பால காண்டம் 6. கையடைப் படலம் மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன் அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும் விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர் முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற, கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள், 1 நனை வரு கற்பக நாட்டு நல் நகர் வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர் புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 2 தயரதன் அரியணையில் வீற்றிருக்க, விசுவாமித்திர முனிவனின்
வருகை தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்; சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர், 'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம் ஓர் ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3 மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர் அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு' எனாத் தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4 தயரதன் முனிவனை வணங்கி உபசரித்து மொழிதல் வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம், அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச, கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான். 5 பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன் அணிந்த தவிசு இட்டு, இனிது அருத்தியொடு இருத்தி, இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து, 'இன்றே துணிந்தது, என் வினைத் தொடர்' எனத் தொழுது சொல்லும்: 6 'நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என் நலம் செய் வினை உண்டு எனினும், அன்று; நகர், நீ, யான் வலம் செய்து வணங்க, எளிவந்த இது முந்து என் குலம் செய் தவம்' என்று இனிது கூற, முனி கூறும்: 7 தயரதனை விசுவாமித்திரன் புகழ்தல் 'என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால், பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், பாற்கடலும், பதும பீடத்து அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ ? இகல் கடந்த புலவு வேலோய்! 8 'இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து, நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி, குறை இரந்து நிற்ப, நோக்கி, குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது?-அரச!' என்றான். 9 தயரதன் கை கூப்பித் தொழுது, 'யான் செய்வது அருளுக!'
என வேண்டுதல் உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும் கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி, 'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக!' என்று, முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே: 10 வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல் 'தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம், "செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11 தயரதன் துயர் உறுதல் எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும், உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட, 'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான் கடுந் துயரம்-காலவேலான்.12 தயரதன் தானே வந்து வேள்வி காப்பேன் எனல் தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி, 'படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்! பணி இதுவேல், பனி நீர்க் கங்கை புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும், புகுந்து செய்யும் இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென்; பெரு வேள்விக்கு எழுக!' என்றான். 13
விசுவாமித்திர முனிவனின் கோபம் என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண் படைத்த முனி; 'இறுதிக் காலம் அன்று' என, 'ஆம்' என இமையோர் அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும் நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச் சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.14 வசிட்டன் உரையால் தயரதன் தெளிதல் கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் மறுத்தியோ?' எனா, வசிட்டன் கூறுவான்: 15 'பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல், ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து எய்து காலம் இன்று எதிர்ந்தது' என்னவே, 16 தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல் குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன், 'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,- 'வருக என்றனன்' என்னலோடும், வந்து அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17 வந்த நம்பியைத் தம்பிதன்னொடும் முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல் தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு; எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான். 18 இராம இலக்குவருடன் முனிவன் புறப்படுதல் கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, 'மேல் அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்' எனா, நடத்தல் மேயினான், நவைக்கண் நீங்கினான். 19 ஆயுதம் தாங்கி இராம இலக்குவர் முனிவன் பின் செல்லுதல் வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல் என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில் ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான். 20 அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம் மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென, சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல், பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். 21 மூவரும் சரயு நதியை அடுத்த சோலையைச் சேர்தல் வரங்கள் மாசு அற, தவம் செய்தோர்கள் வாழ் புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய், அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று இரங்கு வார் புனல் சரயு எய்தினார். 22 கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன் வரம்பு மீறிடு மருத வேலிவாய், அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல் சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார். 23 தீய்ந்த சோலையைக் கண்டு இராமன் வினாவுதல் தாழும் மா மழை தவழும் நெற்றியால் சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப் பாழி மா முகட்டு உச்சி, பச்சை மா ஏழும் ஏற, போய் ஆறும் ஏறினார். 24 தேவு மாதவன் - தொழுது, தேவர்தம் நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் தாவும் மா புகை தழுவு சோலை கண்டு, 'யாவது ஈது?' என்றான் - எவர்க்கும் மேல் நின்றான். 25 மிகைப் பாடல்கள் அப்பெருந் திருவொடும் 'அகில நாதன்' என்று, எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே, தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே, ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள். 1-1 அரிஅணை மிசை தனில், அழகு மன்றினில், புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள் அரசர்கள் முடி படி அணைய, அம் பொனின் உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ. 1-2 '"இனைய சோலை மற்று யாவது?" என்று, மா முனிவ! கூறு' என முதல்வன் கூறலும், பனுவல் வேத நூல் பகரும் மா தவன், 'தனு வலாய்! இதன் தன்மை கேள்' எனா, 24-1 'சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன் உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள், வெம்பி, மற்று அவன் வெற்றி கொண்ட போது, அம்பரம் இழந்து, அவனி வந்தனன்; 24-2 'அவனி வந்து, மன்னவர் இடம்தொறும், தவனன் என்னவே தான் உழன்று, அறிந்து, "இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு" எனா, உவன் விரும்பி வந்து, உந்தை நாடு உறா, 24-3 'இந்த இவ் இடத்து எய்தி, இந்திரன், "சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும் வந்து நிற்க" எனா, மன நினைப்பின்முன் முந்து வந்து மா முரல நின்றவால். 24-4 'நின்ற சோலைவாய், நியமம் நித்தமும் குன்றல் இன்றியே செய்து கொண்டு, அவன் நன்றியால் இருந்து, அரசை நண்ணியே, துன்று சோலையின் தொழில் உணர்த்தினான். 24-5 'உருவம் மாறி, வேறு உருவமாகியே, நிருப! நின் குடை நிழலின் நிற்றலும், பரிவின் நோக்கி, "நீ பகர்தியால்" எனத் தருவின் நாயகந்தான் விளம்பினான்: 24-6 '"சதமகன் தனைச் சம்பரன் எனும் மதமகன் துரந்து அரசு வவ்வினான்; கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன் விதம் அகன்று வந்து, உன்னை மேவினேன்." 24-7 'என்றபோது தன் இரதம் ஏறியே சென்று, மற்று அவன் சேனையோடு உகக் கொன்று, வாசவன் அரசு கொள்ளவே அன்று அளித்து, மீண்டு அயோத்தி மேவினான். 24-8 'அன்னது ஆதலின் அவனி வந்த கா இன்ன நாமம், இச் சோலை' என்றலும், மன்னர்மன்னவன் மதலை, 'நன்று' எனா, பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார். 24-9 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |