பிடிஎப் வடிவில் நூல்களை பதிவிறக்கம் (Download) செய்ய உறுப்பினர் ஆகுங்கள்!
ரூ.590 (3 வருடம்)   |   ரூ.944 (6 வருடம்)   |   புதிய உறுப்பினர் : K. Gnana Vadivel   |   உறுப்பினர் விவரம்
      
வங்கி விவரம்: A/c Name: Gowtham Web Services Bank: Indian Bank, Nolambur Branch, Chennai Current A/C No: 50480630168   IFSC: IDIB000N152 SWIFT: IDIBINBBPAD
எம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்! - நன்கொடையாளர் விவரம்

குணவீர பண்டிதர்

இயற்றிய

நேமிநாதம்

     நேமிநாதம் என்பது தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று ஆகும். 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பழைய இலக்கண நூல்களைப் போலன்றி சுருக்கமாக எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர் ஆவார். சமண சமயத்தைச் சேர்ந்தவரான இவர், 22 ஆவது நேமிநாதர் எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டவர். இதனால் தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. சுருக்கமான நூல் ஆதலால் சின்னூல் என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.

     இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கும், பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது.

     இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், சொல்லதிகாரத்தின் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை:

1. மொழியாக்க மரபு
2. வேற்றுமை மரபு
3. உருபி மயங்கியல்
4. விளிமரபு
5. பெயர் மரபு
6. வினை மரபு
7. இடைச்சொல் மரபு
8. உரிச்சொல் மரபு
9. எச்ச மரபு

     சொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

     இந்நூல் வெண்பாக்களால் அமைந்தது. வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல் இதுவாகும். இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 24 செய்யுள்களும், சொல்லதிகாரத்தில் 70 வெண்பாக்களும் உள்ளன. இரண்டு கடவுள் வாழ்த்து பாடல்கள் மற்றும் ஒரு அவையடக்கம் பாடல் ஆகிய 3 பாடல்களையும் சேர்த்து மொத்தம் 97 வெண்பாக்களால் ஆனது இந்நூல்.


இந்து மதம் : நேற்று இன்று நாளை
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

பாதி நீதியும் நீதி பாதியும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

இளைப்பது சுலபம்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

அந்த முகில் இந்த முகில்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

சித்தர் பாடல்கள் - பாகம் 3 (பெரிய ஞானக்கோவை)
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

சாயாவனம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

டேவிட்டும் கோலியாத்தும்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

உடல் ஆயுதம்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

தரை தொடாத மழைத்துளி
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

புத்ர
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ஓநாய் குலச்சின்னம்
இருப்பு இல்லை
ரூ.470.00
Buy

சித்தர் பாடல்கள் - பாகம் 2 (பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள்)
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

காந்தியின் நிழலில்
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

இன்னொரு வனின் கனவு
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

மெஜந்தா
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

முசோலினி
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

அறிந்தும் அறியாமலும்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

அலுவலகத்தில் உடல்மொழி
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

பாகீரதியின் மதியம்
இருப்பு உள்ளது
ரூ.675.00
Buy
பாயிரம்

கடவுள் வாழ்த்து

பூவின்மேல் வந்தருளும் புங்கவன்தன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி
பெல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து.

அவையடக்கம்

உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்ந்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைகொள்வர் ஈங்கு.

1. எழுத்ததிகாரம்

ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை
மெவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு. 1

ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
ஏன்றமெய்ம் மூவாறும் எண்ணுங்கால் - ஊன்றிய
வன்மையே மென்மை யிடைமையாம் வாட்கண்ணாய்
தொன்மை முயற்சியால் தொக்கு. 2

ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய்
ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய
வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் அளபெடைகள்
சொல்லொற்றி நீட்டத் தொகும். 3

தொடர்நொடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்பு
அடைய வருமிகரம் அன்றி - மடநல்லாய்
மும்மையிடத் தையௌவுங் குன்றுமுன் னொற்றுண்டேற்
செம்மையுயிர் ஏறுஞ் செறிந்து. 4

குறில்நெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாங்
குறுகுமவ் வாய்தம் உயிர்மெய் - பெறுமுயிரே
மெய்யாய்தம் இஉக் குறுக்கமரை மென்மொழியாய்
ஐஔ வளவொன் றரை. 5

உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து
கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து - வந்தபின்
நாசிநா அண்ணம் இதழெயிறு மூக்கெனப்
பேசும் எழுத்தின் பிறப்பு. 6

காட்டு முயிருங் கசதநப மவ்வரியும்
ஈட்டிய வவ்வரியி னெட்டெழுத்தும் - ஈட்டு
ஞயவின்கண் மும்மூன்று நன்மொழிக்கு முன்னென்று
அயர்விலார் கட்டுரைத்தார் ஆய்ந்து. 7

உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை இம்மூன்று
அயர்வில் இடையினங்க ளாறும் - நயனுணர்ந்து
நன்மொழிகட் கீற்றெழுத்தாம் என்றுரைப்பர் ஞாலத்துச்
சொன்முடிவு கண்டோர் துணிந்து. 8

ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி
நீதியினால் யவ்வியையின் ஐயாகும் - ஏதமிலா
எஒமெய் புள்ளிபெரும் என்ப சஞயமுன்
அஐயாம் ஆதி யிடை. 9

அகரத்திற்கு ஆவும் இகரத்திற் ஐயும்
உகரத்திற்கு ஔவும் இருவிற் - ககல்வரிய
வாருமாம் ஏயாம் மிகரத்திற்கு ஒவாகிச்
சேரும் உகரத்தின் திறம். 10

நேர்ந்தமொழிப் பொருளை நீக்க வருநகரஞ்
சார்ந்தது உடலாயிற் றன்னுடல் போஞ் - சார்ந்ததுதான்
ஆவியேற் றன்னாவி முன்னாகும் ஐஔவாம்
மேவிய ஏவும் விரைந்து. 11

மெய்யீறு உயிரீறு உயிர்முதன் மெய்ம்முதலா
எய்தும் பெயர்வினையும் இவ்வகையே - செய்தமைத்தாற்
தோன்றல் திரிதல் கெடுதலெனத் தூமொழியாய்
மூன்றென்ப சந்தி முடிவு. 12

மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
ஆன்ற வுயிர்ப்பின்னும் ஆவிவரின் - தோன்றும்
யகர வகர மிறுதியிடைத் தோரோர்
மகரங் கெட வகரமாம். 13

குற்றுகரம் ஆவி வரிற்சிதையு கூறியவல்
லொற்றுமுன் தோன்றுதலும் உண்டாகும் - முற்றோன்று
மென்மையதன் வல்லெழுத்தாம் வேற்கண்ணாய் முற்றுகரத்
தன்மையும்போம் ஆவியினைச் சார்ந்து. 14

குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கண்
நிற்கப்பின் வல்லெழுத்து நேருமேல் - ஒற்றாம்
பிணைந்த வருக்கம் பெயர்த்தியல்பு சந்தி
யிணைந்தபடி யேமுடியும் ஏய்ந்து. 15

வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
றேய்ந்து புகுதும் இயல்புமாம் - ஆய்ந்த
இறுதி வருமெழுத்ததா மீறரா மோரோர்
மறுவில்பதங் கெட்டு வரும். 16

வன்மை வரினே ளணலன மாண்டறவா
மென்மை வரினே ளலணனவாந் - தந்நக்கண்
முன்பின்னாந் தப்பி னணவியல்பாத் தட்டறவாம்
ஒன்றழிந்து போதலு முண்டு. 17

மகரந்தான் வன்மைவரின் வர்கத்தொற் றாகும்
புகரிலா மென்மைவரிற் பொன்றும் - நிகரில்
வகரம்வந் தால்குறுகும் வவ்வழிந்து மவ்வாம்
மகரந் தவயவாம் வந்து. 18

உரிவரின் நாழியி னீற்றுயிர்மெய் யைந்தாம்
வருமுயிரொன் றொன்பான் மயங்குந் - தெரியத்
திரிந்தும் விகாரங்கள் தேர்ந்தாறு முன்றும்
பொருந்தமிடம் கண்டு புகல். 19

நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான்
குன்றும் உயிருயிர்மெய் கூடுமேல் - ஒன்றியவெண்
பத்தினிடை ஆய்தமுமாம் பந்நீண்டு நீளாது
மற்றவைபோய் ஈறு வரும். 20

ஒன்பா னொடுபத்து நூறதனை யோதுங்கான்
முன்பாந் தகரணள முன்பிரட்டும் - பின்பான
வெல்லாங்கெட் டாறிரண்டு ஆவியின்பின் வல்லுகர
நல்லா யிரமீறாய் நாட்டு. 21

மேய விருசொற்பொருள்தோன்ற வேறிருத்தி
ஆய இடைச்சொல் அடைவித்தால் - தூயசீர்
ஆவிபோ மொற்றுப்போம் ஆங்குயிர்மெய் போமன்றி
மேவியசுட் டாங்கே மிகும். 22

உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம்
பெற்றிடுநீ யாமாவின் பின்னிறுதி - யொற்றணையுஞ்
சாவவக மென்புழிச் சார்ந்த இறுதியிடைப்
போவதுயிர் மெய்யென்றே போற்று. 23

ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும்
வந்துறழு மன்ன வயனலக்கள் - சந்திகளின்
அல்லா தனவும் அடக்குவாய் கண்டடக்க
எல்லாம் முடியும் இனிது. 24

2. சொல்லதிகாரம்

கடவுள் வாழ்த்து

தாதார் மலர்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.

2.1. மொழியாக்க மரபு

ஏற்ற திணையரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
வேற்றுமை எட்டும் தொகையாறும் - ஆற்றரிய
மூன்றிடமுங் காலங்கள் மூன்றும் இரண்டிடத்தால்
தோன்ற வுரைப்பதாஞ் சொல். 1

மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள்
தொக்க வுயர்திணையாந் தூமொழியாய் - மிக்க
வுயிருள் ளனவும் உயிரில் லனவுஞ்
செயிரில் அஃறிணையாஞ் சென்று. 2

ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல வென்று
மருவியபா லைந்தும் வகுப்பின் - பொருவிலா
வோங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை
பாங்கில் அஃறிணைப்பா லாம். 3

அன்னானும் அள்ளாளும் அர்ஆர்பவ் வீறுமா
முன்னை யுயர்திணைப்பான் மூன்றற்குந் - தன்வினைகொண்டு
ஆய்ந்த துறுடுவும் அஆவவ் வீறுமாம்
எய்த அஃறிணைப்பாற் கீங்கு. 4

பாலே திணையே வினாவே பகர்மரபே
காலமே செப்பே கருதிடமே - போலும்
பிறழ்வுஞ் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
உறழ்வுஞ் சிதைந்த வுரை. 5

ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும் - பேதாய்
மறுத்தல் உடன்படுதல் அன்றெனினு மன்ற
விறுத்தலே போலு மிவை. 6

ஐயந் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும்
எய்தும் பொதுமொழியால் ஈண்டுரைக்க - மெய்தெரிந்தா
லன்மை துணிபொருண்மேல் வைக்கவொரு பேர்ப்பொதுச்சொல்
பன்மைசிறப் பாலுரைத்தல் பண்பு. 7

குழுவடிமை வேந்து குழவி விருந்து
வழுவுறுப்புத் திங்கண் மகவும் - பழுதில்
உயர்திணைப் பண்போடு உயிருப்பு மெய்யும்
அயர்வில் அஃறிணையே யாம். 8

எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையாம்
எண்ணிவியங் கொள்க இருதிணையும் - எண்ணினாற்
றன்மையாம் அஃறிணையுஞ் சொன்னமொழி தன்னினத்தை
யுன்னி முடித்தலு முண்டு. 9

உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வில் திணைபான் மயங்குஞ் - செயிரில்
வழக்குந் தகுதியுமாய் வந்தொழுகுஞ் சொற்கள்
இழுக்கல்ல முன்னை இயல்பு. 10

பெண்ணான் ஒழிந்த பெயர்தொழி லாகியசொல்
உண்மை யிருதிணைமேல் உய்த்தறிக - எண்ணி
யினைத்தென் றறிந்த சினைமுதற்பேர்க் கெல்லாம்
வினைப்படுப்பின் உம்மை மிகும். 11

பொதுபிரிபால் எண்ணொருமைக் கண்ணன்றிப் போகா
பொதுத்தொழிலை யொன்றாற் புகலார் - மதித்த
ஒருபொருண்மேற் பல்பெயருண் டானால் அவற்றிற்கு
ஒருவினையே சொல்லுக ஓர்ந்து. 12

ஒப்பிகந்த பல்பொருள்மேற் சொல்லும் உருசொல்லைத்
தப்பா வினையினஞ் சார்பினாற் - செப்புக
சாதி முதலாஞ் சிறப்புப்பேர் தன்முன்னர்
ஓதார் இயற்பெயரை உய்த்து. 13

இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுஞ் வழக்கேல்
இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும் - புனையிழாய்
திண்ண மடையுஞ் சினையு முதலுமாய்
வண்ணச் சினைசொல் வரும். 14

2.2. வேற்றுமை மரபு

காண்டகுபே ரையொடுகு இன்னது கண்விளியென்
றீண்டுரைப்பின் வேற்றுமை யெட்டாகு - மூண்டவைதாந்
தோற்றும் பெயர்முன்னர் ஏழுந் தொடர்ந்தியலும்
ஏற்ற பொருள்செய் யிடத்து. 15

பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதா னாறு
பயனிலையும் ஏற்கப் படுதல் - கயல்விழியாய்
ஈற்றின் உறுபாறும் ஏற்றன்முக் காலமுந்
தோற்றாமை நிற்ற றுணிபு. 16

ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
எய்துங் குறிப்பும் இயலவருந் - தையலாய்
ஆனொடு மூன்றா வதுதான் வினைமுதலும்
ஏனைக் கருவியுமாம் ஈங்கு. 17

ஓதுங் குகர உருபுநான் காவதஃது
யாதிடத்தும் ஈபொருளை யேற்குமாங் - கோதிலாது
இன்னுருபைந் தாவ திதனினித் தன்மைத்தி
தென்னு மொருநான் கிடத்து. 18

அதுவென்ப தாறாம் உருபாம் இதனது
இதுவென் கிழமையிரண் டெய்தும் - விதிமுறையாற்
கண்ணென்பது ஏழாம் உருபாகும் காலநில
நண்ணும் வினையிடத்து நன்கு. 19

2.3. உருபு மயங்கியல்

வேற்றுமை யொன்றன் உரிமைக்கண் வேறொன்று
தோற்றல் உருபு தொகவருதல் - ஏற்றபொருண்
மாறினுந் தானிற்றல் வந்தொன்றின் ஒன்றேற்ற
றேறவரு மெய்ந்நுற் றௌிவு . 20

இருசொல் லிருதி யிரண்டே ழலாத
உருபு தொகாதென் றுரைப்ப - வுருபுதான்
தொக்க விடத்துடனே தொக்கும் விரியுமிடத்
தொக்கவிரி சொல்லு முள. 21

ஒன்றன்பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர்
சென்றவைந்தாந் தம்முதலிற் சேர்தலோடு - ஒன்றாத
வேறொன்றிற் சேர்தல் எனவிரண்டாம் வேற்கண்ணாய்
ஈறு திரிதலுமுண் டீண்டு. 22

2.4. விளி மரபு

ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
வேறு வருதலும் மெய்யில்புங் - கூறும்
இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிக்கண் ணென்றுந்
திரண்டுவிளி யேற்குந் திறம். 23

இகரம் ஈகாரமாம் ஐஆயாம் ஏயாம்
உகரவோ கார வுயிர்கள் - பகர்விளிகள்
அண்மை யிடத்தும் அளபெடைப் பேர்க்கண்ணும்
உண்மை யியல்பா யுறும். 24

அன்னிறுதி யாவாகும் அண்மைக் ககரமாம்
மின்னு முறைப்பெயரே லேயாகு - முன்னியல்பாம்
ஆனும் அளபெடையும் ஆனீற்று பண்புதொழின்
மான்விழி யாயாய் வரும். 25

ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம்
ஒரோ விடத்துளதாம் ஓங்களபாம் - பேர்கள்
இயல்பாம் விளியேலா வெவ்வீற்றுப் பேரும்
புயல்போலுங் கூந்தலாய் போற்று. 26

ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரந்
தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் - ஆற்ற
அயல்நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும்
இயல்பாம் விளிக்கு மிடத்து. 27

விரவுப்பே ரெல்லாம் விளிக்குங்கான் முன்னை
மரபிற்றாம் அஃறிணைபேர் வந்தான் - மரபிற்
கொளவரும் ஏகாரமுங் கூவிங்காற் சேய்மைக்கு
அளவிறப்ப நீளும் அவை. 28

2.5. பெயர் மரபு

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
இயற்சொன் முதனான்கு மெய்தும் - பெயர்ச்சொல்
உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண்விரவுப்
பெயரு மெனவுரைப்ப ரீங்கு. 29

சுட்டே வினாவொப்பே பண்பே தொகுனளர
வொட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் - இட்டிடையாய்
கூடியற்பெர் காலங் குலந்தொழிலின் போமகடூஉ
ஆடூஉ உயர்திணைப்பே ராம். 30

பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
இகரஐ கார இறுதி - இகரமிறுஞ்
சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களுந் தன்மையுடன்
ஆதி யுயர்திணைப்பே ராம். 31

ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
ஓதியவெண் ணின்பேர் உவமைப்பேர் - தீதிலாச்
சாதிப்பேர் சார்ந்த வினாவுறுப்பின் பேர்தலத்தோர்
ஓதிய அஃறிணைக்கா முற்று. 32

இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
மயக்கிலா மூன்றனையும் வைத்துக் - கயற்கண்ணாய்
பெண்ணாணே பன்மை யெருமையொடு பேர்த்துறழ
நண்ணும் விரவுப்பேர் நன்கு. 33

தந்தைதாய் என்பனவுஞ் சார்ந்த முறைமையால்
வந்த மகன்மகளோ டாங்கவையு - முந்திய
தாந்தானும் நீநீயிர் என்பனவுந் தாழ்குழலாய்
ஆய்ந்த விரவுப்பே ராம். 34
பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுவோடா
நீராகு நீயிர் எவனென்ப - தோருங்கால்
என்னென்னை யென்றாகும் யாமுதற்பே ராமுதலாம்
அன்ன பொழுதுபோ தாம். 35

பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய
கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால்
ஒள்ளிழையாய் தோன்றலு முண்டு. 36

ஆய்ந்த வுயர்திணைபேர் ஆவோவாஞ் செய்யுளிடை
ஏய்ந்தநிகழ் காலத் தியல்வினையால் - வாய்ந்த
உயர்திணைப் பாலொருமை தோன்றும்விர வுப்பேர்
இயலும் வழக்கி னிடத்து. 37

2.6. வினை மரபு

இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங்
குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்
முற்றெச்சம் என்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து
நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து. 38

அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாந் - தம்மொடு
புல்லுங் குடுதுறவும் என்னேனும் பொற்றொடியாய்
அல்லுந் தனித்தன்மை யாம். 39

ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப
பாங்குடைய முப்பாற் படர்கையாந் - தேங்குழலாய் யாரேனுஞ்சொன் முப்பாற்கு மெய்தும் ஒருவரென்ப
தோரு மிருபாற் குறித்து. 40

சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
பன்மை பெருமைப் படர்க்கையாம் - பின்னை
யெவென்ன வினாவவ் விருபாற் பொருட்குஞ்
சிவணுதலாந் தொன்னூல் தௌிவு. 41

மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின்
முன்னிலை பன்மைக்காம் மொய்குழலாய் - சொன்ன
ஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர்
பொருவென் பனவும் புகல். 42

செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
செய்பு செயின்செயற் கென்பனவும்- மொய்குழலாய்
பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்
சொன்முன் வகுத்தோர் துணிவு. 43

ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
வேறில்லை யுண்டு வியங்கோளுந் தேறும்
இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்
உடனொன்றிச் சேறலு முண்டு. 44

சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித்
தேற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள்
குன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன்
இன்றாதன் மெய்ந்நூ னெறி. 45

நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
கடியன் மதத்தன் கரியன் - தொடியனென
ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணியுயிர் திணையின்
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு. 46

கரிதரிது தீது கடிது நெடிது
பெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப
ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின்
மேய வினைகுறிப்பா மிக்கு. 47

சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
அன்றியா வோவாகி யாயோயாய் - நின்றனவும்
மொய்குழலாய் முன்னிலைமுன் ஈஏயும் எண்டொகையும்
மெய்தும் கடப்பாட் டின. 48

இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
வசையிலா மூன்று வரம்பாம் - அசைநிலை
ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா
வேந்திரட்டைச் சொற்க ளிரட்டு. 49

2.7. இடைச்சொல் மரபு

சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி
னேரும் பொருளாத னின்றசையாய்ப் - பேர்தல்
வினைச்சொற்கு ஈறாதல் இசைநிறைத்து மேவல்
அனைத்தே இடைச்சொ லளவு. 50

தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண்
ணரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை
தேற்றம் வின்வெண் ணெதிர்மறையுந் தேமொழியாய்
ஈற்றசையும் ஏகார மென். 51

காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன்
னாண்டறிகா லம்பெருமை யச்சமே - நீண்ட
பயநின்மை தில்லை பருவம் விழைவு
நயனில் ஒழியிசைபு நாட்டு. 52

வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
எனவென் றிரண்டு மியலும் - நினையுங்கான்
மன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம்
என்றா எனாவிரண்டு மெண். 53

சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும்
உருப்பி னெதிர்மறையி னோடும் - வெறுத்த
வொழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா
வொழிபொருளுஞ் சார்த்தி யுணர். 54

2.8. உரிச்சொல் மரபு

ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
பலபொருட் கேற்றவும் பட்டு. 55

கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்
நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
நிலையின்மை பொன்மை னிறம்பசலை என்ப
விலைநொடை வாளொளியாம் வேறு. 56

விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்
தெரிக்கிற் கடிசொற் றிறம். 57

வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
யைம்மையெய் யாமை யறியாமை - கொம்மை
யிளமை நளிசெறிவாம் ஏயேற்றம் மல்லல்
வளமை வயம்வலியாம் வந்து. 58

புரையுயர் பாகும் புனிறீன் றணிமை
விரைவாங் கதழ்வுந் துனைவுங் - குரையொலியாஞ்
சொல்லுங் கமமுந் துவன்று நிறைவாகும்
எல்லும் விளக்க மெனல். 59

2.9 எச்ச மரபு

வேற்றுமை யும்மை வினைபண் புவமையுந்
தோற்றிய வன்மொழியுந் தொக்கவிடத் - தேற்ற
இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தாற் பல்சொல்
ஒருசொல்லாய் சேரலு முண்டு. 60

உருபுவமை யும்மை விரியி னடைவே
யுருபுவமை யும்மைத் தொகையாம் - ஒருகாலந்
தோன்றின் வினைத்தொகையாம் பண்புமிரு பேரொட்டுந்
தோன்றுமேற் பண்புத்தொகை. 61

ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம் - மானனையாய்
செய்யுமெனும் பேரெச்சத் தீற்றின்மிசைச் சில்லுகர
மெய்யொடும்போம் ஒற்றொடும்போம் வேறு. 62

முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும்
அன்மொழியு மென்றிவற்றில் ஆம்பொருள்கண் - முன்மொழிதான்
கால மிடத்தாற் கருத்தோடுஞ் சேர்த்தறிதன்
மேலையோர் கண்ட விதி. 63

உலவி லுயிர்திணைமே லும்மைத் தொகைதான்
பலர்சொன் னடைத்தாய்ப் பயிலுஞ் - சிலைநுதலாய்
முற்றும்மை யெச்சப் படுதலுமுண் டாமிடைச்சொன்
நிற்றலுமுண் டிறு திரிந்து. 64

இன்னரென முன்னத்தாற் சொல்லுத லென்றசென்ற
வென்னு மவையன்றி யிட்டுரைத்த - தன்வினையாற்
செய்யப் படும்பொருளைச் செய்ததெனச் சொல்லுதலும்
எய்தப் படும்வழக்கிற்கு கீங்கு. 65

மெலித்தல்குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
வலித்தலே நீட்டல் வரினும் - ஒலிக்கும்
வரிவளாய் தொல்குறைச்சொல் வந்திடினும் உண்மை
தெரிதலாங் கற்றோர் செயல். 66

அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட்
டடிமறி யாற்று வரவுந் - துடியடையாய்
தாப்பிசை தாவின் மொழிமாற் றளைமறி
பாப்புப் பொருளொடொன் பான். 67

சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென்
றெல்லாப் பொருளு மிரண்டாகும் - மெல்லியலாய்
தொன்மொழியுன் மந்திரமுஞ் சொற்பொருள் தோன்றுதலின்
இன்மையு முண்மையுமா மீங்கு. 68

முந்துரைத்த காலங்கண் முன்று மயங்கிடினும்
வந்தொருமை பன்மை மயங்கினும் - பைந்தொடியாய்
சான்றோர் வழக்கினையுஞ் செய்யுளுஞ் சார்ந்தியலின்
ஆன்ற மரபா மது. 69

புல்லா வெழுத்தின் கிளவிப் பொருள்படினும்
இல்லா இலக்கணத்த தென்றொழிக - நல்லாய்
மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியா
தொழிந்தனவுஞ் சார்த்தி யுரை. 70




சமகால இலக்கியம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - PDF Download - Buy Book
கள்வனின் காதலி - PDF Download
சிவகாமியின் சபதம் - PDF Download - Buy Book
தியாக பூமி - PDF Download
பார்த்திபன் கனவு - PDF Download - Buy Book
பொய்மான் கரடு - PDF Download
பொன்னியின் செல்வன் - PDF Download
சோலைமலை இளவரசி - PDF Download
மோகினித் தீவு - PDF Download
மகுடபதி - PDF Download
கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - PDF Download
கபாடபுரம் - PDF Download
குறிஞ்சி மலர் - PDF Download - Buy Book
நெஞ்சக்கனல் - PDF Download - Buy Book
நெற்றிக் கண் - PDF Download
பாண்டிமாதேவி - PDF Download
பிறந்த மண் - PDF Download - Buy Book
பொன் விலங்கு - PDF Download
ராணி மங்கம்மாள் - PDF Download
சமுதாய வீதி - PDF Download
சத்திய வெள்ளம் - PDF Download
சாயங்கால மேகங்கள் - PDF Download - Buy Book
துளசி மாடம் - PDF Download
வஞ்சிமா நகரம் - PDF Download
வெற்றி முழக்கம் - PDF Download
அநுக்கிரகா - PDF Download
மணிபல்லவம் - PDF Download
நிசப்த சங்கீதம் - PDF Download
நித்திலவல்லி - PDF Download
பட்டுப்பூச்சி - PDF Download
கற்சுவர்கள் - PDF Download - Buy Book
சுலபா - PDF Download
பார்கவி லாபம் தருகிறாள் - PDF Download
அனிச்ச மலர் - PDF Download
மூலக் கனல் - PDF Download
பொய்ம் முகங்கள் - PDF Download
தலைமுறை இடைவெளி
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - PDF Download - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - PDF Download
வனதேவியின் மைந்தர்கள் - PDF Download
வேருக்கு நீர் - PDF Download
கூட்டுக் குஞ்சுகள் - PDF Download
சேற்றில் மனிதர்கள் - PDF Download
புதிய சிறகுகள்
பெண் குரல் - PDF Download
உத்தர காண்டம் - PDF Download
அலைவாய்க் கரையில் - PDF Download
மாறி மாறிப் பின்னும் - PDF Download
சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF Download - Buy Book
கோடுகளும் கோலங்களும் - PDF Download
மாணிக்கக் கங்கை - PDF Download
ரேகா - PDF Download
குறிஞ்சித் தேன் - PDF Download
ரோஜா இதழ்கள்

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - PDF Download
ஒரு கோட்டுக்கு வெளியே - PDF Download
வாடா மல்லி - PDF Download
வளர்ப்பு மகள் - PDF Download
வேரில் பழுத்த பலா - PDF Download
சாமியாடிகள்
மூட்டம் - PDF Download
புதிய திரிபுரங்கள் - PDF Download
புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - PDF Download
பார்வதி, பி.ஏ. - PDF Download
வெள்ளை மாளிகையில்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
தேசிய கீதங்கள்
விநாயகர் நான்மணிமாலை - PDF Download
பாரதிதாசன்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
அழகின் சிரிப்பு
தமிழியக்கம்
எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார்
அகல் விளக்கு
மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம்
அபிதா - PDF Download

ப. சிங்காரம்
புயலிலே ஒரு தோணி
சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - PDF Download
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும்
புயல்

விந்தன்
காதலும் கல்யாணமும் - PDF Download

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - PDF Download
பனித்துளி - PDF Download
பூவும் பிஞ்சும் - PDF Download
தனி வழி - PDF Download

ரமணிசந்திரன்
சாவி
ஆப்பிள் பசி - PDF Download - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - PDF Download
விசிறி வாழை

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு
சர்மாவின் உயில்

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - PDF Download

மகாத்மா காந்தி
சத்திய சோதன

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - PDF Download

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி

மாயாவி
மதுராந்தகியின் காதல் - PDF Download

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல்
கௌரிராஜன்
அரசு கட்டில் - PDF Download - Buy Book
மாமல்ல நாயகன் - PDF Download

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF Download

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - PDF Download
ஜகம் புகழும் ஜகத்குரு

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
குறுந்தொகை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download
இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download
கார் நாற்பது (உரையுடன்) - PDF Download
களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download
ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download
கைந்நிலை (உரையுடன்) - PDF Download
திருக்குறள் (உரையுடன்)
நாலடியார் (உரையுடன்)
நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download
ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
பழமொழி நானூறு (உரையுடன்)
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download
ஏலாதி (உரையுடன்) - PDF Download
திரிகடுகம் (உரையுடன்) - PDF Download
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம் - PDF Download
யசோதர காவியம் - PDF Download
வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம்
திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download
மனோதிருப்தி - PDF Download
நான் தொழும் தெய்வம் - PDF Download
திருமலை தெரிசனப்பத்து - PDF Download
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download
திருப்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download
திருமால் வெண்பா - PDF Download
சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை
திருவிசைப்பா
திருமந்திரம்
திருவாசகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
சொக்கநாத வெண்பா - PDF Download
சொக்கநாத கலித்துறை - PDF Download
போற்றிப் பஃறொடை - PDF Download
திருநெல்லையந்தாதி - PDF Download
கல்லாடம் - PDF Download
திருவெம்பாவை - PDF Download
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download
திருக்கைலாய ஞான உலா - PDF Download
பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download
இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download
மதுரைச் சொக்கநாதருலா - PDF Download
இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download
இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download
இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download
சிவநாம மகிமை - PDF Download
திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download
சிதம்பர வெண்பா - PDF Download
மதுரை மாலை - PDF Download
அருணாசல அட்சரமாலை - PDF Download
மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - PDF Download
திருவுந்தியார் - PDF Download
உண்மை விளக்கம் - PDF Download
திருவருட்பயன் - PDF Download
வினா வெண்பா - PDF Download
இருபா இருபது - PDF Download
கொடிக்கவி - PDF Download
சிவப்பிரகாசம் - PDF Download
பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download
சன்மார்க்க சித்தியார் - PDF Download
சிவாச்சிரமத் தெளிவு - PDF Download
சித்தாந்த சிகாமணி - PDF Download
உபாயநிட்டை வெண்பா - PDF Download
உபதேச வெண்பா - PDF Download
அதிசய மாலை - PDF Download
நமச்சிவாய மாலை - PDF Download
நிட்டை விளக்கம் - PDF Download
சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download
நெஞ்சொடு புலம்பல் - PDF Download
ஞானம் - 100 - PDF Download
நெஞ்சறி விளக்கம் - PDF Download
பூரண மாலை - PDF Download
முதல்வன் முறையீடு - PDF Download
மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download
பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download

கம்பர்
கம்பராமாயணம்
ஏரெழுபது
சடகோபர் அந்தாதி
சரஸ்வதி அந்தாதி - PDF Download
சிலையெழுபது
திருக்கை வழக்கம்
ஔவையார்
ஆத்திசூடி - PDF Download
கொன்றை வேந்தன் - PDF Download
மூதுரை - PDF Download
நல்வழி - PDF Download
குறள் மூலம் - PDF Download
விநாயகர் அகவல் - PDF Download

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - PDF Download
கந்தர் கலிவெண்பா - PDF Download
சகலகலாவல்லிமாலை - PDF Download

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றால மாலை - PDF Download
திருக்குற்றால ஊடல் - PDF Download
ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - PDF Download
கந்தர் அலங்காரம் - PDF Download
கந்தர் அனுபூதி - PDF Download
சண்முக கவசம் - PDF Download
திருப்புகழ்
பகை கடிதல் - PDF Download
மயில் விருத்தம் - PDF Download
வேல் விருத்தம் - PDF Download
திருவகுப்பு - PDF Download
சேவல் விருத்தம் - PDF Download
நல்லை வெண்பா - PDF Download
நீதி நூல்கள்
நன்னெறி - PDF Download
உலக நீதி - PDF Download
வெற்றி வேற்கை - PDF Download
அறநெறிச்சாரம் - PDF Download
இரங்கேச வெண்பா - PDF Download
சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download
விவேக சிந்தாமணி - PDF Download
ஆத்திசூடி வெண்பா - PDF Download
நீதி வெண்பா - PDF Download
நன்மதி வெண்பா - PDF Download
அருங்கலச்செப்பு - PDF Download
முதுமொழிமேல் வைப்பு - PDF Download
இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை
நேமிநாதம் - PDF Download
நவநீதப் பாட்டியல் - PDF Download

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - PDF Download

சிலேடை நூல்கள்
சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download
அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download
கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download
வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download
நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download
வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download
உலா நூல்கள்
மருத வரை உலா - PDF Download
மூவருலா - PDF Download
தேவை உலா - PDF Download
குலசை உலா - PDF Download
கடம்பர்கோயில் உலா - PDF Download
திரு ஆனைக்கா உலா - PDF Download
வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download
ஏகாம்பரநாதர் உலா - PDF Download

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - PDF Download
திருவருணை அந்தாதி - PDF Download
காழியந்தாதி - PDF Download
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download
திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download
திருமயிலை யமக அந்தாதி - PDF Download
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download
துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download
அருணகிரி அந்தாதி - PDF Download
கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download
பழனி இரட்டைமணி மாலை - PDF Download
கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download
குலசை உலா - PDF Download
திருவிடைமருதூர் உலா - PDF Download

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download
நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - PDF Download
விநாயகர் நான்மணிமாலை - PDF Download

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download
நெஞ்சு விடு தூது - PDF Download
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download
மான் விடு தூது - PDF Download
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download
மேகவிடு தூது - PDF Download

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - PDF Download
சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download
பண்டார மும்மணிக் கோவை - PDF Download
சீகாழிக் கோவை - PDF Download
பாண்டிக் கோவை - PDF Download

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்
காசிக் கலம்பகம் - PDF Download
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - PDF Download
கொங்கு மண்டல சதகம் - PDF Download
பாண்டிமண்டலச் சதகம் - PDF Download
சோழ மண்டல சதகம் - PDF Download
குமரேச சதகம் - PDF Download
தண்டலையார் சதகம் - PDF Download
திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download
கதிரேச சதகம் - PDF Download
கோகுல சதகம் - PDF Download
வட வேங்கட நாராயண சதகம் - PDF Download
அருணாசல சதகம் - PDF Download
குருநாத சதகம் - PDF Download

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
முத்தொள்ளாயிரம்
காவடிச் சிந்து
நளவெண்பா

ஆன்மீகம்
தினசரி தியானம்