![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
பழனி இரட்டைமணி மாலை இந்நூலின் ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது. காப்பு ஞான விரகறியா நானுஞ் சிலதமிழால் வானவரேத் தும்பழனி வந்தானைத்-தானவரை வென்றானை வாழ்த்த விரைப்பா திரிவனஞ்சேர் கன்றானை மாமுகத்தோன் காப்பு. நூல் பூமாது கேள்வன் புகழ்மருகன் பொய்யாத பாமாது வாழ்த்தும் பழனியான்-நாமத் தனிவேலை யுந்தோகை தன்னையுமே பாட இனிவேலை கண்டீ ரெமக்கு. 1 எம்மைப் புரக்குஞ் சிவகிரி யானெம் மிரவொழிக்கும் செம்மைத் தனிச்சுடர் தேவசிந் தூரந்தெய் வானைவள்ளி யம்மைக் கிறைபொன் னடிகளல் லாம லடியவர்கள் வெம்மைப் பிறவிப் பிணிக்கொரு மூலிகை வேறில்லையே. 2 வேறோ விளக்கும் விளக்கொளியும் வேறிரண்டு கூறோ நவரசமுங் கூத்தாட்டும் - நாறுமலர்க் கள்ளுயிர்க்குந் தென்பழனிக் கந்தன் குருபரனென் உள்ளுயிர்க்கு வேற்றுமையா மோ. 3 ஆமோ திருவெழுத் தாற்றி யாததென் றஞ்சலிலா நாமோவை காபுரி நாட்டிருப் போம்வினை நம்மைவிட்டுப் போமோ கொடுவினை போய்விட வேண்டிற் புனக்குறத்தி மாமோக வேலன் பழனியை வாழ்த்தென் மடநெஞ்சமே. 4 நெஞ்ச முருகா நிதிப்பெருக்க ரோவெனக்கோர் தஞ்ச முருகா தனிமுதல்வா-செஞ்சதங்கைத் தாளுடையாய் தென்பழனிச் சண்முகா பன்னிரண்டு தோளுடையாய் நீயே துணை. 5 துணைக்குங் குமக்கொங்கை மங்கையுந் தானுந்த்ரி சூலனெடுத் தணைக்குங் குழந்தை பழனிப் பிரான்விளை யாட்டென் சொல்கேன் கணைக்குங் கடுங்கதிர்ச் செவ்வேல்விட் டேழு கடல்கலக்கும் பணைக்குந் திசைக்களி றோரெட்டு மேவிடும் பாய்ச்சலுக்கே. 6 பாயிருள்போற் சூர்மாப் பயந்தோடப் பானுவெனத் தீயுமிழுங் கூரிலைவேற் செவ்வேளே-கோயிலுனக் கேரகமோ வெங்கணுமோ வென்னெஞ்ச மோதிருச்செந் தூரகமோ தென்பழனி யோ. 7 ஓங்கார மான முருகோன் மருங்கி லொருகைவைத்து நீங்கா தொருகை பிடித்ததண் டாயுத நெஞ்சைவிட்டு வாங்கா திவனைப் பழனிவெற் பேறி வணங்கினர்க்குத் தீங்கா னதுவரு மோபொரு மோநமன் சேனைகளே. 8 சேனைத் திரளுநெடுஞ் செங்கோலு மங்கையரும் ஏனைத் திருவு மௌிதன்றோ-நானிலத்து நம்பிடுவார்க் கும்பழனி நாட்டுக் குருபரனைக் கும்பிடுவார் தம்மடியார்க் கும். 9 அடியார்க் கௌிய பழனிப் பிரானுல கன்றளந்த நெடியார்க்கு மார்க்கு நினைப்பரி யான்பக்க நின்றதெய்வப் பிடியார்க் கிறைவன் பெயர்சொன்ன பேரைப் பிடிக்கிலன்னக் கொடியார்க்குப் பூட்டுந் தளைபூட்டு வன்கொடுங் கூற்றிற்குமே. 10 கூற்றையோ திங்கட் கொழுந்தென்றீர் கூற்றுயிர்த்த காற்றையோ தென்றலிளங் கன்றென்றீர்-தேற்றக் கடவீ ரெனிற்பழனிக் கந்தவேண் முன்போய் மடவீர் மொழிவீரென் மால். 11 மாலையுஞ் சாந்தும் புழுகோ டளைந்தபொன் மார்பையுமுந் நூலையுந் தென்பழ னிப்பெரு மானன்பர் நோய்தணிக்கும் வேலையும் பச்சை மயில்வாக னத்தையும் வெற்றித்தண்டைக் காலையுஞ் சென்று தொழவேண்டு மாலையுங் காலையுமே. 12 காலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட மாலைக் குமுதமெலாம் வாய்மலர-நூலிடையார் கூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச் சேந்தனிடத் தன்றோ செகம். 13 செகத்தா ரொருவர் திருவாவி னன்குடிச் செல்வன்றன்னை அகத்தா மரைவைத்துப் பூசைசெய் தாரகத் தாமரைக்கே நகத்தா மரையிரண் டுள்ளே நடிக்கு நடம்புரிவான் முகத்தா மரைகளிற் பன்னிரு தாமரை முன்னிற்குமே. 14 முன்னிற்குந் தென்பழனி முத்துக் குமாரநீ மன்னிக்கு மன்னருட்கோர் மட்டுண்டோ-உன்னமகிழ் பார்ப்பானை லோகம் படையென்றாய் மூவடிமண் ஏற்பானைக் காவென்றா யே. 15 ஏட்டுக் கணக்கு மெழுத்தாணி தேய்ந்தது மியாங்கள்விற்ற பாட்டுக் கணக்கும் பலன்பெற லாமென்று பாடிச்சென்ற வீட்டுக் கணக்குந் தொகைபார்க்கிற் கார்க்கடல் வெண்மணலைக் கூட்டிக் கணக்கிட லாமே பழனிக் குருபரனே. 16 குருமூர்த்தி யாய்க்குடிலை கூறியிட்ட வுன்னை ஒருமூர்த்தி யென்னா துலகம்-இருமூர்த்தி மும்மூர்த்தி யாய்ப்பழனி மூர்த்தியே கீர்த்திபுனை எம்மூர்த் தியுமான தென். 17 என்னையும் பார்க்கச் சிறியோர் பிறப்பு மிறப்புமிலா உன்னையுந் தெய்வமென் றோதிய நாவி னுலப்பவரைப் பின்னையுந் தெய்வங்க ளென்பார் பழனிப் பிரான்குமரா பொன்னையும் பொன்னென் றுரைப்பா ரிரும்பையும் பொன்னென்பரே. 18 பொற்கன்னி காரவனம் பூங்கற் பகவனமாச் சொற்க நிகர்பழனித் தூயோனே-நற்கனியைத் தந்தா வளமுகத்தான் றந்தருள வந்தருள்வாய் நந்தா வளமெனக்கு நல்கு. 19 நல்லார்முன் னெங்ஙன முய்யவல் லேன்பழ நான்மறையும் வல்லாய் பழனி மலைவள்ள லேயிரு மங்கையர்க்கும் சல்லாப லீலைத் தலைவாவென் னோயைத் தணிக்கும்வண்ணம் பொல்லா வினைவற்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே. 20 பழனி இரட்டைமணி மாலை முற்றிற்று |