சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை ... தொடர்ச்சி - 6 ... 51
சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5 உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை, 'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10 'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், 'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15 செய்தான், அக் கள்வன் மகன். 52
முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று, மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை, மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண், 5 கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்: தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை, நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின், 'மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் அணங்கு' என அஞ்சுவர், சிறுகுடியோரே; 10 ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை, சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின், ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர், 'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே ஆர மார்பினை, அண்ணலை, அளியை, 15 ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின், 'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப் புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே என ஆங்கு விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்; இவள் அன்றி, 20 புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்; அதனால், பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி, வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்கு, புதுவை போலும் நின் வரவும், இவள் வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே. 25 53
வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல் விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா, மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான், புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல, உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன, 5 அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும் பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப! மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்தபின், இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன் அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்; 10 கயல் உமிழ் நீர் போல, கண் பனி கலுழாக்கால்; இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின், 'பனி இவள் படர்' என பரவாமை ஒல்லும்மன் ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி, நறு நுதல் பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்; 15 'அஞ்சல்' என்று அகன்று, நீ அருளாது துறத்தலின், நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன் நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர் கனவினால் அழிவுற்று, கங்குலும் அரற்றாக்கால்; என ஆங்கு, 20 விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை தளி பெறத் தகைபெற்றாங்கு, நின் அளி பெற நந்தும், இவள் ஆய் நுதற் கவினே
54
"கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற, பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை, தொடி செறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்! அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு?" என்ன, நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி, 5 பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை, நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்; நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு, செறாஅச் செங் கண் புதைய வைத்து, 10 பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்; தொய்யில் இள முலை இனிய தைவந்து, தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும் மையல் யானையின், மருட்டலும் மருட்டினன் அதனால், 15 அல்லல் களைந்தனன், தோழி! நம் நகர் அருங் கடி நீவாமை கூறின், நன்று' என நின்னொடு சூழ்வல், தோழி! 'நயம் புரிந்து, இன்னது செய்தாள் இவள்' என, மன்னா உலகத்து மன்னுவது புரைமே. 20 55
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல், பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு, போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை, இன் நகை, இலங்கு எயிற்று, தேம் மொழி துவர்ச் செவ் வாய், நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம்; கேள், இனி: 5 'நில்' என நிறுத்தான்; நிறுத்தே வந்து, நுதலும் முகனும், தோளும், கண்ணும், இயலும், சொல்லும், நோக்குபு நினைஇ, 'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று; மை தீர்ந்தன்று, மதியும் அன்று; 10 வேய் அமன்றன்று, மலையும் அன்று; பூ அமன்றன்று, சுனையும் அன்று; மெல்ல இயலும், மயிலும் அன்று; சொல்லத் தளரும், கிளியும் அன்று' என ஆங்கு, 15 அனையன பல பாராட்டி, பையென, வலைவர் போல, சோர் பதன் ஒற்றி, புலையர் போல, புன்கண் நோக்கி, தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்; காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன் 20 தொழூஉம்; தொடூஉம்; அவன் தன்மை ஏழைத் தன்மையோ இல்லை, தோழி! 56
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால், கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு, கழும முடித்து, கண் கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து, 5 ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே, ஓர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல் வெறுப்பினால், வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார், கடிது, இவளைக் காவார் விடுதல் கொடி இயல், 10 பல் கலை, சில் பூங் கலிங்கத்தள் ஈங்கு, இது ஓர் நல்கூர்ந்தார் செல்வ மகள்! இவளைச் சொல்லாடிக் காண்பேன், தகைத்து நல்லாய்! கேள்: ஆய் தூவி அனம் என, அணி மயில் பெடை என, 15 தூது உண் அம் புறவு என, துதைந்த நின் எழில் நலம் மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய்! நிற் கண்டார்ப் பேதுறூஉம் என்பதை அறிதியோ? அறியாயோ? நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என, முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தோள் 20 வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்! நிற் கண்டார்க்கு அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ? முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என, பெயல் துளி முகிழ் என, பெருத்த நின் இள முலை மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய்! நிற் கண்டார் 25 உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ? என ஆங்கு, பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய், யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய்! கேள், இனி: நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப் 30 போதர விட்ட நுமரும், தவறு இலர்; நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு, 'பறை அறைந்தல்லது செல்லற்க!' என்னா இறையே தவறு உடையான். 57
வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, 5 வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய்! கேள், இனி: பூந் தண் தார், புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல், தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண், ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின், 10 சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? சின்மொழி! பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள், கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன், தலை, பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? கனங்குழாய்! 15 வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின்மேல், தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்! மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் கதவவால் தக்கதோ? காழ் கொண்ட இள முலை என ஆங்கு, 20 இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி, நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள், மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே. 58
வார் உறு வணர் ஐம்பால், வணங்கு இறை நெடு மென் தோள், பேர் எழில் மலர் உண்கண், பிணை எழில் மான் நோக்கின், கார் எதிர் தளிர் மேனி, கவின் பெறு சுடர் நுதல், கூர் எயிற்று முகை வெண் பல், கொடி புரையும் நுசுப்பினாய்! நேர் சிலம்பு அரி ஆர்ப்ப, நிரை தொடிக் கை வீசினை, 5 ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய்! கேள்: உளனா, என் உயிரை உண்டு, உயவு நோய் கைம்மிக, இளமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து, அணிந்து, தம் வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்; 10 நடை மெலிந்து, அயர்வு உறீஇ, நாளும் என் நலியும் நோய் மடமையான் உணராதாய்! நின் தவறு இல்லானும், இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து, அணிந்து, தம் உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்; அல்லல் கூர்ந்து அழிவுற, அணங்காகி அடரும் நோய் 15 சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும், ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து, அணிந்து, தம் செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்; என ஆங்கு ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை; யான்; மற்று இந் நோய் 20 பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்! மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி, நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே. 59
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி, அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர், அரி, முன்கை, சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் 5 விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என் பால என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி: மருளி, யான் மருள் உற, ' "இவன் உற்றது எவன்?" என்னும் 10 அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? உருளிழாய்! ' "ஒளி வாட, இவன் உள் நோய் யாது?" என்னும் அருள் இலை இவட்கு' என அயலார் நிற் பழிக்குங்கால், 15 பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ? ஆய்தொடி! ' "ஐது உயிர்த்து, இவன் உள் நோய் யாது?" என்னும் நோய் இலை இவட்கு' என நொதுமலர் பழிக்குங்கால், சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ 20 நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ? என ஆங்கு, அனையவை உளையவும், யான் நினக்கு உரைத்ததை இனைய நீ செய்தது உதவாயாயின், சேயிழாய்! செய்ததன் பயம் பற்று விடாது; 25 நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே. 60
சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல், மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல், நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல், வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்! 'கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு 5 உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல் பெண் அன்று, புனையிழாய்!' எனக் கூறி தொழூஉம்; தொழுதே, கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்! என் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண் பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள் 10 உருகுவான் போலும், உடைந்து; தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ, வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில நீ நின்மேல் கொள்வது; எவன்? 'அலர்முலை ஆய்இழை நல்லாய்! கதுமென, 15 பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்; மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ! நின் முகம் காணும் மருந்தினேன்' என்னுமால்; நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே 20 மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்! என் செய்வாம்கொல், இனி நாம்? பொன் செய்வாம், ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன் கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம், 25 'தேறல், எளிது' என்பாம் நாம் 'ஒருவன் சாம் ஆறு எளிது' என்பாம், மற்று; சிறிது, ஆங்கே 'மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க' என, நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி பூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம் 30 கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று, நாண் அடப் பெயர்த்த நயவரவு இன்றே. |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |