![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 35. தானியத்தில் பதர் அதற்கு முன்னால் எனக்கு என்றுமே தோன்றாத ஒரு பிரச்னையை டால்ஸ்டாய் பண்ணையில் ஸ்ரீ கால்லென்பாக் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். பண்ணையிலிருந்த பையன்களில் சிலர் கெட்டவர்கள், கட்டுக்கடங்காதவர்கள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். இவர்களில் ஒன்றுக்குமே உதவாதவர்களும் இருந்தனர். இவர்களுடன் என் குமாரர்கள் மூவரும் சேர்ந்து பழகி வந்தார்கள். என் குமாரர்களின் தரத்திலிருந்த மற்றச் சிறுவர்களும் அது போலவே பழகி வந்தார்கள். இது ஸ்ரீ கால்லென்பாக்குக்குக் கவலையாகிவிட்டது. ஆனால், என் குமாரர்களை அடங்காப் பிடாரிகளான அச்சிறுவர்களுடன் சேர்த்து வைப்பது சரியல்ல என்பதிலேயே அவருடைய கவனமெல்லாம் ஈடுபட்டிருந்தது. ஒரு நாள் அவர் மனம்விட்டுச் சொல்லிவிட்டார். “உங்கள் குமாரர்களைக் கெட்டவர்களுடன் பழகவிடும் உங்கள் முறை எனக்குப் பிடிக்கவே இல்லை. இதனால் ஏற்படக்கூடிய பலன் ஒன்றே ஒன்றுதான். இந்தக் கெட்ட சகவாசத்தினால் அவர்களும் கெட்டுப் போவார்கள்” என்றார். இப் பிரச்னை அச்சமயம் எனக்குக் கலக்கத்தை உண்டாக்கியதா என்பது எனக்கு நினைவு இல்லை. ஆனால், அவருக்கு நான் பதில் சொன்னேன் என்பது எனக்கு ஞாபகமிருக்கிறது: என் பிள்ளைகளுக்கும், துஷ்டர்களாக இருக்கும் பிள்ளைகளுக்கும் நான் எவ்வாறு வேற்றுமை பாராட்ட முடியும்? இரு தரப்பார் விஷயத்திலும் நான் சமமான பொறுப்பை வகிப்பவன். நான் அழைத்தன் பேரிலேயே இக்குழந்தைகள் இங்கே வந்திருக்கிறார்கள். கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களை நான் போகச் சொல்லிவிட்டால் அவர்கள் திரும்ப ஜோகன்னஸ்பர்க்கிற்கு ஓடிப்போய்த் தங்கள் பழைய வழிகளிலேயே நடக்கத் தலைப்பட்டு விடுவார்கள். ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்கள் இங்கே வந்திருப்பதனால் எனக்கு ஏதோ நன்மையைச் செய்திருப்பதாக அவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் நினைத்திருக்கக் கூடும். இங்கே அவர்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதை நீங்களும் நானும் நன்றாக அறிவோம். ஆனால், என் கடமை தெளிவானது. அவர்களை நான் இங்கே வைத்திருக்க வேண்டும். ஆகையால், என் குமாரர்களும் அவர்களுடன் சேர்ந்து அவசியம் வாழ்ந்தே ஆகவேண்டும். மற்றச் சிறுவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என இன்றிலிருந்து உணரும்படி என் புத்திரர்களுக்கு நான் போதிக்கவேண்டும் என்று நிச்சயமாக நீங்கள் விரும்பமாட்டீர்கள். அந்த உயர்வு எண்ணத்தை அவர்கள் புத்தியில் புகுத்துவது அவர்களைத் தவறான வழியில் செலுத்துவதேயாகும். மற்றச் சிறுவர்களுடன் அவர்கள் பழகுவது அவர்களுக்கு நல்ல ஒழுங்கு முறையை அளிப்பதாக இருக்கும். நல்லது இன்னது, கெட்டது இன்னது என்பதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துகொள்வார்கள். என் புதல்வர்களிடம் உண்மையாகவே ஏதாவது நல்லது இருக்குமாயின் அவர்களுடன் பழகுகிறவர்களிடமும் அது பிரதிபலிக்கும் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? அது எப்படியானாலும் சரி, அவர்களை நான் இங்கேதான் வைத்திருக்கவேண்டும். அதில் சிறிது ஆபத்து இருந்தபோதிலும், அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டியதே” என்றேன். ஸ்ரீ கால்லென்பாக் தலையை அசைத்துக்கொண்டார். இதன் பலன் தீமையானதாக இருந்தது என்று நான் நினைக்கவில்லை. இந்தச் சோதனையினால் என் குமாரர்கள் எந்தக் கெடுதலையும் அடைந்துவிட்டதாகவும் நான் கருதவில்லை. ஆனால், இதற்கு மாறாக அவர்கள் சில நன்மைகளையும் அடைந்தார்கள் என்பதை நான் காண முடிகிறது. தாங்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் சிறிதளவு இருந்திருந்தாலும் அது அழிந்துவிட்டது. எல்லாவிதமான குழந்தைகளுடனும் தாராளமாகக் கலந்துகொள்ள அவர்கள் கற்றுக்கொண்டார்கள்; அவர்கள் சோதிக்கப்பட்டுக் கட்டுப்பாடுகளையும் பெற்றனர். கெட்ட குழந்தைகளுடன் சேர்த்து நல்ல குழந்தைகளுக்குப் போதித்தால், அவர்களுடன் சேர்ந்திருக்கும்படி செய்தால், இந்தப் பரீட்சை, பெற்றோர் அல்லது போஷகரின் ஜாக்கிரதையான கண்காணிப்பில் மாத்திரம் நடப்பதாக இருந்தால், நல்ல குழந்தைகள் எதையும் இழந்துவிடுவதில்லை. இதுவும் இதுபோன்ற மற்றச் சோதனைகளும் இதையே எனக்குக் காட்டியிருக்கின்றன. வெளிக்காற்றே படக்கூடாது என்று குழந்தைகளைப் பத்திரமாக மூடிவைத்து வளர்த்துவிடுவதால் மாத்திரம், அவர்களை ஆசாபாசங்களோ, தீமைகளோ பற்றாமல் இருந்து விடுவதில்லை. ஆனால், பலவிதமான முறைகளில் வளர்க்கப்பட்ட சிறுவர், சிறுமிகளைச் சேர்த்துவைத்து அவர்களுக்குப் போதிக்கும்போது பெற்றோரும் உபாத்தியாயர்களும் கடுமையான சோதனைக்கு ஆளாகிறார்கள் என்பது மாத்திரம் உண்மை. அவர்கள் எப்பொழுதுமே உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது. மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |