திருக்கை வழக்கம் திருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும். இந்நூல் 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையான் வந்த கலிவெண்பாவாகும். இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, ஏரெழுபது முதலியவை.
கங்கை குலம் தழைக்கும் கை கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை பிரியாமல் வாழும் கை. 1 சந்தனமாக அரைத்த கை திஙகள் அணி எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க்(கு) அரிய தம்பிரா னுக்(கு) உரைத்த சந்தனக் கை. 2 விதைநெல்லைச் சோறாக்கி வழங்கிய கை அம்பொன் வளைவாரி வையகமும் வானகமும் போற்ற முளைவாரி வந்த முழுக் கை. 3 கல்லால் அடித்த கை கிளை வாழக் கச்சித் தலத்(து) அரனைக் கல்லால் எறியமறந்(து) எச்சில் தயிர்ச்சோ(று) எறிந்திடுங் கை. 4 கழுத்தை அரிந்த கை பச்சை மிகு தேமா வடுக் கமரில் சிந்திற்(று) என்றே கழுத்தை ஆம் ஆம் எனவே அரிந்திடுங் கை 5 மழுவை ஏந்திய கை வாம மறை ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற(கு) என்றே மோது தடிகொண்டு முடுக்குங் கை 6 சிவபூசை செய்த கை தீ(து)அகல அஞ்(சு)எழுத்தே ஒன்றாகி, அப்பர்எனத் தோன்றி, அரன் செஞ்சரணத்தே பூசை செய்யும் கை 7 வயிறு கிழித்த கை வஞ்சியர்பால் தூ(து) அரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல் பேதமறத் தன் வயிறு பீறும் கை 8 பல்லக்கைத் தாங்கிய கை பூதத்தின் மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத் தக்க சிவிகை கணை தாங்கும் கை. 9 நாகரத்தினத்தை வாங்கிய கை மைக் கடு வாய் மூக்கில் புகைபுரிந்த மூ(து)அரவின் வாயிடத்து நீக்கிய கை நாக்(கு) அதனில் நீட்டும் கை. 10 தொண்டு புரியும் தங்கக் கை ஆக்கமுடன் ஏதம் அற்ற கீர்த்தியைக் கொண்டு ஏட்டகத்திலே அடிமைச் சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை. 11 கர்ப்பிணியின் முதுகில் பரிமாறிய கை மேதினியில் சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை பாலடிசில் தன்னைப் படைக்கும் கை. 12 பாணனுக்கு இறுதிச் சடங்கு சாலவே நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல் பாணன் பிணத்தைப் பரிக்கும் கை. 13 வயிற்றைக் கிழித்து உணவை வெளிப்படுத்தியது காணவே தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ் உண்ட வயிற்றைப் பீறி ஊற்றும் கை. 14 அபயம் கொடுக்கும் கை கண்ட அளவில் நீலி தனக்(கு) அஞ்சி நின்ற வணிகேசனுக்காக் கோலி அபயம் கொடுக்கும் கை. 15 நெருப்பில் மூழ்கிப் புகழை மணந்த கை ஆலம் எனும் வன்னியிடை மூழ்கி வானோர் பழிகழுவிக் கன்னி தனையே மணந்த காட்சிக் கை. 16 கொழுவினால் தன் கழுத்தையே குத்திக் கொண்ட கை துன்னும் ஒரு பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின் கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை. 17 ஒரே கலத்தில் உண்ட கை பார் அறிய வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில் சோறு பிசைந்(து) உண்ட சுடர் மணிக்கை 18 விலை உயர்ந்த பட்டைக் கிழித்த கை ஆறாத் தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின் புடைவை கிழித்த பெருங் கை. 19 ஏரோட்டம் நின்றால் தேரோட்டம் நிற்கும் கடல் சூழ்ந்த பார்பூட்டு மன்னர் பரிகர பூட்டக் கதிரோன் தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை. 20 தாற்றுக் கோல் பிடிக்கும் கை வீர மதன் ஐங்கோல் தொடுக்க அணை கோல் எடுக்க, உழும் பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை. 21 செங்கோலைத் தாங்கும் மேழிக் கை இங்கிதமாம் சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு பேர்படைத்த மேழி பிடிக்கும் கை. 22 உலகைத் தழைக்கச் செய்யும் கை கார் படைத்த மிஞ்சுமதி கீர்த்தியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச் செஞ்சாலி நாற்றைத் தெளிக்கும் கை. 23 கள்ளம் இல்லாத கற்பகக் கை எஞ்சாமல் வெள்ளக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக் கள்ளக் களை களைந்த கற்பகக் கை. 24 நெற் போரால்தான் வெற்றிப் போர் வள் உறையும் விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர் நெற்போர் முதல் போர்நெரித்திடும் கை. 25 மூன்று கொடிகள் கற்பகம் போல் மேழிக் கொடி, சிங்க வெற்றிக் கொடி, குயிலின் வாழிக் கொடியே மருவும் கை. 26 பொன் வழங்கும் பொற்கை நீள் உலகில் ஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள் வேத புராணங்கள் விரிக்கும் கை. 27 நீதி நெறி தழைக்கும் கை நீதி நெறி மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை தானம் தருமம் தலைக்கும் கை. 28 திக்கற்றவர்களை ஈடேற்றும் கை ஆன தமிழ் கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல் எல்லாரையும் காத்து ஈடேற்றும் கை. 29 மேகம் போன்ற கற்பகக் கை வல்லமை சேர் மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல் கைம்மாறு இலா(து) அளித்த கற்பகக் கை. 30 குளத்து நீர் போன்ற கை சும்மை ஆர் ஊருணி நீர் போல் உலகத்தவர்க்(கு) எல்லாம் பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை. 31 நட்புக் கை பாரில் உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே கொடுக்க இசைந்த குளிர்க்கை 32 மூவரைத் தாங்கும் கை இடுக்கணினால் மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத் தாம் அலையாமல் கொடுத்துத் தாங்கும் கை 33 கம்பருக்கு நான் அடிமை தே மருவு நாவில் புகழ்க் கம்பநாடற்(கு) அடிமை என்றே மாவைக் கரைத்து முன்னே வைக்கும் கை 34 சடையப்பரைக் கடித்த நாகம் பாவலர்தாம் ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே காரி விடநாகம் கடிக்கும் கை. 35 பஞ்சத்திலும் வழங்கிய பங்கயக் கை பார் அறியச் சங்கை இட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப் பங்கை இட்(டு) இரட்சித்த பங்கயக் கை. 36 அந்தணர்களுக்கு வழங்கிய பொற்கை பொங்கமொடு செம்பொன் விளை களத்தூர்ச் செந்நெல் விளைந்ததனை நம்பி மறையோர்க்(கு) அளித்த நாணயக் கை. 37 விளை நிலத்திற்கு வேலியிட்ட கை அம்பொன் விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை வளைய மதில் இட்டு வரும் கை. 38 களத்தில் வழங்கிய கற்பகக் கை களம் அதனில் ஏற்க வந்த ஆதுலர்க்(கு) இல்லை என்னாமல் செம்பொன் கார்க் கையினால் முக் கை இட்ட கற்பகக் கை. 39 சிவன் கோயில் கட்டிய கை தீர்க்கமதாத் திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள் விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை. 40 பல துறை நூல்களுக்கு ஆதாரமான கை திருப் புகழை எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை வண்மை பெற உண்டாக்கும் வா(கு) உளகை. 41 ஞான சிகரமான் நம்மாழ்வார் வேளாளர் பண் அமைந்த வேதம் ஒரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால் ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை. 42 புலவனுடைய எச்சிலை உண்ட கை பூதலத்தில் பாவலன் எச்சில் படு மாங்கனியை எடுத்(து) ஆவலுடன் நன்றா(க) அருந்தும் கை. 43 மன்னனுக்குச் சரியான விடையை எழுதிக் கொடுத்த கை காவலன் மண்ணில் கடலில் மலையில் பெரிய(து) என எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை. 44 தமிழுக்குத் தலை தந்தோர் திண்ணமதாய் வையகம் எங்கும் தேடி வந்த தமிழோன் புகழச் செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை. 45 வேளாண்மை மிக்க கருணாகர வன்னியன் துய்ய புகழ் அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத்(து) எட்(டு) ஆனைதனை வெட்டிப் பரணி கொண்ட வீரக் கை. 46 முனையடுவார் நாயனார் திட்டமுடன் பொன்னால் அமுதம் பொரிக் கறியம் தான் கொணர்ந்து நன் நாவலர்க்(கு) அளித்த நாணயக் கை. 47 வணிகனுடைய கவலை தவிர்த்த கை முன்னாள் மனக் கவலை உற்ற வணிகன் முன்னே நின்று தனைக் கா எனக் கேட்ட தங்கக் கை. 48 கோ தானம் செய்த கை கனக்கவே அன்(று) ஈன்ற நா(கு) எழுபதான எருமைத் திறத்தைக் கன்றோடு நல்கும் கடகக் கை. 49 யானைப் பரிசில் தரும் கை வென்றி தரும் ஓர்ஆனை; நூறாயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச் சீராக நல்கும் தியாகக் கை. 50 பாலாறு கொணர்ந்த ஒட்டக் கூத்தர் பேர் இயலைச் சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால் ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை. 51 உதைத்த காலுக்கு வெண்டயம் இட்ட கை நேர்த்தி பெற வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன் வெண்டயம் இட்டே வணங்கும் வெற்றிக் கை. 52 குட்டின கைக்கு மோதிரம் இட்ட கை புண்டரிகக் கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச் செய்யாழி பண்ணி இட்ட கை 53 அரிசி கேட்டால் யானை தருபவர் நொய்ய எறும்புக்கும் ஆஸ்பதம் தான் இல்லை என்ற மட்டில் திறம் புக்க யானை தரும் செங்கை. 54 எண்ணாயிரம் ஊர்களைத் தந்த பாரி பறம்பு தனில் எண்ணாயிரம், முனிவர்க்(கு) ஏற்றபடி அப்படியே பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை. 55 தேவர்களுடைய புகழ்க் கொடியை நிறுவிய கை விண்ணாடர் கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர நால் திக்கும் மேருவின் நாட்டும் கை. 56 சிவனுடைய பாத பங்கயம் பணிந்த கை சீர்க்குகனை ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப் பாதார விந்தம் பணியும் கை. 57 ஐந்தொழில் புரியும் கை நீதி நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை கொடுக்கை செழுங்கை குளிர்க்கை 58 நீடூழி நிலைக்கும் கற்பகக் கை தொடுத்த தெல்லாம் சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக் காராளர் கற்பகப் பூங் கை. 59 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கரிப்பு மணிகள் வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00தள்ளுபடி விலை: ரூ. 110.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |