கலம்பகம் நூல்கள்

     தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது.

     பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. கலம்பகம் எனும் சொல்லில் கலம் என்பது பன்னிரெண்டையும், பகம்(கலத்தில் பாதி) ஆறினையும் குறிக்கும். ஆக பதினெட்டு உறுப்புகள் அமைய பாடப்படுவதே கலம்பகம் என அழைக்கப்படுகிறது. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும்.

     கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

     இங்கிலாந்திலிருந்து தமிழகத்துக்கு வந்த டாக்டர் ஜி.யு. போப் அவர்களும் கலம்பகத்தின் சுவையினால் கவரப்பட்டு, தமிழ்ச்செய்யுட் கலம்பகம் என ஒன்று இயற்றியிருக்கிறார்.

     பாட்டுடைத் தலைவன் பெயரில் கலம்பகம் இயற்றப்படுவது மரபு என்றாலும் பின்னால் ஊர்ப் பெயர்களை வைத்தே கலம்பகங்கள் இயற்றப்படலாயின. சான்றாகப், புதுவைக் கலம்பகம் என்ற பெயரில் இருபெயர்கள் உள்ளன.


ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - நம்பியாண்டார் நம்பி
கொற்றந்தைக் கலம்பகம் - புகழேந்திப் புலவர்
கோயிற் கலம்பகம் - மணவாள மாமுனிகள்
திருவரங்கக் கலம்பகம் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருவாமாத்தூர்க் கலம்பகம் - இரட்டைப் புலவர்கள்
தில்லைக் கலம்பகம் - இரட்டைப் புலவர்கள்
திருக்காவலூர்க் கலம்பகம் - வீரமாமுனிவர்
திருசெந்திற் கலம்பகம் - சாமிநாததேசிகர்(ஈசான தேசிகர்)
சேயூர்க் கலம்பகம் - அந்தக்கவி வீரராகவர்
திரு.வி.க. கலம்பகம் - மறையரசன்
மதீனாக் கலம்பகம் - சையத் மீரான் லெப்பை அண்ணாவியார்