![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
திருத்தக்கதேவர் அருளிய சீவக சிந்தாமணி ... தொடர்ச்சி - 2 ... மாற்றவர் மறப் படை மலைந்து மதில் பற்றின் நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கி எறி பொறியும் தோற்றம் உறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும் கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா 101 வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள் கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செந் தீக் கொல் புனை செய் கொள்ளி பெருங் கொக்கு எழில் செய் கூகை நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே 102 செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும் வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெந் நெய் முகத்து உமிழ்வ அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகித் தம் புலங்களால் யவனர் தாள் படுத்த பொறியே. 103 கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம் குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண்நூல் பரந்த பசும் பொன் கொடி பதாகையொடு கொழிக்கும் திருந்து மதி தெவ்வர் தலை பனிப்பத் திருந்தின்றே 104 வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும் வயிர மணித் தாழ்க் கதவு வாயில் முகம் ஆக வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடிக் கூந்தல் வயிரக் கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே 105 அகநகர்த் தோற்றம் செம் பொன் மழை போன்று அடிதொறு ஆயிரங்கள் சிந்திப் பைம் பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அது தான் உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம் 106 பரத்தையர் சேரியின் தோற்றம் துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின் ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச் செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும் உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே 107 குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால் தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப் பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே 108 தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம் வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம் ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே 109 அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப் பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய் அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே 110 தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப் பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே 111 கடை வீதிகள் இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மைப் பட்டமும் பசும் பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன் அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன். 112 மணி புனை செம் பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலைக் கணி புனை பவழத் திண் காழ் கம்பலக் கிடுகின் ஊன்றி அணி நிலம் மெழுகிச் சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில் திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே. 113 பொன் சொரி கதவு தாழில் திறந்து பொன் யவனப் பேழை மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்துப் பின்னும் மன் பெரும் பவழக் குப்பை வால் அணிகலம் செய் குப்பை நண் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே. 114 விழுக் கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா பழக் குலைக் கமுகும் தெங்கும் வாழையும் பசும் பொன்னாலும் எழில் பொலி மணியினாலும் கடை தொறும் இயற்றினாரே. 115 மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும் ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகாப் பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே. 116 மெய்யணி பசும் பொன் சுண்ணம் மேதகு நான நீரின் ஐது பட்டு ஒழுகி யானை அழிமதம் கலந்து சேறாய்ச் செய் அணி கலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன். 117 தெருக்களின் தோற்றம் முழவு அணி முது நகர் முரசொடு வளை விம விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை மழை என மறையின பொலிவினது ஒருபால். 118 குடையொடு குடை பல களிறொடு நெரி தர உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர் கொடியுடை மழை மினின் குலவியது ஒரு பால். 119 பூத்தலை வாரணப் போர்த் தொழில் இளையவர் நாத் தலை மடி விளிக் கூத்தொடு குயில் தரக் காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் பூத்துகள் கழுமிய பொலிவினது ஒரு பால். 120 மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர் அம் துகில் பற்றலின் காசரிந்து அணி கிளர் சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின் அணிந்து இந்திர திருவிலின் எழிலினது ஒருபால். 121 வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம் அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையுமின் உள அணி கலம் எனும் உரையினது ஒருபால். 122 வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர் விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால். 123 வரி வளை அரவமும் மணி முழவு அரவமும் அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும் புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம். 124 தெருக்களிலுள்ள மனைகளைப் பற்றிக் கூறுதல் பாவை அன்னவர் பந்து புடைத்தலில் தூவி அன்னம் வெரீஇத் துணை என்று போய்க் கோவை நித்தில மாடக் குழாம் மிசை மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே. 125 திருவ நீள் நகர்ச் செம் பொனின் நீடிய உருவ ஒண்கொடி ஊழின் நுடங்குவ பரவை வெம் கதிர்ச் செல்வன பன்மயிர்ப் புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே. 126 இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார் விழைய ஊட்டிய மேதகு தீம் புகை குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர் மழையுள் மா மதி போன்ம் எனத் தோன்றுமே. 127 செம் பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும் அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும் தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும் வம்பு உண் கோதையர் மாற்றும் அயல் அரோ 128 வேரிஇன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து ஆரி ஆக அம் சாந்தம் தளித்தபின் வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு சேரி தோறு இது செல்வத்து இயற்கையே. 129 கருனை வாசமும் கார் இருள் கூந்தலார் அருமை சான்ற அகில் புகை வாசமும் செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம் பொழில் உரிமை கொண்டன ஒண்புறவு என்பவே. 130 நறையும் நானமும் நாறும் நறும் புகை விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம் நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே. 131 பாளை மென் கமுகின் பழம் மெல் இலை நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம்நலார் ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம் நாள் செய் மாலை நகை முடிப் பெய்பவே. 132 எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார் மெழுகு குங்கும மார்பு இடை வெம் முலை உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. 133 குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டு உணும் அஞ்சில் ஓதியர் அம் மலர்ச் சீறடி மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம் பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. 134 தூமமே கமழும் துகில் சேக்கை மேல் காமமே நுகர்வார் தம் காதலால் யாமமும் பகலும் அறியாமையால் பூமி மா நகர் பொன் உலகு ஒத்ததே. 135 அரவு கான்றிட்ட அம்கதிர் மா மணி உரவு நீர் முத்தும் உள் உறுத்து உள்ளன இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர் புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே. 136 முல்லை அம் குழலார் முலைச் செல்வமும் மல்லல் மா நகர்ச் செல்வமும் வார் கழல் செல்வர் செல்வமும் காணிய என்பர் போல் எல்லியும் இமையார் இமையாததே. 137 முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால் புகழலாம் படித்து அன்று இது பொன்னகர் அகழ்தல் மாக் கடல் அன்னது ஓர் சும்மைத்தே. 138 திங்கள் முக்குடையான் திரு மாநகர் எங்கும் எங்கும் இடம் தொறும் உண்மையால் அம் கண் மா நகர்க்கு ஆக்கம் அறாதது ஓர் சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே. 139 தேன்தலைத் துவலை மாலை பைந்துகில் செம் பொன் பூத்து ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கும் ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமா புரம் அதாமே. 140 அரண்மனையின் சிறப்பு வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல் மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர் ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன் நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம். 141 நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச் சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர் கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே. 142 இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும் அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன் குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே. 143 முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன் தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே. 144 சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக் கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார் இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில் செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே. 145 வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால் துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர் பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே. 146 கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய மாழையம் திரள் கனி மா மணி மரகதம் சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால் ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே. 147 மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும் குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும் நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன் கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. 148 தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம் ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும் நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே. 149 முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால் சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே. 150 வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும் கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும் இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே. 151 கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச் சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால் காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே. 152 கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும் தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும் மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும் இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே. 153 பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும் காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர் ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே. 154 கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச் சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால் இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. 155 ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப் பாடலின் அரவமும் பணை முழவு அரவமும் கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும் வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே. 156 சச்சந்தன் வரலாறு நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன் அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன் கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான். 157 வண் கையால் கலி மாற்றி வை வேலினால் திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான் நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள் கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே. 158 கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால் தாதையே அவன் தாள் நிழல் தங்கிய காதலால் களிக்கின்றது இவ் வையமே. 159 தருமன் தண் அளியால் தனது ஈகையால் வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே அருமையால் அழகின் கணை ஐந்து உடைத் திருமகன் திரு மா நில மன்னனே. 160 ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல் தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான் தேனை மாரி அன்னான் திசை காவலன் வானம் தோய் புகழான் மலிவு எய்தினான். 161 விசயையின் தோற்றம் செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல் மல்கு நீர் விதையத்து அரசன் மகள் அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள் வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள். 162 உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண் பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு அரிய தேவரும் ஏத்து அரு நீரளே. 163 எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல் கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள் வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே. 164 குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல் அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும் தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல் ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே. 165 வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க் கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல் பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே. 166 சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம் பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும் மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே. 167 மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும் வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே. 168 ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும் ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம் தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே. 169 மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள் துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள் மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே. 170 தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே. 171 அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ் கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம் உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே. 172 மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப் பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல் கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே. 173 வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே. 174 பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய் நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும் மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே. 175 ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச் சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய் வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே. 176 பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல் அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே. 177 அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப் பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித் திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே. 178 என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும் மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே. 179 சச்சந்தன் விசயையை மணத்தல் இவ் உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து அவ் உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்துக் கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்துக் காதல் நீர் செவ்விதில் தெளித்து ஆனாக் காமப் பூச் சிதறினான். 180 மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல் தையலாள் நெடுந் தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்தன் ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கிச் செல்கின்றான் மொய் அறாக் களியானை முழங்கித் தேன் இமிர் தாரான். 181 வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம் உண்டு உகுத்திடு களிற்று உழவன் தன் மகள் பெண்டிர் தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர் விண்டலர் கோதைக்கு விசயை என்பவே. 182 அரு மணி மரகதத்து அங் கண் நாறிய எரி நிறப் பொன் இதழ் ஏந்து தாமரைத் திருமகள் இவள் எனத் திலக வெண் குடைப் பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே. 183 கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர் சிலம்புரி திருந்து அடி பரவச் செல்பவள் வலம்புரி சலஞ்சலம் வளை இயது ஒத்தனள் குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள். 184 இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ங் குழல் மென் மலர்க் கோதை தன் முலைகள் வீங்கலின் மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே. 185 முந்து நாம் கூறிய மூரித் தானை அக் கந்து கொல் கடாக் களி யானை மன்னவன் பைந்தொடிப் பாசிழைப் பரவை ஏந்து அல்குல் தந்தை மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே. 186 மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும் அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில் பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே. 187 சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல் பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும் அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார் இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண் சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே. 188 காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார் மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல் ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார். 189 தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில் பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான் மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள். 190 பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான் கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள் தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான். 191 பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல் களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள் ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள் அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான். 192 துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும் நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும் அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும் பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். 193 துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன் அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே. 194 இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத் தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக் குழை முகக் கொடியொடு குருதி வேலினான் மழை முகில் மாரியின் வைகும் என்பவே. 195 படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும் கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும் இடியினும் கொடியினும் மயங்கி யாவதும் கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே. 196 கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச் செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும் ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே. 197 மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன் பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள் விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி ஔ நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே. 198 குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும் தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள் திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம் பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே. 199 சச்சந்தன், கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு விசயையோடு இன்புறல் களிறு அனான் அமைச்சர் தம்முள் கட்டியங் காரன் என்பான் ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள் பிளிறு வார் முரசின் சாற்றிப் பெரும் சிறப்பு இயற்றி வேந்தன் வெளிறு இலாக் கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான். 200 |