்ட தர்ப்பா தனமீதிவ் வுலகுதொழத்
தண்புல்லை வீற்றிருந் தான்மேல் யகவந் தாதிசொலற்
கெண்புல்ல னேனெஞ்சிருந்தெப் பொழுது மினிதளிக்கும்
விண்புல்ல நீடு புகழான் கலிகன்றி மெய்ப்பதமே. 2

மதியிற் குறையலனா மங்கைமன் திருவாலி யன்பன்
பதியிற் றலைகொள்புல் லாணிக் கமிழ்திற் பதிகமிட்டான்
விதியற்ற யானுமிவ் வந்தாதி சாத்தினன் மென்முளரி
துதியிற் பெய்வான்முன் னெருஞ்சிக் கொடிப்பூச் சொரிந்ததொத்தே. 3

எற்கணையா விளக்காய்நின் றெனைக்கவி யென்றிழைத்த
விற்கணையா லேழ்மர மெய்தபுல்லை விமலனுக்குப்
புற்கணை யாக்கியதுங்கரி வேந்தாய்ப் புரிந்ததுவும்
கற்கணையாம்விழி மானாக் கியதுமோர் காரியமே. 4

ஆக்கியோன் பெயர்

காரார் கடற்புல்லை யிற்கருணாகரன் கான்மலர்மேல்
ஆராத வன்பின் யமகவந்தாதி யணிந்தனன்வண்
சீரார் நயித்துருவ காசிபகவி சேகரன்றன்
ஏரார் தருமாதுல சேட தாசனி ராகவனே. 5

நூல்

புல்லையம் பாக்கத்தன் பார்ந்தோர்க் கிரங்கிப் பொறிமகளைப்
புல்லையம் பாக்கத்தன் றங்காந் தெழுமைப் புவிதெரித்தோன்
புல்லையம் பாக்கத்தன் பூங்கழல் போற்றப் புகலிலர்க்குப்
புல்லையம் பாக்கத்தன் னந்தவஞ் செய்யப் புரிதி நெஞ்சே. 1

புரியா வையினுஞ் சிறந்தும்ப ரார்பொற் புரிசையைப்பாம்
புரியா வையினுந் தலையாற் பொரும்புல்லைப் புண்ணியன்சீர்
புரியா வையினுங் கதிதரு வான்சரண் பூண்கவலம்
புரியா வையினுதிவேல் விழியார்களம் போன்மென்பிரே. 2

என்பா பரணங் கபிலம் பொருவுமென் பேற்குய்யுமோ
றென்பா பரணங் கடிந்தாற்று நன்மருந் தேயெண்குண
னென்பா பரணங் கனைமார் குழூஉம்புனமேய் புல்லையா
யென்பா பரணங் களனார் பவன்பர வீச்சுரனே. 3

சுரதமிக் காய மொழியார் வயிற்புரி தூர்த்தன்பிசா
சுரதமிக் காய வின்பென்னா னெனவெற்றொ லைப்பைகொல்பே
சுரதமிக் காய வரும்பாப் பதின்மர் தொடுத்தணியீச்
சுரதமிக் காயருணீத் தென்பராற் புல்லைத் தொல்பரனே. 4

பரசமயங்கரு விற்கேது வென்று பரமனையின்
பரசமயங்கருந் தோற்குந் தரும்புல் லைப்பண்ணவனைப்
பரசமயங்கருஞ் சித்தந் தெளியலர் பாழ்மறலி
பரசமயங்கரு தாதெய்து காலம் பரிபவரே. 5

பரிசைய மன்ற விழிந்தாரைச் செய்யெனைப் பாலிப்பதொப்
பரிசைய மன்றமர்ந் தாடும் பிநாகி பதைத்திரியப்
பரிசைய மன்ற படைவாணன் பல்கரம் பாழ்செய்தவும்
பரிசைய மன்றற் பொழிலோங்கு புல்லைப் பதிக்கரசே. 6

பதியா தியங்க நெறியாதென் றேற்கொன்று பன்னினள் பார்ப்
பதியா தியங்கனை யாரின் மிக்கீர் செவிபாடுறு நீ
பதியா தியங்கழற் காளாவம் யாமென் பரகத்தன்றிப்
பதியா தியங்கழுமும் புல்லை மேய பரன்வெற்பிலே. 7

பரமதி யாக வுவமையி லாதிபகவ பொன்னம்
பரமதி யாக முரிஞ்சும் பொழிற் புல்லைப் பண்பகளே
பரமதி யாக வெடுத்துழல் கின்றவிப் பாவியென்பம்
பரமதி யாக பதியா நின்றாளிற் பதித்தருளே. 8

அருவருக் கத்தகும் புன்மத நூல ரளந்தறியா
அருவருக் கத்தழ கார்பொன் னறுவைநன் றார்த்தவுரு
அருவருக் கத்தரளக் காங்கடற் புல்லை யாரடியார்
அருவருக் கத்தணுகப் பெறுவாரெமை யான்பவரே. 9

ஆளானஞ் சாயகன் மாதிர நேர்களி றட்டவன்செய்
ஆளானஞ் சாயக னென்றெனைத் தேற்றிய ரண்ணனிற்கே
ஆளானஞ் சாயகம் புல்லாக்கி யோயெனு மன்பரைவந்து
ஆளானஞ் சாயகண் ணன்புல்லை மேயவருண்முதலே. 10

முதலைக் கடலைப் புரிபுல்லை யாற்கு முகுந்தனுக்கு
முதலைக் கடலை யணிவாற் கரியற்கு முந்தையின்ன
முதலைக் கடலைக் கடைந்தளித் தாற்கன்பு மூள்வர்திரு
முதலைக் கடலைக் குளப்புழுக் கீவல் மூரல்கொடியே. 11

ஏனைய வரனைத்தந் தாள்கிலாய் புல்லை யெந்தைநிற்றீர்ந்
தேனைய வரனையன் முதலோர்ப் பணியே னிவ்வெளி
யேனைய வரனை வோருந் தொழுங்கழ லீந்தருள்வை
யேனைய வரனையப் போதலின் றின்ப மெய்துவெனே. 12

எய்யாத் தடித்தின்னல் செய்யெனக் கள்வ ரிடிகுரன்மிக்கு
எய்யாத் தடித்தியங் காவெதும் புஞ்சுர னேயகவலை
எய்யாத் தடித்தி னிலையாப் பொருட்பிணிக் கேகுமெண்ணம்
எய்யாத் தடித்தி நெஞ்சே புல்லை மாதையிடர்க்கு வைத்தே. 13

வையம் பனைய மடவார் விழியின் மயலுழந்து
வையம் பனைய மடலாக்கி வீதிவரு வர்மற்றூர்
வையம் பனைய மடங்கார் சிவன்றலை வைக்கத்தன்றான்
வையம் பனைய மடம்பமில் புல்லையில் வாழ்த்தலரே. 14

தலங்காத் தலைமுத லாகக் கொண் முத்தொழிறன் கணிருத்
தலங்காத் தலைச்செய் தசோதைக்குக் காட்டினன் றாணிழலெய்
தலங்காத் தலைஇய வானுறை புல்லையைச் சார்ந்துபகைத்
தலங்காத் தலைநகர் சுட்டவற் களாந் தரமிலமே. 15

தரமோ தகமிக்க சான்றோர் பெருநெறி சார்ந்திலனா
தரமோ தகமுலை யார்க்குளனின் மலர்த் தாளைநிரந்
தரமோ தகமில லேனுதின் னெய்தினன் றண்டரளந்
தரமோ தகன்கடற் புல்லைத் தலத்தமர் தற்பரனே. 16

பரவையி னாகலவா வின்ப மால்வினை பண்ணலின்றிப்
பரவையி னாகணை மீத்துயில் வோனைவர் பன்னிநிரு
பரவையி னாகம் பெறவளித் தோன்புல்லைப் பாற்கனகாம்
பரவையி னாகமிளிர்வோன் சரண்மன் பதையினுக்கே. 17

பதையா வருந்து நிரைக்கா மலைக்குடை பண்ணின்மன்
பதையா வருந்தொழும் புல்லையா னல்லரைப் பார்க்கவென்று
பதையா வருஞ்செய னான்கும் புகனிரு பன்னருளென்
பதையா வருந்துவை யோநெஞ்சே மேமெய்ப் பவப்பிணிக்கே. 18

பிணிக்கா வலைக்குங் கொடுங்கூற்றை வென்று பெரும்பவமெய்ப்
பிணிக்கா வலைக்கடப் பானருள் புல்லைப் பிரான் முனங்கர்ப்
பிணிக்கா வலைவிட் டடவிதந் தாய்வசை பேரவுருப்
பிணிக்கா வலைபோல் வருமன்னர் போர்வெல் பெருந்தகையே. 19

தகையாம லகன் செலவிட் டனம்புல்லை சாரலம்வைத்
தகையா மலக மெனவுண்மை தேறலந் தையலர்நற்
றகையா மலக நுதலார்க் கழிவங்கட் டண்ணருண்ம
தகையா மலகற் றுணத்திறப் பாய்கொல் கதாதரனே. 20

தாதனிச் சம்பவ நோய்தீர நின்னைச் சரண்புகுந்தேன்
தாதனிச் சம்பொறுக் காச்சீ றடியர்க்குத் தாழ்ந்துள்கரு
தாதனிச் சம்புவி வாழ்வா மெனத்தெளி தற்குனருள்
தாதனிச் சம்பத் ததுவே தண்புல்லைத் தயாகரனே. 21

கரவந்த நன்கனி போல் வண்ண மாயவ காண்மறைச்சே
கரவந் தனன்புல்லை யம்மானின் சேவையென் கண்ணுனச்சா
கரவந் தனநினக் கேதகு மென்று கணித்தனன் யான்
கரவந் தனன் மையிலனேனு நின்பொற் கழல்படிந்தே. 22

படிக்கா மனைத்தும் படைத்துச் சுரர்க்கூண் பகுத்தனைக
படிக்காம னைப்பெரும் போராட்டங் கண்டனை பல்லுயிரிப்
படிக்கா மனைச்சுகத் தாழ்த்திவிட் டாய்நற்பரம நின்பேர்
படிக்கா மனையுமென் றெண்ணாயென் புல்லைத்தர்ப் பாதனனே. 23

தருப்பாத நனைந்திடு நீர்கிளை யெங்குஞ் சாருமென்று
தருப்பா தநனை வழிபடு மூதிலர் தண்புல்லைமா
தருப்பா தநனைத் தனவிலைக் கித்தரை சாலுங்கொல்பந்
தருப்பாத நனைக்கொள் கர்ப்பூர மொக்குந் தாரதிபரே. 24

தராவிரும் பாத லிரும்புபொன் னாதறகச் செயுஞ்சித்
தராவிரும் பாதரச மாரணஞ் செய்த கையிரும்பத்
தராவிரும் பாததென்னோ புல்லைமாயன் பொற்றாள் பெறின்விண்
தராவிரும் பாதகந் தீர்வீர் பொன்னாடுந் தலைக்கொள்விரே. 25

தலையாலங் கானஞ் செருவென்ற பாண்டியன் றாள்வணங்கித்
தலையாலங் கான பணிசெய்த புல்லைமன் தன்கதைம
தலையா லங்கானஞ் செயக்கேட் டுகந்த வன்தான் கண்படு
தலையாலங் கானல்ல ரராமீக்கொள் தெய்வஞ் சரணமக்கே. 26

நமற்கார வுய்த்த வுணவா முயிர்ம்யெகொள் நாளிலெல்லா
நமற்கார மும்புகுந் தெய்வத மென்றுள நம்பித் தொழீர்
நமற்கார ரருந்துணை யாயொளிர் வார்புல்லை நாரணன்முன்
னமற்கார மோட்டுவா னந்தகோன் றனயனன்றியே. 27

தனையனு மானத் தளக்கரி யானற் றயரதற்கு
தனையனு மானத்தள் சீதை மணாளனும் தானென்றுள்ள
தனையனு மானத் தகவோர வோதினன் றண்புல்லைநித்
தனையனு மாநத்தர னையந்தீர்த்த தயாகரனே. 28

கருணா கரவான் பெயராற் சிறந்த கவிப்பெரும்பா
கருணா கரவர்க் கருள்பது மாசனி காதலர்நா
கருணா கரவா வறுவார் தொழும் பெருங் காமர் தண்பொங்
கருணா கரவா சகங்கிளி தேர்புல்லைக் கண்ணவரே. 29

கண்ணனை யாதவனைத் தொழுவார்க் கலர்கிற் பர்கஞ்சக்
கண்ணனை யாதவனைக் கண்டெனப் புல்லங் காடனருட்
கண்ணனை யாதவனைக் காலதூதர் கறுத்திவன்வன்
கண்ணனை யாதவநைத் துக்கொல்வா யென்பர் காலனுக்கே. 30

கேத நத்தஞ் செய்தலில்லா வறிவொளி கேடில சா
கேதனத் தம்புக லில்லாச் செழுமதி சிந்தித்தவர்
கேதநத் தந்துடைத் தாக்கந் தருமுது கேசவனீள்
கேதனத் தம்புள் ளுயர்த்தா னிடஞ்சீர் கிளர்புல் லையே. 31

புல்லா ரணியன் மிலைந்தவன் மாறன் பொறையன்றொழும்
புல்லா ரணியன் புநிதாதி சேதுப் புனற்றுறைவன்
புல்லா ரணியன்றிய வூரழித் தவற் போற்றினவன்
புல்லா ரணியன் புடனீவ ளெல்லாப் பொருளையுமே. 32

ஐயாலங் கானகத் தேகண்டமர்ந்த வருண்முதலாம்
ஐயாலங் கானகல்செய் மணிப்பாப் பணையாய் புல்லையாய்
ஐயாலங் காநகர் தீத்தநல் வென்றிவில் லாயருளாப்
ஐயாலங் கான கதலைதடு மாறிய வந்திமத்தே. 33

மத்தாக மந்தரம் வைத்தாய் புல்லாணி நிவாசநிக
மத்தா கமந்தரல் செய்தா யடியேன் மருண்டபுன்கா
மத்தாக மந்தரங்கத் தேவருத்தவளர் தருகன்
மத்தாக மந்தரமாம் போதுநீ யென்முன் வாதரற்கே. 34

வாத மருந்திய பாப்பணை யாய்புல்லை மாதவமூ
வாத மருந்திய வுட்கண முண்ண வகுத்தவமே
வாத மருந்திய வாசுர வீணரை மாய்வித்தவ
வாத மருந்தியக் கங்கொள் மெய்வீழ் மரணத்தெற்கே. 35

மரஞ்சத்த மாமலை போல்பவைக் கோர்கணை வைத்தவர்கா
மரஞ்சத்த மாக வளிசெய் துழாயினர் மன்மதகா
மரஞ்சத்த மாமுக வற்குயர் மாதுலர் வாணன்செய்ச
மரஞ்சத்த மாற்ற றெரித்தார் தண்புல் லையின் மாயவரே. 36

மாய மநந்தம் புரிகிற்பர் புல்லையை வாழ்த்தலர்கும்
மாய மனந்தம ருண்ணாம லுண்டு மருந்தருந்தி
மாய மனந்தமி லெண்ணாது வாழ்வர் வவ்வித்திரு
மாய மனந்த வமயம் வரினென் வலமுளரே. 37

வலத்த வராக வடிவாய்ப் படிகொண்ட மன்னதிரு
வலத்தவ ராகவ வண்புல்லை மாயவ வாழ்த்திலர
வலத்தவ ராக வடுவாய் மலையன் வழிபடுகோ
வலத்தவ ராக வலர்த்தா ளினையென்னுள் வைத்தருளே. 38

வையா கரணர் தொழுதென் வடமொழி வாணநன்சி
வையா கரணங் கிரவொழித் தாய்புல்லை மன்னவருள்
வையா கரணம டங்கவு மென்றீ மலவினைகள்
வையா கரண மெரிப்பட் டெனக்கெட்டு மாயவுமே. 39

மாகந்த மாதனமா விருப்பார் புல்லை வாணரதாம்
மாகந்த மாதன மாதிரப் பாவைக்கு மார்பினசும்
மாகந்த மாதன மாமலையா மதிக்கிலமம்
மாகந்த மாதன மால்கிளைத் தற்குண்மை மாநண்பனே. 40

பனவனு மாயதி சேர்வலப் பாகன் பரம்பரன்விற்
பனவனு மானுக் கருள்செய்த புல்லைப் பதியினனொப்
பனவனு மானத் துரைக்கரி யான்றன் படிததிகோ
பனவனு மாட்செய் துணர்ந்தெய் னான்றிரும் பாப்பதமே. 41

பதக்கா வலரைப் பெருவீ டிரந்து பயன்கொள்கிலீர்
பதக்கா வலரைக் குணிக்கு ளார்நிரப் பார்பிறர்ச
பதக்கா வலரைப் பெருவாணன் போரிடைப் பார்மினறு
பதக்கா வலரைப் பொழிபுல்லை மாலருள் பாடுமினே. 42

பாடிய மானவை தேர்மறை யோர்புல்லைப் பண்பனிறை
பாடிய மானவன் கைதொடு வார்களிப் பானுருகிப்
பாடிய மானசயோகர்க் கல்லாமற் பசையறுகூப்
பாடிய மானகங் கொட்டிற் றெனவிளைப் பார்க்கிலனே. 43

கிலமா வருந்திக் கெடுகாய வாழ்விதென் கேசவகோ
கிலமா வருந்திக் களிக்கும் புல்லாணி கெழீஇயமர்ந்த
கிலமா வருந்திக் கெலாநிறைந் தாய்க்குக் கிளர்ந்தவன்பா
கிலமா வருந்திக் கெனவசைக் காளாய்க் கெழுமெமக்கே. 44

மக்களருந் தாதிய ரில்லஞ் செல்வம்பல் வாழ்வுற்றுக்கா
மக்க ளருந்தாக் களிக்குந் தருணத்து வஞ்சனைய
மக்க ளருந்தா வதைத்தற் கிரங்குவிர் மாலன்பிற்சென்
மக்க ளருந்தா வரும்பய னாம்புல்லை வாழ்த்துமினே. 45

வாதா சனகி மணாளா கண்ணா வென்றவர்க் களித்தொவ்
வாதா சனம்பொய் யிட்டான் குலமாய்வித்து வண்புல் லையில்
வாதா சனமிசைக் கண்டுயில் வோய்நினை வாழ்த்து மென்கண்
வாதா சனனந் துடைத்தாட் கொண் டுன்றாள் வழங்குதியே. 46

குதியா வருங்கால தூதரென் மேற்பெருங் கோபமன்மி
குதியா வருங்காரமுஞ் செய்வர்க் கென்செய்வல் கூரருட்ட
குதியா வருங்காண் டலைவிரும் பாய்கொல் முகுந்தநல்லா
குதியா வருங்காரி தாவெனச் சூழ்புல்லைக் கோவலனே. 47

கோவலங் காரமெலா நிறைந்தும் பகைகொண்டு நின்வெங்
கோவலங் காநகர் மாய்ந்தது நீகற் குடையளிக்கக்
கோவலங் காரினடுங்கா துயர்ந்ததுங் கூர்ந்த றிந்தேம்
கோவலங் கார்ந்துதென் புல்லைத் தலைவந்த கொற்றவனே. 48

வனமா தவர்தவப் பேறாக நின்கவின் மாந்துறயவ்
வனமா தவரனுடன் மேயினை புல்லை மாயவநின்
வனமா தவரொரு கோடிக்கொப் பாமென்பர் மற்றதுசெவ்
வனமா தவவுப மானங் கொலோவெவ் வகையுநிற்கே. 49

கையா தவனை மறைத்தாழி யானிருள் கண்டடித
கையா தவனை சுடுகரி வேந்தெனக் காத்ததித்த
கையா தவனை நினைவார்க் கெதுகுறை காமருசீர்
கையா தவனைப் பணிவீர் தென்புல்லைக் கடித்தலத்தே. 50

தேவகி லேசமும் பெற்றில ளின்பநிற் றேடுவசு
தேவகி லேசமு மற்றாய ரின்பஞ் சிறந்தனர்நற்
றேவகிலேச விளையாட னின்னது தேர்கிலம்பல்
தேவகி லேச மணம்வீச புல்லைத் திருவரனே. 51

திருவரங் காமுறத் தந்தாயகலஞ் சினந்துனையெ
திருவரங் காவி யறப்பொரு தாய்புகழ்த்தேன் பெய்துகந்
திருவரங் காந்திசை செய்யத் துயில்வாய் திசையொளிர்ந்த
திருவரங் கம்புல் லையா யெழுவாயருள் செய்வதற்கே. 52

வதமாயி நையப் புரிந்தெச்சம் வேட்பர் மறையிதென்று
வதமாவினை யோகயர்வர் மெய்வாட்டுவர் வானயிரா
வதமாவினை யுகைப்பர் மீள்வர் மீள வராவணந்தெய்
வதமாவினை யமுட னேத்தப் புல்லை வராதவரே. 53

தவறா விதையத் தருள்விழை வார்புல்லைத் தாமமிகுத்
தவறா விதையன்ன தீவினை யாற்பிறந் தைக்கடலெய்
தவறா விதையகப் புன்படவா மென்மெய் சாமிடத்து
தவறா விதையகப் பொழுதைக் கிப்போதுரை சந்தனனே. 54

தந்தன மென்மருங்குற் பாவை யார்க்குளந் தாழ்ந்துவைத்
தந்தன மென்ப தெல்லாமுந் தொலைத்துத் தளர்ந்துமுதிர்
தந்தன மென்றுண மாட்டார்க்குப் புல்லைமன் றாள்புகவி
தந்தன மென்று முயிரளிப் பானெத் தாமெண்ணியே. 55

எண்கூற்றின் வாய்வைத் துரிஞ்சவு மூறா விருட்படுவிற்
றெண்கூற்றி னாறலைப் பார்மே விருஞ்சுர மென்றவென்ன
தெண்கூற்றினில்லா தெழுந்தார் பொருட்பிணிக் கெச்சன்முதல்
எண்கூற்றி னின்றவன் புல்லைப் பிரான்வெற் பிறையவரே. 56

இறையா வருந்தரங் கக்கடற் செல்வத்தி னேற்றணைமீ
திறையா வருந்தந் திறைஞ்சத் தனிக்கோ லியற்றினரும்
இறையா வருந்த விடீரோ வெனச்சென் றிரந்துவினாய்
இறையா வருந்த விடிகொள்வர் மால்புல்லை யேத்துமினே. 57

துமிதந் தமர மெறிகடற் புல்லைத் துறைவனீர்மீ
துமிதந்த மரவொ ராலிலைத் தொட்டில்கொள் தூயவந்துந்
துமிதந் தமரர் முழங்க வுலாவருஞ் சோதி யெப்போ
துமிதந் தமரடைதற் கெண்ணுத் தெய்வஞ்சு கோததியே. 58

கோதண்ட ராமண் டலமுற்று மாகிச்செங் கோல்புரிவாய்
கோதண்ட ராமலர்த் தாண்மிதித் தாடுவை கூற்றுவனுக்
கோதண்ட ராமவன் தூதருக் கோவுள் குலைவலெற்கா
கோதண்ட ராம புல்லாணித் தெய்வச்சிலைக் கோதில் பொன்னே. 59

கோத மனம் பன்னி சாபங் கழீஇயருள் கொண்டல் பெருங்
கோத மனம்பல நந்தன நாறிசை கூர்புல்லைமால்
கோத மனம் பவந் தீர்த்தாள் பவனடி கூடலரெங்
கோத மனம்பயில் வாரவ ரேவினைக் கொள்கலமே. 60

கலவி யவாவன் முலையாரின் வைத்தவர் கண்ணிடர
கலவிய வாவன் புரைப்பார் தண்புல்லைக் கடவுள்முன்ப
கலவிய வாவன் மருவிருள் கண்டான் கழலுளம்பு
கலவிய வாவன் மதியின் வினவலர் கண்டகரே. 61

கண்டக ராகவம் வாரணப் போரினை காண்கலர்வன்
கண்டக ராக வெந்நாளுமி ரார்பிறர் காதலிமார்க்
கண்டக ராகங் கெழுமார் புல்லாணிக் கடற்குளித்துக்
கண்டக ராக வனையன் பொடுதொழக் கற்றவரே. 62

கற்றவ ராக வளைத்துப் புரங்கொல் கபாலிதொழக்
கற்றவ ராகவ துன்பக் கடனின்று காசினிய
கற்றவ ராக வடிவாய புல்லைய கன்னியர்க்கேக்
கற்றவராக வலைப்படுவேற் கென்கதி சொல்வையே. 63

கதிக்கல மந்தக் கரணத்து னையெண்ணிக் காணவெஞ்ச
கதிக்கல மந்த களிற்றிற் புலத்திற் கவிழ்வநன்ம
கதிக்கல மந்த முனியிசைக்கும் புல்லைக் காகுத்தநின்
கதிக்கல மந்தம் விளையமற் காளாய்க் கழிவமென்னே. 64

என்றலைக் காவிரிஞ்சன் பொறித்தான் புல்லையாய் நினெண்ணா
தென்றலைக் காவிரிபோல் யாறொழுகற்கு மின்மதிமீன்
என்றலைக் காவிரி வானியங் கற்குநீ யேவைக்குமே
தென்றலைக் காவிரி யாப்புள் விலங்கு மெண்ணிற்றிலையே. 65

இலைக்கா வலர்க்காக் கனிக்காத் தருப்பயனீந் தென்ன நற்க
யிலைக்கா வலர்க்கது நல்கும் விண்வேண்டி னஃதீயுந்தன்கோ
யிலைக்கா வலர்க்குயர் வீடுந் தரும்யா ரிறைஞ்சிடினும
யிலைக்கா வலதுவே றில்லாத புல்லை யிருந்தெய்வமே. 66

இருந்தைய மாவாசை யின்மரந் தீப்பரி னிதுபொருள்
இருந்தைய மாவா சொரிய வெணாரன் பிலரிவர்தாம்
இருந்தைய மாவாசை யிற்கட றோய்வர் நின்னின்னருளுக்
இருந்தைய மாவாச வண்புல்லை யாய்சேய்த் திருப்பவரே. 67

பவனா சனமிசைக் கண்படை கொண்டுநற் பாற்கடல்வாழ்
பவனா சனந்தங் கழூஉம் புல்லையான் புல்லன் பண்ணியதர்ப்
பவனா சனமழ காவமர்ந் தோனிப் பரமனல்லாற்
பவனா சனஞ்செயுந் தெய்வமற் றில்லெனப் பாடுமினே. 68

பாடகத் தாயின தொல்வினைப் பற்றறுப்பா யெங்கள் கூப்
பாடகத் தாயினரு ளாதிராய் நிற்கிப் பார்மகளென்
பாடகத் தாயின சேவடி யாய்தொண்டைப் பானதிபாய்
பாடகத் தாயினறீர் புல்லையாய் பெரும்பண்ணவனே. 69

பண்ணாரி யன்பி னிசைக் கெதிர் மாங்குயில் பண்மிழற்றப்
பண்ணாரி யன்மறை தேர்வார்க் கெதிர்கிளி பாடவகம்
பண்ணா ரியன்று வலஞ்செய் புல்லாணிப் பதித்தளிநாப்
பண்ணாரி யன்வழி பாடுகந் தானெம் பராபரனே. 70

பராவருந் தாம வைகுண்டத் திருப்பிரிப் பாரினரும்
பராவருந் தாமரைத் தாடொழிற் றேவர் பணிதிவ்யசா
பராவருந் தாம லுயிரளிப் பான்புல்லை பற்றினிரிம்
பராவருந் தாமகிழுங் கோகுலத்தும் படர்ந்துளிரே. 71

படவரவத் தணையா னன்னை போலவந்த பாவியின்க
படவர வத்தனை யாயு முன்னப்பால் பருகினன்செம்
படவ ரவத்த முறாதேத்து புல்லைப்ப கவனகப்
படவரவத் தழைப்பீர் கரிபோ லன்பு பாயநின்றே. 72

பாய மகம்பரந் தூரப் பதின்மர்சொல் பாட்டுகந்தோன்
பாயம கம்பர வற்கெனை யாண்டவன் பத்தியின்று
பாய மகம்பர முய்க்குமென் பார்க்கிலன் பைம்பொலக்குப்
பாய மகம்ப ரணித்தேத்தும் புல்லைப் பவித்திரனே. 73

பவள மலைக்குட் படர்கழிக் கானலிற் பான்மதியொப்
பவள மலைக்கு நிகருப்பி னார்புல்லைப் பாற்றிருவென்
பவள மலைக் கினிப்பா யமர்ந்தோனடி பாடினர்க்கின்
பவள மலைக்கப் படாதளிப் பான்செகம் பாலிப்பனே. 74

பானலங் காரமென்றால் வாய்க்குறை யென்பர் பண்ணவன்கோ
பானலங் காரணமென்பீர்க் குமகுறை பார்மினென்பல்
பானலங் கார மலர்புல்லை மாதவன் பாயருளுய்ப்
பானலங் காரம் புனையீர் சொலீர்நினைப் பானிலிரே. 75

பானத் தமரர் பருகற் கமுது படைத்தவசோ
பானத் தமரச் சமயம் பலகாண் பகவமுத்தீன்
பானத் தமரம் பையினிடை யூர்புல்லைப் பண்ணவநின்
பானத் தமரபிளி தோங்குஞ் சேது பதிகளுக்கே. 76

கட்கா தலைக்கா திடர்ப்பொய் விள்ளாது பெண்காமமொடு
கட்கா தலைப்புரி யாதளிப் பாய்புல்லைக் காகுத்தது
கட்கா தலைத்தவிர்க் காயெனிற் செல்வல்பைங் காய்தின்றம
கட்கா தலைச் செய்த நன்னன் புகுநர கத்திடையே. 77

கத்திய மாதங்க முன்வந்த புல்லைக் கருணையனா
கத்திய மாதங்க மெய்தா தொருபான் கவிஞர்புகல்
கத்திய மாதங்க மாப்போற்ற வேற்றான் கழலன்றிக்கார்
கத்திய மாதங்க மோபுணை நும்பவக் கார்க்கடற்கே. 78

கடப்பா ரமரும் புயவே டொழும்பூங் கழலினன்மக்
கடப்பா ரமரும் புலாணிப்பதிப் பகவன் பெருஞ்ச
கடப்பா ரமரும் புலப்புற வூர்ந்தெனக் காய்ந்தெளியர்க்
கடப்பா ரமரும் புரிவாரைத் தள்ளுங் கடுநரகே. 79

கடுக்கன லாயுதங் கொல்லாது பிள்ளையைக் காத்தனையோர்
கடுக்கன லாலணியாய் வினைத்தேள் கொட்டக் கன்றியெம்முள்
கடுக்கன லாயறி வாய்புல்லை யாயிது கண்டருள்ச
கடுக்கன லார்பஞ்சி போற்கெட நீட்டிய கான்மருந்தே. 80

கானம ருந்தின தூடணன் வீடச்செய் காகுத்தனும்
கான மருந்தி னருந்தக் குழலிசை கண்ணனுமாய்க்
கான மருந்தின மேத்தப் பவக்கரை கண்டுய்க்கமீ
கானமருந் தினவாற் றொழும் புல்லைக் கடற்புலத்தே. 81

புலவா தவனிவ னென்றுசொல் வீர்க்குப் புகல்வலென்னைப்
புலவா தவனி மணாளன் பிதாவெனப் போய்த்தொழும்வி
புலவாத வனிடை மேவி யெலாமும் புகுந்தொளித்தான்
புலவாதவ நிரையாய் மேயும் புல்லை பொலிந்துளனே. 82

துளவம் பலர் தொடுத்துச் சூட்டப் பல்பதி தோற்றியும்கந்
துளவம்பல மரமெய்தச் செய்வரொத் துளர்க்கிலன்வா
துளவம் பலர்தொழு வான்றொழுந் தேவாய்த் துலங்கிவிண்பொ
துளவம் பலர்பொழிற் புல்லைத் துறைவாழ் சுகக்கடலே. 83

சுகந்தரு வர்க்குள் ளுவார்க்குள மேய துழாயர்க்குவிஞ்
சுகந்தரு வர்க்குட் பதியாகும் புல்லைச் சுலபர்க்கொரா
சுகந்தருவர்க் கமோ ரேழிற்குங் கோத்ததுணை வர்க்குமெய்ச்
சுகந்தரு வர்க்குத் தொழும்பா கிலம்பவந் தோய்ந்தனமே. 84

தனத்தா துரங்கலந் தீட்ட முயன்றதனாலிலர்சந்
தனத் தாதுரங் கமழப் பூசியும் மணந்தாங்கிலரீ
தனத்தாது ரங்க மணவாள புல்லைத்தலத்த மன்ம
தனத்தா துரங்கமு மாவாயென் னார்வெறி தாயினரே. 85

தாயாக வந்தனை பேயென் றுயிருண்டன னடைந்தார்
தாயாக வந்தனைச் சாரதி யாக்கிவென் றானெணிச்ச
தாயாக வந்தனை செய்வார்க் கினிப்பவன் றண்புல்லை யேத்
தாயா கவந்தனைத் தீர்த்தா னருளிற் றவழ் நெஞ்சமே. 86

தவழக்கற் றான்மருதிடை யாய்ச்சி தனித்துநெய்பெய்
தவழக்கற் றாகப் பருகினனினூர்முற்றுந் தன்னுடன்போ
தவழக்கற் றாங்கழற் கானடந்தான் புல்லைகண்டருளெய்
தவழக்கற் றாய்நெஞ்ச மேயினி யார்துணை சாம்பொழுதே. 87

சாந்தரு ணத்தினிற் கார்துணை புல்லைமன்றண் புயத்திற்
சாந்தருணத் திலங்கக் காப்பிட நினைந்தாயிலை பொச்
சாந்தரு ணத்திலை நன்னெறிச் செல்கிலை தம்முளுப
சாந்த ருணர்த்தியுங் கேட்கிலை நெஞ்சே தருக்குவையே. 88

குவையா வருத்தம் வளர்த்ததென் னெஞ்சேபிறர்க் கோவித்துப்புக்
குவையா வருத்தம் விளைப்பா யலைப்பைபல் குற்றத்தின்மி
குவையா வருத்தம ரென்பா யிவற்றாற் கொடிதிருட்கே
குவையா வருத்த மகிழ்புல்லை மாலருட்கோவிலையே. 89

கோவாலை யத்தியென் றாலது வாமென்று கூறியுநற்
கோவாலை யத்தி பற்றல் விளையாட்டெனக் கூடியும்வெங்
கோவாலையத்தி னெரிந்துங் குளிர்காற் குளிர்ந்துங்கெடு
கோவாலையத் திருவாழ் புல்லை மால்புகழ் கோவியந்தே. 90

வியப்பாவையா நின்னரு ளேத்தி லேனென் விதிப்பை யெற்கோ
வியப்பாவை யாப்பெண்டிரைப் போற்றினேன் காப்புயனென்றுகா
வியப்பாவை யார்மிசை யும்புகழ்வேனெரி விண்வளிபு
வியப்பாவை யாமப் பறைசூழ் புல்லாணி விமானத்தனே. 91

மானத்த னைவா யரவணை மாயன் சுவத்திகவி
மானத் தனைவரும் போற்றவண் புல்லை யமர்ந்தவன்ச
மானத் தனையென்று மில்லாத் திருமண வாளனருள்
மானத் தனைத்தா னளிக்குவ் கொலோவுடன் மன்னுயிரே. 92

மன்றா னியங்கா திசைமாந்த வேய்ங்குழல் வாய்வைப்பன்பொன்
மன்றா னியங்காத் தடியெடுத் தாட மகிழ்பரந்தா
மன்றா னியங்கா டெலாம்வினை புல்லை வரனருட்க
மன்றா னியங்காணு வர்பெரு வீட்டினில் வாழ்பவரே. 93

பவராக மாய விடாது பிணிக்கப்புன் பாழிருள் சேர்
பவராக மாய விருப்பீர் பரவுமின் பாருளுவப்
பவராக மாயவர் புல்லைப் பிரானார் பராற்பரவை
பவராக மாயம னாற்பிரிப் பார்திருப் பாதங்களே. 94

தங்கத்தனைய சுடர்மேனி மாயனைத் தண்புல்லையிற்
றங்கத்தனை வைத்து வீடும்புரக்கும் சகபதியைத்
தங்கத்தனைப் பரவார் காமதீபந் தனில்விழும்ப
தங்கத் தனைசுட மாய்வ ரந்தோபல சன்மங்களே. 95

மங்கள வாச்சிய வோசையறாப் புல்லை மால்பிறர்நா
மங்க ளவாச்சிய மென்றிருப் பார்சொலு மாயவன்கா
மங்கள வாய்ச்சியர் பாற்செய்த வன்பனை வாழ்த்திற்சுடர்
மங்கள வாச்சியம் பெய்திரி போலொளி மல்குவிரே. 96

குவித்த கரம்பர வும்வாய் கருதுளங் கூர்ந்தியல்வெ
குவித்தக ரம்பதிகங் கண்பெயத் தொழுங் கோனல்லொழுக்
குவித்தக ரம்பழுக்கும் புல்லை யான்றளி கொண்டுதிறக்
குவித்த கரம்பனக ராளி யெங்கள் குலதெய்வமே. 97

குலவாய ரான்கன் றெனப்புகு வாய்கோ குலனின்முன்னா
குலவாய ராவலைத் தீராதுகானே குவைபெண்களல்
குலவா யராகந் தலைக்கேறி வீணாள் குலையவெந்ந
குலவா யராவிற் கெடுவேனைக் காபுல்லைக்குட்பரனே. 98

குட்ட வியாதி பல திரர சாகுவன் முனம்பொ
குட்ட வியாதியினை வேந்துணா துண்குவன் றண்புல்லைக்
குட்ட வியா திலகும் பரன்கொப் பூழ்க்குள விழுமொக்
குட்ட வியா திருந்துண்டாமண் ணோடு ககோளமுமே. 99

கோளத் தனையு நிலைகுலை யாதொளி கூர்ந்திவர்க
கோளத் தனைபெரு வீடுடை யானைக் குறைவறுமீக்
கோளத் தனைவீட ணற்கெளி யானைக் குணந்துதியுங்
கோளத் தனைச்சொல மிக்கானை வந்து குளிர்புல்லையே. 100

திருப்புல்லாணி யமக வந்தாதி முற்றிற்று




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247