சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய திருவருணை அந்தாதி அருணை என்பது திருவண்ணாமலையைக் குறிக்கும். திருவண்ணாமலையின் புகழைப் பாடும் சிற்றிலக்கியங்கள் பல. அவற்றுள் காலத்தால் முந்தியது இந்தத் திருவருணை அந்தாதி. சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு. காப்பு செந்தாதி மஞ்செறி சோணாசலத் தரைச் செந்தமிழி னந்தாதி யமனைச் செற்றார்க் குக்கோசல நாடுவிட்டுத் தந்தாதி யால்வனம்புக் காரும்வேதச் சதுமுகரு மந்தாதி கண்டிலர் யானோ வந்தாதி யறைகுவனே. 1 நிறவாகுவான் செம்மையொப்பான் பொருதநிருதரஞ்சு மறவாகுவான் மகவான் பணிவான் பணிவைத்திருந்த திறவாகுவான் பொற்கவான் குறியாதின் றென்சிந்தையுள்ளே யுறவாகுவா னம்மரு ணையந்தாதி யுரைப்பதற்கே. 2 நூல் பூமன்ற லைமை யளிசூழருணை யிற்புங்கவனார் மாமன்ற லைமை யடுந்தலையாகவரங் கொடுத்தார் காமன்ற லைமை யறவழலாக்கிய கண்ணர் விண்ணோர் தாமன்ற லைமை யக்கந்தீரநஞ்சந் தரித்தனரே. 1 நஞ்சமையக் கச்சணிந்த வண்ணாமலை நம்பனெழுத தஞ்சமையக் கற்றடி பணியாத வரந்திபக றஞ்சமையக் கத்துளேமிகத் தத்தித்தலை வெடித்து நெஞ்சமையக் கத்துடன் போய்விழுவர் நெறிக்கயலே. 2 கயற்கண்ணிறைக்குஞ் செழுமா வனங்களரும்பவிழ்த்து புயற்கண்ணிறைக்கும் பொழிலருணேசர் புனலிறைக்குங் கயற்கண்ணிறைக்குமப் பால்வளை சோருங்கருத்துகுரு மயற்கண்ணிறைக்குமக ராலயமன்ன வல்லியர்க்கே. 3
காவலர் கடுகுதல் வல்லியமன்று முதல் போற்றமாசுணம் வாழ்த்தமறை சொல்லியமன் றுண்டமாடுமற்பு தன்சோணை வெற்பிற் கொல்லியமன் றுடியோநகர்க் காவலர் கொட்டுபறை பல்லியமன்று பகைத்துடியாகு நம்பார்த்திபர்க்கே. 4 பாரக்கழலுந்தி வஞ்சிய ராடல் பயிலருணை பாரக்கழலுந்தி யாரணிவார் பதவம்புயமும் வீரக்கழலுங்கண்டேன் குஞ்சிதானும் வெளுத்துத்தந்தஞ் சேரக்கழலும் பொழுதுமுண்டே நமன்றீ துகளே. 5 தீதகங்காணி ளவுநில்லா தென்றிருக்கறுத் தோன் போதகங்காணி கொண்டோன்றொழுமீசன் பொருந்தருணைச் சாதகங்காணி றைவண்டி னங்காளுயிர தான்வருந்தும் பாதகங்காணி லன்றோபிரிந்தார்க்குண்டு பற்றுதலே. 6 பற்றவளக்கரும் பாரிடமோநின் படையிமவான் பெற்றவளக் கரும்பாரிடத் தாய்மறை பேசருணைக் கொற்றவளக் கரும்பாரிட நாலையுங் கூட்டியழ குற்றவளக் கரும்பாரிடந் தேரென வூர்ந்தவனே. 7 பாங்கி தலைமகற்குக் குறியிடங்கூறல் ஊருவரம்பையன்னார் பகற்போதிலுறை விடமைந் தாருவரம்பையர் சூழும்பொன்னா ட்டிலுந்தக்கதுகாண் காருவரம்பையிற் காரிணையாகிய கண்டர்வில்லர் மேருவரம்பையிடத் தாரருணையில் வெற்பின்னே. 8 வாயில் மறுக்கக்கேட்ட பாணன் கூறல் வெற்புடைமானின் றவேலோனைத் தந்தவன்வேழவுரிப் பொற்புடை யானியல் சோணாசலத்திற் புரவலனே யிற்புடையா ழெடுத்தென் மடமான் கல்லெதிரெறிந்தாழ் கற்புடையாளென்ற சொல்லே கொடுத்தது கைபலமே 9 பாகனொடு கழறல் பலவாகனங்களுஞ் சேவிக்குமால் விடைப்பாகனுமை குலவாகனம் பனருணை யிலேமுத்தின் கோவையெலா நிலவாகனங் கடுந்தேர்காடி நிற்பவர் நெஞ்சுருக வலவாகனமுந் தினானிற்குமோ கையில் வண்டினவே 10 வண்டுகளிக்கு மரிப்புன்னை தோறுமது வுண்டென்றுங் கண்டுகளிக்கு மலர்ச்சோலைத் தேனைக்கயலினங்க ளுண்டுகளிக்கு மருணாசலத்திலு வந்துறைவர் வெண்டுகளிக்கு மதனாகப் பூசியமெய்யினரே. 11 இடையூறு கிளத்தல் மெச்சம்பரவையிரும் பொடியாக விழித்தவன்று தச்சம்பரவையுற மேவுமத்தனரு ணையன்னீர் மச்சம்பரவையிருங் காவியென்று மகிழ்ந்திருந்தேன் நச்சம்பரவையிலா னாற்புதையு நயனத்தையே. 12 கையுரை புகழ்தல் நதியம லைக்குஞ்சடை முடியாரரு ணாசலனார் பதியம லைக்கு முயிருக்குமான பரமர் வெற்பி நிதியம லைக்குள முதமொப்பீர்தென்றனின் றுலவும் பொதியம லைக்குங் கிடையாது காணுமிப்பூந் தழையே. 13 கெடுதி வினாதல் தழைக்குஞ்சரவணச் செவ்வேளைத் தந்தவர்சங்கரிகை குழைக்குஞ்சரபர ருணையிலேயிரு கோலவிழி யழைக்குஞ்சரத்துக்கு மொப்புடை யீரொழுகுங்குருகி மழைக்குஞ்சரமிங்கு வந்ததுண்டோமும் மதஞ்சொரிந்தே. 14 நற்றாய் பாங்கியர் தம்மொடு புலம்பல் சொரியுங்கடமையு வாவுரிபோர்த்தவன் சோணைவெற்பி லரியுங்கடமை யுமைவாயுழுவையு மந்திபகற் றிரியுங்கடமையுண் கண்ணாளொருவன் பின்சென்றதென்னாம் பரியுங்கடமையு மெம்மையுநீ த்தின்று பாவையரே. 15 பாவலருந்த வருங்காணத்தூது செல்பாதர்கனி வாவலருந்த வருங்காவருணையின் மத்தரெண்ணார் ஏவலருந்த வருங்காமன் கொண்டெய்ய வேந்திழையார் நாவலருந்த வருங்காதல் பூண்டிவ ணைகின்றதே. 16 நைவ ளையாழிசைச் சொல்லிபங்காரரு ணாசலனார் மைவ ளையாழியி னஞ்சுகந்தார்நெடு மாலவற்கே கைவ ளையாழி யளித்தாரெனக்கண்டு கைதொழுதேன் பெய்வ ளையாழிக ளெல்லாமிழந்தனள் பேதையரே. 17 பேய்த்தேரை நீரென் றுழல்வீர்கலுழன் பிடித்தபணி வாய்த்தேரை நீர்மைகண் டீரிந்த வாழ்க்கையம் மாயமெல்லாஞ் சாய்த்தேரை நீர்பெறு பேருசொல்கேன்கற்ப தாருநிக ராய்த்தேரை நீள்கொடி சூழருணேச ரடிதொழுமே. 18 தொழுவாருமானிடர்கா ணரகேழையுந் துர்க்கும் வண்ணம் முழவாருங்கோயில் வலஞ்செய்வாரு முதன்மடக்கே யுழவாருமங்கவர் மங்கைநல்லாரு மொதுக்கிமுத்தை யெழவாருஞ்செந்நெல் வயலருணேசரை யேற்றரையே. 19 ஏற்றுக்கரைக்குளிர் சோணாசலத்தாரை யேத்தலின்றிச் சோற்றுக்கரைக்குடைக் காடைக்கென்றேமனந் துன்புறுவீ ராற்றுக்கரைக்குண் மரம்போலுடல்விழ வாருயிரைக் கூற்றுக்கரைக்கும் பொழுதுமக்கார்கை கொடுப்பவரே, 20 கொடுங்கயிலாயிழை யார்தனபாரத்திற் கூடியவர் நடுங்கயிலாயகண் ணாற்றளர்வீரவர் நண்பையெலா விடுங்கயிலாய னயன்போற்றருணை விமலரைவாழ்த் திடுங்கயிலாய மலைமேலிருப்ப தெளிதுமக்கே. 21 உன்பாவனையு நினைவுமுண்டாகி யொழிவதில்லா வென்பாவனையும் படியரிதேயிரங் காதவர்க்கு வன்பாவனையும் பிறப்புமில்லாயன்பு வைத்தவருக் கன்பாவனையு மதிலருணாசலத் தாதிபனே. 22 ஆதித்த னையனங் காரகன்போற்றிய வண்ணல்கழைச் சோதித்த னையனங் காவருணாசலன் றோயுமட்டும் வாதித்த னையனங் காவினிப்போதுன் மதமழியப் போதித்த னையனங் கான்றிங்களாகப்புறப்பட்டதே. 23 புறங்காட்டினாலும் புயம்விகரு ணையிற் புங்கவனார் அறங்காட்டினாலு முனிவோரையாண்டவ ரம்பொன்வெற்பிற் கறங்காட்டினாலு நிகரோவெனச்சுழல் காற்றெய்வமே புறங்காட்டினாலு ளதோவி வளாசைக் கொருமருந்தே, 24 துணிவு ஒருமானிடங்கையி லேயொருமான்றரித் தொன்னலரைப் பொருமானிடப மிசைவருவான்முப் புரமெரித்த பெருமானிடங்கொண்ட சோணாசலத்தினிற் பேதையின்பந் தருமானிடமங்கை யென்பது காட்டிய தாமரையே. 25 குருகோடிரங்கல் தாவிக்கவரு மலகாற்கயலின் றலைபிடித்துண் னாவிக்கவரு மினக்குருகீரொரு நாளடியார் சேவிக்கவருங் கதிதந்தபாதர் திருவருணை பாவிக்கவரும் பகையாகினாலென் பகருமதே. 26 பாங்கிக் குலகின்மேல் வைத்துரைத்தல் கருங்குவ ளைக்குளிர் பூவணைமீதிற் களித்துமுகஞ் சுருங்குவ ளைக்குலஞ் சூழருணேசர் துடிக்கிணையா மருங்குவ ளைக்குந் தனமயிலேபுன் மடலல்லவோ நெருங்குவ ளைக்குழை யார்தந்தகா தலை நீக்குமதே. 27 நீங்காவிடைக்கொடி யாரருணாபுரி நித்தர்வெற்பி கோங்காலிடைக்கொடி யார்தந்தபால் கொண்டுலாவரவே பூங்காவிடைக்கொடி போலேயிருந்தப் பொற்குடத்தைத் தாங்காவிடைக்கொடி யாவகையார்செய்யத் தக்கவரே. 28 கல்விக்குப் பிரிவு தலைமகனாலுணர்ந்த தோழி தலைவிக்குணர்த்தல் தக்கவிருக்குமணி கேள்வர்போற்றிய சங்கரனார் மிக்கவிருக்குமறையாரருணையில் வெற்பரென்னே பொக்கவிருக்குமலர்ச் சோலையிலெய்தி யொண்ணுதலா யிக்கவிருக்கு மணமாமென்றார் கல்வியெய்துமென்றே, 29 எச்சிலந்திக்கும் பகலைக்குமேற்று மெயினனுக்கு மெச்சிலந்திக்கு மருளருணேசரை வில்வம்விளா நொச்சிலந்திக்குஞ் சடையாரையேத்திலர் நுண்ணிடையார் சொச்சிலந்திக்கு நிகர்முலைக்கே வைப்பர்புந்தியையே, 30 புந்திநடுக்கந் தவிர்த்தென் னையாண்டநற் போதன்சென்னி யைந்தினடுக்கந் தடிந்தோனருணை யமலனிதழ்க் கொந்தினடுக்கந் தருங்கொன்றைவேண்டியென் கோதைவளை கிந்தினடுக்கந் தனிலேயிழந்தனன் சித்தமுமே. 31 சித்தமிழுக்குறத் தீமையுறார்பெருஞ் செல்வமறார் முத்தமிழுக்கு முதன்மையுமாகுவர் முண்டகப்பூங் கொத்தமிழுக்கு வரக்கனியூறல் குளிர்நதியாய் நத்தமிழுக்கும் வயலருணேசரை நத்தினரே. 32 கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்போது கண்டிரங்கல் நந்திக்கொடிய மலராதியார்திசை நான்கினுஞ்செவ் வந்திக்கொடிய மலர்வீசரு ணையில் வாசமலர் சிந்திக்கொடியமன போல்வானுலாவருந் தென்றலையு மந்திக்கொடிய மதியையுங்காண்கில ரன்பினரே. 33 பின்பரியங்க வடியானுஞ்செய்ய பிதாமகனுந் தன்பரியங்க வடிதாங்கநிற்பவன் சந்தனத்தாள் முன்பரியங்க மடிசிலுண்டானை முகனருணை யன்பரியங்க வடிவேல்விழிச்சிக் கலர்பெரிதே. 34 பெரும்படைவாளை யடர்த்துழவாளைப் பெயர்த்துவயற் கரும்படைவாளை புகுமருணாபுரிக் கண்ணுதலா ரரும்படைவாளை யிலாம்விழியாளை யளகத்திலே சுரும்படைவாளை யணையான் கொடான் கொன்றைச் சூழ்த்தொடையே. 35 மெய்தொட்டுப் பயிறல் தொடுத்துவண்டான மறைபாடவாடி தோன்றல்வய வடுத்துவண்டான மருவருணாபுரி யன்னமன்னார் நடுத்துவண்டானம் பரிதேர்மருங்கு லிந்நாரிதனை விடுத்துமண்டானமர் காள்மதனாரிக்குள் வீற்றிருமே. 36 இரும்புணரிக்கணஞ் சேற்றுண்டநாத னிசைச்சுரும்பின் பெரும்புணரிக்கணன் மெய்யழித்தோனெம் பிரானருணை விரும்புணரிக்கண மேமனமேபினை மெய்யொழிந்தாற் கரும்புணரிக்கண ஞானியின்கூட்டங் கழித்திடுமே. 37 கழிப்பா லையேகம்பந் தில்லையின்மேவிய கண்ணுதலான் செழிப்பா லையேதிகழ் தென்னருணேசன் சிலம்பிலிரு விழிப்பா லையேவுள வண்டர்மின்னேதயிர் விற்கவந்து மொழிப்பா லையேன்சிந்து வீர்முனிவோர்கொள மோகத்தையே 38 மோகமருப்புக் கமலவிற்காமன் முடிக்குதவிக் கோகமருப்புக் கமலமொப்பாயெழு கொங்கைநல்லார் தாகமருப்புக் கமலப்பொற்றாளிற் றனித்தருள்வாய் நாகமருப்புக் கமலமுன்சூழரு ணாசலனே. 39 அருணாசலம்பதி யாயுறைவா யரவாபரணா கருணாசலநிதி யேமுதலீறுங் கலையுமில்லாத் தருணாசலஞ்சல மும்மயிராவதத் தந்தமும்போன் மருணாசலங்கொடி தாரருக்காதருண் மாதருக்கே. 40 தலைவியைத் தலைவனெதிர்ப்படல் மாதவிழாவுடை யாரருணேசர் வரையில்வண்டு கோதவிழாமற் கதிரோனடைத்தசெங் கோகனகத் தாதவிழாத்திருக் கோயிலுக்கேயொரு தாழுமுண்டோ போதவிழாநிற்கு மன்பாலென்பாரிருட் போந்தவரே, 41 போதாம்பரத்தை யகலாமற்காஞ்சி புரத்துறைவான் பீதாம்பரத்தைய னான்முகன்தேடும் பிரானருணை மாதாம்பரத்தையு ரத்தையொப்பா நெஞ்சவஞ்சகரே யேதாம்பரத்தையர் கண்டாலென் பால்வந்த தேழமையே. 42 ஏழுமுழக்குஞ் சரத்தோலருணை யிறையெனுமால் கீழுமுழக்குஞ் சரத்தாள்கொடாவமை கேள்வனெனும் வீழுமுழக்குஞ் சரமாரியெய்தனன் வில்லியென்னுஞ் சூழுமுழக்குஞ் சலதியென்றோது மென்றூநகையே. 43 தூரியங்காமன் கடலாகத் தோன்றினன் சூரியனார் தேரியங்காமன் முகிலியங்காரிற் றிசைகளெல்லாம் வேரியங்காமன் றிருவருணாபுரி வித்தகனே நாரியங்காமன் பதைபுரப்பான்றொழு நாயகனே. 44 நாயகனாவிக் குலஞ்சூழருணையி னம்பனழற் சாயகனாவிக் குரியனென்றேத்திலர் தண்டமிழாற் றூயகனாவிக் குமாரவென்றற்பரைச் சொல்வர்நெடி தாயகனாவிக் குரம்பையில்வாழ்க்கையு மாவியுமே, 45 ஆவணங்காரண மாயவெண்ணெய்மேவிய வந்தணனார் பூவணங்காயம் பலஞ்சேர்பவர்வரும் பூமகண்மால் பாவணங்காரணன் போற்றருணேசா பவனிவந்த மாவணங்காரணங் காரணங்காகி மருவினரே, 46 மருமகரந்த நுகரளிநாரி வரிக்கொடியே யொருமகரந்தனு விக்கானவேளை யுருவழித்தார் அருமகரந்தணர் போற்றருணேச ரடியவற்குத் தருமகரந்தனை யேவும்பர்நாடென்ப தங்குதற்கே. 47 பாங்கி கையுறையேற்றல் தங்குறைவந்தடை யாவலில்போல்விழித் தையலுன்றன் வெங்குறைவந்தனை யாலுரைத்தேனினி வேட்டருள்வாய் மங்குறைவந்த மதிலருணேசர் மணிச்சிலம்பர் கொங்குறைவந்தனை சோலையின்மாந்தழைக் கொத்தினையே. 48 ஆற்றிடைமுக்கோர் பகைவரை வினாவுதல் கொத்தடியானடி யேனென் றுகூறிக் குலிசத்தினன் மத்தடியானயன் போற்றருணேசர் மணிவரமேற் றத்தடியானடை யன்னமொப்பான வென்றையனல்லாள் முத்தடியானடப் பீர்வந்தாகிநின் மொழிந்திடுமே. 49 கனவி னலிவுரைத்தல் மொழித்தேனை யோர்ந்து மலராகஞ்சேர்ந்து முயங்கையிலே விழித்தேனை யோமுன் விதிப்பயனோகதி விண்ணவரை யொழித்தேனை யோர்க்குந் தருவாரரு ணையி லோடையிற்பூங் கழித்தேனை யோதி மணத்தாலழைக்குங் கருங்குயிலே, 50 கறுத்தகண்டத்தையர் சோணாசலத்தர் வெண்காட்டுநங்கை யறுத்தகண்டத்தை மகவாயழைத்தவ ராற்றிலர்தீப் பொறுத்தகண்டத்தை விழுங்கிநிலாவெழும் போதயிலை வெறுத்தகண்டத்தை யனையசொல்வார்தம் விருப்பிசையே. 51 பாங்கி யிறைவனை நல்குதல் விருப்புச்சிலையமர்ந் தாரருணாசலர் மேருவெற்பின் மருப்புச்சிலையெனும் வேழமெய்வாருக்கு வாங்குவில்லம் பருப்புச்சிலையின் றணங்கேயென்னாங்கொ லுலகைவென்ற கருப்புச்சிலைமதன் கூர்வாளிபார்க்கிற் கடிமலரே. 52 கடியரவத்தையு நீர்மானுந்திங்கட் கலையும்வைத்த முடியரவத்தை யன்பர்க்கணுகாமன் முழக்கஞ்செய்யுந் துடியரவத்தையர் சோணாசலத்தைத் தொழாதமன மிடியரவத்தை யடைந்தேழ்நரகத்தும் வெம்புவரே. 53 வெப்புக்குழைக்கும் பனிநீரென்றங்கம் வெதும்புமத னப்புக்குழைக்கு மருணாசலத்தரை யையரெனுங் கொப்புக்குழைக்கு மப்பாலுங்கண்மாரி குதிக்கவிழுஞ் செப்புக்குழைக்கு நிகராமுலைவிழித் தீங்கனியே, 54 நற்றாய் தலைவி செல்சுரந் தணித்தல் தீகுதிக்கும்பால் சூழ்ந்தவெம்பாலையின் றீமையற்றுப் பாகுதிக்கும்பைங் கரும்பாலையாகப்பழனமன்றி யாகுதிக்கும்பர் மகிழருணாபுரி யத்தர்வெற்ப ரேகுதிக்குத்தையல் சென்றாடிடமு மிருநிலத்தே. 55 சித்து நிலவிரதத்தரைச் சோணாசலத்தரை நெஞ்சில்வைத்த நல்விரதத்தரெண் சித்தரியாநவ நீதமுடன் பலவிரதத்தரும் போனமுங்கூட்டிப் படையப்பனே கலவிரதத்தரி தாரம்பொன்னாமெந்தக் காலமுமே. 56 காலைக்கரும்பு கொண் டாற்போதலாந்தமெய்க் காதலிலை வாலைக்கரும்பு நிகர்த்தமின்னாளுக் கருள்புரியாய் வேலைக்கரும்பு லரக்கரைவாளி விடுத்ததுழாய் மாலைக்கரும்புய றேடருணாசல மன்னவனே 57 மன்றமரத்தையல் காணநின்றாடிய மன்னபுன்னை யின்றமரத்தை நிகழருணேச வெனைமெல்லியா ளென்றமரத்தை யலர்பூட்டினான்மத னென்றிடையன் கொன்றைமரத்தையொத் தாளிழந்தாள்கைக் குருகினமே, 58 குருவடிவேவெற் றுயர்கயிலாயக் குவட்டில்வட தருவடிவேர்கொண் டிருப்பாரருண சயிலத்திலே யிருவடிவேல்விழி போல்வீரென்சென்னிக் கிசையவுங்கள் திருவடிவேய்ந்திடு மீனவன்றாய்த்துவன் சேகரமே. 59 சேகரமாகவ லையாறுடன் வைத்தசெல்வகரு ணாகரமாகவ லையாற் றருணையினம்பவிழிச் சாகரமாகவ லையாற் றுவக்கிருந் தையலர்க்குச் சூகரமாகவ லையாவருவென்று தோற்றுவதே, 60 தோற்றுருத்திக்கு நிகரான துநித்தஞ்சோறுதுற்றுப் போற்றுருத்திக்கு ளெழுகாரிற் போய்விடும் பூதலத்தீர் மேற்றுருத்திக்கு மருந்துக்கும் கரைவேரிவயல் நாற்றுருத்திக்கு நிகரருணேசரை நம்புமினே. 61 மின்றனந்தங்க நிறமேபு னைந்ததும் வில்லிகணை யொன்றனந்தங்க ணையான தும்பார்க்கிலளுற்பலத்தே சென்றனந்தங் கமலர்விழருணைச் சிவன்கனக மன்றனந்தங்க மலர்க்கரிதாகிய வானவனே. 62 வானரகத்தியனே முதலாமவர் வாழ்த்தும்வெள்ளை யானரகத்திலிடர் தீர்க்குமத்தரருணை யெண்ணா ரீனரகத்தில் வழிகுழியாய்ச் சென்றிரப்பர் பின்னைத் தீனரகத்திரை தானாகவிழ்வரச்சே தகத்தே. 63 சேதாவையோதி மத்தாற்புரந்தோன்பங்கர்தென்னருணைப் போதாவையோதி மந்தன்னையென் னோவதுபூங்கணையாற் கோதாவையோ திசருகா னைவயென் றமைக்கூட்டில்வைத்த வேதாவையோ தினம்வீழ்வான ரகத்தின் மெத்தவுமே. 64 எயிற்றியொடு புலம்பல் மெத்தவெயிற்றிகழ் சானகத்தே மலர்மென் கொடியே யொத்தவெயிற் றுகண்டாயிலையோ வும்பரூரளவாய் வைத்தவெயிற்றிகழ் தென்னருணேசர் மணிவரைமேன் முத்தவெயிற்றி யுமுத்தாரமார்பனு முன்வரவே. 65 வரும்பெண் ணையிலனஞ் சூழ்தேயநாடாற்குமால் வரையோன் றரும்பெண் ணையிலமைத் தாரருணேசர்க் கென்றையல்மையல் கரும்பெண் ணையிலை யிலெல்லாமெழுதிக்கடி துவிட்ட சரும்பெண் ணையிலை வகையாகிற தூதினுக்கே. 66 இறையோனிறைவி தன்மை இயம்பல் தூதுவளைக்கு வனக்கனிவா யொப்புச் சூதமன்ன னூதுவளைக்கு நிகர்கழுத்தாந் தெய்வரூர்முனிந்த போதுவளைக்குஞ் சிலையருணேசர் பொருப்பா னையார் காதுவளைக்கு வமே யமின்றே யென்றன் கண்மணிக்கே. 67 நெறி விலக்குதல் கண்கைக்கவரி கரிமேற்றொடரக் கரிகளஞ்சி யெண்கைக்கவரி வணத்தேயிரவிக் கிளங்கமுகு தண்கைக்கவரி யிடுமருணேசர் சயிலத்தின்ப முண்கைக்கவரி ருள்வாராதுரையென் றனுண்மெலிவே. 68 உண்ணாம லையத் தகுங்கோபமோ கமுலோபமுற்றாய் தண்ணாம லையத் தமிழ்ப்பாடல்புல்லர் தமக்குரைப்பாய் அண்ணாம லையத் தனைப்புகழா யணுவத்தனையு மெண்ணாம லையத் தனைமனமே நமக்கென்கதியே. 69 பாங்கி புலம்பல் கதிரங்கழலிடரீ மத்திலாடி வெங்காலனங்கத் துதிரங்கழலவுதைத் தருள்மானிசை யேரங்கருணை யதிரங்கழலன ணையாம னெஞ்சமிழ்தவஞ்சி யெதிரங்கழலி றைக்குஞ் செக்கர்வானத் திளம்பிறையே. 70 பிறைக்கண்டருந் திசைநானா துழலுமென் பேதைநல்லா ளுறைக்கண்டருந் திரையோத மொப்பாகிய தோதமென்ன முறைகண்டருந்தி மலரோன்புகுத முழங்கருணைக் கறைக்கண்டரும்பிற் கொடுத்தாரிலைச்செழுங் கைச்சங்கமே. 71 சங்கமலங்களைச் செல்லாதடர்ந்திடுந் தன்பழனச் செங்கமலங்களை யாறாவொழுகவந் தேனலைக்கே துங்கமலங்களை தென்னருணாபுரிச் சோதிதந்தான் பங்கமலங்களைப் பண்ணாமன்ஞானப் பளிக்கறையே. 72 தலைமகன் செலவின்றாட் குணர்த்தி விடுத்தல் பளிக்கறைதோறுஞ் சுதையோட்டச்சொல்லு முற்பாடமெல்லாங் கிளிக்கறையச்சொல்லு மந்தணரே கிளர்காளவிடத் துளிக்கறைகண்டத் திருத்துஞ்செம்மேனியர் சோனைவெற்பி லளிக்கறைபோன்ற செவிலிக்கும் பாங்கிக்கு மன்னைக்குமே. 73 அன்னைக்களிக்கு மதுவுண்டாவாறொக்கு மன்னமன்னா ளென்னைக்களிக்கு மதுவுமற்றேவரை யிந்தரதருப் பின்னைக்களிக்கு மதுசூதனன்றொழு பிஞ்ஞகனார் புன்னைக்களிக்கு முதல்சூழருணைப் பொருப்பவனே. 74 அவமானமன்றம ராற்செய்தவேளை யழுத்தவனந் தவமானமன்றம ராடலன்சோண சயிலமிம்பற் குவமானமன்றம ராவதிநேரென் றுரைமனமே சிவமானமன்றம ராலழியாதுநஞ் சிற்றுயிரே, 75 சிறுமையிராவண னாகமுன்னாட்செய்த சேவடியாய் பெருமையிராவண னாடருணாபுரிப் பிஞ்ஞகனே யுமையிராவண னாகியகாலன் பட்டோலையிலே மறுமையிராவண னாகமற்றாட்கொண்டு மாற்றுகவே. 76 பாங்கி தலைமக ளவயவத் தருமை சாற்றல் மாற்கண்ட னையந் தகன்வருத்தாமல் வரங்கொடுத்த நீற்கண்ட னையன் றிருவருணாபுரி நேரிழையார் பாற்கண்ட னைய நலஞ்சேர்மொழியைப் பயின்றகொலை வேற்கண்ட னையத் தோனாலுமன்ப விதிக்கரிதே. 77 அரிபுரந்தாழ்வுறச் சிம்புளதான வமலரங்கி திரிபுரந்தாவ நகைத்தாரரு ணையிற் செம்மலிரு பரிபுரந்தானுற்ற பொற்றாடொழுதுவர் பாரளகா புரிபுரந்தார்பின் புரந்தரனாடும் புரந்தனரே. 78 புரந்தரவானவன் பொற்றருணாபுரிப் புங்கவனே யிரந்தரவான பணிபுனைவாய்பிறப் பேழிநிரந் தரந்தரவானமன் றூதர்செல்லாவரந் தாபிறவா வரந்தரவானம்பி னேனெனக்கோர்கதி மற்றில்லையே. 79 பாங்கன் றலைவனை வியத்தல் இலங்காரவாரணிந் தேகாயத்துண்ணின் றிடையொடிக்கு மலங்காரவாரணக் கோட்டின் முன்னேநின்ற வன்பரெங்கு மலங்காரவார நிறையருணேசர் மணிவரைமேற் கலங்காரவா ரணனாட்டுமெட்டா யரிகளுக்கே. 80 மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் சொல்லிநாடலிற் சுனை வியந்துரைத்தல் கரும்புகையுந்துஞ் சிலையாமதனுடல் கட்டழலும் பெரும்புகையுஞ்செறித் தாரருணாபுரிப் பெண்ணமுதே சுரும்புகையுந்தொடை யுஞ்சந்த்ரரேகையைச் சூழவெயர் வரும்புகையுந்தரு மோகனையாவர்சென் றாடினுமே. 81 ஆடரவக்குழை யாரணிவாரிசை யாளர்நின்று பாடரவக்குழை யாரருணேசர்கண் பார்த்தருளார் கோடரவக்குழை யாரளிகாண் மதன்கோத்தமலர்த் தோடரவக்குழை யாரணங்காருயிர்த் துன்பத்தையே. 82 துன்னியமாமுனி வாலுரித்தானச் சுகனொடுப மன்னியமாமுனி போற்றருணேசன் வரங்கொடுத்தா னன்னியமாமுனி காத்தூதரோடிங் கணுகியவா றென்னியமாமுனி லாதேயெமைக் கடந்தேறநில்லே. 83 ஏற்றுவளத்துவ சத்தாரருணை யிலேந்திழையீர் தோற்றுவளத் துளமு தூட்டிநாண்மலர் சூட்டியன்பா னேற்றுவளர்த்துவிடுத்து மின்னோவன்னிலத்தினிடை நூற்றுவளத்துவள நடந்தாள் பதநோவரவே. 84 வரங்களங்கற்றவர்க் கொன்றுங்கொடா தொழிவாரவர்மா யிரங்களங்கற்றவர்க் கீவாரருணை மிறைவரன்று புரங்களங்கற்றவர் கொண்டெரித்தார்மயல் பூணுமட்டு சரங்களங்கற்றவர் மேல்விடுவோ ன்வரத்தாமதமே 85 தாமதியாதவரன் பர் முன்னேவரத்தங்குவிழி தீமதியாதவராமருணே சர்தந்தேரின் முன்னே போமதியாதவர் தார்கேட்பதென்னை புலருநெஞ்சே நீமதியாதவர் பாற்பலகாற் செல்லனீ தியன்றே. 86 நீடத்துவாபரம் பொன்மலையான நிருத்தர்பிறப் போடத்துவா வறுத்தாரருணா புரியோங்குமணி மாடத்துவாமதி நேர்முகம்வேர்க்கவென் மார்பமெனுங் கூடத்துவார் முலைப்பந்தாடுளை நின்றுகோதையரே. 87 கோதாயனங்கனம்பான் மெலிவேனுயிர் கொள்ளைகொள்ள வாதாயனங்களிற்றென் றலையாவர் வரவழைத்தார் பேதாயனங்கடுவா மருணேசர் பிரிந்தமர்க்குத் தீதாயனங்கழையோசை யென்றாருடன செப்புமதே. 88 தலைமகன்மெய்த்தன்மைக் கிரங்கல் செப்புளிக்குஞ் சிதையா முரம்பூடுமென் சேவடிகள் கொப்புளிக்கும் பொழுதென் படுமோவுமை கொங்கையிட்ட மைப்புளிக்குங் குங்குமத் தோளருணேசன் மணிவரைமே விப்புளிக்குஞ் சரமோயும் வெம்பாலை யருநெறிக்கே. 89 நெற்றவிடும் பகிராதபுன் மார்க்களை நீர்க்கடனும் வற்றவிடும் பரிமாநகுலா வெனுமானி டர்காள் உற்றவிடும் பையறவருணே சரையொண் கரத்தைச் சுற்றவிடும் பையரவா ரைவாழ்த் துஞ்சருதி கொண்டே, 90 சுரும்பாயிரங் கலைமான் குயிலாயிரந் தூதுவிட்டேன் இரும்பாயிரங் கலைநெஞ்சமென் னோவினியா யினுந்தான் றிரும்பாயிரங் கலைசூழருணாசல செப்பிய மால் பெரும்பாயிரங் கலைநான்போன தோதிற் பெருகிடுமே 91 பெருகாசினி யமதுரங்களா கப்பிறர்க்கு மொழித் தொருகாசி னியன்புசெய் யுமென்றாலு முதவுவரோ முருகாசினி மடர்சோணாசலத் தின்முதல வரின்பந் தருகாசினி யம்பரம்பு கழ்வார்க்குத் தருகுவாரே. 92 தந்தவிலங்கலை நேரான சேனைத் தலைவர்களும் பந்தவிலங்கலை பாதத்தரான தும்பார்த்து நெஞ்சே முந்தவிலங்கலை தீநெறிகாணின் மொழிந்து தொழாய் அந்தவிலங்கலை வில்லாக்கருணை யமல ரென்றே. 93 அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல் அங்காந்தளை யடைந்தாட ரவாவென்ற ரும்பவிழ்ந்த செங்காந்தளை யஞ்சிநின் றழும்பேதை திருநதியின் பொங்காந்தளை யடர்தென் னருணேசர்பொ ருப்பின்மலர் கொங்காந்தளை யவிழ்தாரோன் பின்செல்லக் குறித்தனளே. 94 குறித்திட்டமோதக் கரங்காட்டு நெல்லைக்கு வித்திரண்டாய்ப் பிறித்திட்டமீதொன்று தீண்டணங்கேபிரமன் சிரத்தைத் தறித்திட்ட சோணகிரிநாதர் சேர்வருன் சட்டுவத்தேன் மறித்திட்ட கூணன் றுகேளாய்கெவுளிவலஞ் செய்ததே. 95 வலந்தினஞ்செய் துபணிந்தேத்துமன் பர்வடிவுசெவ்வ னலந்தினஞ்செய் துமிடற்றினரேற் கருணாதர்நந்தங் கலந்தினஞ்செய் துதைந்தாரத்தை யீனுங்கவினருணர் சிலந்தினஞ்செய் துணைத்தாடொழக் கண்டருள் சிற்பரனே. 96 சிற்பரவத்தன தியணிவேணியன் றிண்புயத்து பொற்பரவத்தன ற்சாக்கியனாருட் பொருந்திவிட்ட கற்பரவத்தன கமகிழ்கத்தனரு ணையின்க ணிற்பரவத்தன டுவன்புமெய் துவர நீணிலத்தே. 97 நிலமந்தரவப் பதியோர்கனிதமு மடைக் கலமந்தரவப்புய கொன்றையவென்று கழல்பணியு நலமந்தரங்கத்தன் கண்டோது மத்தனளினத்தளிக் குலமந்தரப் பண்டருமரு ணைவயற் கொற்றவனே. 98 கொற்றவரக்கரம் வானவரிந்திரன் கோகனத்த நற்றவரக்கர மெட்டுடைபான் புவிநாகத்தரும் பற்றவரக்கர கஞ்சூலரருணைப் பதியருள்ளன் புற்றவரக்கர விந்தம்பதத்தன் புதவுவரே. 99 உதவக்கரத்தர வங்கணத்தின் னருகம்புன் னிதவக்கரத்தர கோரியருணை நிலத்தினரே னதவக்கரத்தர மாங்கழலாரரி யம்பரையற் புதவக்கரத்தர வர்க்குயர் பாகன் வெண்பூமன்னனே. 100 திருவருணை அந்தாதி முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |