சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை ... தொடர்ச்சி - 14 ... 131
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என் திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த அருந் துயர் நீக்குவேன் போல்மன் பொருந்துபு பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண், நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி 5 இன மீன் இகல் மாற வென்ற சின மீன் எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின் யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப, தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை 10 வீழ் ஊசல் தூங்கப் பெறின்; மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல் கடைஇ யான் இகுப்ப, நீள் தூங்காய், தட மென் தோள் நீத்தான் திறங்கள் பகர்ந்து நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி? 15 இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல், ஆனாப் பரிய அலவன் அளைபுகூஉம் கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என் மேனி சிதைத்தான் துறை; 20 மாரி வீழ் இருங் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண், தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்! தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை; பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி! 25 இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன என்பவை 'தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்?' என, இன் துணை அன்றில் இரவின் அகவாவே அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என் மென் தோள் ஞெகிழ்த்தான் துறை; 30 கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம் திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை, இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும் அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை; அருளினகொல், தோழி? அருளினகொல், தோழி? 35 இரவு எலாம், தோழி! அருளின என்பவை கணம் கொள் இடு மணல் காவி வருந்த, பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை; 40 என, நாம் பாட, மறை நின்று கேட்டனன், நீடிய வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை யான் என உணர்ந்து, நீ நனி மருள, தேன் இமிர் புன்னை பொருந்தி, 45 தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே. 132
உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர்மேல், விரவுப் பல் உருவின வீழ் பெடை துணையாக, இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள்ளினம் இறை கொள முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப, நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல் 5 சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்து, துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப! புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால், 'நன்னுதால்! அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள் 10 மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை; பன் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால், 'சின்மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள் நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை; 15 அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ. 'மணந்தக்கால், கொடுங் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள் மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை; என ஆங்கு 20 வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண் கழியும் நோய் கைம்மிக அணங்குஆகியது போல, பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே. 133
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல், சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்: 5 'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; 'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; 10 'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை; 'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்; 'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்; ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி 15 நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க! தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்; நின்தலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே! 134
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன், ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின், கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின், இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல, 5 பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர, போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய், பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப, ஒருநிலையே நடுக்குற்று, இவ் உலகெலாம் அச்சுற, இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருண் மாலை; 10 தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே, கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி, அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ? நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், 15 கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே, நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி, இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ? வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின், கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, 20 மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி, எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ? என ஆங்கு, கரை காணாப் பௌவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன் திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு, 25 விரைவனர் காதலர் புகுதர, நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே. 135
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி இணை திரள் மருப்பாக, எறி வளி பாகனா அயில் திணி நெடுங் கதவு அமைத்து, அடைத்து, அணி கொண்ட எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப் பயில்திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்: 5 கடி மலர்ப் புன்னைக் கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடி நெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால்; மற்று நின் குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ? ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை நோய் மலி நிலையளாத் துறப்பாயால்; மற்று நின் 10 வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ? திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திரு நலம் தோற்றாளை இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால்; மற்று நின் புகழ்மைக்கண் பெரியது ஓர் புகராகிக் கிடவாதோ? என ஆங்கு, 15 சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே, அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து, மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கு ஒலி நெடுந் திண் தேர் கடவுமதி, விரைந்தே. 20 136
இவர், திமில், எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால், உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரி, தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்ப, கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடற் சேர்ப்ப! முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் 5 பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ? முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம் இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் 10 கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி உடைப் பொதி இழந்தான் போல், உறு துயர் உழப்பவோ? நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால், மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள் அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் 15 சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ? ஆங்கு கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய், தீண்டற்கு அருளி, திறன் அறிந்து, எழீஇப் பாண்டியம் செய்வான் பொருளினும் 20 ஈண்டுக, இவள் நலம்! ஏறுக, தேரே! 137
அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்; பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே; பலவே யாமம்; பையுளும் உடைய; சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்; அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, 5 எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின் அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே; மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம் சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை 10 வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை! வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய், நகை முதலாக, நட்பினுள் எழுந்த தகைமையில் நலிதல் அல்லது, அவர் நம்மை வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, 15 பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை! பகைமையிற் கடிது, அவர் தகைமையின் நலியு நோய், நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம் சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப் பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் 20 தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை! தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்; ஆங்கு அன்னர் காதலராக, அவர் நமக்கு இன் உயிர் பேர்த்தரும் மருத்துவர் ஆயின், 25 யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம் தாங்குதல் வலித்தன்று ஆயின், நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே. 138
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு, அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு, வறிதாக பிறர் என்னை நகுபவும், நகுபு உடன், மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி 5 என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி, தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன்கொலோ? மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து, மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன் 10 எல்லீரும் கேட்டீமின் என்று; படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை, நல்கியாள், நல்கியவை; பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற 15 உப்பு இயல் பாவை உறை உற்றது போல, உக்குவிடும் என் உயிர்; பூளை, பொல மலர் ஆவிரை வேய் வென்ற தோளாள் எமக்கு ஈத்த பூ; உரிது என் வரைத்து அன்றி, ஒள்ளிழை தந்த 20 பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த நெய்யுள் மெழுகின் நிலையாது, பை பயத் தேயும் அளித்து என் உயிர்; இளையாரும், ஏதிலவரும் உளைய, யான் உற்றது உசாவும் துணை; 25 என்று யான் பாடக் கேட்டு, அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் துன்பத்தில் துணையாய மடல் இனி இவள் பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று, அடங்கு அருந் தோற்றத்து அருந் தவம் முயன்றோர் தம் 30 உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே. 139
சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, 5 ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் நெஞ்சு ஆறு கொண்டாள்; அதற்கொண்டும் துஞ்சேன், அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப, ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் 10 தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது, பாடுவேன், பாய் மா நிறுத்து; யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப, 'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் 15 தே மொழி மாதர் உறாஅது உறீஇய காமக் கடல் அகப்பட்டு; உய்யா அரு நோய்க்கு உயவாகும் மையல் உறீஇயாள் ஈத்த இம் மா; காணுநர் எள்ளக் கலங்கி, தலை வந்து, என் 20 ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் 'மாண் இழை மாதராள் ஏஎர்' என, காமனது ஆணையால் வந்த படை; காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் எழிநுதல் ஈத்த இம் மா; 25 அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும் வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் தகையால் தலைக்கொண்ட நெஞ்சு! அழல் மன்ற, காம அரு நோய்; நிழல் மன்ற, 30 நேரிழை ஈத்த இம் மா; ஆங்கு அதை, அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம் ஒரீஇ, துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர் உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் 35 உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என் துயர் நிலை தீர்த்தல் நும்தலைக் கடனே. 140
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே, பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது மா என்று உணர்மின்; மடல் அன்று; மற்று இவை பூ அல்ல; பூளை, உழிஞையோடு, யாத்த புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, 5 பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி, அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி: நெடியோன் மகன் நயந்து தந்து, ஆங்கு அனைய வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம் இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு 10 அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்; அன்னேன் ஒருவனேன், யான்; என்னானும், 'பாடு' எனில், பாடவும் வல்லேன், சிறிது; ஆங்கே, 'ஆடு' எனில், ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக, 15 நன்னுதல் ஈத்த இம் மா? திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும், தம் காதல் காட்டுவர், சான்றவர் இன் சாயல் ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் கண்டும், கண்ணோடாது, இவ் ஊர் 20 தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் பாம்பும் அவைப் படில், உய்யுமாம் பூங் கண் வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் உணர்ந்தும், உணராது, இவ் ஊர் வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் 25 அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச் செறிந்த ஏர் முறுவலாள் செய்த இக் காமம் அறிந்தும், அறியாது, இவ் ஊர் ஆங்க, என் கண் இடும்பை அறீஇயினென்; நும்கண் 30 தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல, இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே. |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |