அத்தியாயம் 3 - பாழடைந்த கோவில் பூங்குளம் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள கிராமம். ஊருக்கு வடக்கே போகும் குறுகலான வண்டிப் பாதை வழியாகக் கொஞ்ச தூரம் போனோமானால் ராஜன் வாய்க்கால் எதிர்ப்படும். சாகுபடி காலத்தில் இந்த வாய்க்காலில் ஒரு ஆள் மட்டத்திற்கு மேல் ஜலம் அதிக விரைவாகப் போய்க்கொண்டிருக்கும். மூங்கில் பாலத்தின் வழியாக ராஜன் வாய்க்காலைத் தாண்டி அப்பால் சென்றால், கொள்ளிடத்தின் லயன் கரையை அடையலாம். லயன் கரையிலிருந்து வடக்கே பார்த்தால், வெகு தூரத்துக்கு நாலா பக்கமும் அடர்ந்த காடுகள் தென்படும். தண்ணீர்த் துறைக்குப் போக ஒரு குறுகலான ஒற்றயடைப்பாதை மட்டுந்தான். இந்தக் காட்டைப் பிளந்து கொண்டு போகின்றது. நீரோட்டத்துக்கு அருகே போகப் போக, மரம் செடி கொடிகளின் நெருக்கம் குறைந்து வந்து நீர்க்கரையில் ஒரே நாணல் காடாயிருப்பதைக் காண்போம்.
ஆமாம்! நேற்று முத்தையன் வீதி வழியே வந்த போது, பந்தல் போட்ட வீட்டின் காமரா உள் ஜன்னலுக்குப் பின்னால் கண்ணுங் கண்ணீருமாய் நின்றாளே, அந்தப் பெண்தான் இவள். முன் அத்தியாயத்தில் நடந்த சம்பாஷணையைக் கொண்டு இவள் தான் கல்யாணி என்று நாம் ஊகிக்கலாம். அவளுக்குப் பதினேழு, பதினெட்டுப் பிராயம் இருக்கும். அவளுடைய முகத்திலே எழிலுடன் கம்பீரமும் கலந்திருந்தது. அவள் நடையிலே அழகுடன் மிடுக்கும் காணப்பட்டது. நீண்டு பரந்த அவள் கண்களிலோ, தண்மையுடன் தணலின் ஜுவாலையும் வீசிற்று. அடர்ந்த காட்டிற்குள் அலட்சியமாய் நுழைந்து செல்லும் கல்யாணியைப் பின் தொடர்ந்து நாமும் போகலாம். அதோ, அது என்ன யாரோ பாடுங் குரல் கேட்கிறதே! அந்தக் குரலில் தான் எவ்வளவு தீனம்; எவ்வளவு துயரம்? பாட்டின் ராகமும் விஷயமும் அந்தச் சோகமான குரலுக்குப் பொருத்தமாகவே யிருந்தன. "உண்டானபோது கோடி உறன்
முறையோர்கள் வந்து
பாட்டின் குரல் வந்த வழியே கல்யாணி சென்றாள்.
கொஞ்ச தூரம் போனதும் காட்டிலே கொஞ்சம் இடைவெளி தென்பட்டது. என்ன ஆச்சரியம்!
இங்கே ஒரு பாழடைந்த கோவில் அல்லவா இருக்கிறது? இந்த மாதிரி கோவில் ஒன்று
இங்கே இருப்பது அதற்கு சமீபத்தில் வரும் வரைக்கும் தெரியவேயில்லையே?கொண்டாடி தொண்டாகிக் கொள்வார் தனங் குறைந்தால் கண்டாலும் பேசாரிந்தக் கை தவமான பொல்லாச் சண்டாள உலகத்தில் சத்குருக்களைத் தேட என்றைக்குச் சிவகிருபை வருமோ - ஏழை என் மனச்சஞ்சலம் அறுமோ (என்றைக்கு) இந்தக் கோவிலின் வாசலில் ஒரு சிறு திண்ணை பாதி இடிந்து கிடந்தது. அதன் பக்கத்தில் ஒரு பெரிய நாவல் மரம் கிளம்பி நிழல் தந்து கொண்டிருந்தது. அந்த இடிந்த திண்ணையின் மேல் உட்கார்ந்து மேற் சொன்னவாறு பாடிக் கொண்டிருந்தான் முத்தையன். கல்யாணி அடிமேல் அடிவைத்து ஓசை கேட்காதபடி நடந்து வந்தாள். முத்தையனுக்குப் பின்புறமாய் வந்து நின்று அவன் தலையில் கட்டியிருந்த முண்டாசின் பின் குச்சைப் பிடித்து இழுத்து விட்டு நாவல் மரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். முத்தையன் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தன்னுடைய உதடுகளை மடித்துக் கொண்டு ஏதோ பிடிவாதமான தீர்மானத்துக்கு வருபவன் போல் காணப்பட்டான். அடுத்த தடவை அவள் அம்மாதிரி முண்டாசைப் பிடித்து இழுத்த போது, முத்தையன் சட்டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான். கல்யாணி கலகலவென்று சிரித்தாள். ஆனால் முன்புறமாக வந்து, முத்தையனுடைய முகத்தைப் பார்த்ததும், அவளுடைய சிரிப்பு அப்படியே பாதியில் நின்று போயிற்று. "கல்யாணி! இது என்ன பைத்தியம்? இங்கு ஏன் வந்தாய்?" என்றான் முத்தையன். கல்யாணிக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. "ஏன் வந்தேனென்றா கேட்கிறாய்! வேறு எதற்காக வருவேன்? உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன்!" என்றாள். "என்னைத் தேடிக்கொண்டா? ஆச்சரியமாயிருக்கிறதே! எதற்காக இந்த ஏழையைத் தேடி வரவேணும்? தாங்கள் இனிமேல் ரொம்பப் பெரிய மனுஷாள் அல்லவா? எஜமானியின் வீட்டு வாசலில் என்னைப் போல் நூறு பேர் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்களே! - அடடா? இத்தனை நேரம் நான் பார்க்கவில்லையே? கழுத்திலே காசுமாலை; காதிலே வைரக்கம்மல், என்ன ஜொலிப்பு! என்ன ஜொலிப்பு! கண் கூசுகிறதே..." கல்யாணி அந்தத் திண்ணையின் மேல் உட்கார்ந்து தீனமான குரலில், "அத்தான்!..." என்றாள். "அத்தானா? - அசட்டு அம்மாஞ்சி என்று வேண்டுமானால் சொல்!" என்றான் முத்தையன். "என் மனது ஏற்கனவே புண்ணாயிருக்கிறது. அதிலே நீ முள்ளை எடுத்துக் குத்துவதுபோல் பேசுகிறாய்" என்று கூறியபோது கல்யாணியின் கண்களில் நீர் ததும்பிற்று. முத்தையன் பதில் ஒன்றும் கூறவில்லை. தரையைப் பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தாள். கல்யாணி தொடர்ந்து கூறினாள்: "என்மேல் குற்றம் இருப்பதுபோல் நீ பேசுகிறாய். நான் செய்த குற்றம் என்ன? உன்னை நானாகத் தேடிக் கொண்டு வந்தது இது தானா முதல் தடவை? இந்த ஊரை விட்டு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்கு இரண்டு பேரும் போய்விடுவோமென்று எத்தனை நாளாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அதற்கு வேண்டிய தைரியம் உனக்கு இல்லாவிட்டால், அதற்கு நானா பொறுப்பாளி? இப்போதுதான் என்ன...? நீ உன் மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். உன்னைவிடப் பெரியது எனக்கு இந்த உலகத்தில் ஒன்றுமில்லை. நீ கிளம்பத் தயாரா, சொல்லு! ஏன் பேசாமலிருக்கிறாய்?" முத்தையன் கடுகடுப்பான குரலில், "ரொம்ப பேஷான யோசனைதான். நாம் இரண்டு பேரும் போய் விடலாம். ஆனால் அபிராமியை என்ன பண்ணுவது? அவளைக் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போய் விடுவோமா?" என்றான். "கிணற்றில் பிடித்துத் தள்ளுவானேன்? காலம் வரும் போது அவளை யாராவது வந்து கட்டிக் கொண்டு போகிறான். அவரவர்கள் தலையெழுத்துப் போல் நடக்கிறது. ஒருவருக்காக இன்னொருவர் ஏன் கஷ்டப்படவேண்டும்!" கல்யாணியின் கண்களில் தீப்பொறி பறந்தது. அவள் எழுந்து நின்று, "இந்த வார்த்தை சத்தியந்தானா?" என்று கேட்டாள். "சத்தியந்தான்!" "அப்படியே ஆகட்டும்; நான் கிழவனையே கல்யாணம் செய்து கொள்கிறேன். உன்னைப் போன்ற கோழையைக் காட்டிலும் தலை நரைத்த கிழவன் எவ்வளவோ மேல்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணி விரைந்து நடந்தாள். அளவற்ற ஆத்திரத்தாலும் துக்கத்தினாலும் அவளுடைய கண்களிலிருந்து ஜலம் பெருகி வழிந்தது. அதைக் காட்டிக் கொள்ள விரும்பாததினால்தானோ என்னமோ, அவள் திரும்பியே பார்க்கவில்லை. மனிதர்களுடைய இதயந்தான் என்ன ஆச்சரியமான இயல்பு உடையது? யாரிடத்திலே நம்முடைய அன்புக்குக் கங்கு கரையில்லையோ, அவர் மேலேதான் நமக்குக் கோபமும் அளவு கடந்து பொங்குகிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் கனிந்து உருகுகிறதோ, அவர் எதிரே வரும்போது வாயானது கடும் மொழிகளைச் சொல்கிறது. யாரைப் பார்க்க வேண்டும், பார்க்கவேண்டும் என்று உடம்பின் ஒவ்வொரு நரம்பும் துடித்துக் கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்டவர் வந்த உடனே "ஏன் வந்தாய்?" என்று கேட்பது போல் நடந்து கொள்ளச் சொல்கின்றது. யாருடைய பிரிவினால் உயிரே பிரிந்து போவது போன்ற வேதனை உண்டாகிறதோ அத்தகையவரை உடனே போகச் செய்யும்படியான வார்த்தைகளையும் சொல்லத் தூண்டுகிறது! மனித இருதயம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான இயல்பு உடையதுதான். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
உங்களால் முடியும்! மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: நவம்பர் 2017 பக்கங்கள்: 112 எடை: 120 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-646-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 110.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: “உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் சந்திக்கும் நபர்களை எவ்வாறு திறம்படக் கையாள்வது என்பது குறித்து எழுதப்பட்டுள்ள மிக சுவாரசியமான, ஆணித்தரமான, நடைமுறைக்கு உகந்த நூல்களில் இது குறிப்பிடத்தக்கது. உங்கள் உறவுகள் அனைத்திலும் நீங்கள் சிறப்பான அனுகூலம் அடைய இந்நூல் உங்களுக்கு உதவிம்.” - பிரையன் டிரேசி நேரடியாக வாங்க : +91-94440-86888
|