நாலாம் பாகம் : இளவேனில் 65. மீனாவின் கணவன் 'அந்த அம்மாள் என் அத்தை மீனாதான்!' என்று சாவித்திரி சொன்னதும், சம்பு சாஸ்திரி, "குழந்தை! கொஞ்சம் இரு! என்னமோ பண்ணுகிறது" என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சாய்ந்தார். சாவித்திரி கலவரமடைந்து, "டாக்டரை அழைச்சுண்டு வரச் சொல்லட்டுமா, அப்பா?" என்றாள். "வேண்டாம் அம்மா! எனக்கு உடம்பு ஒன்றுமில்லை; நெஞ்சுதான் படபடக்கிறது" என்றார்.
இந்த நிலைமையில், பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வரும் பிரசித்தமான மகாமக உத்ஸவம் வந்தது. சம்பு சாஸ்திரி தம்முடைய குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு கும்பகோணத்துக்குப் போனார். குடும்பத்தார், என்றால் சாஸ்திரியின் முதல் மனைவி பாக்கியம், தங்கை மீனா, வயதான அத்தை இவர்கள் தான். கும்பகோணத்தில் கடலங்குடித் தெருவில் சம்பு சாஸ்திரி ஜாகை போட்டிருந்தார். மகாமகத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலேயே போய்விட்டார். மகாமகத்தன்று எல்லாரும் மாமாங்கக் குளத்திற்கு ஸ்நானம் செய்யப் போனார்கள். ஜனக் கூட்டம் ரொம்ப அதிகமாயிருந்தபடியால், ஒருவருக்கொருவர் பிரிந்து போனாலும் தனித் தனியாக ஜாகைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் திருட்டுப் பயத்தை உத்தேசித்து ஸ்திரீகள் நகை நட்டுகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு வந்தார்கள். மாமாங்கக் குளத்தில் ஸ்நானம் செய்யும் வரையில் எல்லாரும் ஒன்றாக இருந்தார்கள். கரையேறும்போதும் ஒன்றாக ஏறினார்கள். ஆனால், ஜாகைக்குப் போய்ச் சேர்ந்ததும் பார்த்ததில், மீனாவை மட்டும் காணோம்! கூட்டத்தில் பிரிந்து போயிருப்பாள், ஜாகைதான் தெரியுமே, தானே வந்துவிடுவாள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். வெகு நேரம் வரையில் வராமற் போகவே கவலை உண்டாயிற்று. சாஸ்திரி மீனாவைத் தேடுவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மனைவி பாக்கியம் ஓடி வந்து ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தாள். கழற்றி வைத்த நகைகளை எடுத்துப் பூட்டிக் கொள்வதற்காக டிரங்குப் பெட்டியைத் திறந்ததாகவும், அதில் இந்தக் கடுதாசி இருந்ததாகவும் சொன்னாள். கடுதாசியில் பின் வருமாறு எழுதியிருந்தது: 'அண்ணா! இந்த ஜன்மம் எனக்குப்
பிடிக்கவில்லை. அவரைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. நான் போகிறேன்.
நீயும் மன்னியும் என்னை மன்னித்து விடுங்கள். - மீனா.'
இரண்டு நாள் இப்படி சொல்ல முடியாத வேதனையும் துன்பமும் அநுபவித்துவிட்டுச் சாஸ்திரி தம் மனைவியையும் அத்தையையும் அழைத்துக் கொண்டு ரயிலேறப் போனார். அவர்களை ஊரில் கொண்டுபோய் விட்டு விட்டுத் திரும்பி வந்து தேட வேண்டுமென்பது அவருடைய எண்ணம். ரயில்வே ஸ்டெஷனில், மகாமகக் கூட்டத்தைக் கொண்டு போவதற்காக அரை மணிக்கு ஒரு ரயிலாகக் கிளம்பிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ரயில் வந்து பிளாட்பாரத்தில் நின்றதும், ஜனங்கள் மோதிக் கொண்டு போய் ஏறினார்கள். சாஸ்திரியாரால் இந்தக் கூட்டத்தில் முண்டி அடித்து ரயில் ஏற முடியவில்லை. அவர் வந்த பிறகு மூன்று ரயில் போய்விட்டது. நாலாவது ரயிலிலும் அவருக்கு இடங் கிடைக்கவில்லை. ஆனால் நாலாவது ரயில் கிளம்பியபோது, அந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சாஸ்திரி ஓர் அதிசயத்தைக் கண்டார். அந்த நம்ப முடியாத காட்சியை அவர் கண்டபோது, அவருடைய நெஞ்சில் கூரிய ஈட்டியைச் செலுத்துவது போல் இருந்தது. அவள் மீனாதான்; சந்தேகமில்லை. கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் சாஸ்திரியைக் கண்டதும் அவளுடைய முகம் அடைந்த மாறுதலினால் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. கண் விழி தெறித்து விழுந்துவிடும்போல் இருந்தது, அவள் சாஸ்திரியைப் பார்த்த பார்வை. மீனாவுக்குப் பக்கத்தில் ஒரு மனுஷன் உட்கார்ந்திருந்தான். அவன் நம் ஊர்க்காரனில்லை. வடக்கத்தியான். பார்ஸிக்காரர்களைப் போல் தொப்பியும் உடுப்பும் அணிந்து, கேரா கிருதா மீசையுடன் தோன்றினான். மீனா வெளிப்புறம் நோக்குவதையும், பிளாட்பாரத்தில் சம்பு சாஸ்த்ரி நிற்பதையும் கண்ட அந்தப் பார்ஸிக்காரன் சட்டென்று ரயிலின் ஜன்னல் கதவைத் தூக்கிச் சாத்தினான். அப்போது அவனுடைய கை மீனாவின் தோளின் மேல் இருந்தது. இதெல்லாம் அரை நிமிஷத்தில் நடந்தவை. அவன் ஜன்னல் கதவைத் தூக்கும்போதே ரயில் நகரத் தொடங்கிவிட்டது. "மீனா! மீனா!" என்று கதறிக் கொண்டே சம்பு சாஸ்திரி நகருகிற ரயிலோடு தாமும் நடந்தார். அவர் நாலடி நடப்பதற்குள், ஒரு போர்ட்டர் வந்து அவரைப் பிடித்து நிறுத்தினான். வண்டி போயே போய் விட்டது. பிறகு சாஸ்திரி நெடுங்கரைக்கு வந்தார். "கடுதாசியில் எழுதியிருந்தபடி மீனா செத்துப் போயிருக்கக் கூடாதா ஸ்வாமி! இந்த பாப காரியத்தைச் செய்ய வேண்டுமா?" என்று அவருடைய உள்ளம் கொந்தளித்தது. "என்னைப் பொறுத்த வரையில் இனிமேல் அவள் செத்தவள் தான்" என்று தீர்மானித்தார். ஊராருக்கும், "மீனா மாமாங்கக் குளத்தில் முழுகிச் செத்துப் போனாள்" என்று சொல்லிவிட்டார். அவர் ஒருவித வெறுப்புடன் இப்படிச் சொன்னபடியால் ஊரார் அவர் சொன்னதை நம்பவில்லை. ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவமும் அவர்கள் காதுக்கு அரை குறையாக எட்டிவிட்டது. எனவே, அவர்கள் தத்தமக்குத் தோன்றியபடி சொல்லி வந்தார்கள். "யாரோ வடக்கத்தியானைப் பிடித்துக் கொண்டு ஓடிவிட்டாள்" என்று சிலரும், "கிறிஸ்தவனாப்போன ஆம்படையானோடு சம்பு சாஸ்திரியே கூட்டி அனுப்பி விட்டார்" என்று வேறு சிலரும் கூறிவந்தார்கள். மேற்சொன்ன சம்பவத்திற்குப் பிறகு சம்பு சாஸ்திரியின் வாழ்க்கையில் எவ்வளவோ மாறுதல்கள் நடந்துவிட்டன. எத்தனையோ சுக துக்கங்களை அநுபவித்து விட்டார். ஆனால், அவருடைய இருதய அந்தரங்கத்தில் மீனாவின் ஞாபகம் குடிகொண்டிருந்தது. சம்பு சாஸ்திரி மீனாவிடம் அன்பு கொண்டிருந்தது போல் வேறு யாரிடமும் வைக்கவில்லை. பிற்காலத்தில் சாவித்திரியிடமும் சாருவிடமும் வைத்த அன்பு கூட அடுத்தபடியென்றே சொல்ல வேண்டும். ஆகையால், மீனாவையும் அவளுடைய பாப காரியத்தையும் மறப்பதற்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. சாவித்திரி மீனாவைப்பற்றி இப்போது சொன்னதும் சாஸ்திரியின் உள்ளத்தில் புதைந்து கிடந்த உணர்ச்சியெல்லாம் பொங்கி எழுந்தது. உணர்ச்சி மிகுதியினால் உடம்பு நடுங்கிற்று. கொஞ்சம் படபடப்பு அடங்கி பேசும் சக்தி வந்ததும், "குழந்தை! நிஜமாக மீனாதானா உனக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றினாள்? அந்தப் பாப ஜன்மத்தின் சொத்துத்தானா இதெல்லாம்?" என்றார். "ஐயோ! அப்படிச் சொல்லாதேங்கோ, அப்பா! என் அத்தையைப் பாப ஜன்மம் என்று சொல்கிறவர்களுக்கு ஈரேழு பதினாறு ஜன்மத்திலும் விமோசனம் கிடையாது" என்றாள் சாவித்திரி. "ஆமாம், அப்பா! அத்தையோட நீங்க ரயில்லே பார்த்தது வேறே யாருமில்லை; என் அத்திம்பேர் ராமச்சந்திரய்யர்தான்" என்றாள் சாவித்திரி. சம்பு சாஸ்திரி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, "நிஜமா, சாவித்திரி! நிஜந்தானா சொல்றே?" என்று அலறினார். "சத்தியமா, அப்பா!" என்றாள் சாவித்திரி. சாஸ்திரி உடனே சாந்தமடைந்தவராய் "ஆனால் ஏன் நிஜமாயிருக்கப்படாது? பராசக்தி அருளால் என்னென்ன அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது? இதுவுந்தான் ஏன் நிஜமாயிருக்கப்படாது?" என்று தமக்கு தாமே சொல்லிக் கொண்டார். சாவித்திரி சொன்னாள்: "அப்பா! அத்திம்பேர் மேலே அப்போது ஏதோ ராஜாங்கத் துரோகக் கேஸ் இருந்ததாம். அந்தக் காலத்திலே, அதாவது மகாத்மா காந்தி தலைவராய் வர்றதுக்கு முன்னாலே, வெடிகுண்டு போட்டாத்தான் நம்ம தேசத்துக்கு விடுதலை கிடைக்கும்னு சில பேர் முட்டாள் தனமா நினைச்சுண்டிருந்தாளாம். அந்த மாதிரி ஒரு வெடிகுண்டு கேஸிலே அத்திம்பேர் அகப்பட்டுண்டிருந்தாராம். அதிலே தப்பிக்கிறதற்காக அவர் பார்ஸிக்காரர் மாதிரி வேஷம் போட்டுண்டு இருந்தாராம். கும்பகோணத்திலே மாமாங்கத்துக்கு முதல் நாள் அவர் அத்தையைப் பார்த்துட்டு, கூட்டத்திலே உங்களிடமிருந்து பிரியற சமயம் பார்த்துண்டிருந்து, 'உங்க அண்ணாகிட்டக் கூடச் சொல்லாமே என்னோடு வர்றதா இருந்தா வா' என்று கூப்பிட்டாராம். அத்தை சம்மதிச்சு உங்களுக்குக் கடுதாசி எழுதி வைச்சுட்டு அவரோடே கிளம்பிப் போனாளாம். அவள் செத்துப் போய் விட்டதாக நீங்கள் நினைச்சுக்கணும்னு அத்தைக்கு எண்ணமாம். ஸ்டேஷன் பிளாட்பாரத்திலே உங்களைப் பார்த்ததும், அவளை நீங்க தெரிஞ்சுண்டுட்டயளோ என்னமோ, என்ன நினைச்சுண்டயளோ என்னமோன்னு அத்தை பட்ட மன வேதனைக்கு அளவேயில்லையாம். இருந்தாலும் அத்திம்பேர் மேலே கேஸ் இருந்தபடியினால் அப்படி உங்களிடம் சொல்லிக்காமே போக வேண்டியதாய் ஆச்சாம். இதையெல்லாம் உங்க கிட்ட விவரமாய்ச் சொல்லி அத்தையை நீங்க மன்னிக்கணும்னு கேட்டுக்கச் சொன்னாள், அப்பா!" "சாவித்திரி! நான் என்ன சொல்லப் போறேன்! இருபத்தைந்து வருஷமா என் மனஸிலிருந்த புண் இன்னிக்குத்தான் ஆறித்து" என்றார் சாஸ்திரி. மீனாவையும் அவளுடைய புருஷனையும் பற்றிச் சாவித்திரி எவ்வளவுதான் சொன்னாலும் சம்பு சாஸ்திரி திருப்தியடையவில்லை. மேலும் மேலும் அவர்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். சாவித்திரிக்கும் அவர்களைப் பற்றிப் பேசப் பிரியமாயிருந்தது. அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் தன்னிடம் அவர்கள் காட்டிய அன்பைப் பற்றியும் சலிப்படையாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அத்தையும் அத்திம்பேரும் பல இடங்களில் அலைந்து திரிந்தது, கடைசியில் அத்திம்பேர் லாலா ராம்சந்த் ராய் என்ற பெயருடன் ஒரு பெரிய இரும்பு வியாபாரியின் கடையில் வேலைக்கு அமர்ந்தது, வியாபார நுட்பங்களைத் தெரிந்து கொண்டு தாமே இரும்பு வியாபாரம் ஆரம்பித்தது, ஐரோப்பிய மகா யுத்தத்தின் போது இரும்பின் விலை திடீரென்று உயர்ந்ததன் பலனாக, அவருக்கு ஏராளமான லாபம் வந்து பெரிய பணக்காரரானது - எல்லாம் தான் அத்தையிடம் கேட்டபடி கதை கதையாகச் சொன்னாள். "அப்பா! இந்த ஊர் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு நான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தேனே, ஏன் தெரியுமா?" என்று கேட்டாள். "சாரு, அந்த ஆஸ்பத்திரியிலே பிறந்தாள் என்றுதான் சொன்னயே, அம்மா!" என்றார் சாஸ்திரி. "அது வாஸ்தவந்தான், அப்பா! ஆனால், அதற்காக அவ்வளவு பெரிய தொகையை நானாகவே கொடுத்துவிடவில்லை. அத்தையின் விருப்பத்தின்படிதான் கொடுத்தேன். நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லச் சொல்லிக் கேட்டு அத்தை கண்ணீர் விட்டு அழுவாள். அவ்வளவு கஷ்டப்பட்ட சமயத்தில் எனக்கு இந்த மீனாக்ஷி ஆஸ்பத்திரியில் அடைக்கலம் கிடைத்தது என்பது அத்தையின் மனத்தை உருக்கிவிட்டது. ஆஸ்பத்திரியின் பெயரும் தன்னுடைய பெயராயிருந்தபடியால் இதில் பகவானுடைய ஆக்ஞை இருப்பதாக நினைத்து, தன்னுடைய சொத்தில் பாதியை அந்த ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாகக் கொடுக்கவேண்டுமென்றும், பாக்கியை நான் வைத்துக் காப்பாற்றி என் குழந்தைக்குக் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னாள். அதன்படியேதான் ஐந்து லட்ச ரூபாய் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்குக் கொடுத்தேன், அப்பா!" என்றாள். நடந்து போனதையெல்லாம் சாவித்திரியும் ஸ்ரீதரனும் மறந்து மனம் ஒத்து வாழ வேண்டுமென்று அவர் விரும்பினார். கேஸில் சாவித்திரியின் பக்கம் தோற்று ஸ்ரீதரன் ஜெயித்தால் தான் இந்த விருப்பம் நிறைவேறுமென்று அவர் எண்ணினார். எனவே, "ஸ்வாமி! பகவானே! ஸ்ரீதரன் ஜெயிக்கட்டும், சாவித்திரி தோற்கட்டும்!" என்று அவர் பிரார்த்தனை செய்தார். அவருடைய பிரார்த்தனை பலித்தது! |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஏன் பெரியார்? மொழிபெயர்ப்பாளர்: புதிய பரிதி வகைப்பாடு : அரசியல் இருப்பு உள்ளது விலை: ரூ. 140.00தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |