(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு) நான்காம் பாகம் 42. நோய்க்குச் சிகிச்சை நுரையீரலுக்கு அருகில் இருந்த ரணத்தினால் ஏற்பட்ட என் நோய், குணமாகாமல் இருந்துவந்தது,கொஞ்சம் கவலையை அளித்தது. ஆனால், உள்ளுக்கு மருந்து சாப்பிடுவதனால் இது குணமாவதில்லை என்பதையும் உணவில் செய்து கொள்ளும் மாறுதல்களினாலும் வெளி பரிகாரங்களினாலும் குணமாகும் என்பதையும் அறிவேன். இதன்படி மூன்று நாட்கள் சாப்பிட்டேன். ஆனால், பச்சைக் காய்கறிகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தப் பரீட்சையை முற்றும் அனுசரித்துப் பார்க்கும் வகையில் என் உடல்நிலை இல்லை. பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடுவதற்கு எனக்குப் பயமாகவே இருந்தது. அதோடு, என் அறையின் சன்னல்களை யெல்லாம் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும்படியும், வெதுவெதுப்பான நீரில் குளிக்குமாறும், நோயுள்ள பகுதிகளில் எண்ணெய் தடவித்தேய்க்கும் படியும், பதினைந்து நிமிடங்களிலிருந்து முப்பது நிமிட நேரம் வரை திறந்த வெளியில் நடக்கு மாறும் டாக்டர் அல்லின்ஸன் எனக்குக் கூறினார். என் அறையின் சன்னல்கள், பிரெஞ்சு முறையிலானவை. ஆகவே, முழுவதும் திறந்து வைத்துவிட்டால் மழை நீரெல்லாம் உள்ளே வந்துவிடும். விசிறி போன்றிருந்த சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. ஆகவே, நல்ல காற்று உள்ளே வரட்டும் என்பதற்காக அதன் கண்ணாடிகளை உடைத்துவிட்டேன். மழை நீர் உள்ளேவராத வகையில் ஒருவாறு சன்னலையும் திறந்து வைத்தேன். இந்த முறைகள் எல்லாம் ஓரளவுக்கு என் தேக நிலையில் அபிவிருத்தியை அளித்தன. என்றாலும், பூரணமாகக் குணமாகிவிடவில்லை. அச்சமயம் லேடி செஸிலியா எப்பொழுதாவது என்னைப் பார்க்க வருவதுண்டு. நாங்கள் நண்பர்களானோம். நான் பால் சாப்பிடும்படி செய்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், நான் பிடிவாதமாக மறுத்து விடவே பாலுக்குப் பதிலாகச் சாப்பிடக்கூடிய ஒன்றைத் தேடிப் பிடிப்பதற்காக அலைந்தார். பாலும் தானியச் சத்தும் கலந்ததான ‘மால்ட்டட் மில்க்’ சாப்பிடலாம் என்று யாரோ ஒரு நண்பர் அவருக்குக் கூறினார். அதில் பால் கலப்பே கிடையாது என்றும், பால் சத்து இருக்கும் வகையில் ரசாயன முறையில் அது தயாரிக்கப்பட்டது என்றும், உண்மையை அறியாமலேயே அந்த நண்பர் அவருக்கு உறுதி கூறிவிட்டார். லேடி செஸிலியா, என்னுடைய சமயக் கொள்கை சம்பந்தமான நம்பிக்கைகளை மதித்து நடப்பவர் என்பதை அறிவேன். ஆகவே, அவர் சொன்னதை அப்படியே நம்பிவிட்டேன். அந்தப் பொடியை நீரில் கலந்து சாப்பிட்டேன். அதன் சுவை பாலின் சுவை போன்றே இருக்கக் கண்டேன். பிறகு புட்டியின் மீது ஒட்டியிருந்த சீட்டில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன். பாலிலிருந்து தயாரிக்கப் படுவதே அது என்பதை அறிந்தேன். சாப்பிட்ட பிறகுதான் இதெல்லாம் தெரிந்தது. ஆகவே, அதைச் சாப்பிடுவதை விட்டு விட்டேன். நான் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து லேடி செஸிலியாவுக்கு அறிவித்து அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரைந்தோடி வந்தார். அவருக்குச் சொன்ன நண்பர், புட்டி மீது ஒட்டியிருந்த சீட்டைப் படித்துப் பார்க்கவே இல்லை. இதைக் குறித்து கவலைப்படவே வேண்டாம் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப் பட்டுத் தேடிக்கொண்டு வந்தவைகளை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப் பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம் செய்து விட்டதாக எண்ணி நான் வருத்தப் படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன். டாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க வந்த போது, ஆகாரத்தில் எனக்கு விதித்திருந்த கட்டுத் திட்டங்களைத் தளர்த்தி விட்டார். கொழுப்புச் சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் படியும், கறிகாய்களைச் சமைத்து, நான் விரும்பினால் அரிசிச் சாதத்துடன் சாப்பிடுமாறும் கூறினார். இந்த மாறுதல்கள் எனக்குப் பிடித்தன. ஆனால், இவைகளினாலும் பூரண குணம் ஏற்படவில்லை. அதிக ஜாக்கிரதையான பணிவிடை அவசியமாகவே இருந்தது. பெரும்பாலும் நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது. நிலைமை இவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள், ஸ்ரீ ராபர்ட்ஸ் என்னைப் பார்க்க வந்தார். தாய் நாட்டுக்குத் திரும்பி விடுமாறு அவர் வற்புறுத்திச் சொன்னார். “இந்த நிலைமையில் நீங்கள் நெட்லிக்குப் போவது சாத்தியமே இல்லை. இனி வரப்போவது கடுமையான குளிர்காலம். இந்தியாவில் தான் நீங்கள் பூரணமாகக் குணமடைய முடியுமாகையால் அங்கே நீங்கள் போய்விட வேண்டும் என்று உங்களுக்குக் கண்டிப்பாகக் கூறுகிறேன். அங்கே நீங்கள் குணமடைந்த பிறகு அப்பொழுதும் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால், நீங்கள் உதவி செய்ய அங்கே அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. இப்பொழுதுகூட, நீங்கள் இது வரை செய்து இருப்பது எந்த விதத்திலும் அற்பமானது என்று நான் கருதவில்லை.” அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டேன்.இந்தியாவுக்குத் திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன். மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள் |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |