பால காண்டம் 24. பரசுராமப் படலம் விசுவாமித்திரன் ஆசி கூறி, வட மலைக்குச் செல்லுதல் தான் ஆவது ஓர் வகையே நனி சனகன் தரு தயலும், நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அந் நாள்வாய், ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி, போனான் வட திசைவாய், உயர் பொன் மால் வரை புக்கான். 1 தயரதன் சேனைச் சுற்றமுடன் அயோத்திக்குப் பயணமாதல் அப் போதினில் முடி மன்னவன், 'அணி மா நகர் செலவே, இப்போது, நம் அனிகம்தனை எழுக!' என்று இனிது இசையா, கைப் போதகம் நிகர் காவலர் குழு வந்து, அடி கதுவ, ஒப்பு ஓத அரு தேர்மீதினில், இனிது ஏறினன், உரவோன். 2 தன் மக்களும், மருமக்களும், நனி தன் கழல் தழுவ, மன் மக்களும், அயல் மக்களும், வயின் மொய்த்திட, மிதிலைத் தொல் மக்கள் தம் மனம் உக்கு, உயிர் பிரிவு என்பது ஒர் துயரின், வன்மைக் கடல் புக, உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன். 3 இராமன் தம்பியரோடு சென்ற காட்சி முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல, மிதிலை நன் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல, நடுவே, தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவிச் செல, மழைவாய் மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன். 4 பறவைகள் அபசகுனமாய்ச் செல்வது கண்டு, தயரதன் தயங்கி
நிற்றல் ஏகும் அளவையின் வந்தன, வலமும் மயில், இடமும் காகம் முதலிய, முந்திய தடை செய்வன; கண்டான்; நாகம் அனன், 'இடை இங்கு உளது இடையூறு' என, நடவான்; மாகம் மணி அணி தேரொடு நின்றான், நெறி வந்தான். 5 மன்னன் நிமித்திகனை வினாவ, அவன், 'இடையூறு இன்றே வந்து,
நன்றாய்விடும்' எனல் நின்றே, நெறி உணர்வான், ஒரு நினைவாளனை அழையா, 'நன்றோ? பழுது உளதோ? நடு உரை நீ, நயம்' என்ன, குன்றே புரை தோளான் எதிர், புள்ளின் குறி தேர்வான், 'இன்றே வரும் இடையூறு; அது நன்றாய்விடும்' என்றான். 6 பரசுராமனது வருகையும், அது கண்டு தயரதன் சோர்தலும் என்னும் அளவினில், வானகம் இருள் கீறிட, ஒளியாய் மின்னும்படி புடை வீசிய சடையான்; மழு உடையான்; பொன்னின் மலை வருகின்றது போல்வான்; அனல் கால்வான்; உன்னும் சுழல் விழியான்; உரும் அதிர்கின்றது ஒர் மொழியான்; 7 கம்பித்து, அலை எறி நீர் உறு கலம் ஒத்து, உலகு உலைய, தம்பித்து, உயர் திசை யானைகள் தளர, கடல் சலியா வெம்பித் திரிதர, வானவர் வெருவுற்று இரிதர, ஓர் செம் பொன் சிலை தெறியா, அயில் முக வாளிகள் தெரிவான்; 8 'விண் கீழுற என்றோ? படி மேல்கீழ் உற என்றோ? எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ?- புண் கீறிய குருதிப் புனல் பொழிகின்றன புரையக் கண் கீறிய கனலான் முனிவு - யாது?' என்று அயல் கருத; 9 போரின்மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய, தேரின்மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய, நீரின்மிசை வடவைக் கனல் நெடு வான் உற முடுகி, பாரின்மிசை வருகின்றது ஓர் படி வெஞ் சுடர் படர, 10 பாழிப் புயம் உயர் திக்கிடை அடையப் புடை படர, சூழிச் சடைமுடி விண் தொட, அயல் வெண் மதி தோற்ற, ஆழிப் புனல், எரி, கால், நிலம், ஆகாயமும், அழியும் ஊழிக் கடை முடிவில், தனி உமை கேள்வனை ஒப்பான்; 11 அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய, தனி படரும் செயிர் சுற்றிய படையான், அடல் மற மன்னவர் திலகன், உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என, ஓர் ஆயிரம் உயர்தோள் வயிரப் பணை துணிய, தொடு வடி வாய் மழு உடையான்; 12 நிருபர்க்கு ஒரு பழி பற்றிட, நில மன்னவர் குலமும் கரு அற்றிட, மழுவாள் கொடு களை கட்டு, உயிர் கவரா, இருபத்தொரு படிகால், இமிழ் கடல் ஒத்து அலை எறியும் குருதிப் புனல் அதனில், புக முழுகித் தனி குடைவான்; 13 கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும், சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும் அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா, சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்; 14 சையம் புக நிமிர் அக் கடல் தழுவும்படி சமைவான்; மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான். ஐயன்தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான், 'வெய்யன் வர நிபம் என்னைகொல்?' என வெய்துறும் வேலை. 15
எதிரே வந்த பரசுராமனை, 'யார்?' என இராமன் வினாவுதல் பொங்கும் படை இரிய, கிளர் புருவம் கடை நெரிய, வெங் கண் பொறி சிதற, கடிது உரும் ஏறு என விடையா, சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர், சென்றான், அம் கண் அரசன் மைந்தனும், "ஆரோ?" எனும் அளவில், 16 தயரதன் இடை வந்து வணங்க, சினம் தணியாது, பரசுராமன் பேசுதல் அரைசன், அவனிடை வந்து, இனிது ஆராதனை புரிவான், விரை செய் முடி படிமேல் உற அடி மேல் உற விழவும், கரை சென்றிலன் அனையான், நெடு முடிவின் கனல் கால்வான்; முரைசின் குரல் பட, வீரனது எதிர் நின்று, இவை மொழிவான்: 17 'உன் தோள் வலி அறிய இங்கு வந்தேன்' என இராமனை நோக்கி
பரசுராமன் மொழிதல் 'இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்; இனி, யான் உன் பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்; செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன்; மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது என் வரவு' என்றனன், உரவோன். 18 தயரதன் பரசுராமனிடம் அபயம் வேண்டுதல் அவன் அன்னது பகரும் அளவையின், மன்னவன் அயர்வான், 'புவனம் முழுவதும் வென்று, ஒரு முனிவற்கு அருள்புரிவாய்! சிவனும், அயன், அரியும் அலர்; சிறு மானிடர் பொருளோ? இவனும், எனது உயிரும், உனது அபயம், இனி' என்றான். 19 'விளிவார் விளிவது, தீவினை விழைவாருழை அன்றோ? களியால், இவன் அயர்கின்றன உளவோ? - கனல் உமிழும் ஒளி வாய் மழு உடையாய்! - பொர உரியாரிடை அல்லால், எளியாரிடை, வலியார் வலி என் ஆகுவது?' என்றான். 20 'நனி மாதவம் உடையாய்! "இது பிடி நீ" என நல்கும் தனி நாயகம், உலகு ஏழையும் உடையாய்! இது தவிராய்; பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா, முனிவு ஆறினை; முனிகின்றது முறையோ?' என மொழிவான். 21 'அறன் நின்றவர் இகழும்படி, நடுவின் தலை புணராத் திறன் நின்று, உயர் வலி என்? அது ஓர் அறிவின் தகு செயலோ? அறன் நின்றதன் நிலை நின்று, உயர் புகழ் ஒன்றுவது அன்றோ, மறன் என்பது? மறவோய்! இது வலி என்பது வலியோ! 22 'சலத்தோடு இயைவு இலன், என் மகன்; அனையான் உயிர் தபுமேல், உலத்தோடு எதிர் தோளாய்! எனது உறவோடு, உயிர் உகுவேன்; நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய்! உனது அடியேன்; குலத்தோடு அற முடியேல்; இது குறை கொண்டனென்' என்றான். 23 பரசுராமன் இராமன் எதிர் செல்லக் கண்டு, தயரதன் துன்பத்தில்
ஆழ்தல் என்னா அடி விழுவானையும் இகழா, எரி விழியா, பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா, தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா, உயிர் தளரா, மின்னால் அயர்வுறும் வாள் அரவு என, வெந் துயர் உற்றான். 24 பரசுராமன் தன் கை வில்லின் பெருமை கூறி, 'நீ வல்லையேல்,
என் வில்லை வளை' என்று வீரம் பேசுதல் மானம் மணி முடி மன்னவன், நிலை சோர்வுறல் மதியான், தான் அந் நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்; 'ஆன(ம்)முடை உமை அண்ணலை அந் நாள் உறு சிலைதான் ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி கேள்!' என்று உரைபுரிவான்: 25 'ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன, உலையா வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன, வையம் அருகா வினை புரிவான் உளன்; அவனால் அமைவனதாம் இரு கார்முகம் உள; யாவையும் ஏலாதன, மேல்நாள்: 26 நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்; என்று இது உணர்ந்த விண்ணோர், "இரண்டினும் வன்மை எய்தும் வென்றியது யாவது?" என்று விரிஞ்சனை வினவ, அந் நாள், 27 '"சீரிது தேவர்தங்கள் சிந்தனை" என்பது உன்னி, வேரி அம் கமலத்தோனும், இயைவது ஓர் வினயம்தன்னால் யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை, மூரி வெஞ் சிலை மேல் இட்டு, மொய் அமர் மூட்டி விட்டான்; 28 இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம் ஏழும் வெருவர, திசைகள் பேர, வெங் கனல் பொங்க, மேன்மேல், செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த தேவன், வரி சிலை இற்றது ஆக, மற்றவன் முனிந்து மன்னோ, 29 'மீட்டும் போர் தொடங்கும் வேலை, விண்ணவர் விலக்க, வல் வில் நீட்டினன் தேவர்கோன் கை, நெற்றியில் கண்ணன்; வெற்றி காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில், ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; 30 இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த வரிசிலை இது, நீ நொய்தின் வாங்குதி ஆயின், மைந்த! குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை; யான் குறித்த போரும் புரிகிலென், நின்னொடு; இன்னம் புகல்வது கேட்டி' என்றான். 31 ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்; மானவ! மற்றும் கேளாய்: வழிப் பகை உடையன் நும்பால்; ஈனம் இல் எந்தை, "சீற்றம் நீக்கினான்" என்ன, முன் ஓர் தானவன் அனைய மன்னன் கொல்ல, யான் சலித்து மன்னோ, 32 'மூ-எழு முறைமை, பாரில் முடியுடை வேந்தை எல்லாம், வேவு எழு மழுவின் வாயால், வேர் அறக் களைகட்டு, அன்னார் தூ எழு குருதி வெள்ளத் துறையிடை, முறையின், எந்தைக்கு ஆவன கடன்கள் நேர்ந்தேன்; அருஞ் சினம் அடக்கி நின்றேன். 33 'உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன், உறு பகை ஒடுக்கிப் போந்தேன், அலகு இல் மா தவங்கள் செய்து, ஓர் அரு வரை இருந்தேன்; ஆண்டை, சிலையை நீ இறுத்த ஓசை செவி உற, சீறி வந்தேன்; மலைகுவென்; வல்லைஆகின், வாங்குதி, தனுவை!' என்றான். 34 வில்லை வாங்கி வளைத்து, 'இதற்கு இலக்கு யாது?' என இராமன்
பரசுராமனிடம் கேட்டல் என்றனன் என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தன் ஆகி, 'நாரணன் வலியின் ஆண்ட வென்றி வில் தருக!' என்ன, கொடுத்தனன்; வீரன் கொண்டு, அத் துன்று இருஞ் சடையோன் அஞ்ச, தோளுற வாங்கி, சொல்லும்: 35 'பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும், வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய், ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்; யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!' என்றான். 36 பரசுராமன் இராமனைப் புகழ்ந்து, தன் தவத்தை அம்புக்கு
இலக்கு ஆக்குதல் 'நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும் ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்! வேதியா இறுவதே அன்றி, வெண் மதிப் பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ? 37 'பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்! மின்னுடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்; என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த உன்னுடை வில்லும், உன் உரத்துக்கு ஈடு அன்றால், 38 'எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என் செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என, கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன் மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே. 39 பரசுராமன் வாழ்த்தி, விடை பெற்றுச் செல்லுதல் 'எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக! மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க் கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய புண்ணிய! விடை' எனத் தொழுது போயினான். 40 இராமன் தந்தையைத் தொழுது, அவரது துயரைப் போக்குதல் அழிந்து, அவன் போனபின், அமலன், ஐ - உணர்வு ஒழிந்து, தன் உயிர் உலைந்து, உருகு தாதையை, பொழிந்த பேர் அன்பினால், தொழுது, முன்பு புக்கு, இழிந்த வான் துயர்க் கடல் கரை நின்று ஏற்றினான். 41 தயரதன் மகிழ்ந்து, இராமனை உச்சி மோந்து, பாராட்டுதல் வெளிப்படும் உணர்வினன், விழுமம் நீங்கிட, தளிர்ப்பு உறு மத கரித் தானையான், இடை குளிப்ப அருந் துயர்க் கடற் கோடு கண்டவன், களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன். 42 பரிவு அறு சிந்தை, அப் பரசுராமன் கை வரி சிலை வாங்கி, ஓர் வசையை நல்கிய ஒருவனைத் தழுவிநின்று, உச்சி மோந்து, தன் அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான். 43 'பொய்ம்மை இல், சிறுமையில் புரிந்த, ஆண் தொழில், மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ? மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு, இம்மையும் மறுமையும் ஈயும்' என்றனன். 44 தேவர்கள் மலர் மழை பொழிய இராமன் வருணனிடம், 'சேமித்து
வை' என்று, பரசுராமனின் வில்லைக் கொடுத்து, அயோத்தி சேர்தல் பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள் வாம வேல் வருணனை, 'மான வெஞ் சிலை சேமி' என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ, நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான். 45 தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல் நண்ணினர், இன்பத்து வைகும் நாளிடை, மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான், அண்ணல், அப் பரதனை நோக்கி, ஆண்தகை, எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்: 46 'ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற் காணிய விழைவது ஓர் கருத்தன்; ஆதலால், கேணியில் வளை முரல் கேகயம் புக, பூண் இயல் மொய்ம்பினாய்! போதி' என்றனன். 47 இராமனை வணங்கிப் பரதன் கேகய நாட்டிற்குப் புறப்படுதல் ஏவலும், இறைஞ்சிப் போய், இராமன் சேவடிப் பூவினைச் சென்னியில் புனைந்து, போயினான் - ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான், ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்றென்னவே. 48 சத்துருக்கனோடு பரதன் ஏழு நாளில் கேகய நாடு சென்று சேர்தல் உளை விரி புரவித் தேர் உதயசித்து எனும் வளை முரல் தானையான் மருங்கு போதப் போய், இளையவன் தன்னொடும், ஏழு நாளிடை, நளிர் புனல் கேகய நாடு நண்ணினான். 49 ஆனவன் போனபின், அரசர் கோமகன் ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை, வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால், மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம் அரோ. 50 மிகைப் பாடல்கள் கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன் அயிலைப் புக விடர்விட்டது போல் ஏழ் வழியாகச் சயிலத் துளைபட எய்தனை, அயில் தெற்றிய அதனால் முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான். 14-1 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |