நாலாம் பாகம் - சிதைந்த கனவு

நாற்பத்தேழாம் அத்தியாயம் - சிறுத்தொண்டர்

     பல்லவ வீரர்களில் சிலர் சந்தேகித்தது போல் சேனாதிபதி பரஞ்சோதியின் உடம்புக்கு ஒன்றுமில்லை. அவருடைய தேகம் சௌக்கியமாகத்தான் இருந்தது. ஆனால், அவருடைய மனத்திலேதான் சௌக்கியமும் இல்லை, சாந்தமும் இல்லை. தம்முடைய கூடாரத்தில் தன்னந்தனியாகப் பரஞ்சோதி உட்கார்ந்திருந்தார். அவருக்குத் தூக்கம் வரவில்லை. அவருடைய மனக்கண் முன்னால் வாதாபியின் வீடுகள் பற்றி எரியும் காட்சியும், ஸ்திரீகளும், குழந்தைகளும், வயோதிகர்களும் அலறிக் கொண்டு ஓடும் தோற்றமும், பல்லவ வீரர்கள் வாதாபியின் எரிகிற வீடுகளிலும் கடைகளிலும் புகுந்து கொள்ளையடிக்கும் காட்சியும், தலை வேறு கை வேறு கால் வேறாகக் கிடந்த உயிரற்ற வீரர்களின் தோற்றமும், இரத்த வெள்ளம் ஓடும் காட்சியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.


இந்திய வானம்
இருப்பு உள்ளது
ரூ.220.00
Buy

மோனேயின் மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ரகசியக் கடிதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ரயில் நிலையங்களின் தோழமை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.215.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

நேர் நேர் தேமா
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

நீ பாதி நான் பாதி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

சிக்கனம் சேமிப்பு முதலீடு
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

ரஷ்ய புரட்சி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

வாய்க்கால்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

Why I Killed the Mahatma: Understanding Godse’s Defence
Stock Available
ரூ.450.00
Buy

யாதுமாகி
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

வாழ்வைப் புரட்டும் மந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

மெஜந்தா
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

அவதூதர்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy
     இந்தக் கோரமான காட்சிகளோடு, இருளடைந்த பாதாள புத்த விஹாரத்தில் சிவகாமியின் மீது விஷக் கத்தியை எறியப் போன நாகநந்தியின் தோற்றமும், விஷக் கத்தியைக் காட்டிலும் குரூரமான நஞ்சு தோய்ந்த சொல்லம்புகளை அந்தப் பேதைப் பெண் மீது மாமல்லர் பொழிந்த சம்பவமும், கத்தியால் குத்தப்பட்டுத் தரையிலே செத்துக் கிடந்த கண்ணபிரானுடைய களையிழந்த முகமும் இடையிடையே அவர் உள்ளத்தில் தோன்றின.

     இவ்வளவுக்கும் மேலாக நெற்றியில் வெண்ணீறும் தேகமெல்லாம் ருத்ராட்ச மாலையும் அணிந்து, கையிலே உழவாரப் படை தரித்துச் சாந்தமும் கருணையும் பொலிந்த திருமுகத்தோடு விளங்கிய திருநாவுக்கரசர் பெருமான், சேனாதிபதி பரஞ்சோதியை அன்புடன் நோக்கி, "அப்பனே! நீ எங்கே இருக்கிறாய்? என்ன காரியம் செய்கிறாய்? போதும்! வா! உனக்காக எத்தனை நாள் நான் காத்துக் கொண்டிருப்பேன்?" என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். அதற்குப் பரஞ்சோதி, "குருதேவா! இன்னும் அறுபது நாழிகை நேரந்தான்! பிறகு தங்களிடம் வந்து விடுகிறேன்!" என்று மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தார்.

     சிவகாமி தேவியை விடுதலை செய்து ஆயனரிடம் சேர்ப்பித்து அவர்களை முன்னதாக ஊருக்கு அனுப்பி வைத்த பிறகு, பரஞ்சோதி பொறுக்கி எடுத்த வீரர்கள் அடங்கிய படையுடன் மேற்கு நோக்கிச் சென்றார். வேங்கியிலிருந்து வரும் சளுக்கர் சைனியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தவர்மருடன் சேர்ந்து கொண்டார். வாதாபி தகனம் ஆரம்பமான மூன்று நாளைக்கெல்லாம் வேங்கி சைனியம் வந்து சேர்ந்தது. அந்தச் சைனியம் பெரும்பாலும் யானைப் படையும் குதிரைப் படையும் அடங்கியது. மேற்படி சைனியத்தின் தலைவர்கள் புலிகேசியின் மரணத்தையும் வாதாபிக் கோட்டையின் வீழ்ச்சியையும் அறிந்து கொண்டதும் பின்னோக்கித் திரும்பிச் செல்லப் பார்த்தார்கள். பரஞ்சோதியின் முன்யோசனை அதற்கு இடங்கொடுக்கவில்லை. ஆதித்தவர்மரை நின்ற இடத்திலேயே நிற்கவிட்டுப் பரஞ்சோதி விரைந்து வளைந்து சென்று வேங்கி சைனியத்தைப் பின்னோக்கிச் செல்ல முடியாமல் தடுத்தார். இவ்விதம் இரு புறத்திலும் சூழப்பட்ட வேங்கி சைனியம் வேறு வழியின்றிச் சரணாகதி அடைந்தது. அந்தச் சைனியத்தைச் சேர்ந்த பதினாயிரம் யானைகளும் முப்பதினாயிரம் குதிரைகளும் ஒரு சேதமும் இல்லாமல் பல்லவர்களுக்குக் கிடைத்து விட்டன.

     இந்த மாபெரும் காணிக்கையை மாமல்லரிடம் ஒப்புவித்ததும் பரஞ்சோதியார் தம்மைச் சேனாதிபதிப் பதவியிலிருந்து விடுதலை செய்யும்படி கேட்டுக் கொண்டார். இத்தனை காலமும் இராஜ்ய சேவை செய்தாகி விட்டதென்றும், இனிமேல் சிவபெருமானுக்கு அடிமை பூண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வாழ்க்கை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துக் கொண்டார்.

     மேற்படி வேண்டுகோள் மாமல்லருக்கு அதிகமான ஆச்சரியத்தை அளிக்கவில்லை. சென்ற சில காலமாகவே பரஞ்சோதியின் மனப்போக்கு மாறி வைராக்கியம் அடைந்து வருவதை மாமல்லர் கவனித்து வந்தார். எனவே அவருடைய வேண்டுகோளை மறுக்காமல் "சேனாதிபதி! தங்கள் இஷ்டப்படியே ஆகட்டும். ஆனால், எரிந்து அழிந்த வாதாபியின் மத்தியில் நமது சிங்கக் கொடியை ஏற்றும் வைபவத்தை மட்டும் நடத்தி விடுங்கள், அப்புறம் விடை தருகிறேன்" என்று சொல்லியிருந்தார்.

     மேற்படி கொடியேற்று விழா மறுநாள் சூரியோதயத்தில் நடைபெறுவதாயிருந்தது. இதனாலேதான் பரஞ்சோதி, "இன்னும் ஒரே ஒரு நாள்" என்று ஜபம் செய்து கொண்டிருந்தார்.

     மறுதினம் காலையில் உதித்த சூரிய பகவான் சில நாளைக்கு முன்பு வாதாபி நகரம் இருந்த இடத்தில், நேற்றெல்லாம் சாம்பலும் கரியும் கும்பல் கும்பலாகக் கிடந்த இடத்தில், - கண்ணைக் கவரும் அதிசயமான காட்சி ஒன்றைக் கண்டார்.

     பல்லவ - பாண்டிய சேனா வீரர்கள் வாளும் வேலும் ஏந்தி வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அழகாக அலங்கரிக்கப்பட்ட போர் யானைகளும் புரவிகளும் நிரை நிரையாக கண்ணுக்கெட்டிய தூரம் நின்றன. இந்தச் சேனா சமுத்திரத்துக்கு மத்தியில், அலைகடலுக்கு நடுவே தோன்றும் கப்பலின் கூம்பைப் போல் ஒரு புத்தம் புதிய சிற்ப வேலைப்பாடமைந்த ஜயஸ்தம்பம் கம்பீரமாக நின்றது.

     லட்சக்கணக்கான வீரர்கள் அவ்விடத்தில் கூடியிருந்த போதிலும், கப்சிப் என்ற நிசப்தம் குடிகொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் கூட்டத்தின் ஒரு முனையில் கலகலப்பு உண்டாயிற்று. பேரிகைகள் அதிர்ந்தன! எக்காளங்கள் முழங்கின! சக்கரவர்த்தியின் வருகைக்கு அறிகுறியான மேற்படி வாத்திய கோஷத்தைக் கேட்டதும், அந்த லட்சக்கணக்கான வீரர்களின் கண்டங்களிலிருந்து ஏககாலத்தில் "வாதாபி கொண்ட மாமல்ல சக்கரவர்த்தி வாழ்க!" என்ற கோஷம் கிளம்பி மேலே வான மண்டலம் வரை சென்று, நாலா திசைகளிலும் பரவிப் படர்ந்து எங்கெங்கும் எதிரொலியை உண்டாக்கியது.

     சேனாதிபதி பரஞ்சோதி, இலங்கை இளவரசர் மானவன்மர், வேங்கி அரசர் ஆதித்தவர்மன் முதலியவர்கள் பின்தொடர மாமல்ல சக்கரவர்த்தி ஜயஸ்தம்பத்தின் அடியிலே வந்து நின்றவுடனே, மறுபடியும் ஒரு தடவை ஜயகோஷம் கிளம்பி, எட்டுத் திக்குகளையும் கிடுகிடுக்கச் செய்தது. சப்தம் அடங்கியதும் மாமல்லர் சுற்றிலும் நின்றவர்களைப் பார்த்துச் சில விஷயங்களைக் கூறினார். தாமும் பரஞ்சோதியும் ஒன்பது வருஷத்துக்கு முன்னால் மாறு வேடம் பூண்டு அவர்கள் இப்போது நிற்கும் அந்த இடத்துக்கு வந்திருந்ததையும், அச்சமயம் அங்கு வேறொரு ஜயஸ்தம்பம் நின்றதையும், அதில் புலிகேசி மகேந்திர பல்லவரை முறியடித்தது பற்றிய பொய்யான விவரம் எழுதியிருந்ததையும், அந்த ஜயஸ்தம்பத்தைப் பெயர்த்தெறிந்து அதன் இடத்தில் பல்லவ ஜயஸ்தம்பத்தை நிலை நாட்டுவதென்று தாமும் சேனாதிபதியும் சபதம் செய்ததையும், அந்தச் சபதம் இன்று நிறைவேறி விட்டதையும் குறிப்பிட்டு, இந்த மாபெரும் வெற்றிக்கெல்லாம் முக்கிய காரண புருஷரான சேனாதிபதி பரஞ்சோதிதான் அந்த ஜயஸ்தம்பத்தில் பல்லவ சைனியத்தின் வெற்றிக் கொடியை ஏற்றுவதற்கு உரிமையுடையவர் என்று கூறி முடித்தார்.

     சக்கரவர்த்திக்கும் சேனாதிபதிக்கும் ஏதாவது மன வேற்றுமை ஏற்பட்டிருக்கிறதோ என்பது பற்றிப் பல்லவ வீரர்களிடையில் சந்தேகம் ஏற்பட்டிருந்ததைப் பார்த்தோமல்லவா? எனவே, இப்போது ஜயஸ்தம்பத்தின் அருகில் சக்கரவர்த்தியும் சேனாதிபதியும் சேர்ந்து நிற்பதைப் பார்த்ததுமே அவ்வீரர்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. சேனாதிபதியைப் பற்றிச் சக்கரவர்த்தி கூறியதை அருகிலே நின்று நன்றாய்க் கேட்டவர்களும் தூரத்திலே நின்று அரைகுறையாகக் கேட்டவர்களும் கூட அளவற்ற மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தார்கள். சேனாதிபதி புதிய ஜயஸ்தம்பத்தின் மீது பல்லவ சிம்மக் கொடியை உயர்த்தியபோது, சேனா வீரர்களின் குதூகலம் வரம்பு கடந்து பொங்கி ஜயகோஷமாகவும் வாழ்த்துரைகளாகவும் வெளியாயிற்று. பேரிகை முழக்கங்களும், வாத்ய கோஷங்களும், லட்சக்கணக்கான கண்டங்களிலிருந்து கிளம்பிய ஜயத்வனிகளும், அவற்றின் பிரதித்வனிகளுமாகச் சேர்ந்து சிறிது நேரம் காது செவிடுபடச் செய்தன.

     சத்தம் அடங்கும் வரையில் பொறுத்திருந்த மாமல்லர் கடைசியாக அன்று அவ்வீரர்களிடம் விடைபெறுவதற்கு முன் வருத்தமான விஷயத்தைத் தாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது என்ற பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து, இத்தனை காலம் தம்முடன் இருந்து இரவு பகல் சேவை புரிந்து, இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பரஞ்சோதியார் இப்போது தம்மிடம் விடுதலை கேட்கிறார் என்றும், அவருடைய உள்ளம் சிவ பக்தியில் ஈடுபட்டிருக்கிறதென்றும் சிவனடியாரைச் சேனைத் தலைவராக வைத்திருப்பது பெருங்குற்றமாகுமென்றும், ஆகையால் அவருக்கு விடுதலை கொடுத்து விடத் தாம் சம்மதித்து விட்டதாயும், நாளைக் காலையில் அவர் தம்மையும் பல்லவ சைனியத்தையும் பிரிந்து தனி வழியே தீர்த்த யாத்திரை செல்கிறார் என்றும், வீரர்கள் எல்லாரும் உற்சாகமாக அவருக்கு விடைகொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். தாம் தெரிவித்த விஷயம் அவ்வளவாக அந்த வீரர் கூட்டத்தில் உற்சாகம் உண்டு பண்ணவில்லையென்பதையும் கண்டார். எல்லையற்ற மௌனம் அந்தப் பெரும் கூட்டத்தில் அப்போது குடிகொண்டிருந்தது. அடுத்த நிமிஷம், ஆஜானுபாகுவாய் நெடிதுயர்ந்த மாமல்ல சக்கரவர்த்தி தம்மை விடக் குட்டையான சேனாதிபதி பரஞ்சோதியை மார்புறத் தழுவிக் கொண்ட போது, மீண்டும் அந்தச் சேனா சமுத்திரத்தில் கோலாகலத்வனிகள் எழுந்தன.

     அன்றைக்கெல்லாம் மாமல்லர் பல்லவ - பாண்டிய வீரர்களுக்கும் படைத் தலைவர்களுக்கும் பரிசுகள் வழங்குவதில் ஈடுபட்டிருந்தார். வாதாபி எரியத் தொடங்கிய நாளிலிருந்து பல்லவ சைனியத்துடன் வந்திருந்த நூறு பொற் கொல்லர்கள் ஆயிரம் வீரர்களின் உதவியுடன் தங்கத்தை உருக்கிப் புதிய சிங்க முத்திரை போட்ட பொற்காசுகள் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். வாதாபி அரண்மனைகளிலிருந்தும் சளுக்க சாம்ராஜ்ய பொக்கிஷங்களிலிருந்தும் கைப்பற்றிய ஏராளமான தங்கக் கட்டிகளையும் பொன்னாபரணங்களையும் பெரிய கொப்பரைகளில் போட்டுப் பிரம்மாண்டமான அடுப்புக்களில் தீ மூட்டி உருக்கினார்கள். உருக்கிய பொன்னை நாணயவார்ப்படத்துக்காக அமைக்கப்பட்ட அச்சுக்களிலே ஊற்றி எடுத்து, லட்சலட்சமாக கழஞ்சு நாணயங்களைச் செய்து குவித்துக் கொண்டிருந்தார்கள்.

     ஒவ்வொரு பல்லவ - பாண்டிய வீரனுக்கும் அவனவன் தானே சேகரித்துக் கொண்ட செல்வத்தைத் தவிர தலைக்குப் பத்துப் பொற்கழஞ்சுகள் அளிக்கப்பட்டன.

     போர் வீரர்களுக்கு மேற்கண்டவாறு பரிசு அளித்த பிறகு படைத் தலைவர்களுக்கும் சிறந்த வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கும் விசேஷப் பரிசுகள் அளிக்கப்பட்டன. யானைகளும் குதிரைகளும் சுமக்கக்கூடிய அளவு செல்வங்களும் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

     துங்கபத்திரைக்கும் கிருஷ்ணை நதிக்கும் அப்பால் பல்லவ ஆதிக்கத்துக்குட்பட்ட விஸ்தாரமான பிரதேசங்களை எல்லாம் வேங்கியைத் தலைநகராக்கிக் கொண்டு சர்வாதிகாரத்துடன் ஆளும்படியாக ஆதித்தவர்மர் நியமிக்கப்பட்டார்.

     இலங்கை இளவரசன் மானவன்மருக்குத் தக்க வெகுமதியளிப்பது பற்றி மாமல்லர் யோசித்த போது, "பிரபு! என் தந்தை வீற்றிருந்து அரசாண்ட இலங்கைச் சிம்மாசனந்தான் நான் வேண்டும் பரிசு! வேறு எதுவும் வேண்டாம்!" என்றார் மானவன்மர்.

     கடைசியில், மாமல்லர் பரஞ்சோதியைப் பார்த்துச் சொன்னார்: "நண்பரே! இந்த மகத்தான வெற்றி முழுவதும் தங்களுடையது! எனவே, இந்த வெற்றியின் மூலம் கிடைத்த அளவில்லாத செல்வங்களும் உங்களுடையவைதான். முப்பதினாயிரம் யானைகள், அறுபதினாயிரம் குதிரைகள், காஞ்சி அரண்கள், எல்லாம் கொள்ளாத அளவு நவரத்தினங்கள், அளவிட முடியாத தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இவையெல்லாம் நமக்கு இந்தப் போரிலே லாபமாகக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் ஒரு பகுதியையாவது தாங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐயாயிரம் யானைகளும், பதினாயிரம் குதிரைகளும், அவை சுமக்கக்கூடிய செல்வங்களும் தங்களுக்கு அளிப்பதென்று எண்ணியிருக்கிறேன்..."

     மாமல்லரை மேலே பேச விடாதபடி தடுத்துப் பரஞ்சோதி கூறினார்: "பல்லவேந்திரா! மன்னிக்க வேண்டும், தங்களிடம் நான் கோருவது முக்கியமாகத் தங்களுடைய தங்கமான இருதயத்தில் என்றைக்கும் ஒரு சிறு இடந்தான். அதற்கு மேலே நான் கோருகிற பரிசு ஒன்றே ஒன்று இருக்கிறது. அதுவும் வாதாபிக் கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருளேதான்!"

     "ஆகா! அது என்ன அதிசயப் பொருள்?" என்று மாமல்லர் வியப்புடன் கேட்டார்.

     "அந்தப் பொருள் இதோ வரும் மூடு பல்லக்கில் இருக்கிறது!" என்று பரஞ்சோதி கூறியதும், நாலு வீரர்கள் ஒரு மூடு பல்லக்கைக் கொண்டு வந்து இறக்கினார்கள். பல்லக்கைத் திறந்ததும், அதற்குள்ளே நாம் ஏற்கெனவே பார்த்த விநாயகர் விக்கிரகம் இருந்தது.

     வாதாபிக் கோட்டை வாசலில் இருந்த அந்த விக்கிரகத்துக்குத் தாம் பிரார்த்தனை செய்து கொண்டதைப் பற்றிப் பரஞ்சோதி கூறி, அதைத் தம்முடன் கொண்டு போய்த் தாம் பிறந்து வளர்ந்த செங்காட்டாங்குடிக் கிராமத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். மேற்படி விக்கிரகத்தைத் தவிர வாதாபி நகரத்திலிருந்து கவரப்பட்ட வேறெந்தப் பொருளும் தமக்கு வேண்டியதில்லையென்று பரஞ்சோதி கண்டிப்பாக மறுத்து விட்டார்.

     வேறு வழியின்றி மாமல்லர் பரஞ்சோதியின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியதாயிற்று. பரஞ்சோதி ஸ்தல யாத்திரை செல்லும் போது இரண்டு யானை, பன்னிரண்டு குதிரை, நூறு காலாள் வீரர்கள் ஆகிய பரிவாரங்களை மட்டும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மாமல்லர் பிடிவாதம் பிடித்துத் தமது நண்பரை இணங்கும்படி செய்தார்.

     மறுநாள் மத்தியானம் மாமல்லரும் பல்லவ சைனியமும் அவர்கள் வந்த வழியே காஞ்சிக்குத் திரும்பிச் செல்லப் புறப்படுவதாகத் திட்டமாகியிருந்தது. பரஞ்சோதியார் துங்கபத்திரைக் கரையோடு சென்று ஸ்ரீசைலம் முதலிய க்ஷேத்திரங்களைத் தரிசித்து விட்டு வருவதற்காக அன்று காலையிலேயே தமது சிறு பரிவாரத்துடன் புறப்பட்டார்.

     புறப்படுவதற்கு முன்னால் மாமல்லரிடம் கடைசியாக விடைபெற்றுக் கொள்ளுவதற்காகச் சக்கரவர்த்தியின் கூடாரத்துக்குப் பரஞ்சோதி வந்த போது பல்லவ - பாண்டிய வீரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டையெல்லாம் மறந்து அங்கே கூட்டம் கூடி விட்டார்கள். பரஞ்சோதியின் புதிய தோற்றம் அவர்களைச் சிறிது நேரம் திகைப்படையச் செய்தது. கத்தி, கேடயம், வாள், வேல், தலைப்பாகை, கவசம், அங்கி இவற்றையெல்லாம் களைந்தெறிந்து விட்டுப் பரஞ்சோதி நெற்றியில் வெண்ணீறு தரித்து, தலையிலும், கழுத்திலும் ருத்ராட்சம் அணிந்து, பழுத்த சிவபக்தரின் தோற்றத்தில் விளங்கினார். அவருடைய திருமுகம் நேற்று வரை இல்லாத பொலிவுடன் சுடர் விட்டுப் பிரகாசித்தது. சற்று நேரம் திகைத்து நின்ற வீரர்களைப் பார்த்துப் பரஞ்சோதி கும்பிட்டதும், "சேனாதிபதி பரஞ்சோதி வாழ்க! வாதாபி கொண்ட மகா வீரர் வாழ்க!" என்று கூவினார்கள். பரஞ்சோதி அவர்களைக் கைகூப்பி வணங்கி அமைதி உண்டுபண்ணினார். பிறகு, "நண்பர்களே! இன்று முதல் நான் சேனாதிபதி இல்லை; தளபதியும் இல்லை. சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்யும் தொண்டர் கூட்டத்தில் அடியேன் ஒரு சிறு தொண்டன்!" என்று கூறினார்.

     அளவில்லாத வியப்புடனும் பக்தியுடனும் இதைக் கேட்டுக் கொண்டு நின்ற பல்லவ வீரர்களில் ஒருவன் அப்போது ஓர் அமர கோஷத்தைக் கிளப்பினான். "சிவனடியார் சிறுத்தொண்டர் வாழ்க!" என்று அவன் கம்பீரமாகக் கோஷித்ததை நூறு நூறு குரல்கள் திருப்பிக் கூவின.

     "சிறுத்தொண்டர் வாழ்க!" "சிவனடியார் சிறுத்தொண்டர் வாழ்க!" என்று கோஷம் நாலாபுறத்திலும் பரவி ஆயிரமாயிரம் குரல்களில் ஒலித்து எதிரொலித்தது. பரஞ்சோதியார் தமது சிறிய பரிவாரத்துடனும் வாதாபி விநாயகருடனும் நெடுந்தூரம் சென்று கண்ணுக்கு மறையும் வரையில், "சிறுத்தொண்டர் வாழ்க!" என்ற சிரஞ்சீவி கோஷம் அந்தச் சேனா சமுத்திரத்தில் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டேயிருந்தது!
சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி - PDF
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்