நான்காம் பாகம் : பிரளயம்

19. பாம்புக்கு வார்த்த பால்

     பட்டாபிராமனுடைய மாமியாரின் மனோரதம் வீண் போகவில்லை. தேவபட்டணத்து முனிசிபல் சேர்மன் பதவிக்கு நடந்த தேர்தலிலும் பட்டாபிராமனுக்கே வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி தனியாக வரவில்லை. இடி, மின்னல், பெருமழை, பிரளயம், இவற்றுடன் சேர்ந்து வந்தது.


நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-4
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.445.00
Buy

கனவு சினிமா
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஃபிராய்ட்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சர்மாவின் உயில்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மொழியைக் கொலை செய்வது எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

Power And Protocol For Getting To The Top
Stock Available
ரூ.270.00
Buy

கூழாங்கற்கள் பாடுகின்றன
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

கரைந்த நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

தனிமனித வளர்ச்சி விதிகள் 15
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

உப்பு நாய்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

எப்போதும் பெண்
இருப்பு இல்லை
ரூ.180.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

இது தெரியாமப் போச்சே!
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

உண்மைக்கு முன்னும் பின்னும்
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

காதல் வழிச் சாலை!
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

Curious Lives
Stock Available
ரூ.270.00
Buy
     சீதாவுக்கு ஏற்பட்ட மனச் சோர்வு இரண்டு மூன்று தினங்களிலேயே மறைந்து போய்விட்டது. சரஸ்வதி அம்மாள் அடிக்கடி முணுமுணுத்ததைப் பொருட்படுத்தாமல் பட்டாபிராமனும் லலிதாவும் சீதாவை உற்சாகப்படுத்துவதில் முனைந்தார்கள். முதல் தேர்தலில் ஏற்பட்ட வெற்றிக்காக நடந்த உபசார விருந்துகளுக்கும் வாழ்த்துக் கூட்டங்களுக்கும் சீதாவையும் தவறாமல் உடன் அழைத்துப் போனார்கள். சென்ற இடங்களில் எல்லாம் சீதா தன்னுடைய கலகலப்பான சுபாவத்தினாலும் சாதுர்யமான பேச்சுகளினாலும் அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தி வந்தாள். எதிரி மனப்பான்மை கொண்டவர்கள் சிலரும் பொறாமைக்காரர்களும் தங்களுக்குள் ஏதோ அப்படி, இப்படி என்று பேசிக்கொண்டது உண்மைதான். ஆனால் அது ஒன்றும் பட்டாபிராமன் காது வரையில் வந்து எட்டவில்லை.

     நாளாக ஆக, பட்டாபிராமனுக்குச் சேர்மன் பதவி நிச்சயம் என்று ஏற்பட்டது. சேர்மன் தேர்தல் தினம் நெருங்க நெருங்க, பட்டாபிராமன், லலிதா, சீதா - ஆகிய இவர்களின் உற்சாகமும் உச்சத்தை அடைந்து வந்தது.

     ஆனால் குறிப்பிட்ட தேதிக்குச் சரியாக இரண்டு நாள் இருக்கும்போது லலிதாவின் தலையில் இடி விழுந்தது போன்ற ஒரு திடுக்கிடும் சம்பவம் ஏற்பட்டது.

     அன்று காலையில் பட்டாபிராமன் வெளியிலே போயிருந்தான். சீதா தன்னுடைய மாடி அறையில் உட்கார்ந்து, ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள்.

     அச்சமயம் தபால்கள் வந்தன. லலிதா தபால்களை வாங்கிக்கொண்டு வந்து பட்டாபிராமனுடைய மேஜையின் மேல் வைத்தாள். பிறகு தனக்கு ஏதாவது கடிதம் உண்டா என்று பார்ப்பதற்கு அசிரத்தையாகத் தபால்களைப் புரட்டினாள். அவளுடைய பெயருக்கு ஒரு கடிதம் இருந்தது. சாதாரணமாய் விலாசத்தைப் பார்த்ததும் யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிடுவதுண்டு. ஏனெனில் அவள் பெயருக்குக் கடிதம் எழுதக் கூடியவர்கள் வெகு சிலர்தான், சூரியா ஒருவன். சீதா டில்லியிலிருந்தபோது அடிக்கடி எழுதுவாள். கல்கத்தாவிலிருந்து சித்ரா எழுதுவாள். இன்னும் இரண்டொருவர்தான். ஆனால் இந்தக் கடிதத்தின் மேல் விலாசத்திலிருந்து அதை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆகையால் வழக்கத்தைக் காட்டிலும் சிறிது ஆர்வத்துடனேயே உறையை உடைத்தாள். ஏனோ தெரியவில்லை; அவளுடைய நெஞ்சம் கொஞ்சம் பலமாகவே அடித்துக் கொண்டது.

     உறைக்குள்ளே கடிதம் ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. லலிதா திரும்பவும் உறைக்குள் பார்த்தாள். மடித்திருந்த பத்திரிகைத் துண்டைப் பிரித்து அதற்குள் ஏதாவது கடிதம் இருக்கிறதோ என்று பார்த்தாள். தவறிக் கீழே விழுந்திருக்கிறதோ என்று பார்த்தாள் இல்லையென்று நிச்சயமாயிற்று. 'ஏதோ தவறுதலாகக் கடிதத்தை வைப்பதற்குப் பதில் இந்தப் பத்திரிகையை வைத்து விட்டாற் போலிருக்கிறது. அப்படி வைத்தது யாராக இருக்கும்!' என்று எண்ணிக்கொண்டே அச்சுத்தாளைப் பார்த்தாள். அதில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த ஒரு தலைப்பு அவளுடைய கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. "பட்டாபிராமன் லீலைகள்" என்ற அந்தத் தலைப்பைப் பார்த்ததும் அவளுடைய மனம் பதறியது; உடம்பு நடுங்கியது. இரண்டு வரி படித்ததும் பதறலும் நடுக்கமும் அதிகமாயின. அதற்குமேல் அங்கேயிருந்து படிக்கக்கூடாது என்று தோன்றியது. ஒருவேளை பட்டாபிராமன் அங்கு வந்துவிட்டால்? அல்லது சீதாதான் வந்துவிட்டால்? அவர்களுடைய கண்ணிலே இது படக்கூடாது! நிச்சயமாய்க் கூடாது! ஆகையால் அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவையும் தாள் போட்டுக் கொண்டாள். ஜன்னல் ஓரமாக நின்று படித்தாள். பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை. கண்களில் கொதிக்கும் வெந்நீரைப் போன்ற, உஷ்ணத்துடன் கரகரவென்று ஜலம் கொட்டத் தொடங்கிக் கண்களை அடியோடு மறைத்துவிட்டது. அடிவயிற்றிலிருந்து வெப்பமான புகை போல ஏதோ கிளம்பி மார்பை அடைத்துக் கொண்டு மேலேறி மூச்சுத் திணறும்படி செய்து தலைக்குள்ளே பிரவேசித்தது. தலை கிறுகிறுவென்று சுழலத் தொடங்கியது. மயக்கம் வந்து கீழே தள்ளி விடுமோ என்று தோன்றியது. அந்த நிலைமையில் லலிதா ஆச்சரியமான மனோதிடத்துடன் அந்தப் பத்திரிகைத் துண்டைத் தன் பெட்டிக்குள்ளே வைத்துப் பூட்டினாள். பிறகு கட்டிலின் மேலே மெத்தையின் மீது தொப்பென்று விழுந்தாள். சிறிது நேரம் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றது. மனமும் தெளிவடைந்தது, "சீச்சீ! யாரோ அயோக்யன், பொறாமைக்காரன், எதையோ கன்னா பின்னாவென்று எழுதி அச்சுப் போட்டு விட்டதற்காக நம்முடைய மனதை மீற விட்டுவிடலாமா?" என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். பிறகு எழுந்து கண்களையும் முகத்தையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில் பார்த்து நெற்றிப் பொட்டையும் சரிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். "அம்மா! சமையல் ஆகிவிட்டதா? அவர் வரும் நேரமாகி விட்டதே" என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குச் சென்ற லலிதாவின் முகத்திலோ குரலிலோ சற்று முன் அவள் அநுபவித்த கொடிய வேதனைக்கு அடையாளம் கொஞ்சம் கூட இருக்கவில்லை.

     இப்படி லலிதாவுக்கு நரக வேதனை அளித்த விஷயம் என்னவென்று கேட்டால்:-

     கொஞ்ச காலமாகத் தேவபட்டணத்தில் 'மஞ்சள் பத்திரிகை' ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது. அதில் அந்த ஊர்ப் பிரமுகர்களுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள ஊழல்களையெல்லாம் வெளிப்படுத்துகிறது என்னும் வியாஜத்தில் சொல்லவும் எழுதவும் தகாத ஆபாச விஷயங்களையெல்லாம் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆபாசப் பத்திரிகை பெரும்பாலும் இரகசியமாகப் பரவிக் கொண்டிருந்தது. நல்ல மனிதர்கள், நாகரிகமான மனிதர்கள் அதை வாங்குவதற்கும் படிப்பதற்கும் லஜ்ஜைப்பட்டார்கள். ஆயினும் பலருடைய மனதில் தங்களைப் பற்றி ஏதாவது அவதூறு வந்திருக்கிறதோ என்ற பீதி குடிகொண்டிருந்தது. சிலர் அந்த ஆபாசப் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிப்பதும், மற்றவர்களைப் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதைப் படித்து விட்டுச் சந்தோஷப்படுவதும், தங்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அவஸ்தைப்படுவதும் அதை வேறு யாரும் படிக்காமலிருக்க வேண்டுமே என்று கவலைப்படுவதுமாயிருந்தார்கள்.

     இந்த முட்டாள்தனப் படுகுழியில் விழாதிருந்தவர்களில் பட்டாபிராமன் ஒருவன். அந்தப் பத்திரிகையை அவன் பார்த்ததுமில்லை; படித்ததுமில்லை. யாராவது அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாலும் உடனே அவன் தன்னுடைய அருவருப்பை வெளியிட்டு அந்தப் பேச்சை அடக்கிவிடுவான். ஆகவே பட்டாபிராமனுடைய வீட்டுக்குள்ளே அந்த மஞ்சள் பத்திரிகை அதுவரையில் பிரவேசியாமலிருந்ததில் ஆச்சரியம் இல்லையல்லவா?

     அந்த மாதிரி ஒரு ஆபாசப் பயங்கரப் பத்திரிகை நடந்து வருகிறதென்று லலிதா பராபரியாகக் கேள்விப்பட்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்த இரண்டொரு மனிதர்களைப் பற்றி அதில் கேவலமாக எழுதியிருந்ததென்பதும் அவள் காதில் விழுந்திருந்தது. அதையெல்லாம் கேட்ட போது, 'இதுவும் ஒரு பத்திரிகையா? இப்படியும் எழுதுவதுண்டா?' என்று அவள் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அந்தப் பத்திரிகையிலிருந்து வெட்டி எடுத்தத் துண்டைத் தானே படித்துப் பார்க்க நேர்ந்தபோது அவள் ஆச்சரியப்பட முடியவில்லை. ஆச்சரியத்துக்குப் பதிலாக ஆத்திரமும் துயரமும் அளவிலாத குரோதமும் பொங்கி எழுந்து அவளைத் திக்குமுக்காடும்படி செய்தன.

     கர்மசிரத்தையாக யாரோ வெட்டி எடுத்து அவளுக்கு அனுப்பியிருந்த பத்திரிகைப் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் காதலர்கள் என்றும், சீதாவை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் லலிதா ஒரு முழுமூடம் என்றும், இப்பேர்ப்பட்ட ஒழுக்கத்திற் சிறந்த பட்டாபிராமனைத்தான் தேவபட்டணத்து மகாஜனங்கள் நகர சபைத் தலைவராகப் பெறும் பாக்கியத்தை அடையப் போகிறார்கள் என்றும் எழுதியிருந்தது. கட்டுரையில் பாதிவரையில் இந்த அருமையான விஷயங்கள் இருந்தன. அதற்கு மேலே படிக்க முடியாமல் லலிதா நிறுத்தி விட்டாள். ஆனால் அந்த ஆபாசக் குப்பையை உடனே தீயில் போட்டுக் கொளுத்தாமல் பெட்டிக்குள் பூட்டி வைத்த காரணம் என்ன? அவளுடைய அந்தரங்கத்துக்கும் அவளைப் படைத்த கடவுளுக்குந்தான் தெரியும்!

     பத்திரிகையைப் படித்த உடனே ஏற்பட்ட முதல் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் பிறகு லலிதாவின் பேச்சும் நடவடிக்கையும் முன்னைக் காட்டிலும் அதிக உற்சாகமாயிருந்தன. அத்தகைய ஒரு பயங்கரமான விஷயத்தைப் படித்த பிறகும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் முன் மாதிரியே நடந்து கொள்கிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எக்களிப்பை ஊட்டியது; அவளுடைய நடத்தையில் காணப்பட்ட அதிகப்படி குதூகலத்தைத் தேர்தல் தினம் நெருங்கியதால் ஏற்பட்டது என்று மற்றவர்கள் எண்ணினார்கள்.

     ஆனால் யாரேனும் கூர்ந்து கவனித்திருக்கும் பட்சத்தில் லலிதா வெளிக்கு எவ்வளவு குதூகலத்தைக் காட்டினாலும் அவளுடைய மனதில் ஏதோ ஒரு வேதனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். அதோடு சீதாவின் விஷயத்தில் அவள் நடந்து கொண்டதிலும் ஒரு மாறுதல் இருப்பதைக் கண்டிருப்பார்கள்.

     இந்த நிலைமையில் சேர்மன் தேர்தல் நாளும் வந்தது. தேர்தலும் நடந்தது. பட்டாபிராமன் மகத்தான வெற்றியை அடைந்தான். அது காரணமாக மறுதடவை தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. பொதுஜன வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு முக்கியமான நண்பர்கள் பட்டாபியின் வீட்டுக்கு வந்து வெகு நேரம் இருந்து பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனார்கள். இன்றைக்கும் ஸ்ரீமதி சீதாதேவி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நண்பர்கள் கூட்டத்தில் நடுவே லலிதாவும் அன்றைக்கு வரவில்லை. இதைப்பற்றி ஒரு நண்பர் பிரஸ்தாபித்தபோது இன்னொருவர் அவர் தோளைத் தொட்டுத் தன்னுடைய மூக்கின் பேரில் விரலை வைத்து எச்சரித்தார். "நீச மனிதர்களின் அவதூறுகளையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. பொருட்படுத்தினால் அந்த நீசர்களுக்குத் தான் கௌரவம் கொடுத்ததாக முடியும். இந்த விஷயத்தை வீட்டுப் பெண்களுக்கும் சொல்லி வைக்க வேண்டும்!" என்று மற்றொரு நண்பர் கூறினார். இதெல்லாம் பட்டாபிராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று பட்டாபிராமன் கேட்டதற்கு, "அந்த 'அல்கா' விஷயங்கள் இந்தச் சந்தோஷ சமயத்தில் என்னத்திற்கு?" என்று இன்னொருவர் சொல்லி முடித்து விட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாபிராமனைத் தனியே விட்டு விட்டுச் சிநேகிதர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.

     நண்பர்கள் இருக்கும்போதே பட்டாபிராமனின் எண்ணம் அடிக்கடி லலிதா - சீதாவின் பேரில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் இன்றைக்கு என்ன வந்துவிட்டது என்று ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் போன பிறகு, "லலிதா! லலிதா!" என்று கூப்பிட்டான். அதற்குப் பிறகு லலிதா "சாப்பிடப் போகலாமா!" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள்.

     அவசரமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு வந்தவளின் முகம்போல அவள் முகம் காணப்பட்டது. "இது என்ன? முகம் ஏன் அழுது வடிகிறது? நான் ஜயித்து விட்டேனே என்று ஒரு குரல், அழுதாயா, என்ன!" என்று பட்டாபிராமன் காரமாகக் கேட்டான்.

     "நான் ஒன்றும் அழவில்லை; என் முகத்தைப் பார்த்தால் உங்களுக்கும் ஒருவேளை அழுது வடிகிறாப் போலத்தான் இருக்கும்!" என்று லலிதாவும் குரோதமாகப் பதில் சொன்னாள்.

     "உங்கள் எல்லோருக்கும் இன்றைக்கு என்ன வந்து விட்டது?" என்று பட்டாபிராமன் கேட்டான்.

     "உங்கள் எல்லோருக்கும் என்று யாரைச் சொல்கிறீர்கள்? என் ஒருத்தி விஷயந்தான் எனக்குத் தெரியும்!" என்றாள் லலிதா.

     "யாரைப் பற்றிக் கேட்கிறேன் என்று உனக்குத் தெரியவில்லையா? உன் அருமைத் தோழி சீதாவைப் பற்றிதான் கேட்கிறேன்."

     "அவள் என் அருமைத் தோழி இல்லை. ஒரு வேளை உங்கள்...."

     "யாருடைய தோழியாயிருந்தாலும் இருக்கட்டும். அவளுக்கு என்ன வந்துவிட்டது? அன்றைக்கு நான் ஜயத்துடன் வந்தபோதும் மச்சிற்குப் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கும் அப்படியே செய்கிறாளே?" என்றான் பட்டாபிராமன்.

     "அவள் சமாசாரம் எனக்குத் தெரியாது. நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்."

     "உனக்கும் இன்றைக்கும் உடம்பு சரியில்லை போலிருக்கிறது. ஒருவேளை உன் அம்மாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேள். இன்றைக்கு ஏதாவது பலமாக மண்டகப்படி செய்தாளோ, என்னமோ?"

     "என் அம்மாவின் தலையை எதற்காக உருட்டுகிறீர்கள்? அவள் ஒருவரையும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நாளைக்கே அவளை ஊருக்குப் போய்விடச் சொல்கிறேன். நானும் வேணுமானாலும் போய் விடுகிறேன். எந்த நாய் இந்த வீட்டில் இருக்க வேண்டுமோ இருக்கட்டும்."

     பட்டாபிராமன் லலிதாவை எரித்து விடுகிறவனைப்போல் பார்த்தான். அடுத்த நிமிஷம், 'இந்த அசட்டுச் சண்டையை வளர்த்துவதில் பிரயோஜனமில்லை' என்று தீர்மானித்தவனாய்ச் சமையலறையை நோக்கி நடந்தான். சில நாளாக அவனுடைய மனதில் ஒரு சந்தேகம் தோன்றிக் கொண்டிருந்தது. தன் மாமியார் சீதாவைப்பற்றி அடிக்கடி நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்கிறாள் என்றும் அதற்கு லலிதாவும் இடங்கொடுத்து வருகிறாள் என்றும் ஐயங்கொள்ள ஏதுக்கள் இருந்தன. அந்தச் சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது நேற்று வரையில் நல்ல உற்சாகத்துடனிருந்தவள் இன்றைக்கு மச்சிலிருந்து கீழே இறங்காமல் இருக்கும் காரணம் என்ன? சீதாவின் காது கேட்கத் தன் மாமியார் ஏதோ நிந்தைமொழி சொல்லியிருக்க வேண்டும். அதைக் குறித்துச் சீதா லலிதாவைக் கேட்டிருக்கலாம். லலிதா தன் தாயாருக்குப் பரிந்து பேசியிருக்கலாம். சீதா மனம் நொந்து போயிருக்கிறாள். வேறு காரணம் ஒன்றும் இருப்பதற்கில்லை. உண்மை அப்படியிருப்பதினாலேதான் லலிதாகூட இன்றைக்குச் சீதாவைப் பற்றிக் கடுமொழி பேசுகிறாள். ஐயோ! பாவம்! அநாதை சீதா இவர்களுடைய வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். மாமியார் ஒரு ராட்சஸி என்பதில் சந்தேகம் இல்லை. தன்னிடம் அவள் பயபக்தியுடன் இருப்பதாக நடிப்பதெல்லாம் வெறும் பாசாங்கு. ராட்சஸியின் பெண்ணிடம் ராட்சஸ குணம் இல்லாமற் போகுமோ? தாடகையும் சூர்ப்பனகையும் போன்ற இரண்டு ராட்சஸிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பேதை சீதா தவிக்கிறாள்! அடாடா! அவளுடைய தலை விதியை என்னவென்று சொல்வது? அங்கே தாலி கட்டிய புருஷன்தான் பரம முட்டாளாயிருக்கிறான். பெண்டாட்டியைத் திண்டாட விட்டுவிட்டுக் கெட்டலைகிறான் என்றால், தஞ்சம் புக வந்த இடத்திலும் சீதாவுக்கு இந்தக் கதியா நேர வேண்டும்? அதிலும் அவளால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளையெல்லாம் உத்தேசிக்கும் போது, தன்னுடைய சொந்த வீட்டில் அவளுக்கு அவமதிப்பும் மனத்துயரமும் ஏற்படலாமா? கடவுளுக்கு அடுக்குமா?

     இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே பட்டாபிராமன் சாப்பிட்டு முடித்தான். லலிதாவுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. சாப்பிட்டானதும் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது விரித்திருந்த படுக்கையில் படுத்துக்கொண்டான்.

     சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதா வந்து சேர்ந்தாள். அவள் வந்ததையே கவனியாதிருந்தவன் போலிருந்தான் பட்டாபிராமன். ஐந்து நிமிஷம் சும்மா இருந்து பார்த்துவிட்டு, "ஏன்னா? என் பேரில் ஏதாவது கோபமா?" என்று லலிதா கேட்டாள்.

     "கோபம் என்ன வந்தது, கோபம்!" என்றான் பட்டாபிராமன்.

     "கோபம் இல்லாததற்கு அடையாளமா இப்படி வெடுக்கென்று பேசுகிறீர்கள்?"

     "முட்டாள்கள் நிறைந்த இந்த வீட்டில் வேறு எப்படிப் பேசுவது?" என்றான் பட்டாபிராமன்.

     லலிதா சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "ஏன்னா? இன்று நடந்த சேர்மன் எலெக்ஷனில் உங்களுக்கு எவ்வளவு வோட்டு? எதிரிக்கு எவ்வளவு வோட்டு?" என்று கேட்டாள்.

     "எவ்வளவு வோட்டாயிருந்தால் உனக்கு என்ன?"

     "எனக்கு ஒன்றும் இல்லையா?"

     பட்டாபிராமன் மௌனம் சாதித்தான்.

     "உங்களுடைய ஜயத்தில் எனக்கு ஒன்றும் பாத்தியதை கிடையாதா? நிஜமாக என்னைப் பார்த்துச் சொல்லுங்கள்!"

     "பாத்தியதை உள்ளவளைப் போல் நீ நடந்து கொண்டாயா?"

     "என்ன விதத்தில் நடந்து கொள்ளவில்லை? சொல்லுங்களேன்!"

     "எனக்கு இன்றைக்குச் சேர்மன் பதவி கிடைத்தது. இனி மூன்று வருஷத்துக்கு இந்த ஊருக்கே நான் ராஜா மாதிரி. அவ்வளவு பெரிய வெற்றியுடன் நான் இன்று வீட்டுக்குத் திரும்பி வந்தேன். நீ எப்படி என்னை வரவேற்றாய்? அழுதுவடிய முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றாய்!"

     "என் முகத்தில் எப்போதும் இருக்கிற இலட்சணந்தானே இருக்கும்? புதிதாக எப்படி வந்துவிடும்?"

     "இலட்சணத்தைப் பற்றி இப்போது யார் என்ன சொன்னார்கள்? நீ சந்தோஷமாக என்னை வரவேற்றாயா என்று கேட்டேன்."

     "நான் சந்தோஷமாகத்தானிருந்தேன். உங்களுக்கு அழுது வடிகிறது போலத் தோன்றியது. சீதா சந்தோஷமா வந்து வரவேற்கவில்லையே என்று உங்களுக்குக் கோபம். அந்தக் கோபத்தை என் பேரில் காட்டினீர்கள்."

     "அப்படித்தான் வைத்துக்கொள்."

     "அந்த நீலி மாடி அறையில் குப்புறப் படுத்துக்கொண்டு அடம்பிடித்தாள், அதற்கு நான் என்ன செய்வேன்?"

     "அவளை சாக்ஷாத் லக்ஷ்மி என்றும் சரஸ்வதி என்றும் நீதான் சொல்லிக் கொண்டிருந்தாய் இப்போது நீலியாகி விட்டாளா?"

     "நான் கபடமில்லாதவள்; அவளையும் என்னைப்போல் நல்லவள் என்று நம்பி ஏமாந்து போய் விட்டேன்."

     "அவள் நல்லவள் இல்லை - கெட்டவள் என்று எப்போது தெரிந்தது?"

     லலிதா மௌனம் சாதித்தாள்.

     "நேற்று வரையிலேகூட உற்சாகமாக இருந்தாளே? இன்றைக்குத் திடீரென்று அவளுக்கு என்ன வருத்தம் வந்து விட்டது?" என்று பட்டாபிராமன் மறுபடியும் கேட்டான்.

     "எனக்கு என்னமாய்த் தெரியும்? என்னிடம் அவள் சொல்லவில்லை!" என்றாள் லலிதா.

     "நீயே யோசித்து உத்தேசமாகச் சொல்லேன் பார்க்கலாம்."

     "அவளுக்கு புருஷன், குழந்தை, குடும்பம் உண்டு அல்லவா? அவர்களோடு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும்."

     "அவள் போவதை யார் வேண்டாம் என்றார்கள்?"

     "வேண்டாம் என்று சொல்லாதிருந்தால் போதுமா? புறப்பட்டுப் போவதற்கு ஏதாவது செய்து கொடுத்தால்தானே போவாள்? அதைத்தான் அம்மாவும் சொல்கிறாள்!"

     பட்டாபிராமன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். ஆஹா! நாம் சந்தேகித்தது சரிதான், மாமியாரின் வேலைதான் இது! பெண்ணின் மனத்தையும் கெடுத்து இருக்கிறாள். இரண்டு பேரும் சீதாவை ஏதோ சொல்லியிருக்கிறார்கள்! இந்தப் பரிதாபத்துக்கு என்ன பரிகாரம்? கணவனால் கைவிடப்பட்ட அந்த அநாதைக்கு என்ன கதி?

     "ஏன்னா? 'யமதூதன்' என்கிற பத்திரிகையை நீங்கள் பார்த்தீர்களா?" என்று லலிதா கேட்டதும் பட்டாபிராமன் திடுக்கிட்டான். தன்னை வீட்டுக்கு கொண்டுவிட வந்திருந்த நண்பர்கள் ஏதோ ஜாடைமாடையாகச் சொன்னது ஞாபகம் வந்தது, ஓகோ! அப்படியா சமாசாரம்? அந்தக் குப்பைப் பத்திரிகையில் ஏதோ எழுதியிருக்கிறதாக்கும்! அதை மெனக்கட்டு யாரோ வந்து லலிதாவிடம் சொல்லி அவளுடைய மனதைக் கெடுத்திருக்கிறார்கள்!

     "நான் கேட்டதற்கு நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லையே?" என்று லலிதா தூண்டினாள்.

     "அந்தக் கந்தலை நான் படிக்கவில்லை; படிக்கப் போவதுமில்லை."

     "நீங்கள் படிக்காவிட்டால் ஊரெல்லாம் படிக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா?"

     "ஏது, பேச்சு ரொம்ப பலமாயிருக்கிறதே! நீ இருக்கிற வரையில் உலகம் அஸ்தமிக்காது!"

     "உங்களுக்கு என்னைக் கேலி செய்யத்தான் தெரியும். ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது."

     "ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதா? எதற்காக?"

     "'யமதூதன்' பத்திரிகையில் எழுதியிருப்பதைப் பற்றித்தான். அண்டை வீட்டு அம்மாமி, எதிர்வீட்டு அம்மாமி எல்லாரும் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். ஊரெல்லாம் தெரிந்துதானிருக்கிறது. உங்களுக்கு மட்டுந்தான் தெரியாது."

     "அப்படியா சமாசாரம்? 'யமதூதன்' பத்திரிகையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறதாம்? உனக்குத் தெரியுமா விஷயம்?"

     "எல்லாம் தெரியும்."

     "அப்படியானால் சொல்லேன்."

     "வாயினால் சொல்லவே முடியாது, அவ்வளவு அசிங்கமான விஷயம். அவரவர்களே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்."

     பட்டாபியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. "அந்தப் பத்திரிகை உன்னிடம் இருக்கிறதா?" என்று கேட்டான்.

     "இருக்கிறது" என்றாள் லலிதா.

     பட்டாபிராமனுக்கு அளவில்லா கோபம் வந்தது. காரியார்த்தமாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு, "எங்கே? அதைப் போய் எடுத்து வா, பார்க்கலாம்?" என்றான்.

     "இங்கேதான் இருக்கிறது!" என்று சொல்லி விட்டு லலிதா மின்சார விளக்கை ஏற்றிப் பெட்டியைத் திறந்து அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொடுத்தாள்.

     பட்டாபிராமன் எழுந்து நின்ற வண்ணம் அதைப் படித்தான். படிக்கும்போது அவனுடைய ரத்தம் கொதித்தது என்றால் அது மிகையாகாது. அந்தக் கந்தல் பத்திரிகையில் அச்சாகியிருந்த ஆபாசக் கட்டுரையில் முதற் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் கள்ளக் காதல் செய்வதாகவும் லலிதா சுத்த முழு மூடம் என்றும் கண்டிருந்தது. பிற்பகுதியில் சூர்யாவுக்கும் சீதாவுக்கும் ஏற்கெனவே இருந்த நேசத்தைப் பற்றியும், சூரியா சீதாவுக்காக அவளுடைய கணவனிடம் தூது சென்றது பற்றியும் சௌந்தரராகவன் தூதனைச் செம்மையாக உதைத்து அனுப்பி விட்டது பற்றியும் எழுதியிருந்தது.

     பல்லைக் கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் படித்து முடித்த பிறகு, "நெருப்புப் பெட்டி இருக்கிறதா?" என்று பட்டாபிராமன் கேட்டான்.

     "எதற்கு?" என்றாள் லலிதா.

     "கொடு, சொல்கிறேன்!"

     லலிதா எடுத்துக் கொடுத்தாள்.

     நெருப்புக் குச்சியைக் கிழித்து அந்தப் பத்திரிகைத் துண்டைப் பட்டாபிராமன் கொளுத்தப் போனான்.

     "ஐயையோ! அதைக் கொளுத்தாதீர்கள்!"

     "ஏன்?"

     "அதில் பாதிதான் படித்திருக்கிறேன். பாக்கிப் பாதி படிக்க வேண்டும்" என்றாள் லலிதா.

     "அது வேறேயா?" என்று சொல்லிக்கொண்டே பட்டாபி அதைக் கொளுத்திச் சாம்பலாக்கினான்.

     "அது என்ன அவ்வளவு அவசரம்? நான் சொன்னது உங்களுக்கு இலட்சியமில்லையா! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது சரியாயிருக்கிறதே!"

     பட்டாபிராமன் லலிதாவிடம் நெருங்கி வந்து பளீர் என்று அவளுடைய கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். "இந்தக் குப்பையையெல்லாம் வாங்கவும் கூடாது; படிக்கவும் கூடாது என்று நான் சொல்லவில்லையா? என்னமாய்த் துணிந்து வாங்கினாய்?" என்றான்.

     லலிதா திக்பிரமையிலிருந்து விடுபட்டுத் தேம்பிக் கொண்டே, "நான் ஒன்றும் வாங்கவில்லை; தபாலில் வந்தது" என்றாள்.

     "தபாலில் அனுப்பியது யார்?"

     "யாரோ தெரியாது."

     "இந்த மாதிரி ஒன்று தபாலில் வந்ததும் ஏன் என்னிடம் சொல்லவில்லை? பெட்டிக்குள்ளே வைத்து எதற்காகப் பூட்டினாய்? இது பொக்கிஷமா வைத்துப் பாதுகாப்பதற்கு?"

     "அப்புறம் சாவகாசமாகச் சொல்லலாம் என்று இருந்தேன்."

     "அப்புறமாவது, சொல்லவாவது? தரித்திரம் பிடித்த மூதேவி நீ! உன் மனது அசிங்கத்துக்கு ஆசைப்படுகிறது. ஆகையினாலேதான் இதைப் பெட்டியில் வைத்துப் பூட்டினாய்".

     லலிதா மௌனமாயிருந்தாள்.

     விளக்கை அணைத்துவிட்டு வந்து பட்டாபிராமன் மறுபடியும் படுத்துக் கொண்டான்.

     லலிதா, "நான் செய்தது பிசகுதான்; தயவு செய்து மன்னித்து விடுங்கள்!" என்று சொன்னாள்.

     "ரொம்ப சரி, இனிமேல் இப்படி எனக்குத் தெரியாமல் ஒரு காரியமும் செய்யாதே. இப்போது பேசாமல் படுத்துக் கொண்டு தூங்கு" என்றான் பட்டாபி.

     அவ்வாறே லலிதா படுத்துக்கொண்டாள், ஆனால் தூக்கம் வரவில்லை. தேம்பலும் அழுகையும் வந்தது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

     கொஞ்ச நேரம் கழித்து, "ஏன்னா! சேர்மன் வேலை என்றால் தினம் ஆபீஸுக்குப் போக வேண்டியிருக்குமோ?" என்று கேட்டாள்.

     "ஆமாம், ஆமாம். 'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்று நீ எதிர்வீட்டு அம்மாமி, பக்கத்து வீட்டு அம்மாமி எல்லாரிடமும் பெருமையடித்துக் கொள்ளலாம்."

     "அதற்காக ஒன்றும் நான் கேட்கவில்லை. தினந்தினம் அப்படி என்ன வேலை இருக்கும் என்று தெரிந்து கொள்ளக் கேட்டேன்."

     "தூக்கம் வருகிறது; என்னைத் தொந்தரவு செய்யாதே! எல்லாம் நாளைக்குச் சொல்கிறேன்."

     தூங்குவதற்கு லலிதா மனப்பூர்வமான முயற்சி செய்தாள் எனினும் தூக்கம் வரவில்லை. ஆகவே பட்டாபியின் தூக்கத்தைக் கெடுக்காதிருக்கும் பொருட்டுத் தூங்குவது போலப் பாசாங்கு செய்தாள். மணி பதினொன்று அடித்தது.

     கடிகாரத்தின் நிமிஷ முள் முழு வட்டத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்தது. மணி பன்னிரெண்டு அடித்தது.

     எங்கிருந்தோ ஒரு விம்மல் சத்தம் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும்படியான சோகமும் வேதனையும் நிறைந்த விம்மல் சத்தம் அது.

     தூக்கமின்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பட்டாபிராமன் காதில் அது விழுந்து திடுக்கிடச் செய்தது.

     மறுபடியும் அந்த விம்மல் சத்தம்.

     மேல் மாடியிலிருந்துதான் அந்த விம்மல் வருகிறது; சீதாதான் விம்முகிறாள்; சந்தேகம் இல்லை.

     தன்னுடைய உள்ளத்தை இந்த உலகத்தில் உண்மையாக உணர்ந்தவள் சீதாதேவி ஒருத்திதான். தன்னுடைய ஆசாபாசங்களில் பூரண அநுதாபம் உள்ளவள் அவள். தனக்கு வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஊட்டியவள் அவள். தன் வாழ்க்கைக்கே ஓர் ஆதர்சத்தை அளித்தவள் அவள்.

     அத்தகைய சீதா தன்னந்தனியாகப் படுத்துக் கொண்டு விம்மி அழுகிறாள். நெஞ்சு உடையும்படியான வேதனையினால் துடிக்கிறாள். நள்ளிரவு ஆகியும் தூங்காமல் தவிக்கிறாள். அவளுக்கு என்ன துயரமோ, என்னமோ? தன் மாமியாரும் மனைவியும் கூறிய நிந்தை மொழிகள்தான் அவளை இப்படி வதைக்கின்றனவோ? அல்லது வேறு ஏதேனும் துயரச் செய்தி கிடைத்திருக்கிறதோ? ஆகா! இந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதல் கூறாவிட்டால் தான் உயிரோடிருந்து என்ன பயன்? அவள் தனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கெல்லாம் வேறு எந்த விதத்தில் நன்றி செலுத்தப் போகிறோம்?

     லலிதாவை எழுப்பி அழைத்துக் கொண்டு போகலாமா? - கூடவே கூடாது! அவள் சீதாவை விரோதிக்கத் தொடங்கி விட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போவதில் பயனில்லை. ஒருவேளை அவளாலேயேதான் இந்தத் துக்கம் சீதாவுக்கு நேர்ந்திருக்கிறதோ, என்னமோ?

     பட்டாபிராமன் சத்தம் போடாமல் எழுந்து கட்டிலிலிருந்து இறங்கினான். அறையின் கதவைச் சத்தமில்லாமல் திறந்து வெளியேறினான். சத்தமின்றி அடிமேல் அடி வைத்து மாடிப்படி மீது ஏறத் தொடங்கினான்.

     தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த லலிதா படுக்கையிலிருந்து எழுந்தாள். திறந்திருந்த கதவு வழியாக வெளி வந்து வாசற்படிக்கருகே நின்றாள். பட்டாபிராமன் மேலே ஏறுவதைப் பார்த்துக்கொண்டு திக்பிரமை பிடித்து நின்றாள்.

     இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் லலிதாவின் தாயார் திடீரென்று லலிதாவின் பின்னால் வந்து நின்றாள். லலிதா திரும்பிப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டாள்.

     சரஸ்வதியம்மாள் இரகசியம் பேசுகிற குரலில், "பார்த்தாயாடி, பெண்ணே! பாம்புக்குப் பாலை வார்த்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும் என்று நான் முட்டிக் கொள்ளவில்லையா? அந்தச் சண்டாளி என்ன செய்து விட்டாள் பார்த்தாயா? உன் குடியைக் கெடுத்து விட்டாளே!" என்று தூபம் போட்டாள்.

     லலிதா,"உஷ்!" என்று வாயில் விரலை வைத்துச் சரஸ்வதி அம்மாளை அடக்கினாள்.

     பட்டாபி மச்சுப்படி ஏறும் சத்தம் நின்றது. அறையின் கதவைத் திறக்கும் 'கிறீச்' சத்தம் கேட்டது. மின்சார விளக்குப் போடும் 'கிளிக்' சத்தம் கேட்டது. பின்னர் கதவைச் சாத்தும் சத்தமும் கேட்டது.

     "போடி, பெண்ணே, போ!" என்று சரஸ்வதி அம்மாள் தூண்டினாள். ஆனால் லலிதாவுக்கு அச்சமயம் தூண்டுதல் அவசியமாயிருக்கவில்லை. ஆவேசம் வந்தவளைப் போல் மச்சுப்படிகளில் வேகமாக ஏறிப் போனாள்.

     மேல்மாடித் தாழ்வாரத்தின் வழியாகச் சென்று சீதாவின் அறைக் கதவை இலேசாகத் திறந்தாள். உள்ளே பார்த்த காட்சி அவள் ஒருவாறு எதிர்பார்த்ததே. ஆனாலும் அவளை ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது.

     பட்டாபிராமன் சீதாவின் முகவாய்க் கட்டையைத் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். சீதாவின் கண்களில் ததும்பிய கண்ணீர்த் துளிகள் மின்சார விளக்கின் மங்கலான ஒளியில் நல்முத்துக்களைப் போல் பிரகாசிக்கின்றன.

     லலிதா தன் வாழ்நாளில் என்றும் அநுபவித்திரா ரௌத்ராகாரத்தை அடைந்தாள்.

சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode
     புயல் - Unicode
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
     விசிறி வாழை - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
     சர்மாவின் உயில் - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode - PDF
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
     ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode - PDF
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode - PDF
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode - PDF
     மூவருலா - Unicode - PDF
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
இரட்டை மணிமாலை நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)