சடகோபர் அந்தாதி

     இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் முதலியவை.

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவில் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்கநன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே.

ஆரணத் தின்சிர மீதுஉறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்த வனைக்குருக்ஷரனைப் பற்பலவா
நாரண னாம்என ஏத்திக் தொழக்கவி நல்குகொடைக்
காரண னைக்கம் பனைநினை வாம்உள் களிப்புறவே.

'நம்சட கோபனைப் பாடினையோ?' என்று நம்பெருமாள்
விஞ்சிய ஆதரத் தால்கேட்பக் கம்பன் விரைந்துஉரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும்வண்ணம்
நெஞ்சுஅடி யேற்குஅருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே.

நாதன் அரங்கன் நயந்துரை என்னநல் கம்பன்உன்தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படியெனக்கு உள்ளத் தனையருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப்பொரு ளேஇதுஎன் விண்ணப்பமே.

தற்சிறப்புப் பாயிரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனைமுன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென்த மிழ்த்தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்அடி யுற்றுநின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

நூல்

வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணம்கடந்த
போதக்க டல்எங்கள் தென்குரு கூர்ப் புனிதன் கவிஓர்
பாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1

சுடர்இரண் டேபண்டு மூன்றா யினதுகள் தீர்ந்துலகத்து
இடர்இரண் டாய்வரும் பேர்இருள் சீப்பன எம்பிறப்பை
அடர்இரண் டாம்மலர்த் தாள்உடை யான்குரு கைக்கரசன்
படர்இருங் கீர்த்திப் பிரான்திரு வாய்மொழிப் பாவொடுமே. 2

பாவொடுக் கும்நுன் இசைஒடுக் கும்பலவும் பறையும்
நாவொடுக் கும்நல் அறிவொடுக் கும்மற்றும் நாட்டப்பட்ட
தேவொடுக் கும்பர வாதச் செருஒடுக் கும்குருகூர்ப்
பூவொடுக் கும்அமு தத்திரு வாயிரம் போந்தனவே. 3

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தருமநிறை
கனமாம் சிலர்க்குஅதற் குஆரண மாஞ்சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்குஅதற்கு எல்லையு மாம்தொல்லை ஏர்வகுள
வனமாலை எம்பெரு மான்குரு கூர்மன்னன் வாய்மொழியே. 4

மொழிபல ஆயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும்
வழிபல வாயவிட் டொன்றா அதுவழு வாநரகக்
குழிபல ஆயின பாழ்பட் டதுகுளிர் நீர்ப்பொருநை
சுழிபல வாய் ஒழுகுங்குரு கூர் எந்தை தோன்றலினே. 5

தோன்றா உபநிட தப்பொருள் தோன்றலுற் றார்தமக்கும்
சான்றாம் இவைஎன் றபோதுமற் றென்பலகா லும்தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத் தின்மும் மைத்தமிழை
ஈன்றான் குருகைப் பிரான்எம் பிரான்தன் இசைக்கவியே. 6

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்சட கோபன்கு மரிகொண்கன்
புவிப்பா வலர்தம் பிரான்திரு வாய்மொழி பூசுரர்தம்
செவிப்பால் நுழைந்துபுக் குள்ளத் துளேநின்று தித்திக்குமே. 7

தித்திக்கும் மூலத் தெளியமு தேயுண்டு தெய்வமென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம்பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய்குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான்சொன்ன ஆயிரமே. 8

ஆயரம் மாமறைக் கும்அலங் காரம் அருந்தமிழ்க்குப்
பாயிரம் நாற்கவிக் குப்படிச்சந் தம்பனு வற்குஎல்லாம்
தாய் இரு நாற்றிசைக் குத்தனித் தீபந்தண் ணங்குருகூர்ச்
சேயிரு மாமர பும்செவ் வியான்செய்த செய்யுட்களே. 9

செய்ஓடு அருவிக் குருகைப் பிரான்திரு மாலைநங்கள்
கைஓர் கனிஎனக் காட்டித்தந் தான்கழற் கேகமலம்
பொய்யோம் அவன்புகழ் ஏத்திப் பிதற்றிப்பித் தாய்ந்திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10

ஆற்றில் பொதிந்த மணலின் தெகையரு மாமறைகள்
வேற்றில் பொதிந்த பொருள்களெல் லாம்விழு மாக்கமலம்
சேற்றில் பொதியவீழ்க் கும்குரு கூரர்செஞ் சொற்பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒருகூறு நுவல்கிலவே. 11

இலவே இதழுள வேமுல்லை யுள்ளியம் பும்மொழியும்
சிலவே அவைசெழுந் தேனொக் குமேதமிழ்ச் செஞ்சொற்களால்
பலவே தமும்மொழிந் தான்குரு கூர்ப்பது மத்துஇரண்டு
சலவேல் களும்உள வேயது காண்என் தனியுயிரே. 12

உயிர்உருக் கும்புக் குஉணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர்உருக் கொண்டநம் தீங்குஉருக் கும்திரு டித்திருடித்
தயிர்உருக் கும்நெய் யொடுஉண் டான்அடிச்சட கோபன்சந்தோடு
அயிர்உருக் கும்பொரு நல்குரு கூர்எந்தை அம்தமிழே. 13

அந்தம் இலாமறை ஆயிரத்து ஆழ்ந்த அரும்பொருளை
செந்தமி ழாகத் திருத்தில னேல்நிலைத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும்என் னாம்தமி ழார்கவியின்
பந்தம் விழாஒழு குங்குரு கூர்வந்த பண்ணவனே. 14

பண்ணப் படுவன வும்உள வோமறை யென்றுபல்லோர்
எண்ணப் படச்சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித்தலை வேந்தன்மலர் உகுத்த
சுண்ணப் படர்படப் பைக்குரு கூர்வந்த சொல்கடலே. 15

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்குஅளித் தான்களித்தார்
குடலைக் கலக்கும் குளிர்சங்கி லான்குறை யாமறையின்
திடலைக்கலக்கித் திருவாய் மொழிஎனும்தே னைத்தந்தான்
நடலைப் பிறப்புஅறுத்து என்னையும் ஆட்கொண்ட நாயகனே. 16

நாய்போல் பிறர்கடை தோறும் நுழைந்துஅவர் எச்சில்நச்சிப்
பேய்போல் திரியும் பிறவி யினேனைப் பிறவியெனும்
நோய்போம் மருந்தென்னும் நுன்திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய்போல் உதவிசெய் தாய்க்குஅடியேன் பண்டென் சாதித்ததே. 17

சாதிக் குமேபற தத்துவத் தைச்சம யத்திருக்கை
சேதிக் குமே ஒன்று சிந்திக் குமேயத னைத்தெரியப்
போதிக் குமேஎங்கும் ஓங்கிப் பொதுநிற்கும் மெய்யைப்பொய்யைச்
சோதிக் குமேஉங்கள் வேதம் எங்கோன்தமிழ்ச் சொல்எனவே. 18

சொல்என் கெனோமுழு வேதச் சுருக்கென் கெனோஎவர்க்கும்
நெல்என் கெனோ உண்ணும்நீர் என்கெனோ மறைநேர்நிறுக்கும்
கல்என் கெனோமுதிர் ஞானக் கனியென் கெனோபுகல
வல்என் கெனோகுரு கூர்எம் பிரான்சொன்ன மாலையையே. 19

மாலைக் குழலியும் வில்லியம் மாறனை வாழ்த்தலர்போம்
பாலைக் கடம்பக லேகடந்து ஏகிப் பணைமருதத்து
ஆலைக் கரும்பின் நரேல்என்னும் ஓசையை அஞ்சியம்பொன்
சாலைக் கிளிஉறங் காத்திரு நாட்டிடம் சார்வார்களே. 20

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில்தளிர் மெல்லடித்தண்
மூரல் குறிஞ்சி நகைமுகம் நோக்கற்குநீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறிநினை தோறும் துணுக்குஎனுமால்
வாரல் குறுகைப் பிரான்திரு ஆணை மலையவனே. 21

மலையார மும்கடல் ஆரமும் பன்மா மணிகுயின்ற
விலையார மும்விர வுந்திரு நாடனை வேலைசுட்ட
சிலையார்அமுதின் அடிசட கோபனைச்சென்று இறைஞ்சும்
தலையார் எவர்அவ ரேஎம்மை ஆளும் தபோதனரே. 22

போந்துஏ றுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்துஏ றுஅடர்த்தவன் வீடே பெறினும் எழில்குருகூர்
நாம்தே றியவ றிவன்திரு வாய்மொழி நாளும்நல்கும்
தீந்தே றலுண்டுழலும் சித்தி யேவந்து சித்திக்குமே. 23

சித்தர்க்கும் வேதச் சிரம்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந்தோர் கட்கும் தொண்டுசெய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றி பண்டுசென்ற
முத்தர்க்கும் இன்ன முதம்சடகோபன் மொழித்தொகையே. 24

தொகைஉள வாயபணு வற்கெல் லாம்துறைதோ றும்தொட்டால்
பகையுள லாம்மற்றும் பற்றுள வாம்பழ நான்மறையின்
வகையுள வாகிய வாதுள வாம்வந்த வந்திடத்தே
மிகையுள வாம்குரு கூர்எம் பிரான்தன் விழுத்தமிழ்க்கே. 25

விழுப்பா ரினிஎம்மை யார்பிற வித்துயர் மெய்உறவந்து
அழுப்பா தொழியின் அருவினை காள்உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன்வந் தின்றுநின் றான்இள நாகுசங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம்குரு கூர்எம் குலக்கொழுந்தே 26

கொழுந்தோ டிலையும் முகையுமெல் லாம்கொய்யும் கொய்ம்மகிழ்க்கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள்விறல் மாறனென்றால்
அழும்தோள் தளரும் மனமுரு கும்கூ ரையில்
எழுந்துஓ டவுங்கருத் துண்டுகெட் டேன்இவ் இளங்கொடிக்கே. 27

கொடிஎடுத் துக்கொண்டு நின்றேன் இனிக்கொடுங் கூற்றினுக்கோ
அடிஎடுத் துக்கொண்டென் பால்வர லாகுங்கொல் ஆரணத்தின்
படிஎடுத் துக்கொண்ட மாறன்என் றால்பது மக்கரங்கள்
முடிஎடுத் துக்கொண்ட அந்தணர் தாள்என் முடிஎனவே. 28

என்முடி யாதெனக்கி யாதே அரியது இராவணன்தன்
பொன்முடி யால்கடல் தூர்த்தவில் லான்பொரு நைந்துறைவன்
தன்முடி யால்அவன்தாள் இணைக்கீழ் எப்பொரு ளும்தழீஇச்
சொல்முடி யால் அமுதக்கவி ஆயிரம் சூட்டினனே. 29

சூட்டில் குருகுஉறங் கும்குரு கூர்தொழு தேன்வழுதி
நாட்டில் பிறந்தவர்க் காளும்செய் தேனென்னை நல்வினையாம்
காட்டில் புகுதவிட்டு உய்யக்கொள் மாறன்கழல் பற்றிப்போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறைமறை மெய்எனிலே. 30

மெய்யும் மெய் யாது பொய்யும்பொய் யாது வேறுபடுத்து
உய்யும்மெய் யாய உபாயம் வந் துற்ற துறுவினையைக்
கொய்யும்மெய் வாள்வல வன்குரு கைக்கர சன்புலமை
செய்மெய் யன்தனக் கேதனித் தாளன்பு செய்தபின்னே. 31

செய்யன் கரியன் எனத்திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரியல்ல மாட்டா மறைமது ரக்குருகூர்
அய்யன் கவியல்ல வேல்பிறவிக் கடலாழ் வதுஅல்லால்
உய்யும் வகையொன் றும்யான் கண்டிலேன்இவ் வுயிர்களுக்கே. 32

உயிர்த்தாரை யில்புக் குறுகுறும் பாம்ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகைவந் தார்திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர்தா ரைகள் பொடிக்கும்கண் ணீர்மல்கும் மாமறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள்வெளி யாம்எங்கள் அந்தணர்க்கே. 33

அந்தணர்க் கோநல் அருந்தவர்க் கோஅறி யோகியராய்
வந்தவர்க் கோமறம் வாதியர்க் கோமது ரக்குழைசேர்
சுந்தரத் தோளனுக் கோஅவன் தெண்டர்கட் கோசுடர்தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான்வந்து சந்தித்ததே. 34

சந்ததியும் சந்திப் பதமும்அவை தம்மி லேதழைக்கும்
பந்தியும் பல்அலங் காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப் பவரை வணங்கும் வகையறிவீர்
சிந்தியும் தென்குரு கூர்தொழு தார்செய்யும் தேவரையே. 35

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதையுள் ளம்புகுந் தார்எவர்என்
றேவரை ஏறிமொழிகின்ற போதியம் பிற்றுஇறைவர்
மூவரை யோகுரு கூரரை யோசொல்லும் முந்துறவே. 36

துறவா தவர்க்கும் துறந்தவர்க் கும்சொல்ல வேசுரக்கும்
அறவா அவைஇங்கு ஓர்ஆயிரம் நிற்கஅந் தோசிலர்போல்
மறவா தியர்சொன் னவாசக மாம்மலட்டா வைப்பற்றி
கறவாக் கிடப்பர்அங் குஎன்பெறவோ தங்கள் கைவலிப்பே. 37

கைதலைப் பெய்துஅரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய்என்று மோசென்றுஅவ் வூர்அறிய
வைதலைத் துஏசுது மோகுரு கூர்என்னும் ஆறுஅறியாப்
பைதலைக் கோகுஉகட் டிட்டுஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38

பண்ணும் தமிழும் தவம்செய் தனபழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம்செய் தனமகிழ்மா றன்செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரியமெய் யோகியர் ஞானம்என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமைசெய்த காலத்திலே. 39

காலத் திலேகுருகூர் புக்குக் கைக் கொண்மி னோகடைநாள்
ஆலத் திலேதுயின் றோர்கொண் டவையிரண் டாயமைந்த
கோலத் திலேமுளைத் துக்கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத் திலேசெல்ல மூட்டிய ஞானத்து எம்மூர்த்தியையே. 40

மூர்த்தத் தினைஇம் முழுஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத் தினைச்செய் யவேதத் தினைத்திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத் தைப்பணித் தானும்நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும்கண் டான்அம் மறைப்பொருளே. 41

பொருளைச் சுவையென்று போவதெங் கேகுரு கூர்ப்புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடைதிறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளிபரந்தோட் டரும்கொள் ளைவெள்ளம்
உருளைச் சுடர்மணித் தேரைஅந் தோவந்து உதைக்கின்றதே. 42

வந்துஅடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகைவஞ்சி
கொந்துஅடிக் கொண்ட சூழலும் கலையும் குலைந்தலைய
பந்துஅடிக் குந்தொறும் நெஞ்சம் பறையடிக் கின்றதுஎன்றால்
செந்தடித் தன்னமருங் கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43

கனவா யினவும் துரியமும் ஆயவை யும்கடந்து
மனவா சகங்களை வீசி யமாறனை மாமறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ்வினை யைத் தொலைத்த
சினவா ரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44

சேரா தனஉளவோ பெருஞ்செல் வரக்குவே தம்செப்பும்
பேரா யிரம்திண் பெரும்புயம் ஆயிரம் பெய்துளவத்
தாரார் முடியா யிரம்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
ஆரா அமுதம் கவிஆ யிரம்அவ் வரியினுக்கே. 45

அரிவளை பொன்மகிழ் ஆயிழைக்கு ஈயும்கொல் அந்திவந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறைசெறுத்து
வரிவளை யும்அன் னமும்தம் மிலேவழக் காடவலம்
புரிவளை யூடறுக் கும்குரு கூர்எம் புரவலனே. 46

புரைதுடைத் துப்பெரும் பொய்யும் துடைத்துப் பிறர்புகலும்
உரைதுடைத் தங்குள் ளவூச றுடைத்தெம் முறுபிறவித்
துரைதுடைத் தாட்கொண்ட தொண்டர் பிரான்துறை நீர்ப்பொருநை
கடைதுடைக் குங்கட லேதுடையேல் அன்பர் கால்சுவடே. 47

சுவடிறக் கத்தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தனைக்கண் பரிந்துசங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானைநங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48

இருளாய்ப் பரந்த உலகங்க களைவிளக் கும்இரவி
பொருளாய்ப் பரந்தது தான்பொது நிற்றலின் மற்றதுபோல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாறனெங்கோன்
அருளால் சமயமெல் லாம்பரன் உண்டென்று அறிவுற்றதே. 49

அறிவே உனைத்தொழு தேன்மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் எனஒன்று சிந்தைசெய் யாதுசெய் தாரையில்லா
நெறிவேநின்றா நிலையுணர்ந் தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும்எண் ணாதென்னை வீடு பெறுத்தினையே. 50

பெறும்பாக் கியமுள்ள போதும் பிழைப்புமுண் டேபிறர்பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினைகொடுப்போய்
எறும்பாக் கியதமி யேனை அமரர்க்கும் ஏறவிட்டான்
குறும்பாக் கியமுப் பகைதவிர்த்து ஆண்ட குருகைமன்னே. 51

குருகூர் நகர்எம் பிரான்அடி யாரோடும் கூடிஅன்புற்று
ஒருகூ ரையில் உறைவார்க்கும் உண்டேஎம்மை யள்ளும்சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப்பார்க்கும் இயற்கையவ்வூர்
அருகுஊர் அருகில் அயல்அய லார்க்கும் அரியதன்றே. 52

அன்றாத அன்றிலை யும்அன்று வித்துஎன்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம்எல் லாம்பின்று வித்துப் பிழைக்கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ்வினையை
வென்றான் குருகைப் பிரான்மகிழேயன்றி வேறில்லையே. 53

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும்செந் தமிழ்ப்புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமு தேஏறி நீர்ப்பொருநை
ஆறே தொடர்குரு கூர்மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே. 54

பொன்னை உரைப்பது அப்பொன் னொடன்றே புலமைக்கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்குஉள ரோஉயற் நாற்கவியும்
பின்னை உரைக்கப் பெறுவதல் லால்பெருந் தண்குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55

மணித்தார் அரசன்தன் ஓலையைத் தூதுவன் வாய்வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையைஎம் தீவினையைத்
துணித்தான் குருகைப் பிரான்தமி ழால்சுரு திப்பொருளைப்
பணித்தான் பணியன் றெனில்கொள்ளும் கொள்ளுமெம் பாவையையே. 56

பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப்பசும் கற்பகத்தின்
பூவைப் பொருகடல் போதா அமுதைப் பொருள்சுரக்கும்
கோவைப் பிணித்தஎம் கோவையல்லா என்னைக்குற் றம்கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லரசன் றோமற் றைநாவலரே. 57

நாவலந் தீவில் கவிகள்எல் லாம்சில நாள்கழியப்
பூவலந் தீவது போல்வஅல் லால்குரு கூர்ப்புலவன்
கேவலந் தீங்குஅறுப் பான்கவி போல்எங்கும் போய்க்கெழுமிக்
கூவலந் தீம்புன லும்கொள்ளும் மேவெள்ளம் கோளிழைத்தே. 58

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன்தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம்கொண் டார்க்கும ரித்துறைவர்
மழைத்தார் தடக்கை களால்என்னை வானின் வரம்பிடைநின்று
அழைத்தார் அறிவும்தந் தார்அங்கும் போயவர்க்கு ஆட்செய்வனே. 59

ஆட்செய் யலாவதெல் லாம்செய் தடியடைந் தேனதன்றித்
தாட்செய் யதாமரை என்தலை ஏற்றனன் தண்குருகூர்
நாட்செய் யபூந்தொடை மாறனென் றேன்இனி நாட்குறித்துக்
கோட்செய்ய லாவதுண் டேயென்ற னாருயிர் கூற்றினுக்கே. 60

கூறப் படாமறை யின்பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படாவினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படாநின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாதுகெட் டேன்மன் றல்நாறும்தண் தென்றலையே. 61

தென்றலைத் தோன்றும்உபநிட தத்தைஎன் தீவினையை
நின்றலைத் தோன்றும் நியாய நெறியை நிறைகுருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியைமனத் துள்வைப்பார்
என்றலைத் தோன்றும் எம்பிரான்கள் என்நாவுக் குரியவரே. 62

உரிக்கின்ற கோடலின் உந்துகந் தம்என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும்வெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
தெரிக்கின்ற கோச்சட கோபன்தன் தெய்வக் கவிபுவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்றொக்கும் தோண்டச் சுரத்தலினே. 63

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்குவிட்டுக்
கரக்கும் இருளினை மேன்மையும் காணும் கயல்குதிப்பத்
திரக்கும் கழைநெடுந் தாளில் தொடுத்தசெந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல்கு ருகூர்வ ளம்படுமினே. 64

பாடும் கறங்கும் சிறைவண்டு பாடும்பைந் தாள்குவளை
தோடும் கறங்கும் குருகைப் பிரான்இச் சுழல்பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65

விடவந் தகார வெம்பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அடவந்த காலன்கொலோ அறியேன் இன்றுஇவ் அந்திவந்து
படஅந்த காரப் பெரும்புகை யோடிப் பரக்கின்றதே. 66

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவைசொரி யும்பொருட்டால்
கரவாது உதவிய மாறன் கவிஅனை யாய்இனிஓர்
சரவா தம்இப் புறம்அப்புறம் காணத் தடம்பணையே. 67

தடம்பணைத் தண்பொரு நைக்குரு கூரர் தகைவகுள
வடம்பணைக் கொங்கையில் வைக்கின் றிலர்மற்றை மாலையெல்லாம்
உடம்புஅணைக் குந்தொறும் வெந்துஉரும் ஐந்துவெம் பாம்புஉமிழ்ந்த
விடம்பணைக் கொண்டன வேபனி தோய்ந்திரு மேகங்களே. 68

மேகத்தை ஆற்றில்கண் டேன்என்று எண்ணாது மெய்யன்குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளிபரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டேகண்ட மாற்ற மொழிந்துசிந்தைச்
சோகத்தை ஆற்றிக்கொண்டேதுளித் தூவத் தொடங்குகவே. 69

தொடங்கு கின்றாள் நடம்சொல்லு கின்றேன்குரு கூரர்தொழா
மடங்குகின் றாள்மண்ட லம்சுற்றி யாடுகின்றாள் தங்கி
விடங்குகண் டார்பிழைப் பார்சவை யீர்விரைந்து ஏகுமிந்த
படங்குவிண் டால்பின்னைப் போகஒண் ணாதுஉம் பதிகளுக்கே. 70

பதியந் தமிழ்என்ன நான்மறை என்னஇப் பார்புரக்கும்
மதியந் தமிழ்ஒளி மாலைகள் என்னமறை தமிழின்
அதியம் தரும்கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங்குரு கூர்எந்தை பூசுரர்க்கே. 71

பூட்சிகண் டீர்பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்குவல்வாய்
வாட்சிகண் டீர்மற்றை மாயத்து அருகர்க்கு மன்உயிர்கட்கு
ஆட்சிகண் டீர்தொண்டர்க்கு ஆனந்த வாரிகண் டீர்அறிவைக்
காட்சிகண் டீர்பர வும்குரு கூர்வந்த கற்பகமே. 72

கற்றும் செவியுறக் கேட்டும் பெருகிக் களித்தும்உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்துகொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம்நிதம் மாறனெம்மை
விற்றும் விலைகொள் ளவும்உரி யான்கவி வெள்ளத்தையே. 73

வெள்ளம் பரந்தன வோகம லத்தன்றி வெண்மதிமேல்
கள்ளம் பரந்தன வோமுயல் நீக்கிக் கவிக்கரசன்
தெள்ளம் பரந்த வயல்குரு கூர்க்கொம்பின் செம்முகத்தே
முள்ளம் பரந்தன வோகண்க ளோஒன்றும் ஓர்கிலமே. 74

ஓரும் தகைமைத் குரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித்தலை வன்சட கோபன் தடம்பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்குஅறும் சிந்தைசெவ் வேநிற்கும் தீங்கறுமே. 75

அறுவகை யாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறுவகை யால்சொன்ன ஓட்டம்எல் லாம் ஒழு வித்தொருங்கே
பெறுவகை ஆறெனச் செய்த பிரான்குரு கூர்ப்பிறந்த
சிறுவகை யார்அவ ரைத்தொழு தோம்எம்மைத் தீண்டுகவே. 76

தீண்டித் திருவடி யைப்பற்றிக் கொண்டுசிந் தித்ததையே
வேண்டிக் கொளப்பெற்றி லேன்வினை யேன்இவ் வெறும்பிறவி
ஆண்டில் பிறந்தஅக் காலத்திலே அன்பனாய் அணிநீர்ப்
பாண்டித் தமிழ்த்திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77

பாவகத் தால்தன் திருஅவ தாரம்பதி னொன்றென்றிப்
பூவகத் தார்அறி யாதவண்ணம் தன்னை யேபுகழந்து
நாவகத் தால்கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத் தாற்கன்றி என்புறத் தார்செய் குற்றேவல்களே. 78

குற்றே வலும்செய்தும் மெய்கண்டு கைகொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன்என் போல்எவர்பே றுபெற்றார்பின் னையே பிறந்து
வெற்றேவ லின்நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய்யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான்எம் பிரான் தனி யலிசைக்கே. 79

இயலைத் தொடுத்தின் னிசையைப் புணர்த்தெம் மையிப்பிறவி
மயலைத் துடைத்த பிரான்குரு கூர்மதி யைக்கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்துமுத் தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள்சாள ரத்தூடு கதவிட்டதே. 80

இட்டத் திலும்தம்தம் உள்ளத்தி லும்எண்ணி லும்இருப்பின்
கிட்டத் திலும்வலி யாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத் திலும்பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத் திலும்கயல் பாய்குரு கூரர் குணங்களுக்கே. 81

குணம் வேண்டுமேநற் குலம்வேண்டு மேயக் குலத்தொழுக் காம்
பிணம்வேண் டுமேசெல் வப்பேய்வேண்டு மேபெருந் தண்வகுள
மணம்வேன் டுந்தண்தெரியல் பெருமான் செய்யுள் மாமணியின்
கணம்வேண்டும் என்றறி வாரைக்கண் டால்சென்று கைத்தொழுமே. 82

தொழும்பாக் கியவினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடைநின்று
எழும்பாக் கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும்பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தியென்னாத்
தழும்பாக் கவும்வல்ல கோசட கோபன் தயாபரனே. 83

பரந்தலைக் கும்பொரு நைக்குரு கூரென்னில் கண்பனிக்கும்
கரம்தலைக் கொள்ளும்உள் ளும்உரு கும்கவியால் உலகைப்
புரந்தலைக் கும்வினை தீர்த்தான் புனைமகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போதுநங் காய்உன் மகள்கருத்தே. 84

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலைமறையோர்
திருத்திற்று ஒருமணம் தீரும் நீரின் நிறை
முருத்தின் செருந்துஅய லேஇவ ளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம்வைக் கும்குரு கூர்சென்று கூடுமினே. 85

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான்குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப்பெற் றேம்இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல்வந்து நாலப்பெற் றேம்இனிமேல்
வீட்டுஎங்கள் தோழர்க்கு என்றே பெரும்போகம் விளைகின்றதே. 86

விளையா தொழிய மருந்தும்உண் டேஎம் விளைதினையின்
கிளையாக் கிளர விளைகின்ற தால்கிளை யாம்பிறவித்
தளையா சழியத் தடுத்துத் தென்பாலை வழிதடுத்துக்
களைஆ சறத்தடுத் தாண்டான் குருகையின் காப்புனமே. 87

புனல்பாழ் படுத்துப் புகழ்பாழ் படுத்தல் லால்புகுந்தென்
மனம்பாழ் படுத்தனை வாழ்தியன் றேவழு வாநரகத்
தினம்பாழ் படுத்த பிரான்சட கோபனின் னாக்கலியின்
சினம்பாழ் படுத்தநின் றான்குன்று சூழ்கின்ற செந்தினையே. 88

தினைஒன் றியகுற்றம் அற்றுணர்ந் தோர்மகி ழின்திறத்தின்
மனைஒன் றியகொடி யாள்துயின் றாலும்தன் வாய்அடங்கா
வினைஒன் றியஅன் றிலுக்கு இடம்காட்ட விரிதலைய
பனையன் றியும்உள தோதமி யேற்குப் பழம்பகையே. 89

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோ டும்பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றிஇவ் வையமுய்யத்
தொகையா யிரங்கவி சொன்னோன் பெயர்சொல்லச் சூழ்பனியின்
புகையாம் இருள்பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90

பருகின் றதுஇருள் போகின்றது வண்ணம் பூவைகண்ணீர்
உருகின் றதென்று உயிர்ஓய்கின் றதால்உலகு ஏழுமுய்யத்
தொகுகின் றஆயிரம் சொன்னோன் குருகைச்சொல் லால்விளங்கத்
தருகின்றனர் அல்லர் மேன்மேலும் காதல் தருமவரே. 91

தருமமும் காமமும் தாவில் அரும்பொரு ளுந்தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்டஅக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம்செய்யம்
இருமையும் தீர்ந்தபிரான் சட கோபன்தன் இன்னருளே. 92

அருளில் சிலமகி ழாயிழைக்கு ஈவர்கொல் அந்திவந்த
இருளில் பிறிதுதுய ரும்உண் டோ இயலோடுஇசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின்போக் கில்உள்ளம்
தெருளின் கரும்புஒக்கும் ஆயிரம் பாப்பண்டு செய்தவரே. 93

அவரே அயற்கும் அரற்கும்அல் லாஅம ரர்க்கும்எல்லாம்
பவரே கையுற்றுஎன் பணிகொள் ளுமோபடர் நீரின்இட்ட
நவரேகை யுட்கொள்ளச் செய்ததல் லால்நம்பி மாறனைப்போல்
எவரே திருவா யிரம்மோக்க மாலை இசைத்தவரே. 94

தவம்செய் வதும்தழல் வேள்வி முடிப்பதும் தம்மைஒறுத்து
எவன்செய் யும்மெய்யன் குருகைப் பிரான்எம்மை இன்னம்ஒரு
பவம்செய் கைமாற்றிய பண்டிதன் வண்தமிழ்ப் பாவம்உண்டே
அவம்செய் கைமாற்றச் செவியுண்டு நாவுண்டு அறிவுமுண்டே. 95

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த்துலகைத்
தொண்டாட் டியவந்து தோன்றிய தோன்றல் துறைக்குருகூர்
நண்டாட் டியநங்கை நாட்டங் களால்இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட் டியகண்கள் போல்செய் யுமோகயல் தீங்குகளே. 96

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்ததல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனைவிள வார்உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள்நல் கார்இந்த நுண்பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97

வல்லம் புலிமுக வாயில் கரும்பின் மறுபிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலியிட் டெதிரிடப் பாய்வதுதா யென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டுஅம்புலி மீள எழுகின்றதே. 98

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரி தால்புகழ் மெய்ப்புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல்துறை நீர்ப்பொருநை
வழுதிநன் னாடன் திருவாய் மொழிஎம் மனத்தனவே. 99

மனையும் பெருஞ்செல் வமும்மக்களும் மற்றைவாழ் வும்தன்னை
நினையும் பதம்என நின்ற பிரான்குரு கூர்நிமலன்
புனையும் தமிழ்க்கவி யால்இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரிவுற் றனகுற்றம் நீங்கின வேதங்கள். 100




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247