![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) மூன்றாம் பாகம் 14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும் காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. கொஞ்சம் அனுபவம் பெறுவதற்காகக் காங்கிரஸ் காரியாலயத்திற்கு என் சேவையை அளிப்பது என்று முடிவு செய்து கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்து, அன்றாடக் கடன்களை முடித்துக்கொண்டதும், நேரே காங்கிரஸ் காரியாலயத்திற்குச் சென்றேன். பாபு பூபேந்திரநாதவசுவும், ஸ்ரீ கோஷாலும் காரியதரிசிகள். பூபேன் பாபுவிடம் சென்று, நான் தொண்டு செய்ய விரும்புவதாகச் சொன்னேன். அவர் என்னை உற்றுப்பார்த்துவிட்டு, “உமக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேலை இல்லை. கோஷால் பாபுவிடம் ஏதாவது வேலை இருக்கக் கூடும். தயவு செய்து அவரைப் போய்ப் பாரும்” என்றார். ஆகவே, அவரிடம் போனேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உமக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுக்க முடியும். அதை நீர் செய்வீரா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். “நிச்சயம் செய்கிறேன். என் சக்திக்கு உட்பட்ட எந்தப் பணியையும் இங்கே செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றேன். “இளைஞரே, அதுதான் சரியான மனப்பான்மை” என்றார். தம்மைச் சுற்றிலும் இருந்த தொண்டர்களை விளித்து, “இந்த இளைஞர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குக் கேட்டதா?” என்றார். பிறகு என்னைப் பார்த்து அவர் கூறியதாவது: “அப்படியானால் சரி, இங்கே கடிதங்கள் பெருங்குவியலாகக் கிடக்கின்றன. அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, அவற்றைக் கவனியுங்கள். நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள் என்பதை நீங்களும் கவனிக்கிறீர்கள். நான் என்ன செய்வது? அவர்களைச் சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த வேலையற்றவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருப்பதா? இந்த வேலையை ஒப்படைப்பதற்கு என்னிடம் குமாஸ்தாக்கள் இல்லை. இக் கடிதங்களில் பலவற்றில் ஒன்றுமே இருக்காது என்றாலும், அவற்றை நீங்கள் படித்துப் பாருங்கள். அவசியம் என்று தோன்றும் கடிதங்களுக்கு அவை கிடைத்ததாகப் பதில் எழுதுங்கள். கவனித்துப் பதில் எழுத வேண்டியவை என்று தோன்றும் கடிதங்களை என்னிடம் காட்டுங்கள்.” அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையைக் குறித்து மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீ கோஷால், இவ் வேலையை என்னிடம் கொடுத்த போது என்னை அவருக்குத் தெரியாது. பிறகே என்னைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார். அக்கடிதக் குவியலைப் பைசல் செய்யும் வேலை மிக எளிதானது என்பதைக் கண்டேன். சீக்கிரத்திலேயே அவ் வேலையை முடித்துவிட்டேன். ஸ்ரீ கோஷால் அதிகச் சந்தோஷம் அடைந்தார். அவர் ஓயாது பேசும் சுபாவமுள்ளவர். மணிக்கணக்கில் பேசித் தீர்த்து விடுவார். என்னுடைய வரலாற்றைக் குறித்து என்னைக் கேட்டுக் கொஞ்சம் தெரிந்து கொண்டதும், எனக்குக் குமாஸ்தா வேலை கொடுத்ததற்காக வருத்தப்பட்டார். அதற்கு நான், “இதைப் பற்றித் தயவு செய்து நீங்கள் கவலைப்படவேண்டாம். தங்களுக்கு முன்பு நான் எம்மாத்திரம்? காங்கிரஸ் தொண்டிலேயே வயது முதிர்ந்து நரைத்துப்போனவர்கள் நீங்கள். ஆனால், நானோ, அனுபவமில்லாத இளைஞன். இந்த வேலையை நீங்கள் என்னிடம் கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி செலுத்த நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஏனெனில், நான் காங்கிரஸ் வேலை செய்ய விரும்புகிறேன். நீங்களோ, விவரங்களை அறிந்து கொள்ளுவதற்கான அரியவாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறீர்கள்” என்று அவருக்குக் கூறினேன். “உண்மையைச் சொல்லுவதென்றால், ஒருவருக்கு இருக்க வேண்டிய சரியான மனோபாவம் இதுதான். ஆனால், இக்கால இளைஞர்கள் இதை உணருவதில்லை. காங்கிரஸ் பிறந்ததில் இருந்தே நான் அதை அறிவேன். உண்மையில், காங்கிரஸைத் தோற்றுவித்ததில் ஸ்ரீ ஹியூமுடன் எனக்கும் சிறிதளவு பங்கு உண்டு” என்றார், ஸ்ரீ கோஷால். இவ்வாறு நாங்கள் சிறந்த நண்பர்களானோம். மத்தியானத்தில் தம்முடன் சாப்பிடுமாறு அவர் என்னை வற்புறுத்தி வந்தார். ஸ்ரீ கோஷாலின் சட்டைக்கு அவருடைய வேலைக்காரன் தான் பித்தான் போட்டு விடுவது வழக்கம். அப் பணியாளின் வேலையை நான் செய்ய முன்வந்தேன். பெரியவர்களிடம் எப்பொழுதுமே எனக்கு அதிக மரியாதை உண்டு. ஆகையால் இப்பணியை செய்ய நான் விரும்பினேன். இதை ஸ்ரீ கோஷால் அறிய நேர்ந்தபோது, அவருக்குத் தொண்டாக இது போன்ற சிறு காரியங்களை நான் செய்வதை அவர் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் இதற்காக அவர் மகிழ்ச்சியே அடைந்தார். தம் சட்டைக்குப் பித்தான் போடச் சொல்லி அவர் என்னிடம், “பாருங்கள், காங்கிரஸ் காரிய தரிசிக்குத் தமது சட்டைக்குப் பித்தான் போட்டுக் கொள்ளக் கூட நேரம் இல்லை. அவருக்கு எப்பொழுதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது” என்பார். அவருடைய கபடமில்லாத பேச்சு எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்ததேயன்றி, அப்படிப் பட்ட சேவைகளில் எனக்கு வெறுப்பை உண்டாக்கிவிடவில்லை. இத்தகைய சேவையினால் நான் அடைந்த நன்மை அளவிட முடியாதது. சில தினங்களுக்குள், காங்கிரஸின் நடைமுறையைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு விட்டேன். தலைவர்களில் பெரும்பாலோரைச் சந்தித்தேன். கோகலே, சுரேந்திரநாத் போன்ற பெருந்தலைவர்களை அருகில் இருந்தும் பார்த்தேன். நேரம், அநியாயமாக வீணாக்கப்படுவதையும் கவனித்தேன். நமது காரியங்களில் ஆங்கில மொழி வகித்துவரும் பிரதான ஸ்தானத்தை அன்று கூட வருத்தத்துடன் கவனித்தேன். சக்தியை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்று யாருமே கவலைப்படவில்லை. ஒருவர் செய்யக்கூடிய வேலையைப் பலர் செய்தனர். முக்கியமான பல வேலைகளைக் குறித்து யாருமே சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு என் மனம் குறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. என்றாலும் பிறர் கஷ்டங்களை உணரும் சுபாவமும் எனக்கு உண்டு. ஆகவே, இருந்த நிலைமையில் இதற்கு மேல் நன்றாகச் செய்திருக்க முடியாது என்று எப்பொழுதும் நான் எண்ணிக் கொள்வேன். எந்த வேலையையும் குறைவாக மதிப்பிட்டுவிடும் துர்க்குணத்திலிருந்து இந்த இயல்பே என்னைக் காத்தது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |