யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை இயற்றிய திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி காப்பு திங்களை யாற்றைநற் சென்னியி லேந்தினர் சீரடிசேர்த் தெங்களை யாற்றத்தர் தில்லையந் தாதியிசைக்க நல்ல சங்களை யாறரி யங்கயி றங்கரி தாழ்களிறார் தங்களை யாறன்ற னண்ணர் கழலகங் கரக்கநின்றே. நூல் கங்கை யடையார் சடையர் கழனியிற் கற்கடகங் கங்கை யடையா யளியலர் சேர்தில்லைக் கங்கணநா கங்கை யடையாள ரத்தர்தஞ் சீர்த்தி கழறெனத கங்கை யடையா யளித்தன னண்ணல் கழலரணே. 1 அரசங் கணியார் கடநிறை தில்லை யணிநகரா யரசங் கணியா னலையிச் சனனத் தயஞ்சிதைநல் லரசங் கணியா யெனினந் தனங்கலை யாதிக்கத் தரசங் கணியா கிரிதலை யேனரிக் கஞ்சலனே. 2 அஞ்சக் கரத்த ரரியாதி யண்ட ரயனிகலா ரஞ்சக் கரத்த ரிறைஞ்சிறை தில்லைய ரங்கசனன் றஞ்சக் கரத்தர் சராசர நல்க லளியளகத் தஞ்சக் கரத்தளி சங்கரர் தாளி னடைந்தனனே. 3
தடைக்கலங் காரி னிசியங் கழனி யனஞ்சிலையென் றடைக்கலங் கார நனியணை செய்கைகண் டாணகைசெய் யடைக்கலங் கால நளினகந் தில்லை யரசரணே. 4 சரத்தை யலரையா னஞ்சில னஞ்ச றலையவர்க்கே சரத்தை யலரை யடைந்தாய்ந் தலைக தரணியந்நீ சரத்தை யலரை யணைநலஞ் சார்க சரங்கலந்த சரத்தை யலரைய ராரணி தில்லையர் சங்கரர்க்கே. 5 சங்கரி யத்த னடராசன் றில்லையன் சக்கரக்கைச் சங்கரி யத்த னிடையின் றலைந்த சராசரத்தின் சங்கரி யத்தழ லங்க னிசாசரர் தங்கணகர் சங்கரி யத்தகை நாதன் கழனிழ றங்கினனே. 6 தங்கந் தனையன தாதி னிதழி தனையணிந்தார் தங்கந் தனையனங் கற்கடந் தேன்றனர் சண்டரினா தங்கந் தனைய னடையா தளியரன் சந்ததஞ்சந் தங்கந் தனையரி யேத்திறை தில்லையைச் சார்ந்தனனே. 7 தனங்கணங் கையா னனநனை கஞ்சந் தரித்தனகந் தனங்கணங் கையலர் காந்த ளிடையென் றனிநெஞ்சிடந் தனங்கணங் கையணை தாச ரினலழி சங்கரனந் தனங்கணங் கையடை யென்றடை தில்லைத் தடங்கிரியே. 8 தடந்திரி நாட்டனத் தில்லைய நங்கறை சாயலிந்த தடந்திரி நாட்டிய நல்ல க்ரங்கதை தாரையங்காந் தடந்திரி நாட்ட நிகரணங் கத்த தயைசெய்கநெய்த் தடந்திரி நாட்டநல் லர்ச்சனை செய்யத் தகநினக்கே. 9 தகரனந் தந்தக் களிற்றத்த னாதியஞ் சத்தியணைத் தகரனந் தந்தனி நாயகன் றில்லையன் றன்னையெதிர்த் தகரனந் தந்தனைச் செய்யரி யத்தன் றனையகத்தைத் தகரனந் தந்தயை நந்திநன் றாளெந் தலைக்கணியே. 10 தலையா திகழ றரிதில்லை நாடக சார்நாரா தலையா திகழறஞ் செய்நன்றி யெங்ஙனந் தண்ணளிசேர் தலையா திகழ றனைநீக்கி நல்கிடத் தக்கநஞ்சி தலையா திகழறச் சாதங்க நீங்கிடத் தாகதியே. 11 கதியாக நாக நகலிந் தணிசிர கண்ணனயன் கதியாக நாக நகத்தரி யத்த கழனிகன்ச கதியாக நாக நகர்தில்லை நித்திய கர்த்தநல்லே கதியாக நாக நகர நயந்தனன் கண்டிடற்கே. 12 கண்டனை யந்த கனங்கழை சேர்தில்லைக் கல்லணங்கின் கண்டனை யந்தக நக்க சிரத்தனைக் காளநிறை கண்டனை யந்தக ரேறித னத்தனைக் காதலித்தல் கண்டனை யந்தக நீயெனை நண்ணிற் கலங்கலனே. 13 கலங்கலை யாணரர் நண்ணற் கடியென் கதியரணி கலங்கலை யாணர் சசியணி தில்லையர் கஞ்சத்திய கலங்கலை யாணனி நாநல் லரிபயன் கத்தர்கறங் கலங்கலை யாணலி தையல ராகல் கசத்திநெஞ்சே. 14 சேறலை நீங்கிநின் றாளணங் கல்ல டெளிதலையஞ் சேறலை நீனலர் நைய நிலத்திற் செறிந்தனகால் சேறலை நீல நிகர்கண் ணழைத்த சிலைச்சிலையான் சேறலை நீர்நிறை செய்யணை தில்லைத் திகிரியினே. 15 திகிரியை யேந்த லெனநா நடத்தலஞ்ச் செல்லணிசேர் திகிரியை யேந்தரி யாதியர் நன்னகர் செல்வலநந் திகிரியை யேந்தற் சராசனஞ் செய்யான் றில்லையினா திகிரியை யேந்தயை நல்கினர் சீர்நகர்ச் சித்திதந்தே. 16 தேனினங் காணல் லெழிலனங் காளரன் றில்லையலர்த் தேனினங் காந்தன தண்டலை கான்சடஞ் சேதன்னெய் தேனினங் காக்க நினைகிலிர் சாற்றலிர் சிந்தனைநர் தேனினங் காயளி நாயகற் கண்டந் தெளிதியென்றே. 17 என்றாட லைக்கடை யாற்றினர் தில்லையி லெய்தவெஞ்ஞான் றென்றா டலைக்கடை யேன்றரி சித்த லினியணையே னென்றா டலைக்கடை செந்தளி தாசர்க் கிறைகணங்கி வென்றா டலைக்கடை யாழிச் சசியதை யெள்ளினங்கே. 18 அங்கந் தரியா ரணியிறை யங்கை யழநரித்தா ரங்கந் தரியானை யத்த ரெனதலை யாதனினி யங்கந் தரியா தணையடி நந்தியெ னந்திபத்தி லங்கந் தரியா தனியரன் றில்லையி லாயினனே. 19 ஆயத் தனைய ரயிரா தனீநின் தங்கநிக ராயத் தனையலர் நெஞ்சா நளினத் தணையனநீ யாயத் தனைய னெனதிறை தில்லைய னாணநன் காயத் தனைய னிறைஞ்சிய சங்கர னார்கிரிக்கே. 20 ஆரலங் கற்களி யாதி யரனிறை யத்தனித்த னாரலங் கற்கக நாக ரரியய னாதியரேத் தாரலங் கற்கட கத்தினை யங்கடை யன்னநிரை யாரலங் கற்கழ னிக்கணை தில்லை யணிநகரே. 21 நகத்தரக் கீர நறையல ரார்தில்லை நன்னகரார் நகத்தரக் கீரத ணந்தி யரியய னாடிசையை நகத்தரக் கீரற் செயிரிறை சீரியர் நங்கயிலை நகத்தரக் கீரர ணாஞ்சர ணண்ணின னானயந்தே. 22 நானங்கைத் தந்திர நாடின னென்றனர் நானயிரே னானங்கைத் தந்திகண் டஞ்சி யடைந்தனை நாறலர்க ணானங்கைத் தந்திரி நேரிசை யாயர னாகராரி நானங்கைத் தந்தி யரியய னார்தில்லை நன்னகத்தே. 23 நந்தனங் காயந் தகனோர் களநடை நாட்டதிகழ் நந்தனங் காயக லேனென் றனையரை நச்செநெஞ்சே நந்தனங் காய நிலையா நெனச்சர ணண்ணியணை நந்தனங் காயஞ் செறிதில்லை நந்நட ராசனையே. 24 சனகரை யாதியர் தேசிக தில்லைத் தரணியினச் சனகரை யாதிக ழீசகளத்திற் றரித்த நஞ்சஞ் சனகரை யாதி கலஞ்சன னத்தினென் றாகர்நெஞ்சா சனகரை யாதினை யென்னக நீயினிச் சஞ்சரியே. 25 சஞ்சரி கங்கா தானரன் றில்லைநந் தையல்கைக்கஞ் சஞ்சரி கங்கா ரளகத்தி நன்கணி தாரணைந்தீர் சஞ்சரி கங்கா னிடையிற நண்ணினிர் தக்கதன்றே. 26 தக்கரி யாகஞ் சிதையர னேகர் தகரினன்றந் தக்கரி யாகன்ற னத்தாந் தில்லையர் சாரயற்கந் தக்கரி யாகல ரன்றணி யாரென் றளையகநந் தக்கரி யாக நனியழி யாதி தனியிறையே. 27 தனித்தில தத்தைகள் கற்றறை சீரா தாரணியின் தனித்தில தத்தை யெழினிறை தில்லையைச் சார்தலையெத் தனித்தில தத்தை யலரய ராதகந் தட்டையினெய் தனித்தில தத்தை யலையா னிறைஞ்சத்த சார்ந்தளியே. 28 சாரலை நீயென தாதன னையை தனிகளநஞ் சாரலை நீரணி தில்லை யரனஞ் சயிலநல்ல சாரலை நீச ரெதிரில் கிராதரர் தாநிசியஞ் சாரலை நீளத ரஞ்சின னத்தி தரக்கினையே. 29 தரனந் தரனணி யாய்நனி தில்லையிற் றங்கிகங்கா தரனந் தரநிகழ்த் தந்தகற் றாக்கிறை சாரயன்சீ தரனந் தரணி யடைந்திறைஞ் சத்தன் றரணியினா தரனந் தரஞ்சர ணாயணை யண்ண றரித்திநெஞ்சே. 30 தரியங் கனைசடை யாரா னந்தி தனையிறைஞ்சா தரியங் கனையகட் டாக நினையலர் சண்டரினந் தரியங் கனைய ரிடரழி தில்லைநந் தந்தையையர தரியங் கனைநிசி யாதனை யெங்ஙன் றணத்தலதே. 31 தணத்தலை யென்றலை தீட்டினன் கஞ்சன் றனியினலி தணத்தலை யென்றலை நாயக ரெண்ணினத் தானகன்றார் தணத்தலை யென்றணை நானினி நென்னலிற் சங்கரா தணத்தலை யென்றணி கண்ணிறை தில்லைத் தடங்கிரிக்கே. 32 கிரிதிரி கைக்களி றார்கட நந்தில்லை கிட்டிடிற்கக் கிரிதிரி கைக்கதி யாநஞ் சனனங் கெடினரனங் கிரிதிரி கைக்கல ரேந்தி யிறைஞ்சரி கேட்டளிதி கிரிதிரி கைக்கறை நீச ரெயிலழி கீர்த்தியரே. 33 தியங்கனஞ் சாரங் கனையளி யண்ண றிகழெழினந் தியங்கனஞ் சாரக னந்தனத் தில்லையன் சேரசலத் தியங்கனஞ் சாரக் கரனே ரிதழித் தெரியலனா தியங்கனஞ் சாரங் கனத்தனென் னெஞ்சஞ் சிறந்தனனே. 34 சிறைக்கணி யாயனந் தாதனை தில்லையர் சாரலினஞ் சிறைக்கணி யாடகங் கஞ்சங்க ளென்கரந் தேக்கினநிற் சிறைக்கணி யார்கழ லின்னிசை கேணந் திகழனங்கன் சிறைக்கணி யார்த லினலழி தைய றியங்கலையே. 35 கன்ன னிறையற லாரள கத்தினள் கண்டனெஞ்சே கன்ன னிறையற நன்கேற்ற கண்ணனெண் கண்ணனத்தன் கன்ன னிறையரண் டில்லை யடியர் கழநிசையார் கன்ன னிறையரன் சீரிசை நல்ல கலைதனையே. 36 தனையா தரியென் கழலென நண்ணித் தனையிறைஞ்சா தனையா தரியரன் றில்லையி லஞ்சலி தந்திடச்சார் தனையா தரிதடை யாயக நங்க டளையணையா தனையா தரிந்தகற் றிக்கதி தானளி தஞ்சநெஞ்சே. 37 தஞ்சந் தனங்காண நல்லா ரலரலர்ச் சாயநநி தஞ்சந் தனங்கா யிகலழி தாரணி தந்ததணைந் தஞ்சந் தனங்கா யெழிலணை தில்லையர் சங்கரனார் தஞ்சந் தனங்கா ணிறைஞ்சணங் கிந்தத் தரணியிலே. 38 தரையா யிரந்தநந் தில்லை நகரரைத் தன்னிகர்நித் தரையா யிரங்கத் தரையே கரையித் தரணியினா தரையா யிரண்டடி தேடி தனையர் சலசநச்சத் தரையா யிரநா நயந்தன னேத்திடத் தந்திலரே. 39 தந்தனங் கற்க நடையிடை நேரசை தத்தைதனந் தந்தனங் கற்க ளழியகஞ் சேற்கட் சரந்தைசடந் தந்தனங் கற்கர சீந்ததென் சேடகற் றையறனித் தந்தனங் கற்கணை யாகற் கிடந்தில்லை சார்நகத்தே. 40 கத்த னகரத் தகையணி நாகனங் காழியர்சீர் கத்த னகரத் தனந்தில்லை யென்னக் கயிலையென்ன கத்த னகரத் தனஞ்சலி நெஞ்சங் கழலிணைய கத்த னகரத் தலரா லிறைஞ்சல் கடனினக்கே. 41 கடனா ரணனறி yஆநற் கழலிறை காசினிச்ச கடனா ரணனரன் றில்லைத் தலத்தன் கடநிகர கடனா ரணங்கத்த னத்த னிசையைக் கழறிடலென் கடனா ரணங்கயர் காலன் கடைநிலைக் கஞ்சிலனே. 42 சிலையளி யேனினற் கெய்நீல நங்கைநஞ் செய்யினினாஞ் சிலையளி யேந்த லணிசங் கலங்கரி தில்லையரன் சிலையளி யேறள கத்தே னயின்ற தெரியலையெச் சிலையளி யேலினிக் கண்டளி கிண்ணந் திறந்தெனக்கே. 43 எனக்கா கரத்த லடியர்க் கெளியை யினிதணையா யெனக்கா கரத்தலங் காசனத் தில்லை யிராசநிலை யெனக்கா கரத்தழ லேந்தா யாக்கை யெனதெனதே யெனக்கா கரத்த நசைநா யிரையடி யெற்களியே. 44 களங்கனங் கந்த நிலத்தல ரார்தில்லைக் கந்தனனி களங்கனங் கந்தணை நோத்தி தன்னதட் கண்ணழலான் களங்கனங் கந்தரி யாதி யானிறை கட்டரையங் களங்கனங் கந்தைநஞ் சார்சங் கராநங் கதியடியே. 45 கதையா லரிசெறி கண்ணா லயர்தல் களிதரத்தக் கதையா லரிதடி யாரை யணலெனக் கத்தகநக் கதையா லரிதழி யார்சிலை யாழியங் கட்கநத்தங் கதையா லரியணை தில்லையி னாதர் களித்தனரே. 46 களிற்றைத் திகழ்கனி யாறணை தில்லையர் கல்லகநீங் களிற்றைத் தினந்தனி யானனி யெய்த கதியகணை களிற்றைத் திதணய லேகிய தந்தக் கரநெடிய களிற்றைத் தினைகாத் தனிர்கண்டி ராயிற் கழறிடிரே. 47 கழறலை யார நனிநா டினரயர் காசினிய கழறலை யாரண னஞ்சலி தில்லையர் கத்தரின்சீர் கழறலை யாரயர்த் தார்கதி யெய்திலர் காசினிக்கி கழறலை யாரலர் தஞ்செய லாதலிற் கற்றனன்றே. 48 கற்றா யிடையலை காரிகை யங்கன் கறைதனிலி கற்றா யிடையர் தயிரயி னாதன் கறைதனைய கற்றா யிடையரன் றில்லை யணிநகர் கண்டிறைசீர் கற்றா யிடைய னினையார் நிகர்த்தனர் கன்றனெஞ்சே. 49 கன்றடி யாரநந் தன்னனை யானசைக் காரிகைய கன்றடி யாரயர்த் தாளனிச் சத்திற் கயங்கியதிர் கன்றடி யார லயினிகர் கன்னிறை கானினெற்றே, கன்றடி யாரக றில்லையி னாதன் கனநகத்தே. 50 கனஞ்சங் களகங் கலர்நிறை தில்லைய கையணிசங் கனஞ்சங் களகங் கனியய னிந்திரன் கத்தகறங் கனஞ்சங் களகங்க ணீங்கிடக் காக்க களித்தினியே. 51 களைகண்ட நங்கை சடநிக ரன்றிக் கழனியலர் களைகண்ட நஞ்சரன் றில்லையி லெங்கள் களிநயந்தே களைகண்ட கண்ணி யலரா யலர்ந்ததெங் கன்னிகையே களைகண் டளிர்த்தய லாரிலஞ் சேர்ந்தநின் கண்ணளியே. 52 கண்டிகை யார நயந்தனர் தில்லை களித்தனச்சி கண்டிகை யாரண்ட ரைய ரிரிந்திடக் கண்டதகர் கண்டிகை யாரறங் காதலர் தந்தை கழனையலக் கண்டிகை யாரணைந் தார்கதி யில்லைக் கறையினர்க்கே. 53 கறையா னரிகலை யென்னச் சிதையகங் கண்டகண்டக் கறையா னணைதில்லைக் கல்லக லாரென் கழறிலர்நில் கறையா னளையயின் றானனை யாரயல் காணறற்கேங் கறையா னசையா ரியன்றதென் கரண்டி கரந்தழையே. 54 கராகண் டலக்கண் களிறளி யாழியங் கையினனா கராகண் டலயை னத்தா நடேச கயிலையென்சி கராகண் டலந்தா ரிகழா தில்லையங் கானெழின கராகண் டலங்காண நன்கா யளிதசைக் கட்கரிதே. 55 கரந்தா ரணிதந் தணைந்தன ரன்றெனைக் கையணைத்தே கரந்தா ரணிய ரலரக லேனெனங் கள்ளரினா கரந்தா ரணியிய னன்றென்ற னெஞ்சங் கலந்தலையா கரந்தா ரணியநந் தில்லையி லாடினர் கல்லகத்தே. 56 கலத்தினற் காக்கை யனநிலை யேனெனைக் காயகஞ்ச கலத்தினற் காக்கை கடனஞ் சராரற் காத்தினணி கலத்தினற் காக்கை யணங்கினற் காலங் கலாநிதிய கலத்தினற் காக்கை யணைதில்லை யாரற் கரத்தினற்கே. 57 கரியாக னெண்கணன் கண்ணனை யாதியர் கந்தனந்நா கரியாக னத்த னரனாதி தில்லைக் கனநிரைச்சி கரியா களியினி யந்தண ராரெதிர் காயழலே கரியாக நங்கை கலியாண நங்கள் கதைநயந்தே. 58 கதிரை யிராக்கதி ராரலைக் கண்ண...... கதிரை யிராக்கத னாத கடைஞர் கதலியைநெற் கதிரை யிராக்க னயின்றா ரரிதில்லைக் கண்ணளியே கதிரை யிராக்கன கத்தரங் காடினை காதலித்தே. 59 காதலைச் சங்கரி யாயின னேத்திய கங்கணநா காதலைச் சங்க ரறைசீர்த் தியநற் கயிலையத்த காதலைச் சங்கர நாடக தில்லைய காலனினிக் காதலைச் சங்கர நாத நனியளி காலிணையே. 60 காளங் களத்தே திகழரன் றில்லையின் கல்லகத்தேன் காளங் களத்தே றெழிலிக னேயெழிற் கன்னலனெக் காளங் களத்தே னிறைதண் டலையிற் கரந்தனளே கானங் களத்தேனல் காத்தன ளெங்ஙனங் காணலதே. 61 காண்ட கரடக் கடிந்தேறி யத்த கதியதில்லைக் காண்ட கரடக் களிற்றத ளாயெழிற் கண்ணரங்கைக் காண்ட கரடக் கரசிரஞ் சார்ந்த கலாநிதிய காண்ட கரடக் கரைநே ரிசைகளி காரணணே. 62 காரியங் காக்கனல் காட்டணை கையடி காயகிதீக் காரியங் காக்க நசைநீர்க் கரியயில் கானடந்தாற் காரியங் காக்கள கண்டஞ் சிகிநண் ணகணிய தாய்க் காரியங் காக்ககங் காதரர் தில்லைநங் காதலிக்கே. 63 தலங்கா யயின்றனர் சீரிசை யந்தணர் சத்ததில்லைத் தலங்கா யயிலரிக் கண்ணி யெதிர்நடி நாடரிசித் தலங்கா யயிராணி கண்ட னயனரி தாழாநா தலங்கா யயிர்த்தலை யென்னக நீநனி சார்ந்தினியே. 64 தினகர னாரல் சசிசேர்ந்த கண்ணன் றிகழணிகா தினகர னாக னடியா ரிறைஞ்சிய தில்லையகத் தினகர னாதியை யானன னாரிறை தீநிறைந்தெய் தினகர னாத னெனதரன் றாணிழல் சேர்ந்தனனே. 65 சேயரிக் கட்டளி தீர்கிள்ளை காடின் னனநசைநெஞ் சேயரிக் கட்டளி நாட்களி நாயகர் சென்றயர்த்தார் சேயரிக் கட்டளி யாலழி யாரயன் சேந்தனத்திச் சேயரிக் கட்டளி யாரரன் றில்லைச் சிகரியினே. 66 சிகரத் திகிரிச் சராசனர் சங்கரர் தில்லையரிச் சிகரத் திகிரியர் தாழிறை திண்ணஞ் சிதைத்திடறே சிகரத் திகிரிக ளாதி சனனஞ் சிதடகநி சிகரத் திகிரியை யாநிலை நிற்றி சினக்கனெஞ்சே. 67 சினந்தரி யாதியர் கண்டங் கிரியத் தெழித்தணைகஞ் சினந்தரி யாதினி தாயயி லத்தரின் செய்யிடகாஞ் சினந்தரி யாதிக் கலைநிக ராரகந் தில்லையிறைஞ் சினந்தரி யாதினி யாயினஞ் சித்தி திகழடிக்கே. 68 கழனித் திரையன நீரணை தில்லைக் கனகநடி கழனித் தியனென தாதித் தனியிறை காசினிய கழனித் திரைதிரைச் சோரி யஞ்சலி கத்தனிந்தி கழனித் திலங்க ணிறைதனத் தாயிழை காதலனே. 69 காலனை யங்கணை தாசரின் றாக்கங் கழலணிந்த காலனை யங்கண னைக்கிளர் தில்லையிற் கண்டடைந்தக் காலனை யங்கழி யானந்த ரானங்கங் காசினிநீர் காலனை யங்கதி ரிந்தழ லாதனென் காயனையே. 70 காயங் களையகி லங்களை யாக்கிய கத்தனலர்க் காயங் களையகி லின்னறை யைச்செறி கண்டிடையர் காயங் களையயி னாதன் றிரிதில்லைக் கானணையங் காயங் களையகி லேங்கா ணலனெனிக் காத்திரத்தே. 71 காத்திரங் காரந் தணரணை தில்லையர் கத்தர்தடங் காத்திரங் காயய ரேறிணை யின்றினிக் காத்தறையல் காத்திரங் காநினை யல்லா விலையங் கனதனங்கள் காத்திரங் காயினென் சாயினென் னண்ணனங் காதலிக்கே. 72 காந்த ரணிக்கடை யாரலி னாதர் கலந்தனரே காந்த ரணிக்கடை யாரந் திகழ்தனக் காரிகைதன் காந்த ரணிக்கடை யாரக றில்லையர் காலிணைநீங் காந்த ரணிக்கடை யாரடி யாரினற் காசலரே. 73 சலசங்க நீரல ரானன நல்ல தனநனையாய்ச் சலசங்க நின்றென் னிகரீ ரணங்கின் றனங்களைய சலசங்க நீர்நட நண்ணினி ரஞ்சித் தனியரனச் சலசங் கரத்தயி லானத்தர் தில்லையஞ் சாரலிலே. 74 சாதனஞ் சாரங்க நந்தனத் தில்லையர் சங்கரனார் சாதனஞ் சாரங் கடியற் களித்தனர் தந்தையரற் சாதனஞ் சாரங் கனநா தரையகந் தாசரினெஞ் சாதனஞ் சாரங்க தஞ்சநீ யென்றல் சிரத்தையதே. 75 சிரத்தை யரிநே ரலர்க்கணை யாரினல் செய்தனர்காஞ் சிரத்தை யரியா ளயின்றா ரனையளிச் செய்கையினென் சிரத்தை யரியா யிறைஞ்சிறை தில்லைத் திகழ்தடத்தே. 76 தடியா னனந்தலை யாந்தில்லை யாதி தயித்தியனைத் தடியா னனந்தலை யாழியி னித்திரை சாரரிசேர் தடியா னனந்தலை நான்கின னஞ்சலி சங்கரர்சி தடியா னனந்தலை யாயய ராதளி தந்தனரே. 77 தனதரைக் காதலி சித்தா றிலக்கண சாத்தியசா தனதரைக் காரிய காரண காழற் றணிகதிர தனதரைக் காரிகை கிர்த்தியந் தில்லை தனினடித்தா தனதரைக் காட்டா தந்தளி ஞானந் தரணியெற்கே. 78 தரணி யரியார் சசிக்கணர் நல்ல சகாயநந்தி தரணி யரியா கனையா தியரயன் றந்தையினா தரணி யரியா ரழகிய தில்லையர் தாளடையா தரணி யரியா ரலரணி யாக்கந் தரித்திடற்கே. 79 தரித்திரி யாகர நெஞ்சினி லானந்தஞ் கற்றிலனாந் தரித்திரி யாக லகற்றி யளித்திரந் தாடலையிற் தரித்திரி யாக நனியாற்றி யென்ன தயித்தியர்க்கந் தரித்திரி யாகண் டலனளி தில்லையின் சத்தியரே. 80 சத்திய னாரணங் கில்லடி யாரகஞ் சஞ்சரிகஞ் சத்திய னாரண னஞ்சலி தில்லையன் றன்னதங்கைச் சத்திய னாரணங் கேளர னித்தியன் சாரனந்த சத்திய னாரணங் கத்த னனங்கற் சயித்தனனே. 81 சயந்தனக் காதல னிந்திர னாகர் சகாயதென்றற் சயந்தனக் காதஞ் செறிநறை யத்திரன் றன்னகந்தை சயந்தனக் காத லழியா தில்லையிற் சார்தலென்னிச் சயந்தனக் காத லடிய னினலழி தாழ்க்கலையே. 82 தாளத ரங்கஞ் செறிய நடித்திடச் சந்திரர்கந் தாளத ரங்க நிறையிறை தில்லையஞ் சாரறினைத் தாளத ரங்கணென் னந்தர நிற்கிதெந் தையனடந் தாளத ரங்கண் ணரைத்தனை சேந்தனை தாக்கணங்கே. 83 தாக்கணங் காக னயனிறைஞ் சத்த தயித்தியனைத் தாக்கணங் காகன லங்கர தில்லையிற் சார்நசைநந் தாக்கணங் காகன கத்தரங் காட றரிசித்தலெய் தாக்கணங் காக நசையில் லடிநலந் தானிலையே. 84 தானத் தகையார் கயநல் லயிலிற் சயிலந்தகர்த் தானத் தகையா நகையா லெயிலழி சங்கரதத் தானத் தகையா ரலர்நிறை யந்தடஞ் சார்ந்ததில்லைத் தானத் தகையா லெனையணை யந்தத் தரணத்தினே. 85 தரங்கங் கழனியி னீரெறி தில்லைத் தலத்தினரந் தரங்கங் கழறங் கனையர்செ யின்ன றனையழியத் தரங்கங் கழலக் கழலநற் கந்தை கரியரனா தரங்கங் கழலிணை யானென தஞ்சிரந் தாங்கினனே. 86 தாங்கலை யன்ன நடையாய்த் தரித்தல் கரத்தளகந் தாங்கலை யன்ன யன்கைக் கைசெயல் தாண்டி கரியிரங்கத் தாங்கலை யன்னகண் ணங்கிங் கணைத் றரிசிக்கநந் தாங்கலை யன்னரன் றில்லையி னாரியர் தந்தனெஞ்சே. 87 தனஞ்சய னேற்றடி தில்லையி னாதி தனியக்கரந் தனஞ்சய னேற்றநந் தானறை யண்ணனஞ் சங்கரனா தனஞ்சய னேற்றக லானையயின்றனன் சட்டகத்தைத் தனஞ்சய னேற்றரை யாதவென் சித்தியைச் சார்கநெஞ்சே. 88 சாரங் கனையரி யைக்களி தில்லைத் தகையடையல் சாரங் கனையரி யஞ்சிய தாளனைத் தன்னலக்கைச் சாரங் கனையரி தஞ்சலி யாதர் தழனரகஞ் சாரங் கனையரி னந்தகட் டாக றனையலரே. 89 அல்லியங் காரள கத்தின ரஞ்சிகி யாடனக ரல்லியங் காரணந் தில்லையஞ் ஞானத் தகநெறியி னல்லியங் காரலை யாதரி னாடி யரனளித்தா னல்லியங் காரி னிறத்தின னாடங் கடிகடந்தே. 90 தந்தங் களியா லணங்கின ராடகந் தந்தியிணைத் தந்தங் களியா நனியழத் தாக்கிய தையலைக்கை தந்தங் களியாண் டகையய ராளினித் தண்டலைக்கந் தந்தங் களியா ரலர்நிறை தில்லையர் சார்நகத்தே. 91 கத்தகத் தாகளி யென்னை யளியென்னக் காலிணைசீர் கத்தகத் தாலணை சித்திர காயநற் காலிலிகாண் கத்தகத் தாநிக ழின்னிசை யாயரன் கைத்தினரங் கத்தகத் தாகி நடித்தனர் தில்லையின் கானகத்தே. 92 கானய னங்களி லெங்ஙனஞ் சங்கரர் கண்ணனலர்க் கானய னங்களி யாதிநந் தில்லையர் கல்லகத்திக் கானய னங்களி னண்ணிடற் கல்லிற் காடியத்திக் கானய னங்களி னண்ணிய தாண்டகைக் கட்டழகே. 93 கட்கஞ் சனந்தீட் டணங்கின ரேதங் கழறந்தை கட்கஞ் சனந்தீ தெதிரில் சிறாரெழில் காணியர்திங் கட்கஞ் சனந்தீண் டிலநிறை தில்லைக் கழலெழிவார் கட்கஞ் சனந்தீ கலையினன் ஞாயிறென் கண்ணினற்கே. 94 கண்ணனை யாதன தன்னேச னென்னக் கழறடியார் கண்ணனை யாதன காணகி லேநற் கழனிகயங் கண்ணனை யாத னளினநந் தில்லையின் காட்சிநெஞ்சே கண்ணனை யாதனந் தந்தரங் காணல் கடனினக்கே. 95 கடங்கடந் தான தசைநடை யாயிழை கண்டன்கயங் கடங்கடந் தான நனையாற் றழலடி கன்றிடச்சங் கடங்கடந் தானனி யென்றய ரேலினிக் கண்டிடிந்தக் கடங்கடந் தானந் தணியினர் தில்லைக் கதியணித்தே. 96 கதங்கை யரனே கரிய கதலிகைக் காக்கையடக் கதங்கை யரணாய் நனியணை தில்லைய காதினிலங் கதங்கை யரங்கத்தி னீரத ளத்த கனலிறைநக் கதங்கை யரச நினையய ரேனென் கசிந்தகத்தே. 97 கசிந்தனை யாய தலகை யழிதல் களித்தனனக் கசிந்தனை யாய ரளையயி னாதனைக் கண்ணனையா கசிந்தனை யாயளி யாலர தில்லைய கத்தநல்லே கசிந்தனை யாயக நானலை யாதளி காசினிக்கே. 98 காயந் தகரத்த நண்ணா தினியெனைக் காத்திடினற் காயந் தகரத்த சித்தி யளித்தி கழனடச்ச காயந் தகரத் தளகத்த டில்லையிற் காட்டிறையா காயந் தகரத் தலையேறி யத்த கடைக்கணித்தே. 99 கட்கஞ்சத் திக்கணி யஞ்சீர் கழறின் கதியினயங் கட்கஞ்சத் திக்கறை நாதனிற் கண்ணல் கரத்தியந்திங் கட்கஞ்சத் திக்கநீர் நின்றன ரன்னை களிநயனக் கட்கஞ்சத் திக்களி நாயகர் தில்லையர் கங்கையரே. 100 திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |